Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 335 online users.
» 0 Member(s) | 332 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,086
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,518
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  தமிழ் படங்களைப் பற்றி இணையத்தில் வந்தவவை.
Posted by: kirubans - 02-02-2005, 11:57 PM - Forum: சினிமா - No Replies

இணையத்தில் படித்த கட்டுரைகள் உங்கள் பார்வைக்கும்.

http://www.thinnai.com/padam.html

http://www.thinnai.com/comedy.html

Print this item

  இரசியுங்கள்
Posted by: KULAKADDAN - 02-02-2005, 11:29 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (11)

<img src='http://img74.exs.cx/img74/3834/2c2.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  பத்திரிகையாளர் சுவேந்திரன் காலமானார்
Posted by: Vaanampaadi - 02-02-2005, 06:36 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (9)

பத்திரிகையாளர்
சுவேந்திரன் காலமானார்
பத்திரிகையாளர் ம.சுவேந்திரன் நேற்றுமுன் தினம் தமது 53 ஆவது வயதில் காலமானார். சுமார் ஒருமாதகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கொழும்பு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
கரவெட்டியைச் சேர்ந்த இவர் ஈழநாடு தின மணி சிந்தாமணி பத்திரிகைகளில் கரவெட் டிச்செய்தியாளராக நீண்டகாலம் பணியாற்றி வந்தார். 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தல வாக்கலையில் வசித்துவந்த இவர் அருள் ஊற்று| கத்தோலிக்கத் தமிழ் இதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றிவந்தார்.
அண்மைக் காலத்தில் நோய்வாய்ப்பட்ட இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுவந்தபோது மரணமானார். இறுதிச்சடங்குகள் நாளை வியாழக்கிழமை கரவெட்டியில் இடம்பெறும்.

Print this item

  போப்பாண்டவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்
Posted by: Vaanampaadi - 02-02-2005, 06:30 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/2-2-2005/pope.jpg' border='0' alt='user posted image'>
போப் ஆண்டவருக்கு மூச்சுத்திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

ரோம், பிப். 2-

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத்தலைவர் போப் ஆண்ட வர். கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் தலைமை அலுவலகம் இத்தாலியில் உள்ள வாடிகன் நகரில் உள் ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள வாடிகன் நகருக்கு தனி நாட்டுக்கான அனைத்து அந்தஸ்தும் உள்ளது.

இப்போது போப் ஆண்டவராக இருப்பவர் 2-ம் ஜான் பால். முதலாம் ஜான்பால் இறந்ததை தொடர்ந்து 2-ம் ஜான்பால் கடந்த 1978-ம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்வு பெற்றார். 27 ஆண்டு களாக இவர் போப் ஆண்டவ ராக பதவி வகித்து வருகிறார். அதிக நாட்கள் போப் ஆண்டவர் பதவியில் நீடித்த வர் என்ற பெருமை இவருக்கு இருக்கிறது. கடந்த 455 ஆண்டுகளில் போப் ஆண்டவர்களின் வரலாற்றில் இத்தாலி நாட்டை சேராத ஒருவர் போப் ஆண்ட வராக பதவி வகிப்பதும் இதுவே முதல் தடவை.

84 வயது ஆகும் போப் 2_ம் ஜான்பால் போலாந்து நாட்டை சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் கரோல் வோஜ்டிலா.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார். `பார்க் கின்சன்' என்ற நரம்பு தளர்ச்சி நோயாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். வெளிநாடு பயணத்தையும் அவர் ரத்து செய்தார்.

இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. மிகவும் சோர்வாக இருந்த அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு ஃபுளூ காய்ச்சலும் ஏற்பட்டது. தொண்டைக்கும் நுரையீரலுக் கும் இடையே உள்ள பகுதியில் வலி ஏற்பட்டு வந்தது. உமிழ் நீரை விழுங்குவதற்கு கூட அவர் சிரமப்பட்டார்.

உடல்நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு அவரை ரோம் நகரில் உள்ள ஜெமலி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். வாடிகன் நகரில் இருந்து 4 கிலோ மீட்டர் துரத்தில் இந்த ஆஸ்பத்திரி உள்ளது. அங்குள்ள 4-வது மாடி அறையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி வாடிகன் நிர்வாகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி கூறும்போது, "போப் ஆண்டவரின் உடல்நிலை மேலும் மோசமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் அவரை ஆஸ்பத்திரியில் அனு மதித்துள்ளோம். அவர் சாதாரண பிரிவில் தான் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவரை சேர்க்கவில்லை" என்று தெரி வித்தார்.

போப் ஆண்டவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

போப் ஆண்டவருக்கு உடல் நலக்குறைவு தொடர்ந்து நீடித்தால் வாடிகன் திருச்சபை பொறுப்புகளை ஏற்பது யார்? அடுத்த போப் ஆண்டவர் யார்? என்ற கேள்விகளும் இப்போதே எழுந்துள்ளன.

வழக்கமாக போப் ஆண்டவர் மரணத்துக்குப் பிறகே அடுத்த போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படுவார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ கர்தினால்கள் ஒன்று கூடி அவர்களில் ஒருவரை புதிய போப் ஆண்டவராக தேர்ந்து எடுப்பார்கள்.

ஆனால் போப் ஆண்டவர் மரணத்துக்குப் பிறகே இந்த கர்தினால்கள் கூட்டம் ரகசியமாக நடைபெறும். 2-ம் ஜான் பாலுக்குப்பிறகு தேர்வு செய்யப்படும் போப் ஆண்டவர் இத்தாலி நாட்டவராக இருக்க வேண்டுமா? அல்லது ஏதாவது ஒரு வளரும் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமா? என்ற பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

புதிதாக தேர்வு செய்யப் படும் போப் ஆண்டவர் இப்போதைய போப் ஆண்டவ ரைப்போல சமாதான தூதரா கவும் அனைத்து பிரிவு மக்க ளாலும் நேசிக்கப்படுபவராகவும் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

மாலைமலர்

Print this item

  இப்படியும் ஒரு போட்டி
Posted by: Vaanampaadi - 02-02-2005, 06:25 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

இப்படியும் ஒரு போட்டி

ஜெர்மனி நாட்டு டி.வி.யில் வருகிற வாரம் ஒரு நூதனமான போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. ஆண்களின் உயிர் அணுக்களின் நீச்சல் போட்டிதான் அது. சில ஆண்கள் தங்கள் உயிர் அணுவை இந்த போட்டிக்காக கொடுத்துள்ளனர். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட் டுள்ள அந்த உயிர் அணுக்களில் எவருடைய உயிர் அணு கருவை நோக்கி வேகமாக நீந்தப்போகிறது என்ற போட்டியை டி.வி.யில் ஒளிபரப்பி, அந்த உயிர் அணுவின் சொந்தக்காரருக்கு பரிசும் தரப் போகிறார்கள்.

தினதந்தி

Print this item

  வதந்தி (தீ)யைப் பரப்பாதீர்கள்
Posted by: Vaanampaadi - 02-02-2005, 06:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

வதந்தி (தீ)யைப் பரப்பாதீர்கள்
பண்பட்ட பயனுடைய வாழ்க்கை என்பது முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்து வாழ்வதேயாகும். அவ்வாறு உதவி செய்து வாழ இயலாவிட்டாலும் பிறருக்கு உபத்திரவம் செய்யாது வாழவேண்டும். இன்று மக்கள் பலர் அவ்வாறு வாழ்கின்றhர்களா? என்றhல் இல்லையென்றே பதில் இயம்ப வேண்டியுள்ளது. பிறருக்கு உபத்திரவம் செய்து பிறரது மகிழ்ச்சியையும் அமைதியையும் கெடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர் சிலர். பிறரது துன்பத்தில் அவர்களுக்குக் கிடைப்பது கானல் நீர்போன்ற அற்பத்தனமான மகிழ்ச்சியேயாகும். இதனைச் சிலர் வதந்தியைப் பரப்பிவிடுவதன் மூலம் அடைந்து மகிழ்கின்றனர். இந்த வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வதந்திகளின் விபரீதங்களை அவர்கள் உணருவதே இல்லை.

வதந்தி என்பது இல்லாததை இருப்பதாகவும், வராததை வந்துவிட்டதாகவும், நடக்காததை நடந்துவிட்டதாகவும் மாற்றிக்கூறும் ஒருவகைப் பொய் பொதிந்த ஏமாற்று வேலையாகும். அவ்வதந்தியால் தனிமனிதனும் சமுதாயமும், நாடும் எதிர்கொள்ளும் அலைக்கழிவையும் அல்லலையும் அமைதியின்மையையும் விபரீதங் களையும் கண்டு அற்ப மகிழ்ச்சி அடைவதே அவர்கள் நோக்கமாகும். மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் வந்த சுனாமிப் பேரலைகளைவிட பன்மடங்கு வேகமாக பரவக்கூடியது இவ்வதந்தி என்பதை வதந்தியைப் பரப்பும் அற்பர்கள் உணருவதில்லை. என் செய்வது? உண்மை உடையணிந்து ஊர்சுற்றி வருவதற்குள் பொய் பொதிந்த புல்லர்களின் வதந்தி உரிய வேடம் புனைந்து உலகையே சுற்றி புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடுகின்றது. அதனால்தான் அன்றேhர்கள் அதனை வதந்...தீ என்று அழைக்கலாம் என்கின்றனர். ……தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்†† - என்று இந்த வதந்...தீயைப் பற்றித்தான் வள்ளுவர் கூறினார் போலும்*

இத்தகைய தீய அற்பத்தனமான பொய் பொதிந்த வதந்திகளை யாரும் எந்த இக்கட்டான Nழ்நிலைகளிலும் பரப்பக்கூடாது என்பதைப் பண்டைக் காலத்திலேயே தமிழர்கள் எச்சரித்துள்ளனர். ……புலி வருகிறது, புலி வருகிறது††- என்று வதந்தியைப் பரப்பிய ஆடு மேய்க்கும் சிறுவன் இறுதியில் இறந்த கதை நமக்குப் பாடம் உணர்த்தும் பயனுடைய கதையன்றேh* இந்தக் கதை பொய் பொதிந்த வதந்தியைப் பரப்புவது விளையாட்டிற்காகக்கூடச் செய்யக்கூடாது என்பதைக் கூறுகிறது.

கடந்த கருப்பு ஞாயிறhன டிசம்பர் 26-ம் நாளிலிருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை நாம் நன்கு அறிவோம். பெற்றேhர்களையும் உற்றேhர்களையும் இழந்து மீளாத்துயரில் மூழ்கித்திக்குத் தெரியாது திண்டாடிக்கொண்டு அச்சத்தின் கொடூரம் அகலாது தவித்துக் கொண்டிருக்கிறhர்கள். பாதிக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய மக்கள். அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தாய் உள்ளங்கொண்ட தன்னலமற்ற தனிநபர்களும் நிவாரணப் பணிகளில் இரவு பகல் பாராது ரத்தத்தை வேர்வையாக்கி அயராது பாடுபட்டு வருகின்றனர். விழிபிதுங்கி விம்மி வேதனைப்படும் இந்தச் Nழ்நிலையிலும் சில விஷமிகள் வதந்திகளைப் பரப்பி அலைக்கழிவு செய்து அற்பத்தனமான ஆனந்தம் அடைகின்றனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலைப்போல ஏற்கனவே உடைந்த உள்ளத்தோடு உருக்குலைந்து ஒருவழியும் தெரியாது வாழ்ந்து வரும் பாதிக்கப் பட்ட மக்கள் மத்தியில் ……இதோ கொஞ்ச நேரத்தில் சுனாமி வரப்போகிறது ஓடுங்கள், ஓடுங்கள்†† என்று வந்தியைப் பரப்பிவிடுகின்றனர். இதனால் பயந்து பரபரப்பாகி பாதம் பிடறியில் பட குழந்தை குட்டிகளோடும் உறவினர்களோடும் ஓடி பாதுகாப்பான இடந்தேடுகின்றனர் பாதிக்கப் பட்ட நம் மக்கள். இந்த காட்சியைக் கண்டு மகிழ்கிறது வதந்தியைப் பரப்பிவிடும் அற்பர் களின் கூட்டம். ஒரு முறை சுனாமி பேரலைகள் வந்தால் அந்த இடத்திற்கு நு}று ஆண்டு கழித்துத் தான் சுனாமி வரும் என்று அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்தாலும் வதந்தியால் மக்கள் பயந்து பயந்து மனம் தளர்ந்து வாழ்கிறhர்கள்.

சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியால் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காணவில்லை. என்ன ஆனார் என்றே தெரியவில்லை என்று வந்தியைப் பரப்புகிறது இலங்கை அரசின் வானொலி நிலையம். அது பொய் என்று தெரிந்ததும் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறது இலங்கை வானொலி. அதேபோல தமிழகத்தில் தமிழர்களின் முதுபெருந்தலைவர் கலைஞர் அவர்கள் உடலைப் பரிசோதித்துக் கொள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அச்செய்தியை அமங்கலமாக்கி பரபரப்புண்டாக்கி மகிழ்கிறது சில விஷமிகள் கூட்டம். இவ்வாறு வதந்திகளைப் பரப்பி வேடிக்கை பார்க்கும் வீணர்களைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் ……கயமை††- என்று ஓர் அதிகாரம் எழுதினார் போலும்*

இத்தகையவர்களை அரசு கண்டுபிடித்து தக்க தண்டனைகளை வழங்கிட வேண்டும். பிறர் துடித்து துயரடைவதில் இன்பங்காணும் வீணர்களின் வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்கக்கூடாது. அத்துடன் ……கொலை வாளினை எடடா மிக கொடியோர் செயலறவே††- என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறியவாறு வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கொலை வாளினை எடுக்கவும் தயங்கக்கூடாது. அப்போதுதான் வதந்... தீ பரவி நாட்டை அல்லற்படுத்தாமல் அமைதி நிலவும்.

ப.பழனிச்சிங்காரவேலு

எம்.ஏ., பி.எட்.,

மே.ப.தலைமையாசிரியர் (ஓய்வு)

2,2050 சசிநகர், சிவகாசி-626123

தினகரன்

Print this item

  சொந்தப்படம் தயாரிப்பதில்லை என்று ரஜனிகாந்த் திடீர் முடிவு
Posted by: Vaanampaadi - 02-02-2005, 06:19 PM - Forum: சினிமா - Replies (4)

<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/02/others/C186_rajini-4.jpg' border='0' alt='user posted image'>
சென்னை, பிப். 2- ஜக்குபாய் படம் கைவிடப்பட்டது. இனி சொந்தப்படம் தயாரிப்பதில்லை என்று ரஜனிகாந்த் திடீர் முடிவெடுத்துள்ளார்.

சொந்தமாக பட நிறுவனம் தொடங்கிய ரஜனிகாந்த் அதன் மூலம் வள்ளி, படையப்பா, அருணாச்சலம், பாபா போனய்ற பல படங்களை தயாரித்தார். இதில் பாபா படம் எதிர்பார்த்த வெற்றி பெறhததால் அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு குறிப்பிட்ட தொகையை திருப்பி தந்தார். இதையடுத்து சுமார் 2 வருடத்துக்கு மேல் அவர் புதிய படத்தில் நடிப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேச்சு எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக திடீரென்று ஒருநாள் -ஜக்குபாய் படம் பற்றி ரஜனிகாந்த் அறிவித்தார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்ய ரஜனியே தயாரித்து நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்படத்தின் கதை சரியாக அமையாததால் அந்த படத்தை தள்ளிவைப்பதாக ரஜனிகாந்த் அறிவித்தார்.

இந்தநிலையில் சிவாஜி பிலிம்ஸ் ராம்குமாரை தொலைபேசியில ;தொடர்பு கொண்டு நீங்கள் படம் தயாரியுங்கள் நடிக்கிறேன் என்று கூறினார். அந்த படத்தை பி.வாசு இயக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து அந்த படத்தின் பணிகள் உடனடியாக தொடங்கி படத்திற்கு -சந்திரமுகி† என்று பெயரிடப்பட்டு சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு முடிந்து தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தநிலையில் ரஜpனிகாந்த் திடீர் முடிவு எடுத்திருக்கிறhர்.

இனிமேல் சொந்த படம் தயாரிப்பதில்லை என்பதே அந்த முடிவு. அதன்படி ரஜpனி சொந்தமாக தயாரிப்பதாக அறிவித்திருந்த -ஜக்குபாய்† படம் கைவிடப்பட்டது. இந்த திடீர் முடிவு திரையுலகினர் மத்தியில் ஒரு அதிர்ச்சியை தந்தாலும் பழையபடி வெளிப்பட நிறுவனங்களில் நடிப்பது என்ற அவரது[ முடிவு திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உருவாகி வரும் -சந்திரமுகி† தமிழ் புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வர உள்ளது. இதையடுத்து ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய படங்களை தயாரித்த எடிட்டர் மோகன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை ஜெயம் ராஜh இயக்குகிறhர். இதுபற்றி ரஜனியே அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.


தினகரன்

Print this item

  தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி?
Posted by: Vaanampaadi - 02-02-2005, 06:12 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (3)

தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி?

<span style='font-size:25pt;line-height:100%'> அஸ்வின் தாயுமானவர்</span>

இரு மணம் இணையும் திருமணங்கள் இன்று பழமை தவறி, பல வழிகளில் நடந்தேறி வருகின்றன.

தமிழர் திருமண முறைகளை நாம் ஒட்டுமொத்தமாய் மறந்து வருகிறோம் அல்லது வசதிக்கேற்ப பிறழ்ந்து வருகிறோம். கால மாற்றத்திற்கேற்ப சுருக்கமாக, வழமையான முறையின்றி நடந்து வருகின்றன திருமணங்கள்.

வரதட்சணைக்கு வேலையே இல்லாத தமிழர் திருமணங்கள் முன்பு எப்படி நடந்தேறின தெரியுமா?.. மூத்தோர் வைத்துவிட்டுப் போயிருக்கும் முறைகள் தெரியுமா?

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா...

தமிழ் திருமண நிகழ்வுக்கான பொருட்கள்:

மஞ்சள், குங்குமம், திருநீறு, கற்பூரம், பச்சரிசி, தேங்காய், தேன், பன்னீர், முந்திரி, திராட்சை, கற்கண்டு, குங்குமப்பூ, வெற்றிலை, வெட்டுப் பாக்கு, வாழைப் பழம், எலுமிச்சை, அவல், சர்க்கரை, நவதானியம், வேள்விப் பொருட்கள் அனைத்தும் அடங்கிய பூரணாகுதி, பசும்பால், பசு நெய், கலசம், உதிரிப் பூக்கள், தாமரைப் பூ, அருகம்புல், 3 ¬முழம் பட்டுத் துண்டு, குத்துவிளக்கு, மாவிலை, பித்தளை செம்பு, நிறைகுடம் தண்ணீர், தலை வாழை இலை, அரிசி மாவு

(இந்தப் பட்டியலில் வரதட்சணை, தங்கம் இதெற்கெல்லாம் நம் மூத்தோர்கள் வேலையே வைக்கவில்லை என்பதைப் பாருங்கள்)

முன்னேற்பாடுகள்:

இறைவன், இறைவி நிறை குடம் வைக்கும் இடத்திலும், மணமக்கள் அமரும் இடத்திலும் "எட்டிதழ்த் தாமரை" மாக்கோலம் போட வேண்டும். அதன் மு¬ன்பாக நடத்துபவர் அமர்ந்து "ஐம்பெருந்தூய்மைகளை" செய்ய வேண்டும்.

அது என்ன ஐம்பெருந்தூய்மைகள்?:

ஒரு சொம்பில் தூய நீர் எடுத்துக் கொண்டு, அதனை நீரினில் நான்காய் நிகழ்ந்தாய் போற்றி எனப் போற்றி, வாச மலரைப் போற்றிய நீரில் இட்டு வணங்க வேண்டும்.

ஒரு பூவினை நீரினில் நனைத்துப் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி என்று போற்றித் தெளிக்க வேண்டும்.

தொடர்ந்து இறைவா! மண்ணும், நீரும், நெருப்பும், வளியும், வானும் உங்கள் அருளால் தூய்மையாகுக என வேண்ட வேண்டும். யாக்கைப் பொன்னெடுங்கோயிலாய்ப் புகுந்தாய் போற்றி, உயிருக்கு உயிரானாய் போற்றி எனப் போற்றி, உடல் மேல்தெளித்து உடல், ஆன்மத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

வழிபடும் பொருட்களின் மேல் எல்லாம் சிவனென நின்றாய் போற்றி செய்ய வேண்டும்.

தூய நற்சோதி ஆனவ போற்றிசெய்ய வேண்டும்.

. இந்த ஐம்பெருந்தூய்மைகள் நிறைந்த பின், நுனி வடக்கு நோக்கி இருக்கும்படி தாமரைக் கோலத்தின் மீது தலை வாழையை இட வேண்டும்.

அதன் மேல் நெல், பச்சரிசி பரப்பி ஐம்முக¬முக்கோணச் சக்கரத்தை வரைந்து அதில் ஓம் என எழுத வேண்டும்.

நிறை குடங்களுக்குள் நறும்புகை காட்டித் திறுநீறு, தூய சந்தனம், பன்னீர், பச்சைக் கற்பூரம் கலந்த நீரை மூல மந்திரத்தை ஓதிக் கொண்டே நிறைகுடங்களில் ஊற்ற வேண்டும்.

ஒவ்வொன்றிலும் காசு இட்டு, மாவிலை வைத்து, மஞசள் பூசிய தேங்காய்களை அதன் மீது வைக்க வேண்டும். நிறைகுடங்களின் உள்ளும், தேங்காயின் மேலும் தருப்பையினால் கூர்ச்சமிட்டு வைக்க.

நிறைகுடங்களுக்குச் சந்தனம், மஞ்சள், பொன்னரிசி, குங்குமம் இட்டு, குடங்களுக்கு மாலையும் இட வேண்டும்.

வழிபாட்டைத் தொடங்கும் முன்:

1.பார்வையால் வேறுபடுத்தல்

"நம சிவாய" எனும் திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டு வலக்கை நடுவில், ஆள்காட்டி விரல்களை நீட்டி ஏனைய விரல்களை மடக்கி நுனி வாயிலாக பார்க்க வேண்டும்.

2. தெளித்தல்

"நம சிவாய" என ஓதிக் கொண்டு, ஒரு மலரை நீரில் நனைத்து வழிபாட்டுக்குரிய பொருட்களின் மேல் தெளிக்க வேண்டும்.

3. உள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தல்

"நம சிவாய" ஓதிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் பொருட்களை மும்முறை தட்டுதல் (இவ்வாறு தட்டுவதால் அப்பொருட்களின் உள்ளிருக்கும் ஆற்றல் வெளிப்படும்.)

4. அமைதிப்படுத்தல்

"நம சிவாய" எனும் திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் பொருட்களைச் சுற்றி, அதன் பின் கையைக் கவிழ்த்துக் காட்டுதல் (பொருட்களிலிருந்து வெளிப்படும் ஆற்றலை சுற்றிக் காட்டிய இடத்தினுள் அமைதிப்படுத்தி இருக்கமாறு செய்தல்)

திருமண நிகழ்வுகள்:

(மணமகன், அருகில் உள்ள திருக்கோயிலுக்குச் சென்று வந்த பின்னர், மணமக்களை உரிய இடத்தில் அமர்த்தி நிகழ்வுகளைச் செய்ய வேண்டும்)

மொத்தம் 17 வகை திருமண நிகழ்வுகள். அதன் விவரம்:

1. திருவிளக்கு வழிபாடு.

வழிபாடு நடைபெறும் இடத்தில் மங்கலப் பெண்டிரைக் கொண்டு விளக்கேற்றச் செய்ய வேண்டும். சோதியாய்ச் சுடராய் ஒளிவளர் விளக்காய் இறைவனைக் காணும் நம் நெறியில் பொருள்களை விளங்கச் செய்வதும், நன்மைக்குக் காரணமாகியதுமான விளக்கினை வழிபட வேண்டும்.

பேரொளிப் பிழம்பான அம்மையப்பனைக் கண்டு, கருதி, கைகூப்பித் தொழ வேண்டும்.. சுடரின் செம்பகுதி இறைவன், உள் ஒளிரும் நீல ஒளி இறைவி. ஆதலால் சுடரில் அம்மையும் அப்பனும் இணைந்து ஒளிருகிறார்கள் என்பது நம்பிக்கை.

"உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக

மடம்படு உணர்நெய் அட்டி உயிரெனும் திரிமயக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே" (திருநாவுக்கரசர் தேவாரம்)

"கோடாமல் என்றும் குறையாமல் எங்கள் குலம் என்றும்

வாடாமல் வாழ வரம் தருவாய்! மனம் மாயை வழி

ஓடாமல் உள்ளே ஒடுங்கும் தவ¬ம் உணர்வறிய

ஆடாமணியொளிச் சோதியே! பூவில் அமர்ந்தவனே! "

என ஓதி, இறைவன் எழுந்தருளியதற்கு அடையாளமாக உச்சியிலும், திருவடியிலும் மலரினை இட வேண்டும்.

"எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி!

எரிசுடராய் நின்ற இறைவா போற்றி

கொல்லர் மழுவாட் படையாய் போற்றி!

கொல்லும் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி!

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி!

கற்றார் இடும்பை காளைவாய் போற்றி!

வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி!

வீரட்டம் காதல் விமலா போற்றி!
(திருநாவுக்கரசர் தேவாரம்)

எனப் போற்றி ஓதி, நறுமலர் அல்லது வில்வம் ¬தலிய தளிர் கொண்டு எட்டுப் போற்றிகளையும் "எண்மலர்" வழிபாடாகச் செய்ய வேண்டும்.

அப்பொழுதில் மணமக்கள் வேண்டுதல் (இருவரும்):

"இன்ப விளக்காக இருக்கின்ற பெருமானே! இன்று நாங்கள் தொடங்கும் இல்லற வாழ்வு என்றும் இன்ப ஒளி வளர்த்து ஓங்கி இன்புற அருள்வீராக".

2. நிறைகுடப் புனித நீர் வழிபாடு:

அம்மையப்பர் கலசங்களுக்குச் சற்றுத் தள்ளி வலப்புறமாக வைக்கப்பட்டுள்ள புனித நீர் நிறைகுடத்திற்கு வழிபாடு செய்யும் முறை.

"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்

குளித்துத் தொழுது ¬முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்

தெளித்துச் சுவைய¬து ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப

அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே" (திருநாவுக்கரசர் தேவாரம்)

என ஓதி நிறைகுட நீரில் எல்லாச் சிவ தீர்த்தங்களும் நிரம்பியதாக ஏற்று வருணனை எழுந்தருளச் செய்ய வேண்டும். நறும்புகை விளக்கொளி காட்டி வழிபட வேண்டும்.

"கடல்களின் அரசே வருணா போற்றி

நன்னீர்ப் பெருங்கடல் பொன்னே போற்றி

நீருக்கதிபதி நிறைவே போற்றி

மகரவாகனம் மகிழ்ந்தாய் போற்றி

புனிதன் சடைஅமர் வனிதை போற்றி

கங்கையென்னும் மங்கை போற்றி

யமுனை நதியெனும் நல்லாய் போற்றி

நருமதை நதியாம் நல்லருள் போற்றி

சிந்து நதியின் சிறப்பே போற்றி

துங்கா நதி நங்காய் போற்றி

காவிரி நதியாய் காப்பாய் போற்றி

வைகை நதியாய் வந்தாய் போற்றி

ஆன்பொருனை அரசி போற்றி

தண் பொருனைத் தாயே போற்றி!"

எனப் போற்றி, மலரிட்டக் கற்பூர ஒளி காட்ட வேண்டும்.

மணமக்கள் இருவரும் கூற வேண்டியது:

"உமையொரு பாகன் சடையிடை அமர்ந்த கங்கைப் பெருந்தாயே! வைகை அன்னையே! எங்கள் உடலும் உள்ளமும் உயிரும் சூழலும் குளிர்ந்து என்றும் நலம் விளங்க அருளுக" என மணமக்கள் வேண்டியதும், மணமக்களைப் புனித நீர் நிறை குடத்திற்கு மலரிடச் செய்ய வேண்டும்.

நிறைகுட நீரினை, வழிபாட்டுப் பொருட்களின் மேலும், மணமக்கள் மேலும் மாவிலையால் தெளிக்க வேண்டும்.

3. திருநீறு அணிவித்தல்:

"காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் கைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணத் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே" (சம்பந்தர் தேவாரம்)

என்று திருநீற்றுச் சிறப்போதி, மணமக்கள் அணிந்து கொள்ளத் திருநீறு, சந்தனம், குங்குமம் தர வேண்டும்.

4. விநாயக பெருமான் வழிபாடு

எடுத்துக் கொண்ட செயல் எவ்வித இடையூறுமின்றி நடைபெற இன்றியமையாததான, மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையாரை வழிபட வேண்டும்.

"கங்கையும் பணிவென் திங்களும் விரைத்த கடுக்கையும்

தொங்கலும் அரவும்

தங்குபொற்சடையும் முக்கணும் தாதை தாணு மென்றுணர்ந்த

மென் மலர்க்கை

அங்குச பாசமணிந்து வெற்பு உயிர்த்த ஆரணங்கு அன்னை

என்றுணர்த்தி

வெங்கலி¬முழுதும் துமித்தருள் எக்கியசாலை விநாயகரடி பணிவாம்"
என்றோதி, விநாயகப் பெருமானை எழுந்தருளச் செய்ய வேண்டும். பின்னர் உச்சியில் நீர் சொரிதல், உட்கொள்ள நீர் தருதல், திருவடிக் கமலங்களை நீராட்டுதல், திருமேனியை நீராட்டுதல் ஆகியன செய்ய வேண்டும். நறும்புகை, விளக்கொளி காட்டி, கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

"தேவர்க்கு இடையூறு யாவையும் தீர்த்தமைத் தேவா போற்றி!

மூவர்க்கு அரசளித்த ¬தன்மை நற்பொருளே போற்றி!

சேடிவக்கு அடிமையாக்கி சிறியனேன் தம்மை காப்பாய்

மேவிய புகழ்படைத்த விக்கினராசா போற்றி! போற்றி! "

எனப் போற்றி மலரிட வேண்டும்.

"அங்கம் வேதம் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்

செங்கயலார் புனல் செல்வமிகு சீர்கொள் செங்காட்டம் குடியதனுள்

கங்குல் விளங்கெரி ஏந்தியாடும் கணபதியீச்சரம் காறவே"

"¬மும்மதத்தன் என்றொரு பெயர் தனக்கு மொய் கூந்தற்

கொம்மை வெம்முலைக் கொற்றொடிக் கொடிச்சியை இலைவேல்

கைமலர்ந்தனி இளவற்கும் கஃறெனும் கானத்து

அம்ம¬ந்து புக்கு உறுத்தவன் அடிமலர் பணிவாம்"

என்றோதிக் கற்பூரம் காட்ட வேண்டும்.

மணமக்கள் இருவரும் வேண்டிட:

"எக்கிய சாலை விநாயகர் பெருமானே! எங்கள் இல்லற வாழ்வு அனைத்து வகையிலும் என்றும் இனிதே நிறைவுற அருளுக"

5. காப்பு அணிவித்தல்:

முக்கொம்புடைய விரலி மஞ்சளை வெற்றிலையில் மஞ்சள் நூலால் கட்டி பிள்ளையாருக்கு முன்பு வைத்து வழிபாடு செய்க. ஒரு தட்டில் முழுத் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து அதனை மணமகனைப் பிடித்துக் கொள்ளச் செய்து வலது கையில் காப்பினை அணிவிக்கவும். மணமக்களுக்கு இடது கையில் அணிவிக்கவும்.

"மாறிலா நிறை வளர்ந்தரு புகலியின் மணமீக்

கூறு நாளின் ¬முன்னாளினில் வேதியர் குழா¬ம்

நீறு சேர் திருத் தொண்டரும் நிகரிலாதவருக்கு

ஆறு சூடினார் அருள்திருக் காப்பு நாண் அணிவார்" (பெரிய புராணம்)

எனவும்

"பங்கயனும் மாமகேசர் பாதபூசனை செய்து ஏத்தி

அங்குரந் தெளித்து முன் கைக்கங்கணம் ஆர்த்தல் செய்தார்"

என்றும் காப்பு அணியும்போது ஓத வேண்டும்.

மணமக்கள் இருவரும் கூற வேண்டிய குறள்:

"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (குறள் 43)

[size=18]அஸ்வின் தாயுமானவர்

Thatstamil

Print this item

  சுனாமி முகாமை ராணுவ முகாமாக்கும் இலங்கை
Posted by: Vaanampaadi - 02-02-2005, 05:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சுனாமி முகாமை ராணுவ முகாமாக்கும் இலங்கை

கொழும்பு:

சுனாமி நிவாரண முகாம்களை ராணுவ முகாம்களாக இலங்கை அரசு மாற்றி வருவதாக என்று தமிழ் தேசிய கூட்டணி எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.


மட்டக்களப்பில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்கெர்னி முகாமில் கழிப்பிட மற்றும் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

மேலும் இந்த முகாம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு போலீஸாருடன் ராணுவ வீரர்களும் முகாமின் பணிகளில் தலையிட்டு வருகின்றனர்.

இது குறித்து மட்டக்களப்பு எம்.பி. ஜோசப் கூறுகையில்,

சுனாமி நிவாரண முகாம்களை ராணுவமயாக்குவது மனிதாபிமான விதிகளை மீறிய செயலாகும். இலங்கை அரசு பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றுவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறது என்றார்.

Thatstamil

Print this item

  &quot;Baby 81&quot;ன் பெற்றோர்கள்? கைது?
Posted by: KaviPriyan - 02-02-2005, 05:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

"Baby 81"ன் பெற்றோர்கள்? கைது?


மேலதிக செய்திகளுக்கு
www.tsunamiineelam.com

Print this item