Yarl Forum
போப்பாண்டவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: போப்பாண்டவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் (/showthread.php?tid=5462)



போப்பாண்டவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் - Vaanampaadi - 02-02-2005

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/2-2-2005/pope.jpg' border='0' alt='user posted image'>
போப் ஆண்டவருக்கு மூச்சுத்திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

ரோம், பிப். 2-

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத்தலைவர் போப் ஆண்ட வர். கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் தலைமை அலுவலகம் இத்தாலியில் உள்ள வாடிகன் நகரில் உள் ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள வாடிகன் நகருக்கு தனி நாட்டுக்கான அனைத்து அந்தஸ்தும் உள்ளது.

இப்போது போப் ஆண்டவராக இருப்பவர் 2-ம் ஜான் பால். முதலாம் ஜான்பால் இறந்ததை தொடர்ந்து 2-ம் ஜான்பால் கடந்த 1978-ம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்வு பெற்றார். 27 ஆண்டு களாக இவர் போப் ஆண்டவ ராக பதவி வகித்து வருகிறார். அதிக நாட்கள் போப் ஆண்டவர் பதவியில் நீடித்த வர் என்ற பெருமை இவருக்கு இருக்கிறது. கடந்த 455 ஆண்டுகளில் போப் ஆண்டவர்களின் வரலாற்றில் இத்தாலி நாட்டை சேராத ஒருவர் போப் ஆண்ட வராக பதவி வகிப்பதும் இதுவே முதல் தடவை.

84 வயது ஆகும் போப் 2_ம் ஜான்பால் போலாந்து நாட்டை சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் கரோல் வோஜ்டிலா.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார். `பார்க் கின்சன்' என்ற நரம்பு தளர்ச்சி நோயாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். வெளிநாடு பயணத்தையும் அவர் ரத்து செய்தார்.

இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. மிகவும் சோர்வாக இருந்த அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு ஃபுளூ காய்ச்சலும் ஏற்பட்டது. தொண்டைக்கும் நுரையீரலுக் கும் இடையே உள்ள பகுதியில் வலி ஏற்பட்டு வந்தது. உமிழ் நீரை விழுங்குவதற்கு கூட அவர் சிரமப்பட்டார்.

உடல்நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு அவரை ரோம் நகரில் உள்ள ஜெமலி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். வாடிகன் நகரில் இருந்து 4 கிலோ மீட்டர் துரத்தில் இந்த ஆஸ்பத்திரி உள்ளது. அங்குள்ள 4-வது மாடி அறையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி வாடிகன் நிர்வாகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி கூறும்போது, "போப் ஆண்டவரின் உடல்நிலை மேலும் மோசமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் அவரை ஆஸ்பத்திரியில் அனு மதித்துள்ளோம். அவர் சாதாரண பிரிவில் தான் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவரை சேர்க்கவில்லை" என்று தெரி வித்தார்.

போப் ஆண்டவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

போப் ஆண்டவருக்கு உடல் நலக்குறைவு தொடர்ந்து நீடித்தால் வாடிகன் திருச்சபை பொறுப்புகளை ஏற்பது யார்? அடுத்த போப் ஆண்டவர் யார்? என்ற கேள்விகளும் இப்போதே எழுந்துள்ளன.

வழக்கமாக போப் ஆண்டவர் மரணத்துக்குப் பிறகே அடுத்த போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படுவார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ கர்தினால்கள் ஒன்று கூடி அவர்களில் ஒருவரை புதிய போப் ஆண்டவராக தேர்ந்து எடுப்பார்கள்.

ஆனால் போப் ஆண்டவர் மரணத்துக்குப் பிறகே இந்த கர்தினால்கள் கூட்டம் ரகசியமாக நடைபெறும். 2-ம் ஜான் பாலுக்குப்பிறகு தேர்வு செய்யப்படும் போப் ஆண்டவர் இத்தாலி நாட்டவராக இருக்க வேண்டுமா? அல்லது ஏதாவது ஒரு வளரும் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமா? என்ற பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

புதிதாக தேர்வு செய்யப் படும் போப் ஆண்டவர் இப்போதைய போப் ஆண்டவ ரைப்போல சமாதான தூதரா கவும் அனைத்து பிரிவு மக்க ளாலும் நேசிக்கப்படுபவராகவும் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

மாலைமலர்