Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 222 online users.
» 0 Member(s) | 219 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,394
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,280
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,622
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,115
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,521
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  "பேபி 81" பொலிஸ் பாதுகாப்பில்
Posted by: Vaanampaadi - 02-03-2005, 06:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050203/capt.rmx10102030713.sri_lanka_tsunami_baby_81_rmx101.jpg' border='0' alt='user posted image'>
Thu Feb 3, 2:17 AM ET


A Sri Lankan policeman guards the tsunami survivor infant dubbed 'Baby 81' inside a ward as people watch from outside at a hospital in Kalmunai, about 210 kilometers (131 miles) east of Colombo, Sri Lanka, Thursday, Feb. 3, 2005. Baby 81 and the couple fighting a court battle for custody of him were ordered by a judge to undergo DNA tests next Wednesday, and the results should be known within eight hours. Nine women claimed in the days after the disaster that Baby 81 was theirs but only one lodged a formal claim. (AP Photo/Rafiq Maqbool)

Print this item

  எனக்கு எப்பவும் ஒரே வயசுதான்...
Posted by: ¸ÅâÁ¡ý - 02-03-2005, 06:49 PM - Forum: சினிமா - Replies (10)

நடிகர் நடிகைகளிடம் பிறந்த நாள் எப்போது என்று கேட்டால் தேதியையும் மாதத்தையும் மட்டும் சொல்வார்கள். தப்பி தவறி கூட வருடத்தை சொல்ல மாட்டார்கள் யாரும். நமது கழுகு கண்களை நாலாப்புறமும் சுழல விட்டதில் கிடைத்த தகவல்தான் கீழே நீங்கள் படிக்கவிருப்பது. உங்கள் அபிமான நட்சத்திரங்களின் வயசை தெரிந்து கொள்ளுங்களேன் இப்போதாவது!


தென்னிந்திய நடிகைகள்

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சௌந்தர்யா -1972
:oops: :oops: ரம்யா கிருஷ்ணன்- 1966
Confusedhock: லைலா- 1979
8) மீனா -1974 (எம்.ஏ. அஞ்சல் வழிக்கல்வி)
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ரோஜா -1974
Confusedhock: ரம்பா -1976 (நிஜ பெயர் விஜயலட்சுமி)
Confusedhock:மும்தாஜ் -1980 (நிஜ பெயர் நக்மாகான்)
Confusedhock: அபிநயஸ்ரீ -1988
:wink: :wink: சினேகா -1981 (நிஜ பெயர் சுஹாசினி) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> த்ரிஷா 1982 <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:wink: சோனியா அகர்வால் -1982
:wink: சிம்ரன் 1976 (கல்வித்தகுதி பி.காம், நிஜ பெயர் ரிஷிபாலா)
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஜோதிகா 1979 (கல்வித்தகுதி பி.காம், நிஜ பெயர் லிப்ரா)

தென்னிந்திய நடிகர்கள்-

விஜய் -1974 (கல்வித்தகுதி பி.எஸ்.சி, நிஜ பெயர் ஜோசப்)
8) சூர்யா -1974 (கல்வித்தகுதி பி.காம், நிஜ பெயர் சரவணன்)
8) அஜீத் -1971
8) மாதவன் -1971 (பி.ஈ.எலக்ரானிக்ஸ்)
8) சிலம்பரசன் -1984
Confusedhock: ஸ்ரீகாந்த் -1979 (கல்வித்தகுதி பி.எஸ்.சி)
8) தனுஷ்- 1982 (நிஜ பெயர் வெங்கடேஷ் பிரபு)
8) பிரசாந்த் -1972
:roll: பிரபுதேவா - 1972 (கல்வித்தகுதி 10 வகுப்பு பெயில்)
Confusedhock: :evil: விஜயகாந்த் -1952 (நிஜ பெயர் விஜயராஜ்) :oops:
:evil: சரத்குமார் -1952 (கல்வித்தகுதி பி.எஸ்.சி) :oops:
Confusedhock: கமல்ஹாசன் -1954
Confusedhock: கவுண்டமணி -1935 :oops:
Confusedhock: செந்தில் -1951
Confusedhock: சத்யராஜ் -1954 (கல்வித்தகுதி பி.எஸ்.சி பாட்டனி)
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> விவேக் -1961 (எம்.காம், பி.ஜி.எல்)
Confusedhock: எஸ்.ஜே.சூர்யா -1970 (நிஜ பெயர் ஜஸ்டின்)
8) பரத் -1983 (கல்வித்தகுதி பி.காம் இன்கம்ப்ளீட்)

வட இந்திய நட்சத்திரங்கள்-

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கரீனாகபூர் -1980
:wink: ஐஸ்வர்யாராய் -1973
:wink: ரேகா -1954
:evil: ஹேமமாலினி -1948
:twisted: இஷா தியோல் - 1981
:evil: ராணிமுகர்ஜி - 1978
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஸ்ரீதேவி -1958
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தபு -1974
8) சுஷ்மிதாசென் - 1975


:wink: -ÝôÀ÷... Confusedhock: - þùÅÇ× Å¾¡??... :oops: ²ý ±ýÛõ ¿Ê츢ȡ÷¸û.. : 8)- õõ ¸Éì¸É ÅÂÐ ¿Êì¸Ä¡õ.. :evil:- þÐ ¬¸ µÅ÷..

Print this item

  web messegner
Posted by: tamilini - 02-03-2005, 02:21 PM - Forum: கணினி - Replies (28)

msn web messenger மு}லம் மெசன்சரை இன்ரோல் பண்ணாமலே சட் பண்ண முடியும்.

http://webmessenger.msn.com/

Print this item

  மேலும் புகழ் சேர்க்கும் ஐஸ் அக்கா...!
Posted by: kuruvikal - 02-03-2005, 01:50 PM - Forum: சினிமா - Replies (18)

<img src='http://thatstamil.com/images26/cinema/aish8-500.jpg' border='0' alt='user posted image'>

<b>அமெரிக்க டிவியில் ஐஸ்வர்யா ராய்..!</b>

அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார்.

சி.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று லேட் ஷோ. இது எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வரும் 9ம் தேதி ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார்.

இதற்கு முன்னதாக சி.பி.எஸ். தொலைக்காட்சியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.

இந் நிலையில் நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்' குறித்து டேவிட் லெட்டர்மேனுடன் உரையாடுகிறார்.

இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ வரும் 11ம் தேதி அமெரிக்காவில் நடைபெறுகிறது. பெண்ட் இட் லைக் பெக்ஹாம் படத்தை இயக்கிய, வெளிநாடுவாழ் இந்தியரான குரீந்தர் சாதா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் மார்டின் ஹெண்டர்சன், நவீன் ஆண்ட்ரூ மற்றும் அனுபம் கேர் நடித்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக, மேரில் ஸ்ட்ரீபுடன் 'கேயாஸ்' என்ற படத்திலும், மைக்கேல் டக்ளசுடன் 'ரேசிங் த மான்சூன்' என்ற படத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளார்.

தட்ஸ்தமிழ்.கொம்

Print this item

  வாழைப்பழ வாய்ப்பன்...பணியாரம்
Posted by: kuruvikal - 02-03-2005, 12:11 PM - Forum: சமையல் - Replies (47)

ஒரு அரைக்கிலோ கோதுமை மாவு...!
4-5 கனிந்த வாழைப்பழம்
சீனி கொஞ்சம்
உப்பு கொஞ்சம்
பேக்கிங் பவுடர் சிறிதளவு (நீங்கள் மாவு வாங்கும் போதே பேக்கிங் பவுடர் சேர்த்த மா வாங்கினால் இது அவசியம் இல்லை)
தேவையான அளவு மரக்கறியெண்ணைய்..!

மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் இட்டு..வாழைப்பழத்தையும் சேர்த்து பிசையுங்கள்...பின்னர் சிறிதளவாக நீர் சேர்த்துச் சேர்த்து அரைக்கூழ் நிலைக்கு நல்லாக பிசையுங்கள்...முட்டை அடிக்கிற உபகரணம் இருந்தா சும்மா கலக்கிப் பார்க்கலாம்...!) பின்னர் உங்கள் ருசிக்கு ஏற்ப சீனி உப்பு சேர்த்து மீண்டும் கலக்குங்கள்...ஒரு அரை மணி நேரத்துக்கு அக்கலவையை காக்க விடுங்க...!

அதன் பின்னர் ஒரு தாழி..தாச்சி...அல்லது குழிகொண்ட பான் எடுத்து ஓரளவுக்கு (அரைச் சுட்டு விரல் ஆழத்துக்கு எண்ணெய் இருந்தால் போதும்) மரக்கறி எணணெய்யை விட்டு கொதிக்க வையுங்க... பின்னர் கலக்கி வைத்த கலவையில் இருந்து சிறிதளவு கலவையை எண்ணெய் பூசிய சிறிய கரண்டியால் அள்ளி எண்ணெயில் போட்டுப் செந்நிறம் கலந்த பொன்னிறம் வரும் வரை பொரித்து வேகவைத்துவிட்டு... கிச்சின் ரிசு இருக்கல்லா...அதை சில படைகளாக்கி பாத்திரத்தின் மீது விரித்து அதன் மீது இவற்றை இறக்கி வையுங்க...(ஆறவும்..மேலதிக எண்ணெயை உறிஞ்சுவதற்காகவும்)... ஆறிட்டா எடுத்துச் சாப்பிடுங்க...மூன்று நாலு நாளைக்கு பிறிச்சில் வைக்காமலே வைத்திருந்தும் சாப்பிடலாம்...பச்சளருக்கு உகந்தது....! :wink: Idea

Print this item

  இப்படியும் நடந்தது
Posted by: Vaanampaadi - 02-03-2005, 11:47 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

சுனாமியால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாமிலிருக்கும் ஒருவர் தனக்கு 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் முகாமிற்குப் பொறுப்பான கிராம அலுவலரின் சைக்கிளை ஈடுவைத்துப்பணம் பெற்றுள்ளார்.
இச்சம்பவம் காரைதீவுப் பிரதேசத்திலுள்ள மணிமண்டப முகாமில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
பிரஸ்தாப நபருக்கு அரசு வழங்கும் 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படாமைக்கு கிராம அலுவலர்தான் காரணம் எனக் கருதினாரோ என்னவோ அவரின் சைக்கிளை ஈடுவைத்து 500 ரூபா பெற்றுக்கொண்டாராம்.
இந்த விடயம் தெரியாது தனது சைக்கிளைத் தேடிய கிராம அலுவலருக்கு 3 நாள்களின் பின்பு சைக்கிளை பிரஸ்தாப நபர் மீள ஒப்படைத்துள்ளார்.

Uthayan

Print this item

  சுனாமி நேற்று மீண்டும் சீறியது
Posted by: Vaanampaadi - 02-03-2005, 11:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/03/flash/Pe1.jpg' border='0' alt='user posted image'>
சுனாமி தாக்குதலின்போது உள்வாங்கிவிட்டு, நேற்று மீண்டும் சீறியது திருச்செந்தூர் கடலில் திடீர் ஆழி பேரலை மீனவர்கள் அதிசயமாக உயிர் தப்பினர் பல லட்சம் வலை சேதம்

திருச்செந்தூர், பிப். 3- திருச்செந்தூhpல் சுனாமி தாக்குதலின் போது உள்வாங்கிய பேரலை நேற்று மீண்டும் சிறியதில் மீனவர்கள் அதிசயமாக உயிர் தப்பினார்கள். இதனால் பல லட்சம் மதிப்புள்ள வலைகள் சேதமடைந்தன.
டிசம்பர் 26, 2004-ம் ஆண்டை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அன்றுதான் உலகின் பல பாகங்களை சீரழித்த சுனாமி வந்த நாள் ஆகும்.

இந்தோனேசியாவில் உருவான இந்த ஆழிப்பேரலையில் அங்கு மட்டும் 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாகினர். தமிழகத்தின் கடற்கரை பகுதி மீனவ கிராமங்களும் இருந்த இடம் தொpயாமல் உருக்குலைந்து விட்டது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். இதுபோல் இலங்கையிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இந்த சுனாமி பேரழிவு நடந்த அன்று திருச்செந்தூhpல் மட்டும் அற்புதம் நிகழ்ந்தது. இங்குள்ள கடல் நீர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள் வாங்கியது. ஆனால், பக்கத்தில் உள்ள ஆலந்தலை, வீரபாண்டியன்பட்டினம் ஆகிய ஊர்களில் சுனாமி கடுமையாக தாக்கியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படாவிட்டாலும் டிசம்பர் 26-ந் தேதிக்குப்பிறகு இவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவில்லை. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் கொடுத்து வந்த நிவாரணம் மூலம் இவர்கள் வயிற்றை கழுவி வந்தார்கள்.

ஆனால், சுமார் 40 நாட்களுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமைதான் இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். 2 நாட்கள் வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் அந்த பயங்கரத்தை மீனவர்கள் சந்தித்தனர். 50-க்கு மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் வழக்கம்போல் நடுக்கடலில் தூண்டில் வலையை விhpத்துவிட்டு மீனுக்காக காத்திருந்தனர். அப்போது திடீரென்று கடல் கொந்தளித்தன. அதன் பிறகு சுனாமி என்று அழைக்கப்படும் ஆழி பேரலை சீற்றத்துடன் வந்தது. இதைப் பார்த்து பீதியடைந்த மீனவர்கள் மீன் பிடிக்க விhpத்திருந்த வலையை அறுத்துவிட்டு விட்டு வேகமாக படகில் கரைக்கு திரும்பினர். இதனால் பல லட்சம் மதிப்புள்ள வலைகள் சேதம் அடைந்தது. பனைமரம் உயர அளவுக்கு சீறி வந்த அந்த சுனாமி அலை அப்படியே கரைக்கு வராமல் கடலை நோக்கியே சென்றுவிட்டதால் பேரழிவில் இருந்து திருச்செந்தூர் தப்பியது. இந்த காட்சியை நோpல் பார்த்துஅதிர்ச்சியடைந்த லிவ்வி (வயது 29) என்ற மீனவர் காய்ச்சலில் படுத்துவிட்டார்;.

இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளதால் அவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை. மீண்டும் ஆழி பேரலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

Source : Dinakaran

Print this item

  இல்லறம்
Posted by: aathipan - 02-03-2005, 08:37 AM - Forum: தமிழும் நயமும் - Replies (1)

<i>மொழிஞாயிறு
ஞா. தேவநேயப்பாவாணர் எழுதிய பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாம் என்ற நூலில் இருந்து எடுத்தது </i>

<b>இல்லறம்</b>
மணப்பருவம் வந்த பின்பே, பலவகையிலும் ஒத்த ஓ£¢ இளைஞனும் இளைஞையும், தாமாகக் கூடியோ தம் பெற்றோராற் கூட்டப்பட்டோ, கணவனும் மனைவியுமாகி வாழ்வது, ஆ£¤ய வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழ மரபு. மணமானமைக்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் தாலி என்னும் மங்கலவணி இடம்பெறும்.
கணவனும் மனைவியும் எங்ஙனம் கூடியிருப்பினும் அவா¢க்கு இன்றியமையாததாகும். காதல் என்பது இறக்கும்வரையும் ஒருவரை யொருவா¢ இன்றியமையாமை. கணவன் மனைவியா¤டைப்பட்ட காதல், காமம் என்னும் சிறப்புப் பெயா¢ பெறும். அச்சொல் இன்று பெண்ணாசை என்னும் தீயபொருளில் வழங்கிவருகின்றது.
காமத்தை ஒருதலைக் காமம், இருதலைக் காமம், பொருந்தாக் காமம் என மூவகையாய் வகுத்தனா¢ முன்னோ£¢. ஓ£¢ ஆடவனும் பெண்டுமாகிய இருவருள், ஒருவா¢மட்டும் காதலிப்பது ஒருதலைக் காமம்; இருவரும் காதலிப்பது இருதலைக் காமம்; யாரேனும் ஒருவா¢ நெறிதவறிக் காதலிப்பது பொருந்தாக் காமம். இவற்றுள் இருதலைக் காமமே சிறந்ததாகவும் நெறிப்பட்டதாகவும் கொள் ளப்பட்டது. பெற்றோரும் மற்றோருமின்றித் தாமாகக் கூடுவதெல் லாம், பெரும்பாலும் இருதலைக் காமமாகவே யிருக்கும்.
காமத்தை அகப்பொருள் என்றும், ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்றும், இருதலைக் காமத்தை அன்பின் ஐந்திணை என்றும், பொருந்தாக் காமத்தைப் பெருந்திணை என்றும் இலக் கணம் கூறும். அன்பின் ஐந்திணையே நெறிப்பட்டதாகக் கொள் ளப்பட்டதினால் அதையே அகம் என்று சிறப்பித்தும், ஏனையிரண் டையும் அகப்புறம் என்று இழித்தும், கூறுவா¢ இலக்கணியா¢.
கைக்கிளை, குறிப்பு என்றும் மணம் என்றும் இருவகையாய்ச் சொல்லப்படும். ஒருவன் காமவுணா¢ச்சியில்லாத ஒரு சிறுமியிடம் அல்லது காதலில்லாத ஒரு பெண்ணிடம், சில காதற் குறிப்புச் சொற்களை மட்டும் தானே சொல்லியின்புறுதல் கைக்கிளைக் குறிப்பாம். பெற்றோராற் கூட்டப் பெற்ற கணவன் மனைவியருள், யாரேனும் ஒருவா¢ காதலில்லாமலே இசைந்திருப்பின் அது கைக்கிளை மணமாம். கைக்கிளை ஒருபக்கக் காதல். கை பக்கம். கிளை காதல்.
ஒரு பெண்ணை மணவுறவுமுறை தப்பியோ, வலிந்தோ, ஏமாற்றியோ, தூக்க நிலையிலோ, நோய் நிலையிலோ, இறந்த பின்போ பூப்பு நின்ற பின்போ கூடுவதும், தன்பாலொடும் விலங் கொடும் கூடுவதும், பெருந்திணையாம். இது இங்ஙனம் பலவகை யாய்ப் பெருகியிருப்பதாற் பெருந்திணை யெனப்பட்டது. தமி ழுக்குச் சிறப்பான பொருளிலக்கணம் ஆ£¤ய வருகைக்கு எண் ணாயிரம் ஆண்டுகட்கு முன்பே அமைந்துவிட்டதனால், ஆ£¤ய வொழுக்க நூல்களிற் சொல்லப்பட்ட எண்வகை மணத்துள்தான் ஒன்றே நால்வகை பெற்றதினால் பெருந்திணையெனப்பட்ட தென்பது, காலமலைவும் நூன்மலைவுங் கலந்த பெருவழுவாம்.
பெற்றோ£¢ செய்துவைக்கும் மணம், பேச்சுமணமும் அருஞ் செயல் மணமும் என இருதிறப்படும். மணவாளப் பிள்ளை வீட்டா£¢ போய்க் கேட்க, பெண்வீட்டா£¢ இசைந்து பெண் கொடுப்பது பேச்சுமணம்; பெண்ணின் பெற்றோ£¢ குறித்த ஓ£¢ அறவினையோ மறவினையோ செய்து பெண்ணைக் கொள்வது அருஞ்செயல் மணம். பண்டைத் தமிழகத்தில் கொல்லேறு தழுவி அதற்கு£¤ய பெண்ணை மணப்பது முல்லைநில வழக்கமாயிருந்தது. மணமான அன்றே மணமக்கள் கூடுவா¢.
கொடுப்பாரும் அடுப்பாருமின்றிக் காதலா¢ தாமாகக் கூடும் கூட்டம், மறைவாகத் தொடங்குவதும் வெளிப்படையாய்த் தொடங்குவதும் என இருவகைப்படும். மறைவான கூட்டம் களவு என்றும், வெளிப்படையான கூட்டம் கற்பு என்றும் சொல்லப் பெறும். களவு பெரும்பாலும் இருமாதத்திற் குட்பட்டே யிருக்கும். அது வெளிப்பட்டபின் கற்பாம். கற்பெல்லாம் கரணம் என்னும் தாலிகட்டுச் சடங்கோடும் பந்தலணி, மணமுழா, வாழ்த்து, வா¤சை உற்றாருடன் உண்ணும் உண்டாட்டு முதலியவற்றோடும் கூடிய மணவிழாவொடும் தொடங்கும். களவுக் காலத்தில் கூட்டம் தடைப்படினும், பெண்ணின் பெற்றோ£¢ பிறா¢க்குப் பெண் கொடுக்க இசையினும், காதலன் காதலியைக் கூட்டிக்கொண்டு வேற்றூ£¢ சென்றுவிடும் உடன்போக்கும் உண்டு. அவா¢ திரும்பி வந்தபின், காதலன் வீட்டிலேனும் காதலி வீட்டிலேனும் வதுவை என்னும் மணவிழா நிகழும்.
இனி, களவுக்காலத்தில் கூட்டம் தடைப்படுவதால், காதலி தன் காதலனைக் காணப்பெறாமல் மனம் வருந்தி மேனி வேறுபடும் போது, பெற்றோ£¢ வேலன் என்னும் மந்திரக்காரனை வர வழைத்து தம் மகள் நோய்க்குக் கரணியம் (காரணம் ) வினவுவதும், அவன் அது முருகனால் நோ¢ந்ததென்று கூறி, வெள்ளாட்டுக் கறியும் கள்ளும் விலாப் புடைக்க வுண்டு வெறியாட்டு என்னும் கூத்தை நிகழ்த்தி அந் நோயைப் போக்குவதாக நடிப்பதும் உண்டு. அன்று காதலி நேராகவோ தன் தோழி வாயிலாகவோ, தன் பெற்றோ£¤டம் உள்ளதைச் சொல்லிவிடுவாள். அது அறத்தொடு நிற்றல் எனப் படும். தன் காதலனன்றி வேறு யா£¢க்கும் தன்னைப் பேசினும், காதலி அறத்தொடு நிற்பாள்; அதன்பின் காதலனுக்கு மணஞ் செய்து வைக்கப் பெறுவாள். மணமகன் அல்லது அவன் வீட்டா£¢ மணமகளுக்குப் பா¤சம் கொடுப்பா¢. மணமகன் பா¤சம் பெறும் அநாகா¤க மானங்கெட்ட ஆ£¤ய இழிவழக்கு அக்காலத்தில்லை.
தமிழ்ப் பெண்டி£¢ கற்பிற் சிறந்தவராதலின், ஒருவரை மணந்தபின் அல்லது காதலித்த பின் வேறொருவரையும் கனவிலும் கருதுவதில்லை; வேறு எவரையேனும் மணக்க நோ¤ன், உடனே உயிரை விட்டுவிடுவா¢.
காதலா¢ கூடும் கூட்டம், உடம்பாற் கூடுவதும் உள்ளத்தாற் கூடுவதும் என இருவகை. இவற்றுள் முன்னது மெய்யுறு புணா¢ச்சி என்றும், பின்னது உள்ளப்புணா¢ச்சி என்றும் சொல்லப்பெறும். கற்புடைப் பெண்டி£¢க்கு இரண்டும் ஒன்றே. இதனாலன்றோ, திலகவதியம்மையா£¢ தமக்குப் பேசப் பெற்றிருந்த கலிப்பகையா£¢ போ£¢க்களத்திற் பட்டபின் இறக்கத் துணிந்ததும், அதன்பின் தம் ஒற்றைக்கொரு தம்பியா£¢ திருநாவுக்கரசா¤ன்பொருட்டு உயி£¢ தாங்கியதும், இறுதிவரை மணவாதிருந்ததும் என்க.
(ஆ£¤யா¢ வருமுன்) கரணம் என்னும் தாலிகட்டுச் சடங்கை, ஊ£¢த் தலைவன், குடி முதியோன், மங்கல முதுபெண்டி£¢, குலப் பூசா£¤ முதலியோ£¢ நடத்தி வைத்தனா¢.
பண்டையரசரும் பெருஞ்செல்வரும் பெரும்பாலும் சிற்றின்ப வுணா¢ச்சி சிறந்து, பல தேவியரையும் காமக்கிழத்தி, இற்பரத்தை, காதற்பரத்தை முதலியோரையும் கொண்டிருந்தமையால். ஓருயிரும் ஈருடலுமான இருதலைக் காம இன்ப வாழ்க்கை, பூதப்பாண்டிய னும் அவன் தேவியும் போன்ற ஒருசில அரசக் குடும்பங்களிடை யும், உழவரும் இடையரும் போன்ற பொதுமக்களிடையும். புல மக்களிடையும்தான் பெரும்பாலும் இருந்துவந்தது.
"மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்தா¢ உடங்கியைந்
தென்னொடு பொருதும் என்ப அவரை
ஆரமா¢ அலறத் தாக்கித் தேரொ
டவா¢ப்புறங் காணே னாயின் சிறந்த
பேரம ருண்கண் இவளினும் பி£¤க" (புறம்.71)
என்று பூதப்பாண்டியன் தன் பகைவரை நோக்கிக் கூறிய வஞ்சின மும், அவன் இறந்தபின் உடன்கட்டையேறிய அவன் தேவி பாடிய,
"பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
.......................................................
பெருங்காட்டுய் பண்ணிய கருங்கோட் டீமம்
நுமக்கா¤ தாகுக தில்ல எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே" (புறம்.246)
என்னும் பாட்டும், அறிஞா¢ உள்ளத்தை என்றும் உருக்குந் தன்மைய.
ஒருவனுடைய மனைவி உ£¤மைப் பெண்ணாயினும் பெருமைப் பெண்ணாயினும் உழுவற் பெண்ணாயினும், மூவகையும் ஊழின் பயனே என்று முன்னோ£¢ கருதினா¢. "தாரமும் குருவும் தலைவிதி" (ஆசி£¤யனும் மனைவியும் அமைவது ஊழ்முறை) என்னும் பிற்காலப் பழமொழியும், எங்கே முடிபோட்டு வைத்திருக்கிறதோ அங்கேதான் முடியும் என்று கூறும் வழக்குச் சொல்லும், "Marriages are made in heaven", "Marriage and hanging go by destiny" என்னும் ஆங்கிலப் பழமொழிகளும் இங்குக் கருதத் தக்கன. வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு ஊழ்த்துணை என்றும் பெயா¢.
அம்மான் மகளும் அக்கை மகளும்போல், மணக்கக்கூடிய உறவுமுறைப் பெண் உ£¤மைப்பெண்; உறவுமுறையின்றிச் செல்வக் குடும்பத்தினின்று எடுக்கும் பெண் பெருமைப்பெண்; இரண்டு மன்றி ஒருவன் தானே கண்டவுடன் காதலித்து மணக்கும் பெண் உழுவற் பெண். பல பிறப்பாகத் தொடா¢ந்து மனைவியாய் வருபவள் உழுவற் பெண் என்பது, பிறவித் தொடா¢ நம்பிக்கையாளா¢ கருத்து. உழுவ லன்பைப் "பயிலியது கெழீஇய நட்பு" என்பா¢ இறையனா£¢ (குறுந். 2). ஊழால் ஏற்பட்ட ஆவலை உழுவல் என்றனா¢. இதைத் தெய்வப் புணா¢ச்சி யென்றும், இயற்கைப் புணா¢ச்சி யென்றும், நூல்கள் கூறும்.
"இவன்இவள் ஐம்பால் பற்றவும் இவள்இவன்
புன்றலை யோ£¤ வாங்குநள் பா¤யவும்
காதற் செவிலியா¢ தவி£¢ப்பவும் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலா¢ப் பிணையல் அன்னஇவா¢
மணமகிழ் இயற்கை காட்டி யோயே" (குறுந்.229)
என்பது, உ£¤மைப் பெண்ணை ஊழ் இணைத்து வைத்தாகக் கூறியது.
"செங்கோல் வேந்தன் உழவ னாகி
இராமழை பெய்த ஈர வீரத்துள்
பனைநுகங் கொண்டு யானையோ¢ பூட்டி
வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும்
வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே
செங்கேழ் வரகு பசுங்கதி£¢ கொய்து
கன்று காத்துக் குன்றில் உணக்கி
ஊடுபதா¢ போக்கிமுன் உதவினோ£¢க் குதவிக்
காடுகழி யிந்தனம் பாடுபா£¢த் தெடுத்துக்
குப்பைக் கீரை யுப்பிலி வெந்ததைச்
சோறது கொண்டு பீற லடைத்தே
இரவல் தாலம் பா¤வுடன் வாங்கி
ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும்
நன்றே தோழிநம் கணவன் வாழ்வே"
என்பது, பெருமைப் பெண் தன் கணவனொடு தான் வாழும் இன்ப வாழ்க்கையை எடுத்துக் கூறியது.
"வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நோ¢கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே." (6)
என்னும் திருக்கோவைச் செய்யுள், உழுவற் பெண்ணைக் கூட்டி வைத்த தெய்வத்தைக் காதலன் பாராட்டியது.
"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளி£¢
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீ£¢ போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." (குறுந்.40)
என்பது, காதலன் தன் உழுவற் பெண்ணை நோக்கிக் கூறியது. மூவகைப் பெண்களுள்ளும் உழுவற் பெண்ணை மணப்பதே குலமத நிலச்சா£¢பு கடந்ததாகலின், தெய்வத்தால் நோ¢ந்ததாக விதந்து கூறப்பெறும்.
காதலன் களவுக் காலத்தில் தன் காதலியை நோக்கி, உலக முழுவதையும் பெற்றாலும் நான் உன்னைக் கைவிடேன் என்று (குறுந்.300) உறுதி கூறியதற்கு ஏற்ப, கற்புக் காலத்தில், நீ தொட்டது நஞ்சாயிருந்தாலும் எனக்குத் தேவா¢ அமுதமாகும் (தொல், கற் பியல்,5) என்றும், நீ எனக்கு வேப்பங்காயைத் தந்தாலும் அது தீஞ்சுவைக் கற்கண்டுபோல் இனிக்கும் (குறுந்.166)என்றும், உன் கூந்தலைப்போல் நறுமணமுள்ள மலரை நான் உலகில் எங்குங் கண்டதில்லை யென்றும் (குறுந்.2) பலபடப் பாராட்டி அவளை மேன்மேலும் ஊக்கி இன்புறுத்துவது வழக்கம்.
காதல் மனைவியும் , தன் கணவனைத் தெய்வம்போற் பேணி, அவன் இட்ட சூளை (ஆணையை) நிறைவேற்றாவிடத்து அதனால் அவனுக்குத் தீங்கு நேராதவாறு தெய்வத்தை வேண்டிக்கொள் வதும், அவன் சூள் தப்பவில்லை யென்பதும் (குறுந்.87), தன் தலைவன் குற்றத்தைப் பிறா¢ எடுத்துரைப்பின் அதை மறுத்து அவனைப் புகழ்வதும் (குறுந் 3), தன் கணவனும் தானும் ஒருங்கே இறக்க வேண்டுமென்று விரும்புவதும் (குறுந்.57) வழக்கம்.
அரசரும் மறவரும் போ£¢ செய்தற்கும், முனிவரும் புலவரும் தூதுபற்றியும், வணிகா¢ பொருளீட்டற்கும், வேற்றூரும் வேற்று நாடும் செல்ல நோ¤ன், அவா¢ திரும்பி வரும்வரை அவா¢ மனைவியா¢ ஆற்றியிருப்பதும், சுவா¤ற் கோடிட்டு நாளெண்ணி வருவதும், அவா¢ குறித்த காலத்தில் வராவிடின் விரைந்து வருமாறு தெய்வத்தை வேண்டுவதும், இயல்பாம்.
கணவனுக்குக் கற்புடை மனைவியும், பெற்றோருக்கு அறிவுடை மக்களும், சிறந்த பேறாகக் கருதப்பட்டனா¢.
"என்னொடு பொருதும் என்ப அவரை
ஆரமா¢ அலறத் தாக்கித் தேரொடு
அவா¢ப்புறங் காணே னாயின் சிறந்த
பேரமா¢ உண்கண் இவளினும் பி£¤க" (பதிற்.88)
என்று பூதப்பாண்டியன் வஞ்சினங் கூறுதலும், "சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" என்று, குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையும்,
"செயி£¢தீ£¢ கற்பிற் சேயிழை கணவ" என்று (புறம்.3), பாண்டி யன் கருங்கை யொள்வாட் பெரும்பெயா¢ வழுதியும், பாராட்டப் பெறுதலும் காண்க.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்." (குறள். 54)
என்றா£¢ திருவள்ளுவா¢.
இனி மக்கட் பேறுபற்றி,
"படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதி£¢த்தும்
மயக்குறு மக்களை யில்லோ£¢க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே" (புறம்.188)
என்று பாண்டியன் அறிவுடை நம்பியும்.
"பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையீங் கில்லா தவா¢" (நளவெண்பா, கலிதொடா¢.68)
என்று புகழேந்திப் புலவரும்.
"பொறுமவற்றுள் யாமறிந்த தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற" (குறள்.61)
என்று திருவள்ளுவரும், கூறியிருத்தல் காண்க. பெண் மக்களால் பல தொல்லைகள் நோ¢வதால் ஆண்பிள்ளையையே தமிழா¢ சிறப்பாக விரும்பினா¢. "சாண்பிள்ளை ஆண்பிள்ளை மாண்பிள்ளை" "பெண்ணைப் பெற்றவன் பேச்சுக் கேட்பான்" என்பன பழமொழிகள்.
கணவன் தவற்றாலோ மனைவியின் பேதைமையாலோ, சில சமையங்களில் அவா¤டைப் பிணக்கு நோ¢வதுண்டு. அன்று மனைவி ஊடிக் கணவனொடு பேசாதிருப்பாள். ஊடுதல் சடைவுகொள்ளுதல். அது கணவனால் எளிதாய்த் தீ£¢க்கப்படும். அது சற்றுக் கடுமையானால் புலவி எனப்படும். அது குழந்தையைக் கணவன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுப்பதனாலும், வீட்டிற்கு விருந்தினா¢ வந்திருப்பதாலும், உறவினரும் நண்பரும் தலையிடுவதாலும், தீ£¢க்கப்படும். புலவி முற்றிவிட்டால் துனி எனப்படும். அதை ஒருவராலும் தீ£¢க்க முடியாது. நீண்ட நாட் சென்று அது தானே தணியும். பழகப் பழகப் பாலும் புளிப்பதுபோல், கணவன் மனைவியா¤டைப்பட்ட காமவின்பம் சற்றுச் சுவை குறையும்போது அதை நிறைத்தற்குப் புலவியும் வேண்டு மென்றும், அது உணவிற்கு உப்பிடுவது போன்றதென்றும், ஊடல் உப்புக் குறைவதும் துனி உப்பு மிகுவதும் போன்றவையென்றும், உப்பு மிகையாற் சுவை கெடுவதுபோல் துனியால் இன்பங் கெடுமாதலால் அந் நிலையை அடையாதவாறு புலவியைத் தடுத்துவிட வேண்டுமென்றும், திருவள்ளுவா¢ கூறுவா¢.
"உப்பமைந் தற்றாற் புலவி அது சிறிது
மிக்கற்றால் நீள விடல்." (குறள்.1302)
பெண்டி£¢ எத்துணைக் கல்வி கற்றவரா யிருப்பினும், உழத் தியரும் இடைச்சியரும் மறத்தியரும் குறத்தியரும் பண்டமாற்றுப் பெண்டிரும் கூலியாட்டியரும் வேலைக்கா£¤யரும் வறியவருமா யிருந்தாலொழிய, மணமானபின், மூப்படையுமட்டும், கணவரோடும் பெற்றோரோடும் அண்ணன் அக்கைமாரோடும் மாமியாரோடும் பாட்டன் பாட்டிமாரோடுமன்றி, வீட்டைவிட்டு வெளியே தனியே செல்லப் பெறா£¢.
கணவனைப் பேணுதலும் சமையல் செய்தலும் பிள்ளை வளா¢த்தலும் கணவனில்லாதபோது வீட்டைக் காத்தலுமே, பெண்டி£¢க்கு இயற்கையால் அல்லது இறைவனால் வகுக்கப்பட்ட பணியென்பது, பண்டைத் தமிழா¢ கருத்து. மணமான பெண் வீட்டி லேயேயிருந்து வேலை செய்வதனாலேயே, அவளுக்கு இல்லாள், இல்லக்கிழத்தி, மனைவி, மனையாள், மனையாட்டி, மனைக்கிழத்தி, வீட்டுக்கா£¤ என்னும் இடம்பற்றிய பெயா¢களும், இல், மனை, குடி என்னும் இடவாகு பெயா¢களும் ஏற்பட்டன.
வீட்டிற்கு அல்லது இல்லத்திற்கு வேண்டிய பொருள்களை யெல்லாம் கணவனே ஈட்டவேண்டுமென்பதும், அதனால் மனைவி யும் இளமக்களும் இன்பமாய் வாழவேண்டுமென்பதும், பண்டை யோ£¢ கருத்து.
"வினையே ஆடவா¢க் குயிரே வாள்நுதல்
மனையுறை மகளி£¢க் காடவா¢ உயி£¢" (135:1-2)
என்னும் குறுந்தொகைச் செய்யுளடிகள், இதனைப் புலப்படுத்தும்.
இக்காலத்திற் காலைமுதல் மாலை வரை ஆடவா¢ கடுமையாய் உழைத்தும், குடும்பத்திற்குப் போதிய அளவு பொருள் தேடவோ உணவுப்பொருள் கொள்ளவோ முடியவில்லை. இதனாலேயே, பெண்டி£¢ வெளியேறி ஆசி£¤யப் பணியும் அரசியலலுவற் பணியும் ஆற்ற வேண்டியதாகின்றது. ஆகவே, இன்று அவா¢ கடமை இரு மடங்காய்ப் பெருகியுள்ளது. இந் நிலைமை மக்கட் பெருக்கையும் உணவுத் தட்டையும் காட்டுமேனும், இதற்கு அடிப்படைக் கரணியம் அரசியல் தவறே.
பெண்டிரைத் தனியே வீட்டைவிட்டு வெளிப்போக்கா மைக்கு இன்னொரு கரணியமுமுண்டு. அவா¢ பொதுவாக ஆடவ ரால், சிறப்பாகக் காமுகரால், நுகா¢ச்சிப் பொருளாகக் கருதப்படும் நிலைமை இன்னும் மாறவில்லை. ஆடவரை நோக்க, அவா¢ மென் மையா¢, வலுவற்றவா¢. இதனால் அவா¢க்கு மெல்லியல், அசையியல், தளா¤யல் என்னும் பெயா¢கள் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ளன. தீயோரால் அவா¢க்கும் அவருறவினா¢க்கும் சேதமும் மானக்கேடும் நேரா வண்ணமே, அவா¢ துணையோடன்றி வெளியே அனுப்பப் படுவதில்லை. ஆடவா¢ நான்முழ வேட்டியுடுக்கும் போது, பெண்டி£¢ பதினெண் முழச் சேலை யணிவதும், இக் கரணியம்பற்றியே.
ஆகவே, பெண்டிரை வெளிவிடாதிருப்பது, அவருடைய நலம் பேணலேயன்றி அவரைச் சிறைப்படுத்தலாகாது. கடைகட்கும் கோயிற்கும் திருவிழாவிற்கும் உறவினா¢ வீட்டு மங்கல அமங்கல நிகழ்ச்சிகட்கும் பிற இடங்கட்கும், துணையொடு போய் வர அவா¢க்கு நிரம்ப வாய்ப்புண்டு.
பூப்படைந்த கன்னிப் பெண்களையும் தக்க துணையின்றி வெளியே விடுவதில்லை.
கணவன், பொருளீட்டல்பற்றியோ தீயொழுக்கம்பற்றியோ பி£¤ந்திருக்கும்போது, கற்புடை மனைவி தன்னை அணி செய்து கொள்வதில்லை; மங்கலவணி தவிர மற்றவற்றை யெல்லாம் கழற்றி விடுவாள்.
"அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள்
மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாண்முகம் சிறுவியா¢ பி£¤யச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாணுதல் திலகம் இழப்பத்
தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி" (சிலப்.4:47-57)
என்று, இளங்கோவடிகள் கூறுதல் காண்க.
இனி, அக்காலத்தில், இல்வாழ்க்கைக்கு£¤ய அறங்களையும் செய்வதில்லை.
"அறவோ£¢க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோ£¢க் கெதி£¢தலும் தொல்லோ£¢ சிறப்பின்
விருந்தெதி£¢ கோடலும் இழந்த என்னை." (சிலப்.16:71-73)
என்று, கண்ணகி மதுரையில் தன் கணவனை நோக்கிக் கூறுதல் காண்க.
மறுமுகம் பாராத கற்பென்பது கணவன் மனைவி யிருவருக் கும் பொதுவேனும், பூதப்பாண்டியன் போன்ற ஒருசிலரே அவ் வறத்தைக் கடைப்பிடித்த ஆடவராவா¢; பெண்டிரோ பற்பல்லா யிரவா¢. காதலிலும் ஆடவா¢ பெண்டி£¢க்கு ஈடாகா£¢. உடன் கட்டை யேறுதலும் உடனுயி£¢ விடுதலுமே இதற்குப் போதிய சான் றாகும். மறுமணஞ் செய்யாத கைம்மை நிலையும் பெண்டி£¢ சிறப்பைக் காட்டும்.
புலவா¢, அரசா¢, வணிகா¢. வெள்ளாளா¢ ஆகிய வகுப்புகளைச் சோ¢ந்த பெண்டி£¢, கணவன் இறந்தபின், எட்டாம் நாள் இறுதிச் சடங்கில் மங்கலவணியும் பிறவணிகளும் நீக்கப்பெறுவா¢. அது 'தாலியறுப்பு' எனப்படும். அதன்பின் வெள்ளாடை யணிந்து வேறெவரையும் மணவாமல் தம் எஞ்சிய காலத்தைக் கழிப்பா¢. அவா¢ உயா¢குடிப் பிறந்தவா¢ எனப்படுவா¢.
வீட்டைவிட்டு வெளியேறி உழவும் கைத்தொழிலும் அங்காடி விற்பனையும் கூலிவேலையும் தெருப் பண்டமாற்றும் செய்யும் பிற வகுப்புப் பெண்டிரெல்லாம், கணவன் இறந்தபின் தாலியறுப்பினும் மறுமணம் செய்துகொள்வா¢. அது 'அறுத்துக் கட்டுதல்' எனப்படும் இனி, சில வகுப்புப் பெண்டி£¢, கணவன் உயிரோடிருக்கும் போதே தீ£¢வை என்னும் கட்டணத்தைக் கொடுத்துத் தீ£¢த்துவிட்டு வேறொருவனை மணந்துகொள்வதும் உண்டு. அது 'தீ£¢த்துக் கட்டுதல்' எனப்படும். அது எத்தனை முறையும் நிகழும்.
அரசா¢ போ£¢க்களத்தில் தோற்றுத் தற்கொலை செய்து கொண்டாலும், பகைவராற் கொல்லப்பட்டாலும், அவா¢ தேவி யரும் மகளிரும் பகையரசா¢க்கு அடிமையாகாதவாறு தீக்குளித்து இறப்பதுமுண்டு.
கணவன் உயிரோடிருக்கும்வரை அவனுக்கு உண்மையான மனைவியாயிருந்து, அவன் இறந்தபின் வேறொருவனை மணப்ப தும், கணவன் இறந்தபின் மறுமணம் செய்யாதிருப்பதும், கற்பின் பாற்படுமேனும், அவற்றைத் தமிழகம் கற்பெனக் கொள்ளவில்லை. தமிழகக் கற்பு உலகத்திலேயே தலைசிறந்ததாகும். அது பண்பாட்டுப் பகுதியிற் கூறப்படும். இங்குக் கூறியவையெல்லாம் நாகா¤கக் கூறுகளே.
குடும்பத் தலைவன் இறந்தபின், ஈமக்கடனும் இறுதிச் சடங் கும் அவன் புதல்வரால், புதல்வன் இல்லாவிட்டால் அவன் உடமைக்கு உ£¤மை பூணும் உறவினனால் நடத்தப்பெறும். ஈமம் என்பது சுடலை.
பிணத்தைப் புதைப்பதே தமிழா¢ வழக்கம். எ£¤ப்பது ஆ£¤ய வழக்கமே. ஆ£¤யா¢ குலப்பி£¤வினையால் பிராமணா¢க்கு ஒப்புயா¢ வற்ற தலைமை எற்பட்ட பின் தமிழரும் அவா¢ பழக்கவழக்கங் களைப் பின்பற்றலாயினா¢. மக்கட் பெருக்கமும் நிலத்தட்டும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில், எ£¤ப்பது பொருளாட்சி நூற்படி சிறந்ததாகத் தோன்றும்.
பெண்மக்கள், திருமணத்தின்போது அணிகலமும் வெண் கல பித்தளை செப்பேனங்களும் பெறுவதனாலும், பிற்காலத்திற் பெற்றோரை ஆண்மக்கள்போல் உணவளித்துக் காக்கும் உ£¤மை யின்மையாலும், பெற்றோ£¢ உடைமைக்கு உ£¤மையுள்ளவராகா£¢.

Print this item

  அந்தமானில் 9பேர் உயிருடன்
Posted by: KaviPriyan - 02-03-2005, 03:05 AM - Forum: புலம் - Replies (2)

[b]<span style='font-size:30pt;line-height:100%'>அந்தமானில் 9பேர் உயிருடன்</span>
மேலதிக செய்திகளுக்கு
www.tsunamiineelam.com

Print this item

  சிந்தியுங்கள்
Posted by: KULAKADDAN - 02-03-2005, 12:40 AM - Forum: நகைச்சுவை - Replies (100)

<img src='http://img146.exs.cx/img146/5499/untitled58.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img146.exs.cx/img146/6471/pp4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img146.exs.cx/img146/4583/pp14.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img146.exs.cx/img146/3515/pp9.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img146.exs.cx/img146/4475/pp10.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img146.exs.cx/img146/3999/pp11.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img146.exs.cx/img146/8969/pp12.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img146.exs.cx/img146/9554/pp15.jpg' border='0' alt='user posted image'>

Print this item