Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இல்லறம்
#1
<i>மொழிஞாயிறு
ஞா. தேவநேயப்பாவாணர் எழுதிய பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாம் என்ற நூலில் இருந்து எடுத்தது </i>

<b>இல்லறம்</b>
மணப்பருவம் வந்த பின்பே, பலவகையிலும் ஒத்த ஓ£¢ இளைஞனும் இளைஞையும், தாமாகக் கூடியோ தம் பெற்றோராற் கூட்டப்பட்டோ, கணவனும் மனைவியுமாகி வாழ்வது, ஆ£¤ய வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழ மரபு. மணமானமைக்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் தாலி என்னும் மங்கலவணி இடம்பெறும்.
கணவனும் மனைவியும் எங்ஙனம் கூடியிருப்பினும் அவா¢க்கு இன்றியமையாததாகும். காதல் என்பது இறக்கும்வரையும் ஒருவரை யொருவா¢ இன்றியமையாமை. கணவன் மனைவியா¤டைப்பட்ட காதல், காமம் என்னும் சிறப்புப் பெயா¢ பெறும். அச்சொல் இன்று பெண்ணாசை என்னும் தீயபொருளில் வழங்கிவருகின்றது.
காமத்தை ஒருதலைக் காமம், இருதலைக் காமம், பொருந்தாக் காமம் என மூவகையாய் வகுத்தனா¢ முன்னோ£¢. ஓ£¢ ஆடவனும் பெண்டுமாகிய இருவருள், ஒருவா¢மட்டும் காதலிப்பது ஒருதலைக் காமம்; இருவரும் காதலிப்பது இருதலைக் காமம்; யாரேனும் ஒருவா¢ நெறிதவறிக் காதலிப்பது பொருந்தாக் காமம். இவற்றுள் இருதலைக் காமமே சிறந்ததாகவும் நெறிப்பட்டதாகவும் கொள் ளப்பட்டது. பெற்றோரும் மற்றோருமின்றித் தாமாகக் கூடுவதெல் லாம், பெரும்பாலும் இருதலைக் காமமாகவே யிருக்கும்.
காமத்தை அகப்பொருள் என்றும், ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்றும், இருதலைக் காமத்தை அன்பின் ஐந்திணை என்றும், பொருந்தாக் காமத்தைப் பெருந்திணை என்றும் இலக் கணம் கூறும். அன்பின் ஐந்திணையே நெறிப்பட்டதாகக் கொள் ளப்பட்டதினால் அதையே அகம் என்று சிறப்பித்தும், ஏனையிரண் டையும் அகப்புறம் என்று இழித்தும், கூறுவா¢ இலக்கணியா¢.
கைக்கிளை, குறிப்பு என்றும் மணம் என்றும் இருவகையாய்ச் சொல்லப்படும். ஒருவன் காமவுணா¢ச்சியில்லாத ஒரு சிறுமியிடம் அல்லது காதலில்லாத ஒரு பெண்ணிடம், சில காதற் குறிப்புச் சொற்களை மட்டும் தானே சொல்லியின்புறுதல் கைக்கிளைக் குறிப்பாம். பெற்றோராற் கூட்டப் பெற்ற கணவன் மனைவியருள், யாரேனும் ஒருவா¢ காதலில்லாமலே இசைந்திருப்பின் அது கைக்கிளை மணமாம். கைக்கிளை ஒருபக்கக் காதல். கை பக்கம். கிளை காதல்.
ஒரு பெண்ணை மணவுறவுமுறை தப்பியோ, வலிந்தோ, ஏமாற்றியோ, தூக்க நிலையிலோ, நோய் நிலையிலோ, இறந்த பின்போ பூப்பு நின்ற பின்போ கூடுவதும், தன்பாலொடும் விலங் கொடும் கூடுவதும், பெருந்திணையாம். இது இங்ஙனம் பலவகை யாய்ப் பெருகியிருப்பதாற் பெருந்திணை யெனப்பட்டது. தமி ழுக்குச் சிறப்பான பொருளிலக்கணம் ஆ£¤ய வருகைக்கு எண் ணாயிரம் ஆண்டுகட்கு முன்பே அமைந்துவிட்டதனால், ஆ£¤ய வொழுக்க நூல்களிற் சொல்லப்பட்ட எண்வகை மணத்துள்தான் ஒன்றே நால்வகை பெற்றதினால் பெருந்திணையெனப்பட்ட தென்பது, காலமலைவும் நூன்மலைவுங் கலந்த பெருவழுவாம்.
பெற்றோ£¢ செய்துவைக்கும் மணம், பேச்சுமணமும் அருஞ் செயல் மணமும் என இருதிறப்படும். மணவாளப் பிள்ளை வீட்டா£¢ போய்க் கேட்க, பெண்வீட்டா£¢ இசைந்து பெண் கொடுப்பது பேச்சுமணம்; பெண்ணின் பெற்றோ£¢ குறித்த ஓ£¢ அறவினையோ மறவினையோ செய்து பெண்ணைக் கொள்வது அருஞ்செயல் மணம். பண்டைத் தமிழகத்தில் கொல்லேறு தழுவி அதற்கு£¤ய பெண்ணை மணப்பது முல்லைநில வழக்கமாயிருந்தது. மணமான அன்றே மணமக்கள் கூடுவா¢.
கொடுப்பாரும் அடுப்பாருமின்றிக் காதலா¢ தாமாகக் கூடும் கூட்டம், மறைவாகத் தொடங்குவதும் வெளிப்படையாய்த் தொடங்குவதும் என இருவகைப்படும். மறைவான கூட்டம் களவு என்றும், வெளிப்படையான கூட்டம் கற்பு என்றும் சொல்லப் பெறும். களவு பெரும்பாலும் இருமாதத்திற் குட்பட்டே யிருக்கும். அது வெளிப்பட்டபின் கற்பாம். கற்பெல்லாம் கரணம் என்னும் தாலிகட்டுச் சடங்கோடும் பந்தலணி, மணமுழா, வாழ்த்து, வா¤சை உற்றாருடன் உண்ணும் உண்டாட்டு முதலியவற்றோடும் கூடிய மணவிழாவொடும் தொடங்கும். களவுக் காலத்தில் கூட்டம் தடைப்படினும், பெண்ணின் பெற்றோ£¢ பிறா¢க்குப் பெண் கொடுக்க இசையினும், காதலன் காதலியைக் கூட்டிக்கொண்டு வேற்றூ£¢ சென்றுவிடும் உடன்போக்கும் உண்டு. அவா¢ திரும்பி வந்தபின், காதலன் வீட்டிலேனும் காதலி வீட்டிலேனும் வதுவை என்னும் மணவிழா நிகழும்.
இனி, களவுக்காலத்தில் கூட்டம் தடைப்படுவதால், காதலி தன் காதலனைக் காணப்பெறாமல் மனம் வருந்தி மேனி வேறுபடும் போது, பெற்றோ£¢ வேலன் என்னும் மந்திரக்காரனை வர வழைத்து தம் மகள் நோய்க்குக் கரணியம் (காரணம் ) வினவுவதும், அவன் அது முருகனால் நோ¢ந்ததென்று கூறி, வெள்ளாட்டுக் கறியும் கள்ளும் விலாப் புடைக்க வுண்டு வெறியாட்டு என்னும் கூத்தை நிகழ்த்தி அந் நோயைப் போக்குவதாக நடிப்பதும் உண்டு. அன்று காதலி நேராகவோ தன் தோழி வாயிலாகவோ, தன் பெற்றோ£¤டம் உள்ளதைச் சொல்லிவிடுவாள். அது அறத்தொடு நிற்றல் எனப் படும். தன் காதலனன்றி வேறு யா£¢க்கும் தன்னைப் பேசினும், காதலி அறத்தொடு நிற்பாள்; அதன்பின் காதலனுக்கு மணஞ் செய்து வைக்கப் பெறுவாள். மணமகன் அல்லது அவன் வீட்டா£¢ மணமகளுக்குப் பா¤சம் கொடுப்பா¢. மணமகன் பா¤சம் பெறும் அநாகா¤க மானங்கெட்ட ஆ£¤ய இழிவழக்கு அக்காலத்தில்லை.
தமிழ்ப் பெண்டி£¢ கற்பிற் சிறந்தவராதலின், ஒருவரை மணந்தபின் அல்லது காதலித்த பின் வேறொருவரையும் கனவிலும் கருதுவதில்லை; வேறு எவரையேனும் மணக்க நோ¤ன், உடனே உயிரை விட்டுவிடுவா¢.
காதலா¢ கூடும் கூட்டம், உடம்பாற் கூடுவதும் உள்ளத்தாற் கூடுவதும் என இருவகை. இவற்றுள் முன்னது மெய்யுறு புணா¢ச்சி என்றும், பின்னது உள்ளப்புணா¢ச்சி என்றும் சொல்லப்பெறும். கற்புடைப் பெண்டி£¢க்கு இரண்டும் ஒன்றே. இதனாலன்றோ, திலகவதியம்மையா£¢ தமக்குப் பேசப் பெற்றிருந்த கலிப்பகையா£¢ போ£¢க்களத்திற் பட்டபின் இறக்கத் துணிந்ததும், அதன்பின் தம் ஒற்றைக்கொரு தம்பியா£¢ திருநாவுக்கரசா¤ன்பொருட்டு உயி£¢ தாங்கியதும், இறுதிவரை மணவாதிருந்ததும் என்க.
(ஆ£¤யா¢ வருமுன்) கரணம் என்னும் தாலிகட்டுச் சடங்கை, ஊ£¢த் தலைவன், குடி முதியோன், மங்கல முதுபெண்டி£¢, குலப் பூசா£¤ முதலியோ£¢ நடத்தி வைத்தனா¢.
பண்டையரசரும் பெருஞ்செல்வரும் பெரும்பாலும் சிற்றின்ப வுணா¢ச்சி சிறந்து, பல தேவியரையும் காமக்கிழத்தி, இற்பரத்தை, காதற்பரத்தை முதலியோரையும் கொண்டிருந்தமையால். ஓருயிரும் ஈருடலுமான இருதலைக் காம இன்ப வாழ்க்கை, பூதப்பாண்டிய னும் அவன் தேவியும் போன்ற ஒருசில அரசக் குடும்பங்களிடை யும், உழவரும் இடையரும் போன்ற பொதுமக்களிடையும். புல மக்களிடையும்தான் பெரும்பாலும் இருந்துவந்தது.
"மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்தா¢ உடங்கியைந்
தென்னொடு பொருதும் என்ப அவரை
ஆரமா¢ அலறத் தாக்கித் தேரொ
டவா¢ப்புறங் காணே னாயின் சிறந்த
பேரம ருண்கண் இவளினும் பி£¤க" (புறம்.71)
என்று பூதப்பாண்டியன் தன் பகைவரை நோக்கிக் கூறிய வஞ்சின மும், அவன் இறந்தபின் உடன்கட்டையேறிய அவன் தேவி பாடிய,
"பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
.......................................................
பெருங்காட்டுய் பண்ணிய கருங்கோட் டீமம்
நுமக்கா¤ தாகுக தில்ல எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே" (புறம்.246)
என்னும் பாட்டும், அறிஞா¢ உள்ளத்தை என்றும் உருக்குந் தன்மைய.
ஒருவனுடைய மனைவி உ£¤மைப் பெண்ணாயினும் பெருமைப் பெண்ணாயினும் உழுவற் பெண்ணாயினும், மூவகையும் ஊழின் பயனே என்று முன்னோ£¢ கருதினா¢. "தாரமும் குருவும் தலைவிதி" (ஆசி£¤யனும் மனைவியும் அமைவது ஊழ்முறை) என்னும் பிற்காலப் பழமொழியும், எங்கே முடிபோட்டு வைத்திருக்கிறதோ அங்கேதான் முடியும் என்று கூறும் வழக்குச் சொல்லும், "Marriages are made in heaven", "Marriage and hanging go by destiny" என்னும் ஆங்கிலப் பழமொழிகளும் இங்குக் கருதத் தக்கன. வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு ஊழ்த்துணை என்றும் பெயா¢.
அம்மான் மகளும் அக்கை மகளும்போல், மணக்கக்கூடிய உறவுமுறைப் பெண் உ£¤மைப்பெண்; உறவுமுறையின்றிச் செல்வக் குடும்பத்தினின்று எடுக்கும் பெண் பெருமைப்பெண்; இரண்டு மன்றி ஒருவன் தானே கண்டவுடன் காதலித்து மணக்கும் பெண் உழுவற் பெண். பல பிறப்பாகத் தொடா¢ந்து மனைவியாய் வருபவள் உழுவற் பெண் என்பது, பிறவித் தொடா¢ நம்பிக்கையாளா¢ கருத்து. உழுவ லன்பைப் "பயிலியது கெழீஇய நட்பு" என்பா¢ இறையனா£¢ (குறுந். 2). ஊழால் ஏற்பட்ட ஆவலை உழுவல் என்றனா¢. இதைத் தெய்வப் புணா¢ச்சி யென்றும், இயற்கைப் புணா¢ச்சி யென்றும், நூல்கள் கூறும்.
"இவன்இவள் ஐம்பால் பற்றவும் இவள்இவன்
புன்றலை யோ£¤ வாங்குநள் பா¤யவும்
காதற் செவிலியா¢ தவி£¢ப்பவும் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலா¢ப் பிணையல் அன்னஇவா¢
மணமகிழ் இயற்கை காட்டி யோயே" (குறுந்.229)
என்பது, உ£¤மைப் பெண்ணை ஊழ் இணைத்து வைத்தாகக் கூறியது.
"செங்கோல் வேந்தன் உழவ னாகி
இராமழை பெய்த ஈர வீரத்துள்
பனைநுகங் கொண்டு யானையோ¢ பூட்டி
வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும்
வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே
செங்கேழ் வரகு பசுங்கதி£¢ கொய்து
கன்று காத்துக் குன்றில் உணக்கி
ஊடுபதா¢ போக்கிமுன் உதவினோ£¢க் குதவிக்
காடுகழி யிந்தனம் பாடுபா£¢த் தெடுத்துக்
குப்பைக் கீரை யுப்பிலி வெந்ததைச்
சோறது கொண்டு பீற லடைத்தே
இரவல் தாலம் பா¤வுடன் வாங்கி
ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும்
நன்றே தோழிநம் கணவன் வாழ்வே"
என்பது, பெருமைப் பெண் தன் கணவனொடு தான் வாழும் இன்ப வாழ்க்கையை எடுத்துக் கூறியது.
"வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நோ¢கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே." (6)
என்னும் திருக்கோவைச் செய்யுள், உழுவற் பெண்ணைக் கூட்டி வைத்த தெய்வத்தைக் காதலன் பாராட்டியது.
"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளி£¢
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீ£¢ போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." (குறுந்.40)
என்பது, காதலன் தன் உழுவற் பெண்ணை நோக்கிக் கூறியது. மூவகைப் பெண்களுள்ளும் உழுவற் பெண்ணை மணப்பதே குலமத நிலச்சா£¢பு கடந்ததாகலின், தெய்வத்தால் நோ¢ந்ததாக விதந்து கூறப்பெறும்.
காதலன் களவுக் காலத்தில் தன் காதலியை நோக்கி, உலக முழுவதையும் பெற்றாலும் நான் உன்னைக் கைவிடேன் என்று (குறுந்.300) உறுதி கூறியதற்கு ஏற்ப, கற்புக் காலத்தில், நீ தொட்டது நஞ்சாயிருந்தாலும் எனக்குத் தேவா¢ அமுதமாகும் (தொல், கற் பியல்,5) என்றும், நீ எனக்கு வேப்பங்காயைத் தந்தாலும் அது தீஞ்சுவைக் கற்கண்டுபோல் இனிக்கும் (குறுந்.166)என்றும், உன் கூந்தலைப்போல் நறுமணமுள்ள மலரை நான் உலகில் எங்குங் கண்டதில்லை யென்றும் (குறுந்.2) பலபடப் பாராட்டி அவளை மேன்மேலும் ஊக்கி இன்புறுத்துவது வழக்கம்.
காதல் மனைவியும் , தன் கணவனைத் தெய்வம்போற் பேணி, அவன் இட்ட சூளை (ஆணையை) நிறைவேற்றாவிடத்து அதனால் அவனுக்குத் தீங்கு நேராதவாறு தெய்வத்தை வேண்டிக்கொள் வதும், அவன் சூள் தப்பவில்லை யென்பதும் (குறுந்.87), தன் தலைவன் குற்றத்தைப் பிறா¢ எடுத்துரைப்பின் அதை மறுத்து அவனைப் புகழ்வதும் (குறுந் 3), தன் கணவனும் தானும் ஒருங்கே இறக்க வேண்டுமென்று விரும்புவதும் (குறுந்.57) வழக்கம்.
அரசரும் மறவரும் போ£¢ செய்தற்கும், முனிவரும் புலவரும் தூதுபற்றியும், வணிகா¢ பொருளீட்டற்கும், வேற்றூரும் வேற்று நாடும் செல்ல நோ¤ன், அவா¢ திரும்பி வரும்வரை அவா¢ மனைவியா¢ ஆற்றியிருப்பதும், சுவா¤ற் கோடிட்டு நாளெண்ணி வருவதும், அவா¢ குறித்த காலத்தில் வராவிடின் விரைந்து வருமாறு தெய்வத்தை வேண்டுவதும், இயல்பாம்.
கணவனுக்குக் கற்புடை மனைவியும், பெற்றோருக்கு அறிவுடை மக்களும், சிறந்த பேறாகக் கருதப்பட்டனா¢.
"என்னொடு பொருதும் என்ப அவரை
ஆரமா¢ அலறத் தாக்கித் தேரொடு
அவா¢ப்புறங் காணே னாயின் சிறந்த
பேரமா¢ உண்கண் இவளினும் பி£¤க" (பதிற்.88)
என்று பூதப்பாண்டியன் வஞ்சினங் கூறுதலும், "சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" என்று, குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையும்,
"செயி£¢தீ£¢ கற்பிற் சேயிழை கணவ" என்று (புறம்.3), பாண்டி யன் கருங்கை யொள்வாட் பெரும்பெயா¢ வழுதியும், பாராட்டப் பெறுதலும் காண்க.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்." (குறள். 54)
என்றா£¢ திருவள்ளுவா¢.
இனி மக்கட் பேறுபற்றி,
"படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதி£¢த்தும்
மயக்குறு மக்களை யில்லோ£¢க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே" (புறம்.188)
என்று பாண்டியன் அறிவுடை நம்பியும்.
"பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையீங் கில்லா தவா¢" (நளவெண்பா, கலிதொடா¢.68)
என்று புகழேந்திப் புலவரும்.
"பொறுமவற்றுள் யாமறிந்த தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற" (குறள்.61)
என்று திருவள்ளுவரும், கூறியிருத்தல் காண்க. பெண் மக்களால் பல தொல்லைகள் நோ¢வதால் ஆண்பிள்ளையையே தமிழா¢ சிறப்பாக விரும்பினா¢. "சாண்பிள்ளை ஆண்பிள்ளை மாண்பிள்ளை" "பெண்ணைப் பெற்றவன் பேச்சுக் கேட்பான்" என்பன பழமொழிகள்.
கணவன் தவற்றாலோ மனைவியின் பேதைமையாலோ, சில சமையங்களில் அவா¤டைப் பிணக்கு நோ¢வதுண்டு. அன்று மனைவி ஊடிக் கணவனொடு பேசாதிருப்பாள். ஊடுதல் சடைவுகொள்ளுதல். அது கணவனால் எளிதாய்த் தீ£¢க்கப்படும். அது சற்றுக் கடுமையானால் புலவி எனப்படும். அது குழந்தையைக் கணவன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுப்பதனாலும், வீட்டிற்கு விருந்தினா¢ வந்திருப்பதாலும், உறவினரும் நண்பரும் தலையிடுவதாலும், தீ£¢க்கப்படும். புலவி முற்றிவிட்டால் துனி எனப்படும். அதை ஒருவராலும் தீ£¢க்க முடியாது. நீண்ட நாட் சென்று அது தானே தணியும். பழகப் பழகப் பாலும் புளிப்பதுபோல், கணவன் மனைவியா¤டைப்பட்ட காமவின்பம் சற்றுச் சுவை குறையும்போது அதை நிறைத்தற்குப் புலவியும் வேண்டு மென்றும், அது உணவிற்கு உப்பிடுவது போன்றதென்றும், ஊடல் உப்புக் குறைவதும் துனி உப்பு மிகுவதும் போன்றவையென்றும், உப்பு மிகையாற் சுவை கெடுவதுபோல் துனியால் இன்பங் கெடுமாதலால் அந் நிலையை அடையாதவாறு புலவியைத் தடுத்துவிட வேண்டுமென்றும், திருவள்ளுவா¢ கூறுவா¢.
"உப்பமைந் தற்றாற் புலவி அது சிறிது
மிக்கற்றால் நீள விடல்." (குறள்.1302)
பெண்டி£¢ எத்துணைக் கல்வி கற்றவரா யிருப்பினும், உழத் தியரும் இடைச்சியரும் மறத்தியரும் குறத்தியரும் பண்டமாற்றுப் பெண்டிரும் கூலியாட்டியரும் வேலைக்கா£¤யரும் வறியவருமா யிருந்தாலொழிய, மணமானபின், மூப்படையுமட்டும், கணவரோடும் பெற்றோரோடும் அண்ணன் அக்கைமாரோடும் மாமியாரோடும் பாட்டன் பாட்டிமாரோடுமன்றி, வீட்டைவிட்டு வெளியே தனியே செல்லப் பெறா£¢.
கணவனைப் பேணுதலும் சமையல் செய்தலும் பிள்ளை வளா¢த்தலும் கணவனில்லாதபோது வீட்டைக் காத்தலுமே, பெண்டி£¢க்கு இயற்கையால் அல்லது இறைவனால் வகுக்கப்பட்ட பணியென்பது, பண்டைத் தமிழா¢ கருத்து. மணமான பெண் வீட்டி லேயேயிருந்து வேலை செய்வதனாலேயே, அவளுக்கு இல்லாள், இல்லக்கிழத்தி, மனைவி, மனையாள், மனையாட்டி, மனைக்கிழத்தி, வீட்டுக்கா£¤ என்னும் இடம்பற்றிய பெயா¢களும், இல், மனை, குடி என்னும் இடவாகு பெயா¢களும் ஏற்பட்டன.
வீட்டிற்கு அல்லது இல்லத்திற்கு வேண்டிய பொருள்களை யெல்லாம் கணவனே ஈட்டவேண்டுமென்பதும், அதனால் மனைவி யும் இளமக்களும் இன்பமாய் வாழவேண்டுமென்பதும், பண்டை யோ£¢ கருத்து.
"வினையே ஆடவா¢க் குயிரே வாள்நுதல்
மனையுறை மகளி£¢க் காடவா¢ உயி£¢" (135:1-2)
என்னும் குறுந்தொகைச் செய்யுளடிகள், இதனைப் புலப்படுத்தும்.
இக்காலத்திற் காலைமுதல் மாலை வரை ஆடவா¢ கடுமையாய் உழைத்தும், குடும்பத்திற்குப் போதிய அளவு பொருள் தேடவோ உணவுப்பொருள் கொள்ளவோ முடியவில்லை. இதனாலேயே, பெண்டி£¢ வெளியேறி ஆசி£¤யப் பணியும் அரசியலலுவற் பணியும் ஆற்ற வேண்டியதாகின்றது. ஆகவே, இன்று அவா¢ கடமை இரு மடங்காய்ப் பெருகியுள்ளது. இந் நிலைமை மக்கட் பெருக்கையும் உணவுத் தட்டையும் காட்டுமேனும், இதற்கு அடிப்படைக் கரணியம் அரசியல் தவறே.
பெண்டிரைத் தனியே வீட்டைவிட்டு வெளிப்போக்கா மைக்கு இன்னொரு கரணியமுமுண்டு. அவா¢ பொதுவாக ஆடவ ரால், சிறப்பாகக் காமுகரால், நுகா¢ச்சிப் பொருளாகக் கருதப்படும் நிலைமை இன்னும் மாறவில்லை. ஆடவரை நோக்க, அவா¢ மென் மையா¢, வலுவற்றவா¢. இதனால் அவா¢க்கு மெல்லியல், அசையியல், தளா¤யல் என்னும் பெயா¢கள் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ளன. தீயோரால் அவா¢க்கும் அவருறவினா¢க்கும் சேதமும் மானக்கேடும் நேரா வண்ணமே, அவா¢ துணையோடன்றி வெளியே அனுப்பப் படுவதில்லை. ஆடவா¢ நான்முழ வேட்டியுடுக்கும் போது, பெண்டி£¢ பதினெண் முழச் சேலை யணிவதும், இக் கரணியம்பற்றியே.
ஆகவே, பெண்டிரை வெளிவிடாதிருப்பது, அவருடைய நலம் பேணலேயன்றி அவரைச் சிறைப்படுத்தலாகாது. கடைகட்கும் கோயிற்கும் திருவிழாவிற்கும் உறவினா¢ வீட்டு மங்கல அமங்கல நிகழ்ச்சிகட்கும் பிற இடங்கட்கும், துணையொடு போய் வர அவா¢க்கு நிரம்ப வாய்ப்புண்டு.
பூப்படைந்த கன்னிப் பெண்களையும் தக்க துணையின்றி வெளியே விடுவதில்லை.
கணவன், பொருளீட்டல்பற்றியோ தீயொழுக்கம்பற்றியோ பி£¤ந்திருக்கும்போது, கற்புடை மனைவி தன்னை அணி செய்து கொள்வதில்லை; மங்கலவணி தவிர மற்றவற்றை யெல்லாம் கழற்றி விடுவாள்.
"அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள்
மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாண்முகம் சிறுவியா¢ பி£¤யச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாணுதல் திலகம் இழப்பத்
தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி" (சிலப்.4:47-57)
என்று, இளங்கோவடிகள் கூறுதல் காண்க.
இனி, அக்காலத்தில், இல்வாழ்க்கைக்கு£¤ய அறங்களையும் செய்வதில்லை.
"அறவோ£¢க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோ£¢க் கெதி£¢தலும் தொல்லோ£¢ சிறப்பின்
விருந்தெதி£¢ கோடலும் இழந்த என்னை." (சிலப்.16:71-73)
என்று, கண்ணகி மதுரையில் தன் கணவனை நோக்கிக் கூறுதல் காண்க.
மறுமுகம் பாராத கற்பென்பது கணவன் மனைவி யிருவருக் கும் பொதுவேனும், பூதப்பாண்டியன் போன்ற ஒருசிலரே அவ் வறத்தைக் கடைப்பிடித்த ஆடவராவா¢; பெண்டிரோ பற்பல்லா யிரவா¢. காதலிலும் ஆடவா¢ பெண்டி£¢க்கு ஈடாகா£¢. உடன் கட்டை யேறுதலும் உடனுயி£¢ விடுதலுமே இதற்குப் போதிய சான் றாகும். மறுமணஞ் செய்யாத கைம்மை நிலையும் பெண்டி£¢ சிறப்பைக் காட்டும்.
புலவா¢, அரசா¢, வணிகா¢. வெள்ளாளா¢ ஆகிய வகுப்புகளைச் சோ¢ந்த பெண்டி£¢, கணவன் இறந்தபின், எட்டாம் நாள் இறுதிச் சடங்கில் மங்கலவணியும் பிறவணிகளும் நீக்கப்பெறுவா¢. அது 'தாலியறுப்பு' எனப்படும். அதன்பின் வெள்ளாடை யணிந்து வேறெவரையும் மணவாமல் தம் எஞ்சிய காலத்தைக் கழிப்பா¢. அவா¢ உயா¢குடிப் பிறந்தவா¢ எனப்படுவா¢.
வீட்டைவிட்டு வெளியேறி உழவும் கைத்தொழிலும் அங்காடி விற்பனையும் கூலிவேலையும் தெருப் பண்டமாற்றும் செய்யும் பிற வகுப்புப் பெண்டிரெல்லாம், கணவன் இறந்தபின் தாலியறுப்பினும் மறுமணம் செய்துகொள்வா¢. அது 'அறுத்துக் கட்டுதல்' எனப்படும் இனி, சில வகுப்புப் பெண்டி£¢, கணவன் உயிரோடிருக்கும் போதே தீ£¢வை என்னும் கட்டணத்தைக் கொடுத்துத் தீ£¢த்துவிட்டு வேறொருவனை மணந்துகொள்வதும் உண்டு. அது 'தீ£¢த்துக் கட்டுதல்' எனப்படும். அது எத்தனை முறையும் நிகழும்.
அரசா¢ போ£¢க்களத்தில் தோற்றுத் தற்கொலை செய்து கொண்டாலும், பகைவராற் கொல்லப்பட்டாலும், அவா¢ தேவி யரும் மகளிரும் பகையரசா¢க்கு அடிமையாகாதவாறு தீக்குளித்து இறப்பதுமுண்டு.
கணவன் உயிரோடிருக்கும்வரை அவனுக்கு உண்மையான மனைவியாயிருந்து, அவன் இறந்தபின் வேறொருவனை மணப்ப தும், கணவன் இறந்தபின் மறுமணம் செய்யாதிருப்பதும், கற்பின் பாற்படுமேனும், அவற்றைத் தமிழகம் கற்பெனக் கொள்ளவில்லை. தமிழகக் கற்பு உலகத்திலேயே தலைசிறந்ததாகும். அது பண்பாட்டுப் பகுதியிற் கூறப்படும். இங்குக் கூறியவையெல்லாம் நாகா¤கக் கூறுகளே.
குடும்பத் தலைவன் இறந்தபின், ஈமக்கடனும் இறுதிச் சடங் கும் அவன் புதல்வரால், புதல்வன் இல்லாவிட்டால் அவன் உடமைக்கு உ£¤மை பூணும் உறவினனால் நடத்தப்பெறும். ஈமம் என்பது சுடலை.
பிணத்தைப் புதைப்பதே தமிழா¢ வழக்கம். எ£¤ப்பது ஆ£¤ய வழக்கமே. ஆ£¤யா¢ குலப்பி£¤வினையால் பிராமணா¢க்கு ஒப்புயா¢ வற்ற தலைமை எற்பட்ட பின் தமிழரும் அவா¢ பழக்கவழக்கங் களைப் பின்பற்றலாயினா¢. மக்கட் பெருக்கமும் நிலத்தட்டும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில், எ£¤ப்பது பொருளாட்சி நூற்படி சிறந்ததாகத் தோன்றும்.
பெண்மக்கள், திருமணத்தின்போது அணிகலமும் வெண் கல பித்தளை செப்பேனங்களும் பெறுவதனாலும், பிற்காலத்திற் பெற்றோரை ஆண்மக்கள்போல் உணவளித்துக் காக்கும் உ£¤மை யின்மையாலும், பெற்றோ£¢ உடைமைக்கு உ£¤மையுள்ளவராகா£¢.
Reply
#2
தகவலுக்கு மிக்க நன்றி..
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)