![]() |
|
இப்படியும் நடந்தது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இப்படியும் நடந்தது (/showthread.php?tid=5454) |
இப்படியும் நடந்தது - Vaanampaadi - 02-03-2005 சுனாமியால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாமிலிருக்கும் ஒருவர் தனக்கு 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் முகாமிற்குப் பொறுப்பான கிராம அலுவலரின் சைக்கிளை ஈடுவைத்துப்பணம் பெற்றுள்ளார். இச்சம்பவம் காரைதீவுப் பிரதேசத்திலுள்ள மணிமண்டப முகாமில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- பிரஸ்தாப நபருக்கு அரசு வழங்கும் 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படாமைக்கு கிராம அலுவலர்தான் காரணம் எனக் கருதினாரோ என்னவோ அவரின் சைக்கிளை ஈடுவைத்து 500 ரூபா பெற்றுக்கொண்டாராம். இந்த விடயம் தெரியாது தனது சைக்கிளைத் தேடிய கிராம அலுவலருக்கு 3 நாள்களின் பின்பு சைக்கிளை பிரஸ்தாப நபர் மீள ஒப்படைத்துள்ளார். Uthayan - glad - 02-03-2005 கிராம சேவகர் சனங்களின் கஷ்டங்களை உணர்ந்து சேவை செய்யாவிட்டால் இப்படித்தான். ஆனாலும் எடுத்தவர் திரும்பவும் கொடுத்து தனது நேர்மையை வெளிப்படுத்தி உள்ளாரே. அதற்காக அவரைப் பாராட்டலாம் glad |