Yarl Forum
சுனாமி முகாமை ராணுவ முகாமாக்கும் இலங்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சுனாமி முகாமை ராணுவ முகாமாக்கும் இலங்கை (/showthread.php?tid=5467)



சுனாமி முகாமை ராணுவ முகாமாக்கும் இலங்கை - Vaanampaadi - 02-02-2005

சுனாமி முகாமை ராணுவ முகாமாக்கும் இலங்கை

கொழும்பு:

சுனாமி நிவாரண முகாம்களை ராணுவ முகாம்களாக இலங்கை அரசு மாற்றி வருவதாக என்று தமிழ் தேசிய கூட்டணி எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.


மட்டக்களப்பில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்கெர்னி முகாமில் கழிப்பிட மற்றும் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

மேலும் இந்த முகாம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு போலீஸாருடன் ராணுவ வீரர்களும் முகாமின் பணிகளில் தலையிட்டு வருகின்றனர்.

இது குறித்து மட்டக்களப்பு எம்.பி. ஜோசப் கூறுகையில்,

சுனாமி நிவாரண முகாம்களை ராணுவமயாக்குவது மனிதாபிமான விதிகளை மீறிய செயலாகும். இலங்கை அரசு பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றுவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறது என்றார்.

Thatstamil