02-02-2005, 06:22 PM
வதந்தி (தீ)யைப் பரப்பாதீர்கள்
பண்பட்ட பயனுடைய வாழ்க்கை என்பது முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்து வாழ்வதேயாகும். அவ்வாறு உதவி செய்து வாழ இயலாவிட்டாலும் பிறருக்கு உபத்திரவம் செய்யாது வாழவேண்டும். இன்று மக்கள் பலர் அவ்வாறு வாழ்கின்றhர்களா? என்றhல் இல்லையென்றே பதில் இயம்ப வேண்டியுள்ளது. பிறருக்கு உபத்திரவம் செய்து பிறரது மகிழ்ச்சியையும் அமைதியையும் கெடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர் சிலர். பிறரது துன்பத்தில் அவர்களுக்குக் கிடைப்பது கானல் நீர்போன்ற அற்பத்தனமான மகிழ்ச்சியேயாகும். இதனைச் சிலர் வதந்தியைப் பரப்பிவிடுவதன் மூலம் அடைந்து மகிழ்கின்றனர். இந்த வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வதந்திகளின் விபரீதங்களை அவர்கள் உணருவதே இல்லை.
வதந்தி என்பது இல்லாததை இருப்பதாகவும், வராததை வந்துவிட்டதாகவும், நடக்காததை நடந்துவிட்டதாகவும் மாற்றிக்கூறும் ஒருவகைப் பொய் பொதிந்த ஏமாற்று வேலையாகும். அவ்வதந்தியால் தனிமனிதனும் சமுதாயமும், நாடும் எதிர்கொள்ளும் அலைக்கழிவையும் அல்லலையும் அமைதியின்மையையும் விபரீதங் களையும் கண்டு அற்ப மகிழ்ச்சி அடைவதே அவர்கள் நோக்கமாகும். மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் வந்த சுனாமிப் பேரலைகளைவிட பன்மடங்கு வேகமாக பரவக்கூடியது இவ்வதந்தி என்பதை வதந்தியைப் பரப்பும் அற்பர்கள் உணருவதில்லை. என் செய்வது? உண்மை உடையணிந்து ஊர்சுற்றி வருவதற்குள் பொய் பொதிந்த புல்லர்களின் வதந்தி உரிய வேடம் புனைந்து உலகையே சுற்றி புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடுகின்றது. அதனால்தான் அன்றேhர்கள் அதனை வதந்...தீ என்று அழைக்கலாம் என்கின்றனர். ……தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்†† - என்று இந்த வதந்...தீயைப் பற்றித்தான் வள்ளுவர் கூறினார் போலும்*
இத்தகைய தீய அற்பத்தனமான பொய் பொதிந்த வதந்திகளை யாரும் எந்த இக்கட்டான Nழ்நிலைகளிலும் பரப்பக்கூடாது என்பதைப் பண்டைக் காலத்திலேயே தமிழர்கள் எச்சரித்துள்ளனர். ……புலி வருகிறது, புலி வருகிறது††- என்று வதந்தியைப் பரப்பிய ஆடு மேய்க்கும் சிறுவன் இறுதியில் இறந்த கதை நமக்குப் பாடம் உணர்த்தும் பயனுடைய கதையன்றேh* இந்தக் கதை பொய் பொதிந்த வதந்தியைப் பரப்புவது விளையாட்டிற்காகக்கூடச் செய்யக்கூடாது என்பதைக் கூறுகிறது.
கடந்த கருப்பு ஞாயிறhன டிசம்பர் 26-ம் நாளிலிருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை நாம் நன்கு அறிவோம். பெற்றேhர்களையும் உற்றேhர்களையும் இழந்து மீளாத்துயரில் மூழ்கித்திக்குத் தெரியாது திண்டாடிக்கொண்டு அச்சத்தின் கொடூரம் அகலாது தவித்துக் கொண்டிருக்கிறhர்கள். பாதிக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய மக்கள். அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தாய் உள்ளங்கொண்ட தன்னலமற்ற தனிநபர்களும் நிவாரணப் பணிகளில் இரவு பகல் பாராது ரத்தத்தை வேர்வையாக்கி அயராது பாடுபட்டு வருகின்றனர். விழிபிதுங்கி விம்மி வேதனைப்படும் இந்தச் Nழ்நிலையிலும் சில விஷமிகள் வதந்திகளைப் பரப்பி அலைக்கழிவு செய்து அற்பத்தனமான ஆனந்தம் அடைகின்றனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலைப்போல ஏற்கனவே உடைந்த உள்ளத்தோடு உருக்குலைந்து ஒருவழியும் தெரியாது வாழ்ந்து வரும் பாதிக்கப் பட்ட மக்கள் மத்தியில் ……இதோ கொஞ்ச நேரத்தில் சுனாமி வரப்போகிறது ஓடுங்கள், ஓடுங்கள்†† என்று வந்தியைப் பரப்பிவிடுகின்றனர். இதனால் பயந்து பரபரப்பாகி பாதம் பிடறியில் பட குழந்தை குட்டிகளோடும் உறவினர்களோடும் ஓடி பாதுகாப்பான இடந்தேடுகின்றனர் பாதிக்கப் பட்ட நம் மக்கள். இந்த காட்சியைக் கண்டு மகிழ்கிறது வதந்தியைப் பரப்பிவிடும் அற்பர் களின் கூட்டம். ஒரு முறை சுனாமி பேரலைகள் வந்தால் அந்த இடத்திற்கு நு}று ஆண்டு கழித்துத் தான் சுனாமி வரும் என்று அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்தாலும் வதந்தியால் மக்கள் பயந்து பயந்து மனம் தளர்ந்து வாழ்கிறhர்கள்.
சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியால் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காணவில்லை. என்ன ஆனார் என்றே தெரியவில்லை என்று வந்தியைப் பரப்புகிறது இலங்கை அரசின் வானொலி நிலையம். அது பொய் என்று தெரிந்ததும் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறது இலங்கை வானொலி. அதேபோல தமிழகத்தில் தமிழர்களின் முதுபெருந்தலைவர் கலைஞர் அவர்கள் உடலைப் பரிசோதித்துக் கொள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அச்செய்தியை அமங்கலமாக்கி பரபரப்புண்டாக்கி மகிழ்கிறது சில விஷமிகள் கூட்டம். இவ்வாறு வதந்திகளைப் பரப்பி வேடிக்கை பார்க்கும் வீணர்களைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் ……கயமை††- என்று ஓர் அதிகாரம் எழுதினார் போலும்*
இத்தகையவர்களை அரசு கண்டுபிடித்து தக்க தண்டனைகளை வழங்கிட வேண்டும். பிறர் துடித்து துயரடைவதில் இன்பங்காணும் வீணர்களின் வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்கக்கூடாது. அத்துடன் ……கொலை வாளினை எடடா மிக கொடியோர் செயலறவே††- என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறியவாறு வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கொலை வாளினை எடுக்கவும் தயங்கக்கூடாது. அப்போதுதான் வதந்... தீ பரவி நாட்டை அல்லற்படுத்தாமல் அமைதி நிலவும்.
ப.பழனிச்சிங்காரவேலு
எம்.ஏ., பி.எட்.,
மே.ப.தலைமையாசிரியர் (ஓய்வு)
2,2050 சசிநகர், சிவகாசி-626123
தினகரன்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->