| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 453 online users. » 0 Member(s) | 451 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,086
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,517
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| தொலைக்காட்சி விளம்பரங்கள் உங்களை........ |
|
Posted by: வியாசன் - 02-01-2005, 02:38 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (6)
|
 |
இங்கு சந்தாமுறையில் இயங்கும் தொ(ல்)லைக்காட்சிகள் அரைமணி நேர நிகழ்வுகளுக்குமிடையில் 10 நிமிட நேரம் விளம்பரங்களை ஒளிபரப்புகின்றனர். நிகழ்ச்சி தொடங்கவதற்கு முன்னர் வேறு விளம்பரங்கள் அணிவகுத்துவருகின்றன. இங்குள்ள இலவசதொலைக்காட்சிகள் விளம்பரம் ஒளிபரப்புவது போல ஒளிபரப்பி வெறுப்பெற்றுகின்றனர். அவை சந்தா முறையில் இயங்குகின்றது என்பதை மறந்துவிடுகின்றனர். அந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நிறுவனத்தின் ஆதரவில் இடம்பெறுவதாக வேறு கூறுகின்றனர்..
இவை சந்தாக்காரர்களை எரிச்சல் படுத்தாதா? தயவு செய்து உங்கள் மனக்குமுறல்களை களத்தில் சொல்லுங்கள் பலரின் மனநிலையை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.
தயவு செய்து யாரையும் புண்படுத்தாமல் எழுதுங்கள்
|
|
|
| தங்க முட்டை |
|
Posted by: Vaanampaadi - 02-01-2005, 02:10 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (8)
|
 |
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/1-2-2005/01baloon.jpg' border='0' alt='user posted image'>
தங்க முட்டை
இந்த முட்டை சாதா ரண முட்டை அல்ல. பொன் முட்டைதான். சீனாவில் வருகிற 9-ந் தேதிதான் புத்தாண்டு தொடங்குகிறது. சந்திர நாள் காட்டி (லூனார் காலண்டர்) படி சீனர்கள் இந்த புத்தாண்டை சேவல் ஆண்டாக கொண்டாடுகிறார்கள்.
இதையொட்டி சீனாவின் பல்வேறு நகரங்களில் அலங்காரம் ஜொலிக்கிறது. சேவல் முட்டையிடாது என்றாலும் பெட்டை கோழிக்கு மதிப்பு அளிக்கும் வகையில் தங்க முலாம் பூசிய ராட்சத முட்டையை ஷாங்காய் நகரில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.
|
|
|
| பட்டன் அழுத்த தேவையில்லா புதிய செல்போன் |
|
Posted by: Vaanampaadi - 02-01-2005, 02:07 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (6)
|
 |
பட்டன் அழுத்த தேவையில்லா புதிய செல்போன்
செல்போனில் பட்டன்களை அழுத்தி அழுத்தி கைவிரல்கள் வலிக்கிறதா? இனி அந்த கவலையை விடுங்கள். ஜப்பானில் புதிய வகை செல்போனை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் பட்டன்களை அழுத்த தேவையே இல்லை செல்போனை உயர்த்தி பிடித்தால் ஒரு நம்பர் கிடைக்கும் பக்கவாட்டில் சரித்தால் ஒரு நம்பர் கிடைக்கும். ஒரு தடவை குலுக்கினால் ஒரு நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.
தலைகீழாக சரித்தால் இன்னொருவருடன் தொடர்பு கொள்ளலாம் இப்படி ஏகப்பட்ட செய்கைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செல்போன இயக்க ஆரம்பத்தில் மட்டும் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அடுத்த மாதம் முதல் இது அங்கு விற்பனைக்கு வருகிறது. தேவைப்பட்டால் மட்டும் நம்பர் பட்டனை அழுத்திக் கொள்ளலாம்.
|
|
|
| ஆப்பிரிக்க மன்னரின் 13-வது மனைவி |
|
Posted by: Vaanampaadi - 02-01-2005, 12:45 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
ஆப்பிரிக்க மன்னரின் 13-வது மனைவி
ஆப்பிரிக்க நாடான சுவாஸிலேண்ட் மன்னர் தற்போது 17 வயது பெண்ணை தன் 13-வது மனைவியாக்கி உள்ளார்.
ஆப்பிரிக்க நாடு சுவாஸிலேண்ட். இதன் முழு அதிகாரம் படைத்த கடைசி மன்னன் 3ம் மிஸ்வதி. இவர் இப்போது 17 வயது பெண்ணை தமது 13-வது மனைவியாக தேர்வு செய்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் தமது 12-வது மனைவியாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவரும், அழகு ராணி பட்டம் பெற்றவருமான பெண்ணை கரம் பிடித்திருந்தார் மன்னர். அந்த நாட்டு மரபுப்படி மன்னர் கைப்பிடிக்கும் பெண்கள் தாய்மை அடையாமல் போனால் அவர்களுக்கு மன்னாpன் மனைவி என்ற அங்கீகாரம் கிடைக்காது. இதன்படி 3 பெண்கள் அங்கீகாரம் இழந்தனர். சுவாஸி நாட்டில் அநேக மக்கள் வறுமையில் வாடு கின்றனர். இந்த நிலையில் மன்னர் ரூ.68 கோடி செலவில் தமது 10 அதிகாரபூர்வ மனைவிதான் அரண்மனைகளை புதுப்பித்து வருவது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு மன்னர் ஒரு ஆடம்பர கார் வாங்கினார். அதன் விலை ரூ. 2 கோடியே 15 லட்சம். அதில் டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், 21 ஸ்பீக்கர் கொண்ட சர்ரவுண்ட் சவுண்டு சிஸ்டம், பிரிட்ஜ;, மது பாட்டில் அடுக்கு போன்ற வசதிகள் உண்டு.
|
|
|
| பூக்கள் பார்த்து நேரம் சொன்ன தமிழன்! |
|
Posted by: Vaanampaadi - 02-01-2005, 12:10 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (7)
|
 |
பூக்கள் பார்த்து நேரம் சொன்ன தமிழன்!
அறிவழகன்
நொடி, நிமிடம், மணி என்று இப்போது நேரத்தை நாம் கணக்கிடுகிறோம். அதேபோல, 24 மணி நேரம் சேர்ந்தால் ஒரு நாள் என்றும், ஒரு நாளை காலை, முற்பகல், பிற்பகல், மாலை, இரவு என்றும் பிரித்துக் கூறுகிறோம்.
தமிழர்கள் ஆரம்ப காலத்தில் நாட்கணக்கையும், நேரக் கணக்கையும் எப்படி மதிப்பிட்டு அழைத்து வந்தார்கள் என்று அறிந்து கொண்டால் மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது.
கடிகாரம் போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் துல்லியமாக நேரத்தைக் கணக்கிட்டுக் கூறும் திறமை படைத்தவர்களாக நம்மவர்கள் விளங்கினார்கள், அந்த அளவுக்கு அவர்களது நேரக் கணக்கீட்டு முறை அமைந்திருந்தது.
நன்னூல் தரும் விளக்கம்:
நாழிகை, நாடி, விநாடி, நிமிடம், மணி, முகூர்த்தம் என்ற அலகுகளில் நேரம் கணக்கிடப்பட்டுள்ளது.
60 நாடிகள் (நாடித் துடிப்பு) சேர்ந்தது ஒரு நாழிகை. 1 நாழிகை என்பது 24 நிமிடங்களுக்கு சமம். இரண்டரை நாழிகை என்பது ஒரு மணியாகும். மூனே முக்கால் நாழிகை என்பது ஒரு முகூர்த்தமாகும்.
நாடியை நொடி என்றும் கூறுவர். இதை எப்படிக் கணக்கிடுவது? நன்னூலில் இது அழகுற விளக்கப்பட்டுள்ளது.
"உன்னல் காலே, எடுத்தல் அரையே, ¬முறுக்கல் முக்கால்" என்று கூறுகிறது நன்னூல்.
ஆங்கிலத்தில் கூறப்படும் நிமிடத்திற்கும் (Minute), தமிழில் கூறப்படும் நிமிஷத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. "நிமி" என்பதற்கு தமிழில் இமை என்று பொருள். ஒரு கண் இமைப்புதான் நிமிஷம். இதுவே பின்னர் நிமிடா (நிமிடம்) என்று மாறியுள்ளது.
'நிமிஷமான நிமையம்':
ஆங்கில வார்த்தையான மினிட் என்பதிலிருந்துதான் நிமிஷம் என்ற தமிழ் வார்த்தை உருவானதாக சிலர் தவறாகப் பொருள் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டுமே வேறு, வேறானவை.
நிமையம் என்பதுதான் பின்னர் நிமிஷம் என்றானதாக தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் குறிப்பிடுகிறார். நிமை என்பதற்கு இமை என்று பொருள்.
இப்போது முகூர்த்தம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். மூனே முக்கால் நாழிகை சேர்ந்ததுதான் ஒரு முகூர்த்தம். அதாவது 90 நிமிடங்களைக் குறிக்கும். 2 முகூர்த்தம் என்பது ஒரு யாமம் ஆகும். யாமம் என்பது இரவைக் குறிக்கும்.
இந்த காலங்களைக் கணக்கிட என்ன முறையை பழந்தமிழர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் கோழி கூவும் நேரம், வெள்ளி முளைக்கும் வேளை, உச்சி வெயில் நேரம், அந்தி சாயும் நேரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம், காலத்தை தமிழர்கள் கணித்திருக்கக் கூடும் என்று அனுமானிக்கலாம்.
அறிவியலை பயன்படுத்திய தமிழன்:
பத்துப்பாட்டு பாடல்களில் ஒரு குறிப்பு வருகிறது.
அதில் கடிகாரம் குறித்து கூறப்பட்டுள்ளது. கன்னல் அல்லது நாழிகை வட்டில் எனும் பொறியை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது.
இந்த நாழிகை வட்டில் என்பது இரண்டு கலங்களை கொண்டது. கீழே உள்ள கலத்தில் நீர் நிரப்பி, அதனுள்ளே நீர்ப் பரப்பின்மீது அடில் துளையுடைய பிறிதொரு கலத்தை வைத்து விடுவர். உட் கலத்தினுள்ளே நீர் மட்டம் உயர்வதை வைத்துப் பொழுதறியப்படும்.
கிட்டத்தட்ட sand clock மாதிரி!
பூக்களைப் பார்த்து..
இதேபோல பூச்செடிகளை வளர்த்து அது பூப்பது, கூம்புவது (வாடுவது) ஆகியவற்றை வைத்து பொழுதறிந்துள்ளனர். முல்லை மலர் தவறாமல் சூரியன் சாயும் நேரத்தில் மலருமாம்.
அந்தி மந்தாரை பூ சரியாக மாலை 5 மணிக்கு பூக்கும் என்பார்கள். அந்தியில் பூப்பதால் அந்தி மந்தாரை!
தமிழ் கால அளவு, நாள், திதி, மாதம், ஆண்டுகள் குறித்த ஒரு பார்வை:
கால அளவு:
1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்
நாட்கள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி
திதிகள்:
பிரதமை, திவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, த்வாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை.
மாதங்கள்:
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி.
பக்ஷங்கள்:
கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம்.
பருவங்கள் (ருதுக்கள்):
இளவேனில் (வசந்த ருது), ¬துவேனில் (கரிஷ்ம ருது), கார் காலம் (வர்ஷ ருது), குளிர் காலம் (சரத் ருது), ¬முன்பனிக் காலம் (ஹேமந்த ருது), பின் பனிக் காலம் (சிசிர ருது).
ஆயனம்:
6 மாதங்கள் அடங்கியது ஒரு ஆயனம். மொத்தம் 2 ஆயனங்கள்
உத்தராயனம் சூரிய ஒளிக் கதிர்கள் நில நடுக்கோட்டிற்கு வடக்கே நேரடியாக வீழும் காலம்.
தக்ஷினாயனம் நில நடுக்கோட்டிற்கு தெற்கே வீழும் காலம்.
ஆண்டுகள்:
1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.பிரமோதூத
5.பிரஜோத்பதி
6.ஆங்கீரச
7.ஸ்ரீக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈஸ்வர
12.வெகுதான்ய
13.பிரமாதி
14.விக்கிரம
15.விஷý
16.சித்திரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்தீப
20.விய
21.சர்வசிஷ்து
22.சர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜெய
29.மன்மத
30.துன்¬கி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.பிளவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விஸ்வவசு
40.பராபவ
41.பிளவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிக்ருது
46.பரிதாபி
47.பிரமாதீச
48.ஆனந்த
49.ராக்ஷ
50.நள
51.பிங்கள
52.காலாயாகுதி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோகாரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய
கடித எந்திரம்:
காலத்தைக் கணக்கிட கடிக எந்திரம் எனப்படும் நேரக் கணக்கிடும் கருவியை அக்காலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். கடிகை + ஆரம் என்ற இரு பதங்களும் சேர்ந்துதான் கடிகாரம் என்று மருவியுள்ளது.
இந்தக் காலம் அறியும் கருவியை மாலை போல கழுத்தில் சூடிக் கொண்டிருப்பர் அக்காலத்து தமிழர்கள். இதனால்தான் இதற்கு கடிகை, ஆரம் என்று பெயர் வந்தது. சூரியனின் போக்கை வைத்து நேரம் அறிய இந்தக் கருவி உதவியதாம்.
இது குறித்த விளங்கங்கள் தெரிந்தோர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளாமே!
அறிவழகன்
|
|
|
| ரஹ்மானின் 'சுனாமி' இசை!! |
|
Posted by: Vaanampaadi - 02-01-2005, 12:01 PM - Forum: பொழுதுபோக்கு
- No Replies
|
 |
<img src='http://www.thatstamil.com/images26/cinema/rahman-300.jpg' border='0' alt='user posted image'>
ரஹ்மானின் 'சுனாமி' இசை!!
சென்னை:
சுனாமி நிவாரண நிதிக்காக ஆசிய லெவன் அணிக்கும் உலக லெவன் அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தீம் மியூசிக் அமைத்துத் தந்துள்ளார். சுனாமியின் வேதனையையும் அதிலிருந்து மனிதம் போராடி மீளுவதையும் சொல்லும் வகையில் அட்டகாசமாய் உயிர் உருக்கும் வகையில் இந்த இசையை அமைத்துள்ளார் ரஹ்மான்.
இந்தப் போட்டி துவங்கும் முன் மைதானத்தில் ரஹ்மானே இந்த இசையை லைவ் வாக வழங்குவதோடு பாடவும் இருக்கிறாராம்.
உலக லெவன் அணியில் ரிக்கி பாண்டிங், ஷேன் வார்னே, பிரையன் லாரா ஆகியோர் விளையவுள்ளனர். ஆசிய லெவன் அணிக்கு சௌரவ் கங்கூலி கேப்டனாக இருப்பார்.
கொல்கத்தாவின் பிரமாண்டமான ஈடன் கார்டன் மைதானத்தில் இம் மாதம் 13ம் தேதி நடக்கவிருந்தது இந்தப் போட்டி.
ஆனால், முன்னணி வீரர்கள் அனைவரும் பிஸியாக உள்ளதாலும், இங்கிலாந்து அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருவதாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடர் துவங்கவிருப்பதாலும் சுனாமி நிவாரண கிரிக்கெட் போட்டி ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
ரஹ்மானின் 'சுனாமி' இசையைக் கேட்க, ஏப்ரல் வரை நாம் காத்திருக்க வேண்டியது தான்.
Thatstamil
|
|
|
| அலறும் அந்தமான் |
|
Posted by: Vaanampaadi - 02-01-2005, 11:57 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
தேதி : 1/2/05 (Tue) 12:00 am
அலறும் அந்தமான்
இந்தியாவில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று முன் தினம் நிலநடுக்கம் தொடர்ந்து பல மணி நேரம் நீடித்ததால், மக்கள் மரண பயத்தில் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு அஞ்சி அத்தீவில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள்
ஏற்கனவே தமிழகத்திற்கும், மேற்குவங்கத்துக்கும் சென்று விட்டனர். அங்கு தற்போது வசித்து வரும் பழங்குடியினத்தவர்களும், மற்ற சிலரும் கடும் பீதியில் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இருதினத்திற்கு முன் நள்ளிரவு 1.32 மணி தொடங்கி தொடர்ச்சியான நடுக்கம்
ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 என்று பதிவான இந்நிலநடுக்கம் விடிய விடிய பல முறை ஏற்பட்டதுடன்,மறுநாள் பகலிலும் தொடர்ந்தது.இதனால் மக்கள் பீதியுடன் தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
பூமிக்கு அடியில் உள்ள புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதே தொடர்ச்சியான இந்நிலநடுக்கத்துக்குக் காரணம் என்றும், எதிர்வரும் "ஏப்ரல் மாதம் வரையில் இந்நிலஅதிர்வுகள் தொடரும்' என்றும் சென்னைப் பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
|
|
|
| விற்கப்படும் அல்-ஜசீரா |
|
Posted by: Vaanampaadi - 02-01-2005, 11:51 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
விற்கப்படும் அல்-ஜசீரா
அமெரிக்காவால் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வந்த Al-Jazeera தொலைக்காட்சியை விற்க Qatar நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் தொடர்ச்சியான நெருக்குதலே இம்முடிவுக்குக் காரணமென தகவல்கள் கூறுகின்றன.இத்தொலைக்காட்சியை விற்பதற்காகவே அண்மையில் Al-Jazeera-வின் நிர்வாகக் குழு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டது என Qatar அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈராக் விவகாரத்தில் தவறான தகவல்களையும், மாறுபட்ட செய்திகளையும் தந்து தீவிரவாதிகளை ஆதரிப்பதாக Al-Jazeera மீது அமெரிக்க துணை அதிபர் Dick Cheney, தற்காப்பு அமைச்சர் Donald Rumsfeld,வெளியுறவு அமைச்சர் Condoleezza Rice போன்றவர்கள்
Qatar அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
| இந்திய மருமகனாகின்றார் முத்தையா முரளிதரன |
|
Posted by: Vaanampaadi - 02-01-2005, 11:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
உலக சாதனை படைந்த இளம் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் தமிழகப் பெண்ணை மணந்து இந்திய மருமகனாகிறார்.
சென்னையில் பிரபலமான மலர்மருத்துவமனை உரிமையாளரின் மகளை முரளி கரம்பற்றுகிறார் எனத்தெரியவருகின்றது.
இவர்களுடைய திருமணம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. வுரவேற்பு வைபவம் கொழும்பிலும் கண்டியிலும் இடம்பெறும். முணமகள் இதே மலர் மருத்துவமணையில் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.முகாமைத்துவ நிர்வாகத்துறையில் விசேட பட்டம் பெற்ற மணமகளின் சகோதரியும் இதே மருத்துவமனையில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுள்ளார். மணமகளின் சகோதரியும் இதே மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றுகின்றார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
கண்டி கட்டுகஸ்தோட்டையில் பிரபல தொழில் அதிபரான முததையா தம்பதிகளின் சிரே~;ட புதல்வராக 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி பிறந்தார் முரளி. இவருக்கு நான்கு சகோதரர்களும் இருக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை புனித அத்தோனியார் கல்லுரியில் கல்வி பயின்ற முரளிதரன் பாடசாலை கிரிக்கெட் அணியிலேயே சிறந்த பந்து வீச்சாளராக விளங்கினார்.
ஆரம்பம் முதலே சுழல் பந்து வீச்சில் ஆர்வம் கொண்ட முரளிää காலப்போக்கில் தன்னை ஒரு தலைசிறந்த சுழல்பந்து வீச்சாளராக நிரூபித்துக்கொண்டார்.
இது வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 532 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 369விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
|
|
|
| MicroSoft இன் தமிழ் பக்கம் |
|
Posted by: Vaanampaadi - 02-01-2005, 11:29 AM - Forum: கணினி
- Replies (1)
|
 |
MicroSoft இன் தமிழ் பக்கம்
1.2.2005
உலகப் பிரசித்தி பெற்ற மைக்ரோசொவ்ற் தனது இணையத்தளத்தில் தரவிறக்கம் (Download) செய்யும் பக்கத்தைத் தமிழிலும் தந்திருக்கிறார்கள்.
இது முழுமையான தமிழாக்கம் இல்லாவிட்டாலும் வரவேற்கத்தக்கது. சில சொற்களின் நேரடி மொழிபெயர்ப்பு இந்தியத் தமிழில் காணப்படுகின்றது.
உதாரணமாக
Download என்பது டவுண்லோடு எனவும்
MicroSoft.Com என்பது மைக்ரோசாப்ட்.காம் எனவும்
Office and Home என்பது ஆபிஸ் மற்றும் ஹோம் எனவும் காணப்படுகிறது.
தமிழ் பக்கத்திற்கான இணைப்பு :- http://www.microsoft.com/downloads/search....?displaylang=ta
|
|
|
|