![]() |
|
ரஹ்மானின் 'சுனாமி' இசை!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: ரஹ்மானின் 'சுனாமி' இசை!! (/showthread.php?tid=5484) |
ரஹ்மானின் 'சுனாமி' இசை!! - Vaanampaadi - 02-01-2005 <img src='http://www.thatstamil.com/images26/cinema/rahman-300.jpg' border='0' alt='user posted image'> ரஹ்மானின் 'சுனாமி' இசை!! சென்னை: சுனாமி நிவாரண நிதிக்காக ஆசிய லெவன் அணிக்கும் உலக லெவன் அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தீம் மியூசிக் அமைத்துத் தந்துள்ளார். சுனாமியின் வேதனையையும் அதிலிருந்து மனிதம் போராடி மீளுவதையும் சொல்லும் வகையில் அட்டகாசமாய் உயிர் உருக்கும் வகையில் இந்த இசையை அமைத்துள்ளார் ரஹ்மான். இந்தப் போட்டி துவங்கும் முன் மைதானத்தில் ரஹ்மானே இந்த இசையை லைவ் வாக வழங்குவதோடு பாடவும் இருக்கிறாராம். உலக லெவன் அணியில் ரிக்கி பாண்டிங், ஷேன் வார்னே, பிரையன் லாரா ஆகியோர் விளையவுள்ளனர். ஆசிய லெவன் அணிக்கு சௌரவ் கங்கூலி கேப்டனாக இருப்பார். கொல்கத்தாவின் பிரமாண்டமான ஈடன் கார்டன் மைதானத்தில் இம் மாதம் 13ம் தேதி நடக்கவிருந்தது இந்தப் போட்டி. ஆனால், முன்னணி வீரர்கள் அனைவரும் பிஸியாக உள்ளதாலும், இங்கிலாந்து அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருவதாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடர் துவங்கவிருப்பதாலும் சுனாமி நிவாரண கிரிக்கெட் போட்டி ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. ரஹ்மானின் 'சுனாமி' இசையைக் கேட்க, ஏப்ரல் வரை நாம் காத்திருக்க வேண்டியது தான். Thatstamil |