![]() |
|
தொலைக்காட்சி விளம்பரங்கள் உங்களை........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: தொலைக்காட்சி விளம்பரங்கள் உங்களை........ (/showthread.php?tid=5479) |
தொலைக்காட்சி விளம்பரங்கள் உங்களை........ - வியாசன் - 02-01-2005 இங்கு சந்தாமுறையில் இயங்கும் தொ(ல்)லைக்காட்சிகள் அரைமணி நேர நிகழ்வுகளுக்குமிடையில் 10 நிமிட நேரம் விளம்பரங்களை ஒளிபரப்புகின்றனர். நிகழ்ச்சி தொடங்கவதற்கு முன்னர் வேறு விளம்பரங்கள் அணிவகுத்துவருகின்றன. இங்குள்ள இலவசதொலைக்காட்சிகள் விளம்பரம் ஒளிபரப்புவது போல ஒளிபரப்பி வெறுப்பெற்றுகின்றனர். அவை சந்தா முறையில் இயங்குகின்றது என்பதை மறந்துவிடுகின்றனர். அந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நிறுவனத்தின் ஆதரவில் இடம்பெறுவதாக வேறு கூறுகின்றனர்.. இவை சந்தாக்காரர்களை எரிச்சல் படுத்தாதா? தயவு செய்து உங்கள் மனக்குமுறல்களை களத்தில் சொல்லுங்கள் பலரின் மனநிலையை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. தயவு செய்து யாரையும் புண்படுத்தாமல் எழுதுங்கள் - thaiman.ch - 02-01-2005 கீரக்கடைக்கும் எதிர்க்கடை வேனும் என்டு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கிறன். இவைக்கு போட்டியா நல்ல தொலைக்காட்சி சேவைகள் வரும் போது இவை எல்லாம் இல்லாமல் போய்விடும். சரியான போட்டி இல்லாத காரணத்தால இவையள் தங்கட விருப்பத்துக்கு பண்ணீனம் என்பது என்னுடைய கருத்து. - sinnappu - 02-01-2005 அப்பு வியாசன் குறைநினைக்காதை உத நான் எங்கட பொண்டுகளுக்கு சொன்னா யோவ் <span style='font-size:30pt;line-height:100%'>பழசு வாயை இழுத்து சாத்து எண்டுதுவள் அவன் எத்தனை விளம்பரம் எண்டாலும் போடட்டும் ஆணால் அண்ணாமலை மெட்டிஒலி யை ஒரு நாளைக்கு 15 நிமிசம் போட்டால் சரி எண்டுதுவள் அப்பு கதைக்க ஏலாது இப்பவே உந்த சீரியல் ஆல அரைகுறை சாப்பாடு கதைச்சா நான் பல்கனியில தான் படுக்கோணும் ராசா ஆளைவிடு உவன் குத்தியனை பிடி</span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- glad - 02-01-2005 ஒவ்வொரு சந்தாதாரரும் நன் நோக்க அடிப்படையில்தான் சந்தாதாரர் ஆகின்றனர். ஆனால் நிகழ்ச்சிகள் தரம் இன்றி வெறுமனே நேரம் கடத்துவதற்காக நடாத்தப்படும்போது சந்தா வீண் விரயம் என்றே கவலை ஏற்படுகிறது. நிகழ்ச்சித் தலைப்புக்கள்தான் மாறுகின்றனவேயன்றி நிகழ்ச்சிகள் ஒன்றுதான். யாவும் சினிமாவும் சினிமாப்பாடலும்தான். தொடர் நாடகங்களின் கருத்துக்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. அவற்றிலிருந்து எதையும் கற்க முடியாது. தாயகத்திலிருந்து தரமான நிகழ்ச்சிகள் கிடைக்கும்வரை காத்திருக்கும் நிலைதான். glad - வியாசன் - 02-01-2005 அதனால்தானோ என்னவோ ஒருவருடத்துடன் சந்தாகாரர் கழன்று விடுகின்றனர். நிகழ்ச்சி இடம்பெறும் நேரத்தைவிட விளம்பர நேரம் அதிகம். 30 நிமிட நிகழ்ச்சி இருந்தால் அதைக்கொண்டு 60 நிமிடத்தை கடத்திவிடுகின்றனர். - kirubans - 02-01-2005 சின்னத்திரை தொடர்களை விடாமல் பார்ப்போருக்கு விளம்பரம் ஒரு பொருட்டல்ல. மழுங்கிப்போன மூளைகளை துருப்பிடிக்க வைக்கத்தான் விளம்பரங்கள் உதவுகின்றன. Re: தொலைக்காட்சி விளம்பரங்கள் உங்களை........ - Mathan - 02-02-2005 viyasan Wrote:இங்கு சந்தாமுறையில் இயங்கும் தொ(ல்)லைக்காட்சிகள் அரைமணி நேர நிகழ்வுகளுக்குமிடையில் 10 நிமிட நேரம் விளம்பரங்களை ஒளிபரப்புகின்றனர். நிகழ்ச்சி தொடங்கவதற்கு முன்னர் வேறு விளம்பரங்கள் அணிவகுத்துவருகின்றன. இங்குள்ள இலவசதொலைக்காட்சிகள் விளம்பரம் ஒளிபரப்புவது போல ஒளிபரப்பி வெறுப்பெற்றுகின்றனர். அவை சந்தா முறையில் இயங்குகின்றது என்பதை மறந்துவிடுகின்றனர். அந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நிறுவனத்தின் ஆதரவில் இடம்பெறுவதாக வேறு கூறுகின்றனர்.. சன் டிவி போன்ற இந்திய தொலைகாட்சிகள் ஸ்லாட் அடிப்படையில் இயங்குகின்றன, ஒரு நிகழ்ச்சியோ தொடரோ அதிக மக்களை கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் போது விளம்பரங்கள் அதிகரிக்கின்றன. அதன் மூலம் அவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கின்றது, அதனுடன் ஒப்பிடும் போது சந்தா மூலம் அவர்களுக்கு கிடைக்கும் காசு தூசுதான், அதனால் அளவுக்கு மீறிய விளம்பரங்கள் எம்மை எரிச்சலூட்டும் போதிலும் அவர்கள் அதனை குறைத்து கொள்ள போவதில்லை, ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைகாட்டிகளுக்கு பெரிய விளம்பர சந்தை ஏதும் இல்லாததால் அவற்றில் வரும் விளம்பரங்கள் குறைவு |