| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 343 online users. » 0 Member(s) | 341 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,282
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,662
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| சங்கமத்தின் செய்திப் பகுதி. |
|
Posted by: MEERA - 02-05-2005, 04:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
[size=18]<b>உலகத் தமிழர்களின் உரிமைக்குரல் சங்கமத்தின் புதிய செய்திப் பகுதி.
உலகமெல்லாம் நடைபெறும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் உங்களின் வீடு தேடி கொண்டு வந்துள்னது.
செய்திகள் உடனுக்குடன் உங்கள் விழிகளுக்கு செய்திப்படங்களுடன் வருகிறது.
செவியால் கேட்ட செய்திகளை உங்கள் விழிகளினால் பார்த்து உறுதிப்படுத்துவதற்காக.</b>
[b][size=24]www.sangamamnews.com
|
|
|
| Apple முன்னே;Google பின்னே |
|
Posted by: Vaanampaadi - 02-05-2005, 01:42 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
அனைத்துலக அளவில் புகழ்பெற்ற முத்திரைகளில்(BRAND) முதலிடத்தில் இருப்பது எந்த நிறுவனம் எது தெரியுமா? APPLE COMPUTERS நிறுவனம் தான்.
இது நாள் வரை முதலிடத்தில் பிரபலமாக இருந்த GOOGLE நிறுவனம் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள நிறுவனம் எது தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகியுள்ள கத்தார் நாட்டிலிருந்து இயங்கும் தொலைக்காட்சியான AL-JAZEERA தான், அந்த ஐந்தாவது பிரபல நிறுவனம்.
வணக்கம் மலேஷ்யா
|
|
|
| கைத்தொலைபேசியை அடிக்கடி தொலைக்கும் நபரா நீங்கள்? |
|
Posted by: Vaanampaadi - 02-05-2005, 01:39 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (4)
|
 |
அப்படியானால் இதை கொஞ்சம் படியுங்கள்;
அனைத்து கைத்தொலைபேசிகளும் வெவ்வேறு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டாலும் அதற்கென தனித்தனி வரிசை எண்(SERIAL NUMBER)கொடுக்கப்பட்டிருக்கும். உலக அளவில் ஒவ்வொரு கைத்தொலைபேசி நிறுவனத்திற்கும் என தனி வரிசை எண்கள் உள்ளன.
கைத்தொலைபேசியில் நாம் பயன்படுத்தும் SIM CARD என்பது நாம் பயன்படுத்தும் கைத்தொலைபேசியின் எண்களாகும். கைத்தொலைபேசியின் வரிசை எண் என்பது வேறு.
நம் கைத்தொலைபேசியில் உள்ள KEY BOARD பொத்தான்களில் உள்ள *#06# என்ற பொத்தான்களை அழுத்தினால் உடனடியாக நமது கைத்தொலைபேசியின் வரிசை எண் (SERIAL NUMBER) திரையில் தோன்றும். இந்த எண் 15 இலக்கங்களைக் கொண்டிருக்கும். இந்த எண்ணை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய கைத்தொலைபேசி தொலைந்து விட்டால் இந்த 15 இலக்க எண்ணை
நம்முடைய கைத்தொலைபேசி அலுவலகத்தில் (SERVICE PROVIDER) அளித்தால் அந்த கைத்தொலைபேசி வேலை செய்யாதபடி அவர்கள் செயலிழக்கச் செய்து விடுவார்கள்.
திருடர்கள் நம்முடைய கைத்தொலைபேசியை செயல்படுத்தவும் முடியாது.
என்ன *#06# என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்து விட்டீர்களா?
|
|
|
| சட்டசபைக்கு வந்த தமிழ் சினிமா! |
|
Posted by: Mathan - 02-05-2005, 01:11 PM - Forum: சினிமா
- Replies (8)
|
 |
சட்டசபைக்கு வந்த தமிழ் சினிமா!
நேற்று கூடிய சட்டசபையில் தமிழ்சினிமாதான் ஹீரோ. கேள்வி நேரத்தில் தமிழ் மொழியின் 'புதிய' வாட்ச்மேன் ராமதாஸ் சார்பில் அவர் கட்சிதலைவர் ஜி.கே. மணி தமிழ் சினிமா டைட்டில் குறித்துப் பேசினார்.
" 'சிட்டிசன்' என்ற ஆங்கில சொல்லுக்கு குடிமகன் என்பது ஆண்பால். ஆகவே பெண்ணை அழைக்க குடிமகள் என்று குறிப்பிடவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். அதே ஆண்டு 'சிட்டிசன்' என்ற பெயரில் தமிழ்திரைப்படம் வந்தது. அந்தப்படத்திற்கு குடிமகன் அல்லது குடிமகள் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று முதலைச்சரே கூறினார்" என்று முதல்வரே ஒரு காலத்தில், சினிமாவுக்கு தமிழ்பெயரை பரிந்துரைத்திருக்கிறார் என்று கோடிட்டுக்காட்ட, முதல்வரின் பதில் 'நச்'சென்று அமைந்தது.
"திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதை நிர்ணயிக்கும் உரிமை, தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. மேலும், படத்தை தணிக்கை செய்யும் தணிக்கை குழுவின் மீது மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று விளக்கமளித்தார்.
ஆனால், ஜி.கே. மணி இதிலெல்லாம் அடங்கி விடுகிற ஆளா? அவர் மீண்டும் தமிழ்... தமிழ்.. என்று கதைக்க, கேள்விகளால் ஒரு வேள்வியே நடத்திவிட்டார்கள். சுவாரஸ்யமான அந்த கேள்விகள்...
* ஜி.கே. என்ற உங்கள் பெயருக்கு முன்னால் உள்ள இனிஷியல் தமிழா? அதை தமிழில் மாற்றுவீர்களா?
* கார், டீ, சைக்கிள் இவற்றை எப்படி சொல்வீர்கள்? தமிழிலா ஆங்கிலத்திலா?
* சைக்கிளில் மொத்தம் 200 உதிரிப் பாகங்கள் உண்டு. அனைத்திற்கும் ஆங்கில பெயர்கள்தான். இவற்றை எப்படி தமிழில் சொல்வீர்கள்?
இந்த கேள்விக்கு, ஜி.கே. மணி "மிதிவண்டியின் உதிரிப்பாகங்களின் தமிழ்ப் பெயர்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். உங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்" என்று சொல்ல, இடையில் புகுந்த முதல்வர், "புத்தகத்தை பிறகு படிப்போம். இப்போது சைக்கிளின் உதிரிப்பாகங்களின் தமிழ்ப்பெயர்களை சொல்லுங்கள். அவர்கள் வெளியிட்ட புத்தகத்தை ஜி.கே. மணியே படிக்கவில்லை" என்று கூற, பிரச்சனையை எழுப்பியவர் முகத்தில் லிட்டர் லிட்டராக அசடு!
'தமிழ்' என்று பேசும் முன், நாம் பச்சை தமிழர்களாக இருக்கிறோமா என்று தமிழ் வாட்ச்மேன்கள் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது!
சினி சவுத்
|
|
|
| நடிகர் அலைகள் செல்வகுமார் காலமானார்- விஜயகாந்த் அஞ்சலி |
|
Posted by: Vaanampaadi - 02-05-2005, 12:58 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- No Replies
|
 |
நடிகர் அலைகள் செல்வகுமார் காலமானார் - விஜயகாந்த் அஞ்சலி
சென்னை பிப். 5- சென்னையில் நடிகர் அலைகள் செல்வக்குமார் காலமானார்.
பிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய -அலைகள் † படத்தில் வில்லனாக அறிமுகமானவர் செல்வகுமார். அதன் பிறகு பல படங்களிலும் நாடகங்களிலும் நடித்து வந்தார். 65 வயதான செல்வகுமார் சமீபத்தில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்த் அணியை எதிர்த்து பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்ககுறைவாக இருந்த இவர் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். சென்னை Nளைமேடு சவுராஸ்டிரா நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த், துணை தலைவர் நெப்போலியன், பொருளாளர் கே.என்.காளை, சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மக்கள் தொடர்பாளர்கள் சிங்காரவேலன், திரைநீதி செல்வம், விஜயமுரளி ஆகியோர் செல்வகுமார் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இறந்த செல்வகுமாருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இறுதி சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.
Dinakaran
|
|
|
| `ஜொள்ளு' விடும் ரோபோட்டுகள் |
|
Posted by: Vaanampaadi - 02-05-2005, 12:56 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
`ஜொள்ளு' விடும் ரோபோட்டுகள்
மனிதர்களைப்போல பேசவும், நடக்கவும், நடனம் ஆடவும் கூடிய `ரோபோட்'டுகளை உருவாக்கிய விஞ்ஞானிகள், இப்போது பெண்களைப் பார்த்து `ஜொள்ளு' விடும் ரோபோட்டை உருவாக்க இருக்கிறார்கள்.
தென்கொரியாவைச் சேர்ந்த ரோபோட் ஆராய்ச்சி மைய டைரக்டர் கிம் ஜோங் ஹ்வான் உணர்ச்சிவசப்படக்கூடிய `ரோபோட்'டுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
உணர்ச்சிகளுக்கும், குழந்தை பிறப்புக்கும் காரணமான `குரோமோசோம்' களை செயற்கையாக உருவாக்கி இருக்கிறார்.
இந்த செயற்கை குரோமோசோம்கள், அடுத்த 3 மாதத்தில், ரோபோட்டு களில் பொருத்தப்படும். இவை ரோபோட்டுகளை ஆசைப்படவும், கோபப்பட வும், சந்தோஷப்படவும், பயப்படவும், துக்கப்படவும் வைக்கும். காலப்போக்கில் இந்த ரோபோட்டுகள் குழந்தைகளையும் பெற்றுத்தரும்.
Dailythanthi
|
|
|
| செய்தித்தாளை அச்சிட காகிதத்துக்குப் பதிலாக தங்கம் |
|
Posted by: Vaanampaadi - 02-05-2005, 12:55 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
செய்தித்தாளை அச்சிட காகிதத்துக்குப் பதிலாக தங்கம்
செய்திப் பத்திரிகைகள் வழக்கமாக காகிதத்தில்தான் அச்சிடப்படுகின் றன. ஆனால் சீனாவில் உலகிலேயே முதல் முறையாக தங்கத்தில் செய்தித்தாள் வெளியாகி உள்ளது. `சீனாவின் பொற்காலம்' என அழைக்கப் படும் இந்த செய்தித்தாள் 2 பதிப்புகளைக் கொண்டது. ஒரு பதிப்பு
500 கிராம் தங்கத்திலும், அடுத்தது 200 கிராம் தங்கத்திலும் அச்சிடப்பட்டு உள்ளது. முதல் பதிப்பில் வெளியான இதழின் விலை ரூ.4 லட்சம். 2_வது பதிப்பில் வெளியான இதழின் விலை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.
சீனப் பாராளுமன்றத்தின் கடந்த 10 கூட்டங்களின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் இந்தப் பத்திரிகை வெளியிடப்பட்டது. தங்கப் பத்திரிகை எத்தனை பக்கங்கள் கொண்டது என்பது தெரியவில்லை.
Dailthanthi
|
|
|
| அரசியல் நலன்களை மனதில் கொண்டு கடல்கோள் உதவி வழங்கிய சீனா |
|
Posted by: Mathan - 02-05-2005, 12:29 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
அரசியல் நலன்களை மனதில் கொண்டு கடல்கோள் உதவி வழங்கிய சீனா
<b>சீனாவின் சர்வதேச தோற்றப்பாட்டை உயர்த்திக் கொள்வதில் கடும் அக்கறை
ஜோன் ஷான்</b>
ஜனவரி 6 இல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஐ.நா. ஆதரவிலான கடல்கோள் உச்சி மாநாட்டையொட்டி, பெய்ஜிங் அதிகாரத்துவம் மிகுந்த கவனத்துடன் உடனடியாக அந்தப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு எப்போதும் நடைபெற்றிராத அளவிற்கு மொத்தம் 83 மில்லியன் டொலர்கள் மதிப்பிற்கு உதவித்தொகைகளை அறிவித்தது.
சீன அரசாங்கம் "உதவி தேவைப்படுவோருக்கு தனது அதிகாரத்தின் கீழ் முடிந்த உதவிகளை" வழங்கும் என்று ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சீனா இந்தப் பிராந்தியத்தில் ஒரு "பொறுப்புள்ள" அரசாங்கமாக உருவாகி வருகிறது என்பதற்கு ஒரு அடையாளம் தான் இந்த முடிவு என்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் பெருமையடித்துக் கொண்டன.
ஜகார்த்தா போய்ச் சேர்ந்த பிரதமர் வென் ஜியோபோ வெளிட்ட அறிவிப்பில், "நான் இந்த முறை என்னோடு பெரிய சகாக்களை அழைத்துக் கொண்டு வரவில்லை. ஆனால், என்னோடு 16 தொன் நிவாரணப் பொருட்களையும், சீன மக்களின் அன்பையும் கொண்டு வந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். பிரதமர் தன்னோடு வந்த தூதுக்குழுவினர் தங்களது பயண மூட்டைகளை குறைத்துக் கொண்டு அதிகளவில் உதவிப் பொருட்களை விமானத்தில் ஏற்றுவதற்கு வழி செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக பத்திரிகைகளுக்குத் தகவல்கள் கசிந்தன.
மாநாட்டில் உரையாற்றிய வென் ஜியாபோ, சீனக் கம்பனிகள் சம்பந்தப்பட்டிருக்குமானால் உள்கட்டமைப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்த வட்டிக் கடன்கள் வழங்கப்படும் என அறிவித்தார். அவர் பாதிக்கப்பட்ட சீன சுற்றுலாகப் பயணிகள் பயன்படுத்தும் சுற்றுலா விடுதிகளை சீரமைக்க உறுதியளித்தார். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான கடன்களை ரத்துச் செய்வதாக அறிவித்தார். உறுதியளிக்கப்பட்டுள்ள உதவியின் பாதி இந்த மாதக்கடைசியில் கிடைக்கும் என்று வென் அறிவித்தார்.
சீன மக்கள் குடியரசின் 55 ஆண்டு கால வரலாற்றில்லாத அளவிற்கு மிகப்பெரிய உதவித்திட்டம் இது. இதற்கு முன்னர் இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் அதேபோல பர்மாவிற்கு பெய்ஜிங் இரு தரப்பு உதவிகளை வழங்கியுள்ளது. ஆனால், இப்போது தான் முதல் தடவையாக ஒரு பெரிய நாடு கடந்த நிவாரண நடவடிக்கைகளில் அது கணிசமான பங்களிப்புச் செய்திருக்கிறது.
அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இதர நாடுகளைப் போன்று உதவி செய்வதற்கு பெய்ஜிங் முடிவு செய்தது கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களது நிலையைக் கண்டு கவலை கொண்ட உந்துதலால் அல்ல. மாறாக, பொருளாதார மற்றும் அரசியல் கருத்தில் கொண்டு தான் இந்த உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கும் தைவானுக்குமிடையே செல்வாக்கை நிலைநாட்டுவதில் நடைபெற்று வருகின்ற போட்டி இதில் ஓர் காரணியாகும். தொடக்கத்தில் 2.62 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி தருவதாக உறுதியளித்திருந்த பெய்ஜிங், தைபே 5 மில்லியன் டொலர்கள் அளவிற்கு உதவி தருவதாக அறிவித்தைத் தொடர்ந்து சங்கடத்திற்கு உள்ளானது. இரண்டு தரப்பும் போட்டி போட்டுக் கொண்டு உதவி அறிவிப்புகளை வெளியிட்டன. தைவான் தனது உதவித்தொகையை 50 மில்லியன் டொலர்களாக உயர்த்தியது.
தைவான் ஜகார்த்தா உச்சி மாநாட்டில் இடம்பெறக்கூடாது என்று சீனா வலியுறுத்திக் கூறியது. "ஒரே சீனா" கொள்கையை ஒட்டி பெய்ஜிங் இந்தத் தீவை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கருதுகிறது. அதனைத் துரோகம் இழைத்துவிட்ட ஒரு மாகாணமாக நடத்துகிறது. 1972 இல் சீனாவுடன் அமெரிக்கா மீண்டும் சமரசம் செய்து கொண்ட பின்னர், கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தாய்வான் ஐ.நா. உட்பட அனைத்துப் பெரிய சர்வதேச பகுதிகளினாலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சீனா மற்றும் தாய்வான் ஆகிய இரண்டிற்கும் கணிசமான பொருளாதார நலன்கள் உள்ளன.
கடந்த தசாப்தங்ளுக்கு மேலாக, குறிப்பாக, இந்தியாவுடன் தைபே நெருக்கமான உறவுகளை வளர்த்து வருகிறது. 1995 இற்கும் 2002 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இரு தரப்பு வர்த்தகம் திடீரென்று 33 சதவீதம் பெருகியுள்ளது. 2003 இல் அது 16 சதவீதம் உயர்ந்து 1.4 பில்லியன் டொலர்கள் அளவிற்கு இருந்தது. 2004 இல் மேலும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் தாய்வான் முதலீடும் பெருகிக் கொண்டிருக்கிறது. 1996 இல் 22 மில்லியன் டொலர்களாக இருந்த தாய்வான் முதலீடுகள் 2002 இல் 74 மில்லியனாக உயர்ந்தது. 2002 அக்டோபரில் மேலும் தாய்வான் முதலீடுகளை குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதர பெரிய தொழிற்றுறைகளில் ஊக்குவிப்பதற்காக இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.
சீனா குறிப்பாக இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு விரிவான வர்த்தக உறவுகளை வைத்திருக்கிறது. கச்சாப் பொருட்களும் உபகரணங்களும் ஆசியாவின் பிற நாடுகளிலிருந்து சீனாவின் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு உற்பத்தி செய்து அங்கு அவை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தாய்லாந்து, "கிழக்கு டெட்ரோய்ட்" என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், சீனாவில் உற்பத்தியாகும் கார்களுக்குத் தேவைப்படும் பல பாகங்கள் தாய்லாந்தில் தயாரிக்கப்படுகின்றன.
சீனாவின் எண்ணெய், எரிவாயு தேவைகள் வளர்ந்து வருவது இதில் ஒரு கணிசமான பங்களிப்பு செய்து வருகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் அரசிற்குச் சொந்தமான சீன தேசிய கரையோர எண்ணெய் நிறுவனம் (CNOOC) இந்தோனேஷியாவில் 5 கரையோர எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிலையங்களை 585 மில்லியன் டொலரில் விலைக்கு வாங்கியது. சீனாவிற்கு வெளியில் CNOOC மேற்கொண்ட மிகப்பெரிய முதலீட்டு பேரம் இது. இதன் மூலம் இந்த சீனக்கம்பனி இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உயர்ந்துவிட்டது.
கடல்கோள் பாதிப்பு தொடர்பாக பெய்ஜிங் தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்திருக்கும் ஹொங்கொங்கிலுள்ள பேராசிரியர் ஜோசப் செங் சேனல் `நியூஸ் ஆசியா' வலைத்தளத்திற்கு பேட்டியளித்தபோது, "இதைத்தான் சீனா துல்லியமாக விரும்புகிறது. ஒரு பொறுப்பான பெரிய வல்லரசு என்று தனக்கு ஒரு மரியாதை வேண்டும் என்று விரும்புகிறது. ஒரு ஈகைக் குணமுள்ள வல்லரசாக, கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் சீனாவின் வெளியுறவுக் கொள்கை அமைதியாக உயர்ந்துள்ளது. அதனுடைய உயர்வு பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தல் அல்ல என்று சீனாவின் வெளியுறவுக் கொள்கை வலியுறுத்தியுள்ளது. மற்றும் சீனாவின் செழிப்பே கூட இந்தப் பிராந்தியத்திற்குச் செழிப்பு என்று பொருள்படும்" என்று விளக்கினார்.
இப்படி ஒரு வாய்ப்புக் கிடைப்பதை உணர்ந்து, சீனா அதி விரைவாக இந்தப் பேரழிவு தொடர்பான உதவிகளை மேற்கொண்டது. டிசம்பர் 27 அன்று சீனாவின் மாகாணங்களில் நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதற்கு முதல் பணிக்குழு அனுப்பப்பட்டது. டிசம்பர் 29 இல் முதல் நிவாரண உதவி இலங்கை சென்று சேர்ந்தது. ஜனவரி 1 இல் வென் ஜியாபோ பாதிக்கப்பட்ட நாடுகளின் தூதர்களை பெய்ஜிங்கில் சந்தித்தார். தேசிய பாதுகாப்பு அமைச்சகமும் மக்கள் விடுதலை இராணுவமும் பொது இராணுவ உதவித்துறையும் இதில் மையமாகச் செயற்பட்டன.
<b>ஒரு அனுதாப அலை</b>
உலகம் முழுவதிலும் உள்ள மற்ற நாடுகளைப் போன்று, பெய்ஜிங் தனது உதவியை அதிகரிப்பதில் மற்றொரு குறிப்பிடத்தக்க காரணி, சாதாரண உழைக்கும் மக்கள் காட்டிய ஆர்வமாகும்.
ஆண்டு நபர் வாரி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (எஈக) 1,000 அமெரிக்க டொலர்களுக்கு சற்று அதிகமாகவுள்ள ஒரு நாட்டில் தனிப்பட்டவர்கள் தந்துள்ள நன்கொடைகள் 18 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொட்டது. ஜனவரி 1 இல் 24 மணி நேர உடனடித் தொலைபேசி தொடர்பு வசதிகளைத் தொடக்கிய பின்னர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்தன. நிதிகளைத் திரட்டுவதற்காக பல நகரங்களில் கடல்கோள் நன்கொடை வசூலிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன.
மாதம் 2,000 யென்னில் (241 அமெரிக்க டொலரில்) வாழ்ந்து கொண்டிருக்கும் 74 வயதான ஓய்வு பெற் யாங் ஷி என்பவர், தனது வீட்டிலிருந்து 2 மணி நேரம் பஸ்லில் பயணம் செய்து சீனா அறக்கட்டளை கூட்டமைப்பிற்கு வந்து 60 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கினார். "நானும் எனது மனைவியும் கடல்கோள் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு உதவுவதற்கு நன்கொடை கொடுக்க முடிவு செய்தோம். எங்களது சமுதாயத்தில் நன்கொடை கொடுப்பதற்கு இடமில்லை. நான் நேற்று தொலைக்காட்சியில் இந்த அமைப்பு நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறது என்பதை அறிந்ததும் இங்கு வந்திருக்கிறேன்" என்று ஜனவரி 5 இல் அவர் China Daily க்கு பேட்டியளித்தார்.
சீனாவின் மிகப்பெரியர நகரம் ஷங்காய். அதில் ஜனவரி 4 வரை 3 மில்லியன் யென்கள் அல்லது 362,700 அமெரிக்க டொலர்கள் வந்திருக்கின்றன. இவற்றில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவை தனிநபர்களிடமிருந்து வந்திருக்கிறது. ஷங்காய் செஞ்சிலுவை சங்க நிர்வாகத் துணைத் தலைவர் ஷியாங் பான்ஜி "நகரின் பல்வேறு திசைகளிலிருந்து மக்கள் மிக வேகமாகத் திரண்டு வந்து உதவிகளை வழங்கினர்" என்று நிருபர்களிடம் தெரித்தார்.
சீனாவில் உள்ள புதிய செல்வந்தத் தட்டினரை விட சாதாரண மக்கள் தங்களது குறைந்த சேமிப்புக்களில் இருந்து மிகத் தாராளமாக உதவிகளை வழங்கினர். கம்பனிகளது நன்கொடை விதிவிலக்காகத்தான் அமைந்திருக்கிறது. சீனாவின் மிகப்பெரிய கம்பியூட்டர் நிறுவனமான Lenovo அண்மையில் IBM இன் பெர்னசல் கம்பியூட்டர் பிரிவை 1.75 பில்லியன் டொலர்களுக்கு விலைக்கு வாங்கியது. அந்த நிறுவனம் 500,000 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாக குOHO இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் அந்தக் கம்பனியின் இரண்டு தலைமை நிர்வாகிகள் (CEOS) ஒரு மில்லியன் யென்களை நன்கொடையாக வழங்கினர் (120,000 அமெரிக்க டொலர்கள்).
தனிப்பட்டவர்கள் உதவி நிதி சேர்ப்பதை அனுமதிப்பதற்கு பெய்ஜிங் தயக்கம் காட்டி, 6 நாட்களுக்குப் பின்னர் தனியார் நன்கொடை வசூலுக்கு பச்சைக் கொடி காட்டியது. தங்களது கட்டுப்பாட்டிற்கு வெளியில் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், சாதாரண மக்கள் திரண்டு வரும்போது அரசியல் எதிர்ப்பிற்கு அது வழி செய்து விடும் என்று சீன அதிகாரிகள் அஞ்சியுள்ளனர். ஆசியா முழுவதிலும் கடல்கோளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ளது போன்ற சமூக நிலைமை தான் மிகப் பெரும்பாலான சீன மக்களிடமும் காணப்படுகின்றது.
கடல்கோள் பேரழிவிற்கு, பாசாங்கு போக்கைக் கொண்ட பெய்ஜிங் அதிகாரத்துவத்தை சேர்ந்தவர்களது அணுகுமுறையானது உள்நாட்டு சமூக சீரழிவுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அவர்கள் தினசரி மக்களை அடக்கி ஆட்சி செய்கின்றனர். தினசரி ஒரு டொலர் அல்லது இரண்டு டொலர் ஊதியத்திற்காக கோடிக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல விவசாயிகள் திவாலாகிவிட்டனர். அல்லது நிலங்களை இழந்துவிட்டனர். அவர்கள் நகரங்களில் மிகவும் குறைந்த ஊதிய பணிகளை நாடி குடியேறிவிட்டனர். மில்லியன் கணக்கான குழந்தைகள், தங்களது பெற்றோர் கல்வி கற்பிக்க வசதியில்லாதவர்களாக இருக்கின்ற காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் தொழிலாளர்களாக மாறிவிட்டனர்.
தொழிற்றுறை விபத்துக்கள், குறிப்பாக சுரங்கங்களிலும் ஏற்றுமதி வளாகங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்கள் பலியாகிறது அல்லது காயமடைகிறது. சுற்றுப்புறச் சூழல் சீனாவின் கிராமப்புறங்கள் முழுவதிலும் கடுமையாகத் தூய்மை கெட்டுப் போயிருப்பதால் பல "புற்று நோய்க் கிராமங்கள்" உருவாகியுள்ளன. கட்டுமான நெறிப்படுத்தல்கள் சரியாக அமுல்படுத்தப்படாததால் பல கடுமையான தீ விபத்துக்களும், கட்டிடங்கள் பொறிந்து போவதும் நடந்துகொண்டிருக்கின்றன. முறையான உதவியோ அல்லது உள்கட்டமைப்போ இல்லாததால் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகின்றனர்.
தனது பொலிஸ் - அரசு ஒடுக்குமுறை மூலம் பரவலான அதிருப்தியையும் கண்டனங்களையும் ஒடுக்கி பெய்ஜிங் தனது அரசியல் பிடியை நிலைநாட்டி வருகிறது. சீனாவிற்குள் வெள்ளம் போல் குவிந்து கொண்டிருக்கிற வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பயன்களை அறுவடை செய்கின்ற புதிய பணக்கார நடுத்தர வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்கள், மலிவு ஊதிய தொழிலாளர்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். ஏழைகளது நிலை குறித்து அவர்கள் அலட்சியப்போக்குடன் பழியார்ந்த முறையில் நடந்து கொள்கின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலானோர் சீன சமூகத்தின் அடித்தளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விட, கடைசியாகக் கிடைக்கின்ற வர்த்தக செய்திகள் அல்லது நடப்பு ஆடம்பரங்களில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தென் கிழக்கு ஆசியாவில் கடல்கோளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களது நிலை குறித்து தலைமை அரசாங்க அதிகாரிகளும் செல்வந்தத் தட்டினரும் எத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்களோ, அது சீனாவின் ஏழைமக்கள் மீது அவர்கள் கொண்டிருக்கிற அணுகுமுறையிலிருந்து மாறுபட்டதல்ல. அவர்கள் இந்தப் பேரழிவை சீனாவின் சர்வதேச தோற்றப்பாட்டை உயர்த்திக் கொள்வதற்கும், சீனா கணிசமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கொண்டிருக்கும் நாடுகளோடு நெருக்கமான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
உலக சோசலிசஇணையத்தளத்தில் இருந்து Thinakkural
|
|
|
| புலத்தில் தமிழ் சந்ததி |
|
Posted by: Mathan - 02-05-2005, 04:24 AM - Forum: புலம்
- Replies (10)
|
 |
<span style='color:blue'>புலத்தில் உள்ள தமிழ் சந்த்திகளின் நிலையை சுட்டிகாட்டும் இந்த சிறுகதையை படித்து பாருங்கள், இத்னை கள உறுப்பினர் ஷண்முகி அக்காவின் வலைத்தளத்தில் படித்தேன்
<b>உணர்வுகள் நிஜங்களாக...சிறுகதை</b>
ஆங்கில பாடத்திற்காக மணி அடிக்க ஆரம்பித்தபோது அதற்கான பாட புத்தகங்களை எடுத்து வைப்பதில் எல்லோரது கவனமும் இருந்தது. ஷர்மிலி யின் மனமும் படபட வென அடித்துக்கொண்டது.
இரண்டு வாரத்துக்கு முதல் தான் ஆங்கிலப்பாட பரீட்சை நடைபெற்றது.
அதற்குறிய பெறுபெறுகள் இன்று கிடைக்கப்போகின்றது. ஏற்கனவே நடந்து முடிந்த பரீட்சையில் டொச், ஸ்பானிஷ், லெத்தின் மொழிகளில் மிக மிகத் திறமையான சித்தி கிடைத்திருந்தது அவளுக்கு.
இந்த பரீட்சையில் என்ன கிடைக்கப்போகின்றது? வழக்கம்போல் இம்முறையும் பரீட்சை நன்றாகவே செய்திருந்தாள். ஆனாலும் ஷர்மிலி யின் மனதில் ஓர் பதட்டம். மனதின் பதட்டம் அவள் உடம்பில் பரவி, எங்கும் உஷ்ணமாய் வியர்வைத்துளிகள் நெற்றியில் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. மற்ற மாணவ மாணவிகளை பார்த்தாள். எல்லோரும் சாதாரணமாக இருப்பது போல் தெரிந்தது. ஏன் என் மனம் இப்படி அடித்துக்கொள்கிறது. அவளையும் மீறி அவள் உதடுகள் முருகா... முருகா... என்று வேண்டிக் கொண்டது.
ஆசிரியை ஒவ்வொரு மாணவியின் பெயரையும் சொல்லி அதன் பெறுபெறுகளை சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். இறுதியாக ஷர்மிலி என்று கூறி மிக நன்றாக சித்தி பெற்றிருக்கின்றாள் என்று கூறியபோது அவள் இதயம் எங்கும் ஓர் இன்ப மின்சாரம் ஊடுருவி உடல் முழவதும் பரவியது போன்ற நிலை ஏற்பட்டது. அந்தநேரத்தில் ஒரு கணம் தன் பெற்றோரை நினைத்துத் கொண்டாள். இந்த விஷயத்தை வீட்டில் கூறும்போது தம் பெற்றோர் படும் மகிழ்ச்சியை தன் மனக்கண்முன் வரவழைத்துக் கொண்டு மகிழ்ந்தாள்.
ஆசிரியர் ஷர்மிலியை அழைத்து அவள் படிப்பின் மீது செலுத்தும் தீவிர அக்கரையை பெருமையாக புகழ்ந்து கொண்டிருந்தார்.
தன்னைப்பற்றி புகழ்வது அவளுக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்படி வகுப்பிற்கு முன்னால் புகழ்வது இதுதான் முதல் தடவை. இரவுபகலாக படித்ததன் பயனை அடைந்தாள். எப்போது அம்மா அப்பா விடம் சொல்வோம் என்ற ஆவலில் அவளால் அதிகநேரம் வகுப்பறையில் இருக்க இருப்புக்கொள்ளவில்லை. எப்போ வீட்டுக்குப் போவோம் என்ற துடிப்புடன் காவல் இருந்தாள்.
பாடசாலை முடிவடைவதற்கான மணி அடித்தபோது... புத்தகக்கட்டை அள்ளி சுமந்து வகுப்பறையை விட்டு வெளியேற முற்பட்டபோதுதான் அவளுடன் படிக்கும் சகமாணவி மறியா அவளை இடைமறித்து "Congratulations, Sharmili! Can you actually speak in your mother tongue?"
என்று கேட்டபோது அவளும் "Thanks Maria! I understand Tamil well, but can't read or write it."
இதைக்கேட்ட மறியா "Oh, that's sad! You are good at all these foreign languages, but not good at your own mother tongue? Don't you feel afraid of losing your identity?"
மறியா கூறியதைக்கேட்ட போது ஷர்மிலியின் முகம் சட்டென்று கறுத்துப்போனது. தமிழ் எழுத பேச தெரியாமல் என் அடையாளத்தை தொலைத்து விட்டு நிற்கின்றேனா...? இத்தனை காலமும் ஏன் எனக்குத் தெரியாமல் போய்விட்டது? தாய்மொழியை எழுத பேசத் தெரியாமல் எத்தனை மொழிகள் தெரிந்தும் என்ன பயன் ? அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். தனக்குள் ஏதையோ தொலைத்து விட்டு எதையோ தனியே இருந்து தேடுவது போன்று அவளுக்கு ஏற்பட்டது.
சற்றுமுன் பாராட்டிய பாராட்டுக்கள் எல்லாம் ஒரு நொடிக்குள் மாயமாய் மறைந்து போய் ஷர்மிலியின் மனதுக்குள் தன் தாய் மொழியின் அடையாளத்தை தொலைத்த வேதனை குடிகொண்டு விட்டது. என்ன சொல்வதென்று தெரியாமல் மறியாவிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஷர்மிலி.
வழி நெடுகிலும் ஷர்மிலிக்கு இதைப்பற்றிய சிந்தனையே நிழலாடிக்கொண்டிருந்தது. அந்நிய மொழிகளைப் படித்து நல்ல பெறுபெறுகள் பெறும் என்னால் ஏன் என் தாய்மொழிக்கல்வி படிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்துவிட்டேன். இது எனது தவறா...? அவள் உள்மனம் அவளையே கேட்டது.
வீட்டுக்கு வந்த உடன் ஒன்றும் செய்ய பிடிக்காமல் புத்தகப் பையை மேசை மீது வைத்து விட்டு தலையை தொங்கவிட்டபடியே கதிரையில் அமர்ந்து கொண்டாள்.
மகளின் நிலையை கண்ட தாய் ஊகித்துக் கொண்டாள் பரீட்சை பெறுபெறு அவள் எதிர்பார்த்தது போல் இல்லை என்று எண்ணியபடியே ஷர்மிலியின் அருகே வந்து ஆறுதலாய் "பரவாயில்லையம்மா. அடுத்தமுறை எல்லாம் நல்லதாக பரீட்சை முடிவுகள் கிடைக்கும்..." என்று மகளை சமாதானப்படுத்துவதில் முனைந்தாள்.
"இல்லையம்மா. எனக்கு மிக நன்றாக திறமையான சித்திதான் கிடைத்தது. ஆனால்..." கண்கள் சற்றே கலங்கியபடியே கூறினாள் ஷர்மிலி.
"பிறகு எதற்கு உந்த கண்ணீர் பள்ளிக்கூடத்தில்ல ஏதும் பிரச்சனையோ...?" என பதட்டமாகவே கேட்டாள்.
அம்மா, இன்டைக்கு மறியா என்ன கேட்டவ தெரியுமே? எனக்கு தாய்மொழி எழுத பேச தெரியுமே என்டு. அவ கேட்டவுடனே எனக்கு எப்படியிருந்தது தெரியுமே. என்ட feelings... அது எனக்கு சொல்லத் தெரியேல்ல ஏன் அம்மா எனக்கு சின்னவயசுலயிருந்து 'தமில் எளுத'
படிப்பிக்கேல்லை?" கவலையோடு கேட்டாள் ஷர்மிலி.
"ஷர்மி, இங்கே நாங்கள் வந்தபோது ஒரு தமிழ்பாடசாலைகளும் இருக்கேல்ல. இப்பவென்டால் ஒவ்வொரு இடத்திலேயும் தமிழ் பாடசாலையிருக்கு. நாங்கள் வந்த நேரம் அப்படி எங்கள் நிலைமையாக இருந்தது" என்றாள் அம்மா சற்று வருத்தமாக.
"அம்மா, அதை விடுங்கோ நீங்கள் 'தமில்தானே.' அந்தநேரம் நீங்களாவது எனக்கு 'தமில்' சொல்லித் தந்து இருக்கலாம் தானே..? இன்று என் சினேகிதி கேட்டபோது என் அடையாளத்தை தொலைத்து நின்ற அனுபவம் தான் எனக்கு ஏற்பட்டது. இனிமே நான் தமிழ் படிக்கப்போறன்..." என்று கூறியவள் இணையதளத்துக்குள் போய் தானாகவே தமிழ் படிப்பதற்கான பக்கங்களை தேடிக்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
அதேநேரம் தன் அடையாளத்தை தனக்கு உணர்த்திய மறியாவை மனதுக்குள் நினைத்து நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.
உணர்வுகள் செயல்களாக பரிணமிக்க... அதன் வெளிப்பாடுகள் நிஜங்களாக வெளிப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
-யாவும் கற்பனை-</span>
நன்றி - ஷண்முகி
|
|
|
|