Yarl Forum
நடிகர் அலைகள் செல்வகுமார் காலமானார்- விஜயகாந்த் அஞ்சலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: நடிகர் அலைகள் செல்வகுமார் காலமானார்- விஜயகாந்த் அஞ்சலி (/showthread.php?tid=5423)



நடிகர் அலைகள் செல்வகுமார் காலமானார்- விஜயகாந்த் அஞ்சலி - Vaanampaadi - 02-05-2005

நடிகர் அலைகள் செல்வகுமார் காலமானார் - விஜயகாந்த் அஞ்சலி

சென்னை பிப். 5- சென்னையில் நடிகர் அலைகள் செல்வக்குமார் காலமானார்.

பிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய -அலைகள் † படத்தில் வில்லனாக அறிமுகமானவர் செல்வகுமார். அதன் பிறகு பல படங்களிலும் நாடகங்களிலும் நடித்து வந்தார். 65 வயதான செல்வகுமார் சமீபத்தில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்த் அணியை எதிர்த்து பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்ககுறைவாக இருந்த இவர் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். சென்னை Nளைமேடு சவுராஸ்டிரா நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த், துணை தலைவர் நெப்போலியன், பொருளாளர் கே.என்.காளை, சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மக்கள் தொடர்பாளர்கள் சிங்காரவேலன், திரைநீதி செல்வம், விஜயமுரளி ஆகியோர் செல்வகுமார் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இறந்த செல்வகுமாருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இறுதி சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.

Dinakaran