Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தில் தமிழ் சந்ததி
#1
<span style='color:blue'>புலத்தில் உள்ள தமிழ் சந்த்திகளின் நிலையை சுட்டிகாட்டும் இந்த சிறுகதையை படித்து பாருங்கள், இத்னை கள உறுப்பினர் ஷண்முகி அக்காவின் வலைத்தளத்தில் படித்தேன்

<b>உணர்வுகள் நிஜங்களாக...சிறுகதை</b>

ஆங்கில பாடத்திற்காக மணி அடிக்க ஆரம்பித்தபோது அதற்கான பாட புத்தகங்களை எடுத்து வைப்பதில் எல்லோரது கவனமும் இருந்தது. ஷர்மிலி யின் மனமும் படபட வென அடித்துக்கொண்டது.

இரண்டு வாரத்துக்கு முதல் தான் ஆங்கிலப்பாட பரீட்சை நடைபெற்றது.
அதற்குறிய பெறுபெறுகள் இன்று கிடைக்கப்போகின்றது. ஏற்கனவே நடந்து முடிந்த பரீட்சையில் டொச், ஸ்பானிஷ், லெத்தின் மொழிகளில் மிக மிகத் திறமையான சித்தி கிடைத்திருந்தது அவளுக்கு.

இந்த பரீட்சையில் என்ன கிடைக்கப்போகின்றது? வழக்கம்போல் இம்முறையும் பரீட்சை நன்றாகவே செய்திருந்தாள். ஆனாலும் ஷர்மிலி யின் மனதில் ஓர் பதட்டம். மனதின் பதட்டம் அவள் உடம்பில் பரவி, எங்கும் உஷ்ணமாய் வியர்வைத்துளிகள் நெற்றியில் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. மற்ற மாணவ மாணவிகளை பார்த்தாள். எல்லோரும் சாதாரணமாக இருப்பது போல் தெரிந்தது. ஏன் என் மனம் இப்படி அடித்துக்கொள்கிறது. அவளையும் மீறி அவள் உதடுகள் முருகா... முருகா... என்று வேண்டிக் கொண்டது.

ஆசிரியை ஒவ்வொரு மாணவியின் பெயரையும் சொல்லி அதன் பெறுபெறுகளை சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். இறுதியாக ஷர்மிலி என்று கூறி மிக நன்றாக சித்தி பெற்றிருக்கின்றாள் என்று கூறியபோது அவள் இதயம் எங்கும் ஓர் இன்ப மின்சாரம் ஊடுருவி உடல் முழவதும் பரவியது போன்ற நிலை ஏற்பட்டது. அந்தநேரத்தில் ஒரு கணம் தன் பெற்றோரை நினைத்துத் கொண்டாள். இந்த விஷயத்தை வீட்டில் கூறும்போது தம் பெற்றோர் படும் மகிழ்ச்சியை தன் மனக்கண்முன் வரவழைத்துக் கொண்டு மகிழ்ந்தாள்.

ஆசிரியர் ஷர்மிலியை அழைத்து அவள் படிப்பின் மீது செலுத்தும் தீவிர அக்கரையை பெருமையாக புகழ்ந்து கொண்டிருந்தார்.

தன்னைப்பற்றி புகழ்வது அவளுக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்படி வகுப்பிற்கு முன்னால் புகழ்வது இதுதான் முதல் தடவை. இரவுபகலாக படித்ததன் பயனை அடைந்தாள். எப்போது அம்மா அப்பா விடம் சொல்வோம் என்ற ஆவலில் அவளால் அதிகநேரம் வகுப்பறையில் இருக்க இருப்புக்கொள்ளவில்லை. எப்போ வீட்டுக்குப் போவோம் என்ற துடிப்புடன் காவல் இருந்தாள்.

பாடசாலை முடிவடைவதற்கான மணி அடித்தபோது... புத்தகக்கட்டை அள்ளி சுமந்து வகுப்பறையை விட்டு வெளியேற முற்பட்டபோதுதான் அவளுடன் படிக்கும் சகமாணவி மறியா அவளை இடைமறித்து "Congratulations, Sharmili! Can you actually speak in your mother tongue?"
என்று கேட்டபோது அவளும் "Thanks Maria! I understand Tamil well, but can't read or write it."
இதைக்கேட்ட மறியா "Oh, that's sad! You are good at all these foreign languages, but not good at your own mother tongue? Don't you feel afraid of losing your identity?"

மறியா கூறியதைக்கேட்ட போது ஷர்மிலியின் முகம் சட்டென்று கறுத்துப்போனது. தமிழ் எழுத பேச தெரியாமல் என் அடையாளத்தை தொலைத்து விட்டு நிற்கின்றேனா...? இத்தனை காலமும் ஏன் எனக்குத் தெரியாமல் போய்விட்டது? தாய்மொழியை எழுத பேசத் தெரியாமல் எத்தனை மொழிகள் தெரிந்தும் என்ன பயன் ? அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். தனக்குள் ஏதையோ தொலைத்து விட்டு எதையோ தனியே இருந்து தேடுவது போன்று அவளுக்கு ஏற்பட்டது.

சற்றுமுன் பாராட்டிய பாராட்டுக்கள் எல்லாம் ஒரு நொடிக்குள் மாயமாய் மறைந்து போய் ஷர்மிலியின் மனதுக்குள் தன் தாய் மொழியின் அடையாளத்தை தொலைத்த வேதனை குடிகொண்டு விட்டது. என்ன சொல்வதென்று தெரியாமல் மறியாவிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஷர்மிலி.

வழி நெடுகிலும் ஷர்மிலிக்கு இதைப்பற்றிய சிந்தனையே நிழலாடிக்கொண்டிருந்தது. அந்நிய மொழிகளைப் படித்து நல்ல பெறுபெறுகள் பெறும் என்னால் ஏன் என் தாய்மொழிக்கல்வி படிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்துவிட்டேன். இது எனது தவறா...? அவள் உள்மனம் அவளையே கேட்டது.

வீட்டுக்கு வந்த உடன் ஒன்றும் செய்ய பிடிக்காமல் புத்தகப் பையை மேசை மீது வைத்து விட்டு தலையை தொங்கவிட்டபடியே கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

மகளின் நிலையை கண்ட தாய் ஊகித்துக் கொண்டாள் பரீட்சை பெறுபெறு அவள் எதிர்பார்த்தது போல் இல்லை என்று எண்ணியபடியே ஷர்மிலியின் அருகே வந்து ஆறுதலாய் "பரவாயில்லையம்மா. அடுத்தமுறை எல்லாம் நல்லதாக பரீட்சை முடிவுகள் கிடைக்கும்..." என்று மகளை சமாதானப்படுத்துவதில் முனைந்தாள்.

"இல்லையம்மா. எனக்கு மிக நன்றாக திறமையான சித்திதான் கிடைத்தது. ஆனால்..." கண்கள் சற்றே கலங்கியபடியே கூறினாள் ஷர்மிலி.

"பிறகு எதற்கு உந்த கண்ணீர் பள்ளிக்கூடத்தில்ல ஏதும் பிரச்சனையோ...?" என பதட்டமாகவே கேட்டாள்.

அம்மா, இன்டைக்கு மறியா என்ன கேட்டவ தெரியுமே? எனக்கு தாய்மொழி எழுத பேச தெரியுமே என்டு. அவ கேட்டவுடனே எனக்கு எப்படியிருந்தது தெரியுமே. என்ட feelings... அது எனக்கு சொல்லத் தெரியேல்ல ஏன் அம்மா எனக்கு சின்னவயசுலயிருந்து 'தமில் எளுத'
படிப்பிக்கேல்லை?" கவலையோடு கேட்டாள் ஷர்மிலி.

"ஷர்மி, இங்கே நாங்கள் வந்தபோது ஒரு தமிழ்பாடசாலைகளும் இருக்கேல்ல. இப்பவென்டால் ஒவ்வொரு இடத்திலேயும் தமிழ் பாடசாலையிருக்கு. நாங்கள் வந்த நேரம் அப்படி எங்கள் நிலைமையாக இருந்தது" என்றாள் அம்மா சற்று வருத்தமாக.

"அம்மா, அதை விடுங்கோ நீங்கள் 'தமில்தானே.' அந்தநேரம் நீங்களாவது எனக்கு 'தமில்' சொல்லித் தந்து இருக்கலாம் தானே..? இன்று என் சினேகிதி கேட்டபோது என் அடையாளத்தை தொலைத்து நின்ற அனுபவம் தான் எனக்கு ஏற்பட்டது. இனிமே நான் தமிழ் படிக்கப்போறன்..." என்று கூறியவள் இணையதளத்துக்குள் போய் தானாகவே தமிழ் படிப்பதற்கான பக்கங்களை தேடிக்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
அதேநேரம் தன் அடையாளத்தை தனக்கு உணர்த்திய மறியாவை மனதுக்குள் நினைத்து நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.

உணர்வுகள் செயல்களாக பரிணமிக்க... அதன் வெளிப்பாடுகள் நிஜங்களாக வெளிப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.


-யாவும் கற்பனை-</span>

நன்றி - ஷண்முகி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
யார் அந்த களத்திலை வாயிலை கை வச்சுகொண்டிருக்கிற சண்முகியோ??
; ;
Reply
#3
இது சிறுகதை அல்ல. நிசங்களின் தரிசனம். படிக்க தொடங்கியதுமே கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க தொடங்கின. கதை சிறந்தமுறையில் சொல்லப்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் நமக்கு நடந்ததை போன்ற ஒரு உணர்வு. கதை எழுதியவர் இப்படி இன்னும் எழுதிடல் வேண்டும் என வேண்டுகின்றேன்.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#4
shiyam Wrote:யார் அந்த களத்திலை வாயிலை கை வச்சுகொண்டிருக்கிற சண்முகியோ??

ஆம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
மிகவும் நன்றாக இருந்தது இன்னும் இப்படியான சீர் திருத்த கருப்பொருளோடமைந்த ஆக்கங்களை உருவாக்க வாழ்த்துக்கள்.
Reply
#6
புலத்தில் தமிழ் சந்ததி ±ýÈ ¾¨ÄôÀ¢ý ±ÉÐ º¢Ú¸¨¾¨Â À¢ÃÍâò¾ Á¾ÛìÌ «ýÒ ¸Äó¾ ¿ýÈ¢¸û...
Reply
#7
ம் இந்தக்கதையை சு}ரியனில் வாசித்தன் அக்கா அப்ப தில்லை நாயகி நீங்களா..? நல்ல வித்தியாசமான கதை ஒன்று.. அவசியமான ஒரு நல்ல கரு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
º¢Ú¸¨¾¨Â ¦À¡Ú¨ÁÔ¼ý Å¡º¢òÐ... ¸ÕòÐì¸Ùõ Å¡úòÐì¸Ùõ ¦¾Ã¢Å¢ò¾ Á¾ý, „¢Â¡õ, ÁÐÃý, źó¾ý ¬¸¢§Â¡ÕìÌ ÁÉõ ¿¢¨Èó¾ ¿ýÈ¢¸û...
Reply
#9
கதை நல்லாயிருக்கு அக்கா.
. .
.
Reply
#10
tamilini Wrote:ம் இந்தக்கதையை சு}ரியனில் வாசித்தன் அக்கா அப்ப தில்லை நாயகி நீங்களா..? நல்ல வித்தியாசமான கதை ஒன்று.. அவசியமான ஒரு நல்ல கரு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:roll:

இந்தக்கதையில வித்தியாசமாக ஒன்றுமில்ல. இதுதான் எமது சனத்தின் வெளினாட்டு மோகம். பெத்த தாயையும் தாய் மொழியையும் மறப்பவர்கள் அல்லது தெரியாதவர்களை எப்படி ஒரு இனமாக அடையாளப்படுத்துவதென்பதுதான் இங்கு சிலரிடையே நடக்கும் விவாதம்.
எனக்கும் தெரிஞ்சு ஒருவரின் மகன் ஆங்கிலத்தில படித்து (தமிழ் என்டால் என்னன்டு கேட்பார்கள்)டொக்டராகி வெளியிலவந்து எங்கேயோ இன்ரவியூவிற்கு போனவராம். எல்லாம் முடிஞ்சு கடைசியில நீங்கள் எந்த நாடு என்டு கேட்க இவரும் தான் இலங்கைத்தமிழன் என்டாராம் அப்ப அவங்கள் கேட்டாங்களாம் நீங்களும் தமிழ்ப் புலியோ என்டு(சும்மா பகிடிக்கு) இவர் உடனே சொன்னாராம் எனக்கு அவங்களைப்பற்றி தெரியாதென்டு. பின்பு தனக்கு தாய் மொழியும் தெரியாதென்றும் சொன்னாராம். அவர்களும் இவரைப்பார்த்துவிட்டு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு போகச்ச்சொன்னார்களாம்.ஆனால் இவருக்கு அது அவங்கட நக்கல் என்டது நல்லா விளங்கிட்டுது. இப்படியான கேசுகள் ஆயிரக்கணக்கில் கிடக்குது. ஆனால் என்னைப்பொறுத்தவரை இதில் தாய் தகப்பனைத்தவிர வேறு யாரையும் குறை கூற முடியாது(சில கேசுகளைத்தவிர).

நான் ஜெர்மனியில் ஒரு சிறுமியிடம் பேசும்போது தனக்கு தமிழ் தெரியாதென்டு விலாசமாச் சொன்னா(இவ்வளவிற்கும் ஒரு சிறுமி) பிறகு அச்சிறுமியின் தாயிடம் பேசும்போது அவர் சொன்னார் தன்ர பிள்ளை நல்லாத்தமிழ் பேசுவா என்டு. உன்மையில் அச் சிறுமி நல்லாத்தமிழி ல் பிறகு பேசினாள். இதற்கெல்லாம் காரணத்தை என்னென்டு சொல்லுறது.

சில பெற்றோர் தங்கட பிள்ளைகளுக்கு தமிழ் தெரியக்கூடாதென்பதில குறியா இருப்பார்கள். இதில் வருத்தப்படவேண்டியதென்னென்றால் அப்பெற்றொரும் ஒழுங்காக ஆங்கிலம் பேசமாட்டார்கள் (தயவு செய்து இதைப்பார்ப்பவர்கள் என்னை தப்பாக என்ன வேண்டாம் நான் யாரையும் தாக்குவதற்காக இதை எழுதவில்லை எனெனில் நானும் அரைகுறைதான்).இப்படியான கேசுகள கோயில்களில் அடிக்கடி காணக்கூடியதாகவிருக்கும். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதால் தாங்களும் தங்களை ஏமாற்றி தங்கட பிள்ளைகளையும் எமாற்றுகிறார்கள் என்பதை அறியாமலேயே காலத்தை முடித்துவிடுகிறார்கள்.
Reply
#11
paandiyan Wrote:
tamilini Wrote:ம் இந்தக்கதையை சு}ரியனில் வாசித்தன் அக்கா அப்ப தில்லை நாயகி நீங்களா..? நல்ல வித்தியாசமான கதை ஒன்று.. அவசியமான ஒரு நல்ல கரு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:roll:

இந்தக்கதையில வித்தியாசமாக ஒன்றுமில்ல. இதுதான் எமது சனத்தின் வெளினாட்டு மோகம். பெத்த தாயையும் தாய் மொழியையும் மறப்பவர்கள் அல்லது தெரியாதவர்களை எப்படி ஒரு இனமாக அடையாளப்படுத்துவதென்பதுதான் இங்கு சிலரிடையே நடக்கும் விவாதம்.

வழக்கமான கதைகளுக்கு மத்தியில் புலத்தமிழரின் வாழ்க்கை பின்ணணியில் சமுதாயத்திற்கு வேண்டியவற்றை சுட்டிகாட்டும் இந்த கதை வித்தியாசமான கதைதான், இவற்றை போல் நிறைய கதைகள் வெளிவ்ர வேண்டும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)