| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 362 online users. » 0 Member(s) | 359 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,282
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| உலகிலேயே உயரமான மனிதன் |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 07:15 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://news.bbc.co.uk/olmedia/575000/images/_575210_tallestman150.jpg' border='0' alt='user posted image'>
உலகிலேயே உயரமான மனிதனான நசீர் அகமது சமொரோ நின்றிருந்தார். அவர் ஒரு பாகிஸ்தானி. ஏதோ ரசிகர்ளை காண்கிறார் என்று நினைத்தால் மனிதர் கண்காட்சிக்காக நின்றிந்தார். அவர் கூட நின்று ஒரு போலராய்ட் படம் பிடித்துக் கொண்டால் 10 வெள்ளி கொடுக்க வேண்டும். பார்க்க பாவமாகத் தான் இருக்கிறது. எல்லோரும் தன் கைத்தொலைபேசியில் அவர் படத்தை அடக்கிக் கொள்ள, நான் என் கேமிராவை கையோடு எடுத்துச் சென்றிருந்ததால் அந்தக் கூட்டத்திலும் படம் பிடிக்க முயற்சி பண்ணினேன்.
பிளாஷ் போட்டு எடுக்க முடியாததால் அது அவ்வளவாக சரியாக வரவில்லை. மனிதர் ஒரு நடை விட்டாரே... அய்யோ மனிதனா ராட்சசனா என்ற பிரமிப்பு........ <img src='http://www.geocities.com/njvijay/images/highest_man.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| மூளையுள்ள தமிழன்.. |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 07:00 PM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
மூளையுள்ள தமிழன்..
புலவர் செல்வக் கலைவாணன்
நன்மாறன், நெடுஞ்செழியன், குமணன், பா. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மன்னர், மன்னன்
அன்பழகன், அறிவழகன், கண்ணன், வேலன், அழகரசன், இளங்கோவன், கீரன், என்றே
இன்சுவையாய் இவைபோல பெயர்கள் உண்டு இன்று ரமேஷ், சுரேஷ், கார்த்திக், ஆகின்றாரே
தென்னவனின் வழிவந்த என்னவர்க்குத் தமிழ்ப் பற்றை அவர் பெயரில் தழுவச் செய்வோம்
தன்மான உணர்வென்பார், கவரி மானின் தோன்றலாக மானுடத்தைப் பெற்றேன் என்பார்
பொன்நகையில் செம்புதன்னை கலத்தல் போல பூக்களிடை நச்சுமரம் விளைதல் போல
[b][size=18]என்.மாறன்
[b][size=18]எம்.எஸ்.கே. பொன்னன்என்றே
ஆங்கிலத்தில் கலப்படம்தான் செய்கின்றாரே
முன்னெழுத்தைத் தமிழெழுத்தால் எழுதச் செய்யும் மூளையுள்ள தமிழனுடன் நட்புக் கொள்வோம்.
புலவர் செல்வக் கலைவாணன்
|
|
|
| ... சந்தர்ப்பத்தை அரசு தவறவிட்டுள்ளது - தமிழ்செல்வன் |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 06:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஞாயிற்றுக்கிழமை 06.02.05 - 16:24 மணி தமிழீழம்
தமிழரின் மனங்களை வென்றெடுக்கும் சந்தர்ப்பத்தை அரசு தவறவிட்டுள்ளது - தமிழ்செல்வன்
கடற்கோள் அனர்த்தத்தையடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாதானத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன் இலங்கை அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையில் சமாதான முன்னெடுப்புகள் சாத்தியமாகும் நிலையில் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் கிளிநொச்சியில் உள்ள அரசியல் நடுவகப் பணியகத்தில் வைத்து கேசரி வார இதழுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார்.
"கடற்கோள் அனர்த்தத்தையடுத்து மனிதாபிமான ரீதியில் செயற்பட்டு தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க சந்தர்ப்பம் இருந்தும் அதனை இலங்கை அரசாங்கம் தவறவிட்டு விட்டது. பெரும் அழிவுக்குள்ளும் தமிழ் மக்கள் மீது அனுதாபம் காட்டவோ மனிதாபிமான ரீதியில் சிந்தித்துச் செயற்படவோ முன்வராத நிலையில் வெளிநாடுகளின் உதவிகளைக் கூட தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு வழங்க மறுத்ததுடன் வெறும் அடையாளமாகவேனும் இலங்கை அரசு தனது மனிதாபிமானத்தைக் காட்ட முன்வரவில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு நேரடியாக வெளிநாட்டு உதவிகள் சென்றடைவதைத் தடுத்து வருவதுடன் வெளிநாட்டு முக்கியஸ்தர்களின் வருகையையும் தடுத்து வருகின்றது. இதனை உணர்ந்து வெளிநாடுகள் தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு நேரடியாக உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மனிதாபிமான முன்னெடுப்புகளில் அரசு புலிகள் இணைந்து செயற்படும் பொதுக் கட்டமைப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில் "போர் அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியமர்வு புனர்நிர்மாணப் பணிகள் இயல்பு வாழ்வு குறித்து கவனம் செலுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நாம் தற்காலிக தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை முன்வைத்தோம் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது யதார்த்தமானது என்பதை தற்போதைய கடற்கோள் அனர்த்தம் உணர்த்தி நிற்கின்றது. எனவேதான் தற்போது கடற்கோள் அனர்த்தத்தை அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய மனிதாபிமானப் பணிகளுக்கான பொதுக்கட்டமைப்பை அமைப்பது பற்றிய யோசனைகளை நோர்வேக்கூடாக அரசுக்கு முன் வைத்தோம் இதனை இலங்கை அரசு இழுத்தடித்து வருகின்றது' என்று குறிப்பிட்டார்.
சிறுவர்கள் தொடர்பாக யுனிசெப்பின் அறிக்கை குறித்து கேட்ட பொழுது அது பக்கச் சார்பானது. எமது மனிதாபிமானப் பணிகளைப் பல வீனப்படுத்தும் நோக்கம் கொண்டது'' என்று யுனிசெப் மீது அவர் குற்றம் சாட்டினார்.
Pathivu
|
|
|
| கனவுகள் |
|
Posted by: Thaya Jibbrahn - 02-06-2005, 04:38 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>கனவுகள் </span>
கண்ணிமை மூடிக் கொண்டும்
கனவினை வளர்த்துக் கொண்டும்
வேதமாய் உந்தன் பேரை
மெல்லமாய்ப் பாடிக் கொண்டும்
சின்னதாய் மூச்சை விட்டு
தூக்கம் போல் கிடந்துன்னை
எண்ணியே களிக்க வேண்டும்
என்னைநான் மறக்க வேண்டும்.
வெண்பாவின் முச்சீர் விட்டு
உன் பாவைப் பாடுதற்கு
யாப்புக்குள் யாப்பு ஒன்றை
நான்பாடி வைக்க வேண்டும்.
சந்தத்தை விட்ட கலா
உந்தனின் பெயரைப் பாடி
காவியம் ஒன்று செய்வேன்
காத்திரு! காலம் வெல்லும்.
கண்டதும் உன்னை யெந்தன்
நெஞ்சது பதறும் ஏனோ?
கண்களைக் கண்கள் நோக்க
கால்களில் நடுக்கம் ஏனோ?
எத்தனை மேடை கண்டேன்
இப்படி யான தில்லை.
வித்தகி யுன்னால் என்றால்
விழியில்நீர் தருவாய்!. வேண்டாம்.
அழகெது என்றே என்னை
எவரேனும் கேட்டால் உன்னை
அளந்துநான் சொல்வேன் அந்த
அழகது இது தானென்று.
நல்லதோர் வீணை யொன்றைக்
கைகளில் தந்தால் போதும்
கலைமகள் என்றே யுன்னைக்
கைதொழக் கைகள் நீளும்.
கவிதைக்குப் பொய் தானழகு
என்பதால் சொன்னேன் பொய்யே
என்றுநீ எண்ணிக் கொண்டு
என்னையே வெறுக்க லாமோ?
நாளையுன் எதிரில் வந்து
நானெந்தன் காதல் சொன்னால்
நேரிலே ஓடி வந்தென்
நெற்றியில் முத்தம்போடு!
ஊமைகள் பேச்சைப் போலே
உணர்விலே காதல் செய்தோம்.
வேதமே வேண்டாம் போதும்
வேண்டுவ தொன்றைத் தானே.
என்னுயிர் வேரைப் பிய்த்து
உனக்கொரு தாலி செய்வேன்
மஞ்சளும் பொன்னும் வேண்டாம்
கழுத்துக்கு அவைகள் பாரம்.
|
|
|
| அந்த ஒரு நிமிடம் |
|
Posted by: Thaya Jibbrahn - 02-06-2005, 04:33 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
அந்த ஒரு நிமிடம்
வாலிபம்
எனக்குள் எந்த இரசாயனமாற்றங்களையும்
ஏற்படுத்தாத
எந்தன் பால்ய வயதில்
மட்டைகளைப் பொறுக்கிச் செய்த
பொம்மைத் துப்பாக்கியால்
காற்றை எதிர்த்து
சமர் செய்த பொழுதுகளில்
எனக்கு அத்துப்படியான
எண்கணிதங்களை
மீண்டும் மீண்டும் உருப்போட்டு
"கணக்கில் சுஸ்ரீரன்" பட்டத்தை
எனக்கு நானே
வழங்கிய வேளைகளில்
ஆசையாயிருந்த அக்காக்கும்
வீட்டிலிருந்த இளையவருக்கும்
அடித்து உதைத்துவிட்டு
நானே வீமன் என்று
கர்வத்தோடலைந்த தருணங்களில்
"ரியுஸ்ரீசன்" போவதாய் கூறிவிட்டு
பண்டாரக் குள வயல்வரப்புக்களில்
நண்பர்களுடன்
ரின்போல் விளையாடிய பொழுதுகளில்
அப்பாக்கு செய்த உதவிக்கு
கூலிப்பணம் பெற்று
உண்டியல் நிறைத்துää
""மம்மி"" ரொபி வாங்க
பெட்டிக் கடைக்கு ஓடிய நேரங்களில்
"அவன் கெட்டிக்காரன்"
எனக்கான நற்சாட்சிப் பத்திரத்தை
என் காதுபடுவதறியாது
மற்றவர்களிடம் அம்மா வழங்கிய பொழுதுகளில்
பின்னாளில்
""முறிந்த சிறகு"" படித்துவிட்டு
ஜிப்ரானின் சோகம் தாங்கி
தனிமையில் கரைந்த இரவுகளில்
நான் பெற்ற
அந்த சந்தோஸங்களையெல்லாம்
உன்னோடு பேசிய
அந்த ஒரு நிமிடம்
தந்துவிட்டு கரைந்ததடி
-தயா ஜிப்ரான் -
தலைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது ____ யாழினி
|
|
|
| desam |
|
Posted by: விது - 02-06-2005, 03:51 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
கேட்டதில் பிடித்தது
உன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா.....
சொந்த வீடுனை வாவென்று
அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா...
அயல்நாடுந்தன் வீடில்லை
விடுதியடா தமிழா
வானம்மெங்கும் பறந்தாலும்
பறவையென்றும் தன் கூட்டில்
உலகம்மெங்கும் வாழ்ந்தாலும்
தமிழனென்றும் தாய்நாட்டில்
சந்தர்பங்கள் வாய்த்தாலும்
அங்கு செல்வமரம் காய்த்தாலும்
புல்மரத்தின் கூவல் உந்தன்
செவியில் விழாதா
கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழைக்கிறது
கண்ணாழூச்சி ஆட்டம் அழைக்க
சின்ன பட்டம் பூச்சி கூட்டம் அழைக்கும்
தென்னம் தோப்பு துறவுகள் உனை அழைக்க
கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீதான் தின்ற நிலாச்சேறுதான் அழைக்க
பால்பேல் உள்ள வென்னிலவில்
பார்தால் சில கறையிருக்கும்
மலர்போல் உள்ளதாய்மன்னில்
மாறா சில வலியிகுக்கும்
கண்ணீர் துடைக்க வேண்டும்
உந்தன் கைகள்
அதில் பிறக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்புத்தாயின் மடி உனை அழைக்குதடா
தமிழா…
உன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா.....
|
|
|
| உயிர் வாழ்தலே ஒரு சாதனையாய் |
|
Posted by: Mathan - 02-06-2005, 03:44 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
யுத்த பூமியிலிருந்து...
உம்போல் கவலை
எமக்கில்லை
எம்மேல் உமக்கு
ஏன் பரிதாபம்?
பொழுது விடிந்து
நீங்கள் எழுமுன்பே
விழித்து விடுகின்றன
உங்கள் கவலைகள்
காலை தேநீருக்கு
இலை உள்ளதா?
பால்காரனுக்கு பாக்கி
பால் வருமா?
வாங்கிய கடன்
இன்று நெருக்குமோ!
கொடுத்த கடன்
இன்று கிடைக்குமா?
உம்போல் கவலை
எமக்கில்லை
எம்மேல் உமக்கு
ஏன் பரிதாபம்?
கிழிந்த சட்டையை தைக்க
அறுந்த செருப்பை மாற்ற
இன்னும் இன்னம்....
கடற்கரை, பூங்கா, திரைப்படமென்று
நிதி அனுமதித்த
சில சந்தோசங்கள் தாண்டி
மறு நாள், மறு வாரம்,
மறு மாதம், மறு வருடம்
மறு பிறவி வரை தொடரும்
எண்ண முடியாக் கவலைகள்
உம்போல் கவலை
எமக்கில்லை
எம்மேல் உமக்கு
ஏன் பரிதாபம்?
<b>எமக்கு இருப்பது
ஒரே எண்ணம்
நாளை விடிகையில்
யார் யார் விழிப்போம்
விழித்ததில் இரவில்
யார் யார் இருப்போம்?</b>
குமுதம் யாழ்மணம்
|
|
|
| சினேகா |
|
Posted by: Mathan - 02-06-2005, 01:16 PM - Forum: சினிமா
- Replies (170)
|
 |
காதல், கணவர் - சினேகா 'ஜில்' விளக்கம்
<img src='http://www.kathalnet.com/graphics/Sneha/0000284-Sneha.jpg' border='0' alt='user posted image'>
"என்னோட பலம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். சிரிப்புதான் என் பலம். பலவீனம் கோபம்" முதலிலேயே தனது பிளஸ், மைனஸ்களை சினேகா சொல்லிவிடுவதால் எதிராளி உஷாராக வசதி.
சினேகாவுக்கு பிடித்த நடிகர்கள்... ஸாரி, இந்த லிஸ்டில் யங் ஹீரோக்களுக்கு நோ வேகன்சி! சிவாஜி, எம்.ஜி.ஆர்., அமிதாப், கமல், ரஜினி என மூத்த நடிகர்களால் மட்டுமே இந்த சிரிப்பழகியின் இதயத்தில் இடம்பிடிக்க முடிந்திருக்கிறது. நடிகைகளில் சாவித்ரி. சரோஜாதேவியும், கே.ஆர். விஜயாவும் அழகான நடிகை என சர்ட்டிபிகெட் தந்ததை பெருமையாக நினைக்கிறார்.
மற்ற நடிகைகளைப் போல், என்னை ஜாக்கிசான் கூப்டாக, அமெரிக்காவில் அர்னால்டு கூப்டாக என்று கதைவிடும் ரகமல்ல சினேகா. "குடும்பப்பாங்கான கேரக்டர்களுக்குதான் நான் சரி. இந்திக்குப் போனால் 'வேறுமாதிரி' நடிக்க வேண்டும். ஸோ, என்னால் அங்கு பிரகாசிக்க முடியாது" என்று உண்மையை ஒப்புக்கொள்ளும் தைரியம் சினேகாவிடம் இருக்கிறது.
கிடைக்கிற சம்பளத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதிலும் இவர் கில்லாடி. 'விரும்புகிறேன்' படத்திலிருந்து 'சின்னா'வுக்கு வாங்கிய அட்வான்ஸ் வரை சேர்த்து, சென்னையில் டப்பிங் ரிக்கார்டிங் ஸ்டுடியோ கட்டி வருகிறார். இதை நிர்வகிக்கப் போவது சினேகாவின் அண்ணன்.
பேசுனது போதும், காதல் மேட்டருக்கு வா என்று நீங்கள் கூச்சல் போடுவது கேட்கிறது. இது போன்ற சென்ஸிடிவ் விஷயங்களை நாம் சொல்வது சுவாரஸ்யமல்ல. சினேகாவின் 'ஹஸ்கி' வாய்சை நினைத்தபடியே படியுங்கள். முதலில் காதல்; "என்னைப் பொறுத்தவரை காதல் என்பது சாதாரண உணர்ச்சிதான். அப்படி ஒரு உணர்ச்சி எனக்கு இதுவரை யார் மீதும் வரவில்லை" - அதாவது சினேகாவின் இதயம் Tolet போர்டுடன் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ட்ரை பண்ணலாம்.
அடுத்து கணவர்; "எனக்கு 23 வயதுதான் ஆகிறது. 25 படங்களில்தான் நடித்திருக்கிறேன். அதனால் எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. எனக்கு கணவராக வருபவர் அழகானவராகவும்,'ஜென்டில்மேன்' ஆகவும், என்னை புரிந்துக்கொண்டு என்மீது அக்கறை செலுத்துபவராகவும் இருக்கவேண்டும்."
சினேகாவின் ஆசையை தெரிவித்துவிட்டோம். அப்ளிகேஷன் போடுகிறவர்கள் போடலாம்!
Cine South
|
|
|
| த.பு.கவிடம் கணக்கு கேட்டு மூக்குடைபட்ட...... |
|
Posted by: வியாசன் - 02-06-2005, 11:29 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (1)
|
 |
புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்க ஜே.வி.பி.க்கு எவ்வித அருகதையுமில்லை|: ஜே.வி.பி. தமிழ் எம்.பி.க்கு ரவிராஜ் பதில்
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 06 பெப்ரவரி 2005ää 9:17 ஈழம் ஸ
'வடக்கு கிழக்குப் பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ää முஸ்லிம் மக்களின் புனர்வாழ்வுக்கான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்பதற்கு ஜே.வி.பியினருக்கு எந்த அருகதையும் இல்லை" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் தனியார் வானொலி நிகழ்ச்சியின் விவாதமொன்றில் கலந்து கொண்ட ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரனின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கடுமையாகக் கூறினார்.
கடந்த சனிக்கிழமை (05.02.05) நடைபெற்ற இந்த விவாதத்தில் சுனாமிக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டது. இதில் கருத்து வெளியிட்ட ரவிராஜ்ää
'தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்பதற்கு ஜே.வி.பியினருக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனெனில் அவர்கள் வேறுபல கணக்குகள் காட்ட வேண்டியிருக்கிறது. அதனை இறுதியாக சவால்களை உங்களுக்கு முன்வைக்க விரும்புகின்றேன்" எனத் தெரிவித்தார்.
'தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நேற்று இன்றல்ல கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மத்தியில் பணிபுரிந்து வந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கு சிங்கள அரசுகள்ää சிங்கள பேரினவாதிகள் பனடோல் வில்லைகளைக் கூட அனுப்பாத நிலையிலேயேää தமிழ் மக்கள் வாடி வதங்கிய அந்த நேரத்திலேயே அவர்களைப் பாதுகாத்தவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகம்தான்." எனவும் ரவிராஜ் குறிப்பிட்டார்.
இச்சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டு 'அன்று பொருளாதாரத் தடை விதித்தவர்கள் அன்றைய ஐ.தே.க. அரசாங்கம்" என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கூறியபோதுää
ரவிராஜ் அதற்கும் கடுமையாகப் பதிலளித்தார். 'தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஐக்கிய தேசியக் கட்சியும் சரி சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சரி ஜே.வி.பியும் ஒன்றுதான். நீங்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நாம் யாருக்கும் அடிபணிந்தவர்கள் அல்ல என்பதனையும் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாம் யாரிடமும் கையேந்திப் பிழைப்பவர்கள் அல்ல. நீங்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய இனவாத மட்டைகள். அவர்களுக்கு நாம் சரியான பாடத்தை படிப்பிப்போம்" என ரவிராஜ் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:
'இன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைப் பற்றி பேசுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்கிறீர்கள். இந்நாட்டு மக்கள் உங்களிடம் சில கணக்குகள் கேட்க விரும்புகிறார்கள். முதன் முதலாக இந்நாட்டில் ஆயுதத்தை ஏந்திப் போராடியவர்கள் நீங்கள். 71ம் ஆண்டு சொந்த மக்களையும்ää அரச படைகளையும் கொன்று குவித்தவர்கள் நீங்கள். 88ää 89ää 90ம் ஆண்டு காலப்பகுதியில் துண்டுப் பேப்பரை அனுப்பி இந்திய பருப்பு சாப்பிட்டவர்களை கொன்று குவித்தவர்கள் நீங்கள்.
உங்களை கேட்க விரும்புவது இதுதான். இன்று நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பார்த்து ஏந்திய ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இன்று வரையில் நீங்கள் வைத்திருந்த ஆயுதங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைத்திருக்கின்றீர்களா? உங்களிடம் இருந்த ஆயுதங்களின் தரங்கள்ää உங்களிடமிருந்து ஆயுதங்களின் பட்டியல்களை இன்றுவரை வெளியிட்டிருக்கின்றீர்களா? உங்களால் கொள்ளையிடப்பட்ட வங்கிகள் எவ்வளவு? அங்கே எவ்வளவு தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டது? எவ்வளவு கிலோ தங்கம் கொள்ளையிடப்பட்டது? அப்பாவி மக்கள் அடகுவைத்த நகைகள் கொள்ளையடித்த விபரத்தை வெளியிட்டிருக்கின்றீர்களா?
உங்களால் கொல்லப்பட்ட அரசியல்வாதிகளுடைய பெயர்களை நீங்கள் வெளியிட்டிருக்கின்றீர்களா? ஏன் நீங்கள் இன்று சந்திரிகா அம்மையாரின் சீலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். அவரின் கணவரைக் கொன்றவர்கள் கூட நீங்கள்தான். உங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் பட்டியலை முதலில் வெளியிடுங்கள்.
கொழும்பு மாவட்ட பிரதி மேயர் அசாத் அலி கூறியது போன்றுää ஒவ்வொருவரின் வீடு வீடாகச் சென்று நீங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய கட்சி இன்றுவரை இத்தகைய தகவல்களை வெயிடவில்லை. ஆகவே நீங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கணக்கு கேட்காதீர்கள்."
இவ்வாறு ரவிராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாதத்திலிருந்து சுடப்பட்டது நன்றி தமிழ்நாதம்
|
|
|
|