![]() |
|
உயிர் வாழ்தலே ஒரு சாதனையாய் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உயிர் வாழ்தலே ஒரு சாதனையாய் (/showthread.php?tid=5406) |
உயிர் வாழ்தலே ஒரு சாதனையாய் - Mathan - 02-06-2005 யுத்த பூமியிலிருந்து... உம்போல் கவலை எமக்கில்லை எம்மேல் உமக்கு ஏன் பரிதாபம்? பொழுது விடிந்து நீங்கள் எழுமுன்பே விழித்து விடுகின்றன உங்கள் கவலைகள் காலை தேநீருக்கு இலை உள்ளதா? பால்காரனுக்கு பாக்கி பால் வருமா? வாங்கிய கடன் இன்று நெருக்குமோ! கொடுத்த கடன் இன்று கிடைக்குமா? உம்போல் கவலை எமக்கில்லை எம்மேல் உமக்கு ஏன் பரிதாபம்? கிழிந்த சட்டையை தைக்க அறுந்த செருப்பை மாற்ற இன்னும் இன்னம்.... கடற்கரை, பூங்கா, திரைப்படமென்று நிதி அனுமதித்த சில சந்தோசங்கள் தாண்டி மறு நாள், மறு வாரம், மறு மாதம், மறு வருடம் மறு பிறவி வரை தொடரும் எண்ண முடியாக் கவலைகள் உம்போல் கவலை எமக்கில்லை எம்மேல் உமக்கு ஏன் பரிதாபம்? <b>எமக்கு இருப்பது ஒரே எண்ணம் நாளை விடிகையில் யார் யார் விழிப்போம் விழித்ததில் இரவில் யார் யார் இருப்போம்?</b> குமுதம் யாழ்மணம் |