02-06-2005, 06:47 PM
ஞாயிற்றுக்கிழமை 06.02.05 - 16:24 மணி தமிழீழம்
தமிழரின் மனங்களை வென்றெடுக்கும் சந்தர்ப்பத்தை அரசு தவறவிட்டுள்ளது - தமிழ்செல்வன்
கடற்கோள் அனர்த்தத்தையடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாதானத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன் இலங்கை அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையில் சமாதான முன்னெடுப்புகள் சாத்தியமாகும் நிலையில் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் கிளிநொச்சியில் உள்ள அரசியல் நடுவகப் பணியகத்தில் வைத்து கேசரி வார இதழுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார்.
"கடற்கோள் அனர்த்தத்தையடுத்து மனிதாபிமான ரீதியில் செயற்பட்டு தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க சந்தர்ப்பம் இருந்தும் அதனை இலங்கை அரசாங்கம் தவறவிட்டு விட்டது. பெரும் அழிவுக்குள்ளும் தமிழ் மக்கள் மீது அனுதாபம் காட்டவோ மனிதாபிமான ரீதியில் சிந்தித்துச் செயற்படவோ முன்வராத நிலையில் வெளிநாடுகளின் உதவிகளைக் கூட தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு வழங்க மறுத்ததுடன் வெறும் அடையாளமாகவேனும் இலங்கை அரசு தனது மனிதாபிமானத்தைக் காட்ட முன்வரவில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு நேரடியாக வெளிநாட்டு உதவிகள் சென்றடைவதைத் தடுத்து வருவதுடன் வெளிநாட்டு முக்கியஸ்தர்களின் வருகையையும் தடுத்து வருகின்றது. இதனை உணர்ந்து வெளிநாடுகள் தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு நேரடியாக உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மனிதாபிமான முன்னெடுப்புகளில் அரசு புலிகள் இணைந்து செயற்படும் பொதுக் கட்டமைப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில் "போர் அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியமர்வு புனர்நிர்மாணப் பணிகள் இயல்பு வாழ்வு குறித்து கவனம் செலுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நாம் தற்காலிக தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை முன்வைத்தோம் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது யதார்த்தமானது என்பதை தற்போதைய கடற்கோள் அனர்த்தம் உணர்த்தி நிற்கின்றது. எனவேதான் தற்போது கடற்கோள் அனர்த்தத்தை அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய மனிதாபிமானப் பணிகளுக்கான பொதுக்கட்டமைப்பை அமைப்பது பற்றிய யோசனைகளை நோர்வேக்கூடாக அரசுக்கு முன் வைத்தோம் இதனை இலங்கை அரசு இழுத்தடித்து வருகின்றது' என்று குறிப்பிட்டார்.
சிறுவர்கள் தொடர்பாக யுனிசெப்பின் அறிக்கை குறித்து கேட்ட பொழுது அது பக்கச் சார்பானது. எமது மனிதாபிமானப் பணிகளைப் பல வீனப்படுத்தும் நோக்கம் கொண்டது'' என்று யுனிசெப் மீது அவர் குற்றம் சாட்டினார்.
Pathivu

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>