Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 242 online users.
» 0 Member(s) | 240 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,283
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  "உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து பாடுபடுவேன்"
Posted by: Vaanampaadi - 02-07-2005, 01:03 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

மனித சமுதாயத்துக்காக
"உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து பாடுபடுவேன்"
போப் ஆண்டவர் கூறுகிறார்


ரோம், பிப்.7-

"உடல் நலக் குறைவு ஏற்பட்ட போதிலும், மனித சமுதாயத்துக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் தொடர்ந்து பாடுபடுவேன்" என்று போப் ஆண்டவர் கூறினார்.

பிரார்த்தனை

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களின் மதகுரு வான 84 வயது போப் ஆண்ட வருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட் டது. இதற்காக அவர் ரோம் நகரில் உள்ள கெமிலி பாலி கிளினிக் ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார். அவர் குணம் அடைய வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர்.

ஆசி வழங்கினார்

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆனதால், வாராந்திர ஆசி பெறும் நிகழ்ச்சிக்காக கத் தோலிக்கர்கள் கூட்டம் கூட்ட மாக ஆஸ்பத்திரிக்குச் சென்ற னர். ஆஸ்பத்திரிக்கு வெளியே அவர்கள் கூடி இருந்தனர். ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணம் அடைந்த போப் ஆண்டவர் ஆஸ்பத்திரியில் இருந்தபடி ஆசி வழங்கினார்.

ஜன்னல் அருகே

ஜன்னல் அருகே நாற்காலியில் உட்கார்ந்தபடி, அவர் கத் தோலிக்கர்களுக்கு ஆசி வழங்கி னார். அவர் பேசியது வெளியே கேட்கவில்லை பிறகு அவர் சிலுவைக்குறி செய்தார். ஆசி உரையை அவரது உதவி யாளர் படித்தார்.

நன்றி

"நான் குணம் அடைவதற்காக பிரார்த்தனை செய்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உரையில் கூறி இருந்தார். "என் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும், நான் கிறிஸ்தவ மதத்துக்காகவும், மனித சமு தாயத்திற்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இந்த ஆஸ்பத்திரி யில் இருந்தபடி நான் உங்களு டன் பேசுகிறேன். இங்கு டாக்டர்களும், நர்சுகளும், மருத் துவ ஊழியர்களும் என்னை அன்புடன் கவனித்துக் கொண் டனர். அவர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் உலக முழுவதும் உள்ள என் சகோதரர்களுக்கும், சகோ தரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கருக்கலைப்புக்கு எதிர்ப்பு

கருக்கலைப்புக்கு எதிராகவும் தன் கருத்துக்களை இந்த உரை யில் போப் ஆண்டவர் கூறி இருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பிறகு நேற்று தான் முதன் முதலாக அவர் மக்களுக்கு காட்சி அளித்தார். ஆஸ்பத்திரிக்கு வெளியேயும் வாடிகன் நகரில் உள்ள புனித மீட்டர் சதுக்கத்திலும் டி.வி. Ùப்ட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் போப் ஆண்ட வர் ஆசி வழங்கிய காட்சி தெரிந்தது. இதைப் பார்த்து கிறிஸ்தவர்கள் உள்ளம் நெகிழ்ந் தனர். கண்களில் சந்தோஷ மின்னல்கள் பளீச்சிட்டன.

Dailythanthi

Print this item

  செல்போனில் கூறப்பட்ட தீர்ப்பு
Posted by: Vaanampaadi - 02-07-2005, 01:01 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

செல்போனில் கூறப்பட்ட தீர்ப்பு

உலகிலேயே முதல் முறையாக செல் போன் மூலம் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி இங்கிலாந்து நாட்டில் நடந்தது.

41 வயது அப்தாப் அகமது மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இப்ஸ்விச் என்ற இடத்தில் உள்ள வீட்டில் இருந்து, சபோக் என்ற இடத்தில் உள்ள கோர்ட்டுக்கு அகமது சென்றபோது போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இதனால் அவர் குறித்த நேரத்தில் கோர்ட்டுக்குச் செல்ல முடியவில்லை. இதை அவர் தன் வக்கீலுக்கு டெலிபோன் செய்து தெரி வித்தார். அதற்கு முன்பே வழக்கு விசாரணை தொடங்கிவிட்டது. நீதிபதி கரோலின் லட்லோ விசாரணையைத் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்தார்.

பிறகு சட்டப்புத்தகங்களை ஆராய்ந்த பிறகு டெலிபோன் மூலம் ஏன் தீர்ப்புக் கூறக்கூடாது என்று கேட்டார். அதன்பிறகு நீதிபதி கரோலின் லட்லோ கோர்ட்டு டெலிபோன் மூலம் அகமதுவின் செல்போனுக்கு `டயல்' செய்து தீர்ப்பு கூறினார்.

140 மணி நேரம் சமுக சேவை செய்யவேண்டும் என்று கூறியதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்பைக்கூறுவதற்கு முன்பு, ``டெலிபோனில் தீர்ப்புக் கூறப்போகிறேன்; உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லையே என்று நீதிபதி கேட்டார்.

Print this item

  குருவிகளுக்கு உதவி...!
Posted by: kuruvikal - 02-07-2005, 11:40 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (36)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40301000/jpg/_40301751_bluetit_pa_203.jpg' border='0' alt='user posted image'>

Blue tit எனும் இந்த அழகான குருவிகளுக்கு வாழிடம் மரப்பொந்துகளும் மற்றும் வீட்டுச் சூழலில் உள்ள பொந்துகளுமே...!

மரங்களை வெட்டி அழிப்பதாலும் வீடுகளைப் பழுதுபார்ப்பதாலும் இவை தமது கூடுகளை இழந்து அகதிகளாகித் தவிக்கின்றன...! இந்தக் குருவிகளுக்கு கூடுக்கட்டத் தெரியாது....எனவே அன்புள்ளங்களே இந்தக் குருவிகள் உங்கள் சூழலில் வாழ்வது கண்டால்...அவற்றிற்கு வசதியான ஒரு இடத்தில் கூடு அமைத்துக் கொடுங்கள்...! இவர்கள் எங்களைப் போல நல்லவர்கள்...உங்களுக்கு எந்தத் தொந்தரவும் தரமாட்டார்கள்...!

இக்குருவிகளுக்காக இம்மாதம் 14 (காதலர் தினம்) தொடங்கி 21 வரையான ஒரு வார காலத்துக்கும் பிரித்தானியாவில் கூடுகளைக் கட்டிக்கொடுக்குமாறு பொதுமக்கள் அன்பாக வேண்டப்பட்டுள்ளார்கள்...!

குருவிகள் நாமும் எங்கள் சகோதரத்துக்காக உங்களிடம் இந்த உதவியைச் செய்ய மண்றாடி நிற்கின்றோம்...!

http://news.bbc.co.uk/1/hi/uk/4240547.stm

Print this item

  சுனாமியால் உயிரிழந்தோருக்கான நினைவுதூபி வவுனியாவில்அமைப்பு
Posted by: Nitharsan - 02-07-2005, 08:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<img src='http://www.freewebs.com/niga/ninaivuthupi.JPG' border='0' alt='user posted image'>

Print this item

  மாம்பழ பால்கூழ்
Posted by: thamizh.nila - 02-07-2005, 03:58 AM - Forum: சமையல் - Replies (98)

மாம்பழ பால்கூழ் - mango milk shake

[பெயர் தவறெனில் மன்னிக்கவும்]

<img src='http://www.thezeal.com/cooking/Images/Beverages.jpg' border='0' alt='user posted image'>

பழுத்த மாம்பழம் - 1
பால் - 1 கப்
சீனி - 4 மே.க
கட்டிப்பால் - 1/2 கப்
நொறுக்கிய குளிர் தூள்கள் [ice] - 1/4 கப்

1. மாம்பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. குளிரி தூள்களைத்தவிர, மேற் கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும் [bled].
3. இப்பொழுது குவளைகளில் ஊற்றி, குளிர் தூள்களை சேர்த்து பரிமாறவும்.

Print this item

  காளான் சூப்
Posted by: thamizh.nila - 02-07-2005, 03:51 AM - Forum: சமையல் - Replies (7)

காளான் சூப்

காளான் - 1/4 கப் [சிறிஉஅ துண்டுகளாக வெட்டியது]
வெங்காயம் - 1 [சிறிய துண்டுகளாக நறுக்கியது]
கறுப்பு மிளகு - 1 தே.க
உள்ளி தூள் - 1/2 தே.க
உப்பு தேவைக்கேற்ப

1. ஒரு சட்டியில் காளான், வெங்காயம், உப்புடன், 2 கப் நீரை சேர்த்து அவியவிடவும்.

2.இன்னோர் பாத்திரத்தில் மிளகு, உள்ளி தூளுடன் அவித்த பொருட்களை சேர்த்து கலக்கவும்.

[தடிமனாக தேவை எனில் கொஞ்சம் சோள மா சேர்க்கலாம்]

Print this item

  கொத்தமல்லி சட்னி
Posted by: thamizh.nila - 02-07-2005, 03:41 AM - Forum: சமையல் - Replies (4)

கொத்தமல்லி சட்னி

கொத்தமல்லி இலை - 2 கப்
பச்சை மிளகாய் - 1
தேசிக்காய் புளி - 1- 2 தே.க
உப்பு - தேவைக்கேற்ப

1.மேல் கூறிய அனைத்தயும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைக்கவும்.

வசி அண்ணா இது தனே நீங்கள் கேட்டது?

Print this item

  இப்படியா தமிழர் உடுத்துவார்கள் !!
Posted by: Jude - 02-07-2005, 01:07 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (35)

தமிழரல்லாத பெண்ணொருவர், தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய சேலை படு ஆபாசமாக இருப்பதாக சொல்கிறார். காரணம் இடுப்பு தெரிகிறதாம். தான் ஒரு போதும் இந்த ஆபாசமான ஆடையை அணியமாட்டேன் என்கிறார். அதனிலும் மோசம் தமிழ் ஆண்கள் கோவில்களில் மேல் சட்டையில்லாமல் படு ஆபாசமாக வெட்கமே இல்லாமல் பெண்களுக்கு முன்னாலேயே நடமாடுகிறார்கள் எ;னறு சொல்லி, ஒரு முறைக்கு பிறகு கோவில் பக்கமே தலை காட்டுகிறாரில்லை.
தமிழர் பணபாடு பார்க்க விருமிபியவரை தமிழரின் விழாக்களுக்கு கூட்டிக்கொண்டு போய் இப்போது முகம் காட்டவே சங்கடப்படும் நிலை வந்துவிட்டது, என்ன செய்யலாம்?

Print this item

  ஒரு பெண் நிரூபரின் தலைவிதி,,,
Posted by: Vaanampaadi - 02-06-2005, 10:23 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (27)

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20050206/mdf847883.jpg' border='0' alt='user posted image'>
ஈராக்கில் உள்ள ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, ஒரு இத்தாலிய பத்திரிகை பெண் நிரூபரை நேற்று முந்தினம் கடத்தியுள்ளார்கள்....அவளை நாளை கொலை செய்யப்போவதாக காலக்கெடு விதித்துள்ளார்கள்......

<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/dn/reuters5.gif' border='0' alt='user posted image'>
An Islamist militant group in Iraq (news - web sites) claimed responsibility for kidnapping an Italian journalist and threatened to kill her by February 7, 2005, following an earlier kidnap claim, according to an Internet statement. An undated handout photo shows Italian journalist Giuliana Sgrena who was kidnapped in Baghdad on February 4, 2005 as she conducted interviews on the street, the Italian government said. (Reuters - Handout)


[b]<span style='font-size:30pt;line-height:100%'>யாராவது இவரின் விடுதலைக்காக குரல் கொடுப்பீர்களா?</span>
வானம்பாடி

Print this item

  கொதிக்கும் சாம்பாரில் விழுந்து சிறுமி பலி
Posted by: Vaanampaadi - 02-06-2005, 09:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

பிப்ரவரி 06, 2005

பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து சிறுமி பலி

சென்னை:

சென்னை அருகே சென்னீர்க்குப்பம் பகுதியில் பள்ளிக்கூட சத்துணவு அறையில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த 6 வயது சிறுமி இறந்தாள்.


அச் சிறுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவளது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அருகே உள்ள சென்னீர்க்குப்பம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் ஜான்சி ராணி (வயது 6) என்ற சிறுமி படித்து வந்தாள். கடந்த புதன்கிழமை பள்ளி சத்துணவு அறைக்குள் சென்ற ஜான்சி ராணி அங்கு சட்டியில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பாரில் விழுந்துவிட்டாள்.

இதில் உடல் முழுவதும் எரிந்து போன நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஜான்சி ராணி இறந்தாள்.

சிறுமியின் சாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா ஜான்சி ராணியின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டார்.

சாம்பாரை மூடி வைக்காமல், பணியில் அலட்சியமாக இருந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


தட்ஸ்டமிழ்

Print this item