![]() |
|
செல்போனில் கூறப்பட்ட தீர்ப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: செல்போனில் கூறப்பட்ட தீர்ப்பு (/showthread.php?tid=5380) |
செல்போனில் கூறப்பட்ட தீர்ப்பு - Vaanampaadi - 02-07-2005 செல்போனில் கூறப்பட்ட தீர்ப்பு உலகிலேயே முதல் முறையாக செல் போன் மூலம் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி இங்கிலாந்து நாட்டில் நடந்தது. 41 வயது அப்தாப் அகமது மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இப்ஸ்விச் என்ற இடத்தில் உள்ள வீட்டில் இருந்து, சபோக் என்ற இடத்தில் உள்ள கோர்ட்டுக்கு அகமது சென்றபோது போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இதனால் அவர் குறித்த நேரத்தில் கோர்ட்டுக்குச் செல்ல முடியவில்லை. இதை அவர் தன் வக்கீலுக்கு டெலிபோன் செய்து தெரி வித்தார். அதற்கு முன்பே வழக்கு விசாரணை தொடங்கிவிட்டது. நீதிபதி கரோலின் லட்லோ விசாரணையைத் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்தார். பிறகு சட்டப்புத்தகங்களை ஆராய்ந்த பிறகு டெலிபோன் மூலம் ஏன் தீர்ப்புக் கூறக்கூடாது என்று கேட்டார். அதன்பிறகு நீதிபதி கரோலின் லட்லோ கோர்ட்டு டெலிபோன் மூலம் அகமதுவின் செல்போனுக்கு `டயல்' செய்து தீர்ப்பு கூறினார். 140 மணி நேரம் சமுக சேவை செய்யவேண்டும் என்று கூறியதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்பைக்கூறுவதற்கு முன்பு, ``டெலிபோனில் தீர்ப்புக் கூறப்போகிறேன்; உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லையே என்று நீதிபதி கேட்டார். |