![]() |
|
"உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து பாடுபடுவேன்" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: "உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து பாடுபடுவேன்" (/showthread.php?tid=5379) |
"உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து பாடுபடுவேன்" - Vaanampaadi - 02-07-2005 மனித சமுதாயத்துக்காக "உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து பாடுபடுவேன்" போப் ஆண்டவர் கூறுகிறார் ரோம், பிப்.7- "உடல் நலக் குறைவு ஏற்பட்ட போதிலும், மனித சமுதாயத்துக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் தொடர்ந்து பாடுபடுவேன்" என்று போப் ஆண்டவர் கூறினார். பிரார்த்தனை உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களின் மதகுரு வான 84 வயது போப் ஆண்ட வருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட் டது. இதற்காக அவர் ரோம் நகரில் உள்ள கெமிலி பாலி கிளினிக் ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார். அவர் குணம் அடைய வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர். ஆசி வழங்கினார் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆனதால், வாராந்திர ஆசி பெறும் நிகழ்ச்சிக்காக கத் தோலிக்கர்கள் கூட்டம் கூட்ட மாக ஆஸ்பத்திரிக்குச் சென்ற னர். ஆஸ்பத்திரிக்கு வெளியே அவர்கள் கூடி இருந்தனர். ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணம் அடைந்த போப் ஆண்டவர் ஆஸ்பத்திரியில் இருந்தபடி ஆசி வழங்கினார். ஜன்னல் அருகே ஜன்னல் அருகே நாற்காலியில் உட்கார்ந்தபடி, அவர் கத் தோலிக்கர்களுக்கு ஆசி வழங்கி னார். அவர் பேசியது வெளியே கேட்கவில்லை பிறகு அவர் சிலுவைக்குறி செய்தார். ஆசி உரையை அவரது உதவி யாளர் படித்தார். நன்றி "நான் குணம் அடைவதற்காக பிரார்த்தனை செய்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உரையில் கூறி இருந்தார். "என் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும், நான் கிறிஸ்தவ மதத்துக்காகவும், மனித சமு தாயத்திற்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இந்த ஆஸ்பத்திரி யில் இருந்தபடி நான் உங்களு டன் பேசுகிறேன். இங்கு டாக்டர்களும், நர்சுகளும், மருத் துவ ஊழியர்களும் என்னை அன்புடன் கவனித்துக் கொண் டனர். அவர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் உலக முழுவதும் உள்ள என் சகோதரர்களுக்கும், சகோ தரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் குறிப்பிட்டு இருந்தார். கருக்கலைப்புக்கு எதிர்ப்பு கருக்கலைப்புக்கு எதிராகவும் தன் கருத்துக்களை இந்த உரை யில் போப் ஆண்டவர் கூறி இருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பிறகு நேற்று தான் முதன் முதலாக அவர் மக்களுக்கு காட்சி அளித்தார். ஆஸ்பத்திரிக்கு வெளியேயும் வாடிகன் நகரில் உள்ள புனித மீட்டர் சதுக்கத்திலும் டி.வி. Ùப்ட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் போப் ஆண்ட வர் ஆசி வழங்கிய காட்சி தெரிந்தது. இதைப் பார்த்து கிறிஸ்தவர்கள் உள்ளம் நெகிழ்ந் தனர். கண்களில் சந்தோஷ மின்னல்கள் பளீச்சிட்டன. Dailythanthi |