| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 242 online users. » 0 Member(s) | 240 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,283
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| பொது இடத்தில் காதலர்கள் முத்தம் கொடுத்தால் 10 ஆண்டு ஜெயில் |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 09:33 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (72)
|
 |
பொது இடத்தில் காதலர்கள் முத்தம் கொடுத்தால் 10 ஆண்டு ஜெயில்: இந்தோனேஷியாவில் புதிய சட்டம்
ஜகார்த்தா, பிப். 6-
இந்தோனேஷியாவில் நூற்றுக்கணக்கான குட்டித்தீவுகள் உள்ளன. உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவரும் இந்தோனேஷியா உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு.
ஆனாலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகி வரும் இந்தோனேஷியாவில் மேற்கத்திய நாடுகளின் நாகரீக மோகமும், பழக்க வழக்கங்களும் அதிகரித்து வருகிறது. அந்த நாட்டின் கலாச்சாரமே காணாமல் போய் விடுமோ என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வரும் காதலர்களும் புதுமண ஜோடிகளும் பொது இடத்தில் கட்டிப்பிடித்து `இச்' முத்தம் கொடுக்கிறார்கள். இதை பார்த்த இந்தோனேஷிய மக்களிடமும் இந்த பழக்கம் வந்து விட்டது.
பொது இடத்தில் பலர் முன்னிலையில் முத்தம் கொடுப்பதை சிலர் பார்த்து ரசித்தாலும் பலர் முகம் சுளிக்கிறார்கள்.
இந்த முத்த கலாச்சாரத்துக்கு தடை விதிக்க இந்தோனேஷிய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான தடைச்சட்டம் வருகிறது. இந்த தடைச்சட்டத்தின் வரைவு நகல் தயாரகி விட்டது. பாராளுமன்றத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தி அது நிறைவேற்றப்படும்.
இந்த சட்டத்தின்படி பொது இடத்தில் பலர் முன்னிலையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் ஜோடிகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும். அதுமட்டுமின்றி 33 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும். திருமணம் ஆன ஜோடிகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது.
காதல் ஜோடிகளுக்குத்தான் இந்த தடை சட்டம் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் ஆகாமலேயே கணவன்-மனைவி போல சேர்ந்து வாழும் ஜோடியினர் அங்கு ஏராளம் உள்ளனர். இதற்கும் அங்கு தடை சட்டம் கொண்டு வந்து ஒழுக்கத்தை நிலை நாட்டப் போகிறார்கள்.
பொது இடத்தில் முத்தம் கொடுக்க தடை விதிப்பதற்கு ஆதரவு கிடைத்துள்ள அதே நேரத்தில் சட்ட நிபுணர்கள் பலர் இது அடிப்படை உரிமைகளை பாதிக்கும் செயல் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மாலைமலர்
தொடர்வது BBC:
Indonesia plans new morality laws
Indonesia has the world's largest Muslim population
Adulterers, cohabiting unmarried couples and those who kiss in public could all become criminals if a new Indonesian penal code is approved.
The draft reportedly proposes harsh fines and prison terms for those who flout the rules - drawn up to replace those inherited from Dutch rule.
Many say the existing code is flawed and outdated, but some activists are deeply unhappy with the new proposals.
But they would bring Indonesia into line with many other Muslim states.
Indonesia has the world's largest Muslim population.
Kissing in public is a crime if the people around are not happy
Justice ministry official Abdul Gani Abdullah
Under the proposed draft, offenders caught kissing in the open could be jailed for up to 10 years and fined as much as 300 million rupiah ($33,000), reports the Jakarta Post.
Unmarried couples living together could be penalised with up to two years in jail and a maximum fine of 30 million rupiah.
It would also give police and officials the power to raid houses of all those they suspected of living together.
Justice ministry official Abdul Gani Abdullah said the law would only apply if others complained.
"Kissing in public is a crime if the people around are not happy and lodge a complaint. But if they think it's all right, then no action will be taken," he told the AFP news agency.
"The same goes with cohabitation. If neighbours think the presence of an unmarried couple living together is a nuisance, they can report to police."
Law expert and women's rights activist Nursyahbani Katjasungkana told the Jakarta Post the morality articles were excessive and infringed on the "rights of the body".
Legal expert Andi Hamzah asked: "What about tourists? Will we hunt them down too?"
The code is expected to be debated over a two-year period.
|
|
|
| சமையல் டிப்ஸ் |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 09:08 PM - Forum: சமையல்
- Replies (12)
|
 |
1. நிறையச் சாப்பிடுவார்கள் என்று நினைத்து சாதம் நிறைய வடித்துவிட்டேன். பிள்ளைகள் எண்ணியதுபோல சாப்பிடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சாதத்தை அப்படியே அரைத்து சிறிது கோதுமை மாவும், சிறிது ரவையும் சேர்த்து ஊறவைத்து அடுத்த நாள் வந்திருந்த என் மாமியாருக்கு தோசை செய்து போட்டேன். அப்போது ஊருக்குப் போனவர்தான் மாமியார், இன்னும் வரவேயில்லை. மாமியார் தொல்லையுள்ளவர்கள் இந்த தோசையைச் செய்து பார்க்கலாம்.
2. நிறைய செய்து வைத்திருந்த பஜ்ஜி மாவில் பல்லி விழுந்து விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது என் கணவர் தனது குடிகாரத் தோழர்களையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். குடித்துக் கொண்டே பஜ்ஜி போட்டு எடுத்துக் கொண்டு வா என்று ஒரே ரகளைதான் போங்கள், நான் வேறுவழியின்றி அந்த பஜ்ஜி மாவிலேயே பஜ்ஜி போட்டு கொடுத்தேன்.( பஜ்ஜியை என் கணவருக்கு மட்டும் கொடுக்கவில்லை ). சில மணிநேரங்களில் என் கணவரின் நண்பர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். விஷச்சாரயம் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் என் கணவர் அதன் பின்னர் குடிக்கவேயில்லை என்பதுதான் நல்ல விஷயம். உங்கள் வீட்டிலும் இது போன்று பஜ்ஜிமாவில் பல்லி விழுந்தால் இதைச் செய்து பாருங்கள்,
3. இட்லி நிறையச் சுட்டு மீந்து விட்டதா கவலைப்படவேண்டாம். அந்த இட்லியை மீண்டும் அரைத்து தோசை சுடலாம். அந்த தோசை கண்றாவியாக இருக்கிறது என்று யாரும் சாப்பிடாமல் மீந்து விட்டால் கவலையை விடுங்கள், அந்த தோசைகளையும் தோசை மாவையும் சேர்த்து அரைத்து கொஞ்சம் கறுவேப்பிலை, கொத்துமல்லி, வினிகர், கடலைமாவு, கொஞ்சம் சோயாஸாஸ், கொஞ்சம் பெருங்காயம் (பழைய மாவு நாற்றம் போவதற்காக), கொஞ்சம் பாதாம் பருப்பு, கொஞ்சம் குங்குமப்பூ, கொஞ்சம் ஏலக்காய், கொஞ்சம் ஜாதிக்காய், அரைக்கிலோ சர்க்கரை போட்டு அரைத்து நிறைய கோதுமைப்பால் ஊற்றி ஹல்வா கிண்டுங்கள். நிச்சயம் தின்றுவிடுவார்கள். என்ன போட்டாய் என்று யார் கேட்டாலும் சொல்லிவிடாதீர்கள்.
4. கத்தரிக்காய் ரசம். ஐந்து பேருக்கு தேவையான அளவுக்கு கத்தரிக்காய் சாம்பார் செய்யுங்கள். சாம்பார் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு சுடுதண்ணீர் ஊற்றுங்கள். நன்றாக கலக்குங்கள். இப்போது, எவ்வளவு தண்ணீர் ஊற்றினீர்களோ அவ்வளவு சாம்பாரை மேலாக எடுத்து இன்னொரு பாத்திரத்தில் ஊற்றுங்கள். இப்போது கத்தரிக்காய் சாம்பாரும் ரெடி, கத்தரிக்காய் ரசமும் ரெடி. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இதே வகையில் மாங்காய் ரசம், உருளைக்கிழங்கு ரசம், முருங்கக்காய் ரசம் அனைத்தும் செய்யலாம். என் கணவர் சாம்பார், ரசம் என்று சாப்பிட்டுவிட்டு, எப்படித்தான் இப்படி வீட்டுக்கு ஓடாய் உழைக்கிறாயோ என்று பாராட்டினார். நீங்களும் அவ்வாறு பாராட்டைப் பெறலாம்,
-வானம்பாடி-
|
|
|
| தமிழ்த்திரைப்பட உலகமும் கணிணி உலகமும் |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 09:00 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
தமிழ்த்திரைப்பட உலகமும் கணிணி உலகமும்
பில்லா - ஆள்விற்பவன் (பாடி ஷாப்பர்)
எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு பாடி ஷாப்பர்
வேலைக்காரன் - புரோகிராமர் (நம்மதான்)
எஜமான் - புரோஜக்ட் மேனேஜர்
கைதி கண்ணாயிரம் - TCS ப்ரோகிராமர்
அடிமைப்பெண் - பெண் TCS ப்ரோகிராமர்
ஒரு கைதியின் டயரி - TCS புரோகிராமர் ரெசூமே
சவால் - TCS பாண்டு
கோபுர வாசலிலே - அமெரிக்க தூதரக நுழைவாயில்
வாழ்வே மாயம் - கிடைக்காத H1 விசா
மௌனராகம் - விசா கிடக்காமல் போனதும் வீட்டில் பாடுவது
உன்னால் முடியும் தம்பி - மீண்டும் விசா அப்ளிகேஷன் போட தேவையான ஊக்கம்
மறுபடியும் - மீண்டும் H1 க்கு முயற்சி
24 மணி நேரம் - அமெரிக்க தூதரகத்தில் விசா ஒப்பம் வாங்க காத்திருக்கும் நேரம்
கடலோரக் கவிதைகள் - விசா வாங்கியபின்னர் மெரினா பீச்சில் பாடுவது
அந்த 7 நாட்கள் - H1 விசா வாங்கியதற்கும் அமெரிக்கவில் இறங்குவதற்கும் இடையே உள்ள கால இடைவெளி
சவாலுக்கு சவால் - TCS பாண்டை உடைப்பது
மின்சாரக் கனவு - கிரீன் கார்ட்(பச்சை அட்டை)
சகலகலா வல்லவன் - பில் கேட்ஸ்
நீரும் நெருப்பும் - மைக்ரோசாப்ட் ஐபிஎம்
நேருக்கு நேர் - நெட்ஸ்கேப்பும் எக்ஸ்புலோரரும்
பார்த்தால் பசி தீரும் - மின்வலையில் நேர்வது
பட்டிக்காடா பட்டணமா? - லெகஸி ஸிஸ்டமா, கிளையண்ட் சர்வரா?
புன்னகை மன்னன் - நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாத புரோஜக்ட் மேனேஜர்
டிக் டிக் டிக் - கிளையண்ட் அலுவலகத்தில் முதல் நாள்
ஓட்டம் - முதல் பாடி ஷாப்பரை விட்டு ஓடுவது
அலைகள் ஓய்வதில்லை - கம்பெனி விட்டு கம்பெனி ஓடிக்கொண்டே இருப்பது
நல்லவனுக்கு நல்லவன் - பெஞ்சில் இருக்கும் போதும் முழு சம்பளம் கொடுக்கும் கம்பெனி
அடிமைச் சங்கிலி - பாண்ட்
பசி - பெஞ்சில் சம்பளம் இல்லாமல்
வைதேகி காத்திருந்தால் - பெஞ்ச் முடிய காத்திருப்பது
படிக்காத மேதை - y2k புரோகிராமர்
சர்வர் சுந்தரம் - y2k வேலை முடிந்ததும்
பயணங்கள் முடிவதில்லை - புரோகிராமில் உள்ள தவறுகளை களைவது
திருடா திருடா - அடுத்தவன் புரோகிராமை காப்பி அடிப்பது
எங்கேயோ கேட்ட குரல் - ஒரே ஒரு தடவை ஓடிய புரோகிராம்
ஆயிரத்தில் ஒருவன் - அஸெம்பிளி புரோகிராமர்
|
|
|
| அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 08:54 PM - Forum: நகைச்சுவை
- No Replies
|
 |
அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை
இட்லி என்னடா தோசை என்னடா அவசரமான உலகத்திலே
மெக்டானல்ட்ஸ் போகிறார் வாங்கித் தின்கிறார் ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே
ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே
தாயும் தந்தையும் ராவும் பகலுமாய் ஓடி உழைக்கிறார் பாரடா
இவர் பெற்ற பிள்ளைகள் தனித்து வீட்டிலே இருக்கும் சேதியும் கேளடா
இருக்கும் சேதியும் கேளடா
தனித்து வீட்டிலே இருக்கும் பிள்ளைகள் என்ன செய்கிறார் பாரடா
அவர் நிண்ட்டிண்டோவிலும் இண்டெர்நெட்டிலும் பொழுதைக் கழிக்கிறார் பாராடா
பொழுதைக் கழிக்கிறார் பாராடா
செல்வம் சேர்க்கவே இங்கு வந்ததாய் என்றும் சொல்கிறார் கேளடா
இவர் மார்ட்டுகேஜையும் காரு லோனையும் அடைப்பது எந்த நாளடா
அடைப்பது எந்த நாளடா
கொலஸ்டராலையும் கேலரீயையும் எண்ணிப் பார்க்கிறார் பாரடா
இவர் கருணைக் கிழங்கையும் முருங்கைக் காயையும் பார்த்து எத்தனை நாளடா
பார்த்து எத்தனை நாளடா
பத்து மைல்களோ நூறு மைல்களோ பார்ட்டி என்றதும் பாரடா
இவர் ஒட்டு மொத்தமாய் குடும்பத்தாருடன் ஓட்டிச் செல்கிறார் காரடா
காரோட்டிச் செல்கிறார் பாரடா
ஆண்டுக்கொரு முறை வீட்டு ஞாபகம் வந்து விட்டதும் பாரடா
இவர் மூட்டை முடிச்சுடன் இரண்டு வாரங்கள் இந்தியாவில் இருப்பாரடா
சொந்த ஊரில் இருப்பாரடா
பெற்ற தாயையும் சுற்றத்தாரையும் பிரிந்து வந்தவர் தானடா
இவர் பெற்ற பிள்ளைகள் பிரிந்து போகையில் வருத்தப் படுகிறார் ஏனடா
வருத்தப் படுகிறார் ஏனடா
குழந்தை வளர்ப்பிலே தமிழுக்கிடமின்றி ஆகிப் போனது ஏனடா
அட அமெரிக்காவிலே வாழும் தமிழரின் வாழ்க்கை முறை இது தானடா
வாழ்க்கை முறை இது தானடா
|
|
|
| லீப் வருடத்தில் எந்த மாதத்தில் இருபத்தி ஒன்பது நாட்கள்? |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 08:50 PM - Forum: நகைச்சுவை
- Replies (11)
|
 |
எத்தனை முறை படித்தாலும் தமிழர்களுக்கு அலுக்காத தமிழ் ஜோக்குகள்
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது
மாணவன் : தெரியாது சார்
ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்.
ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.
கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க
நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு?
சோ, லல்லு பிரசாத் யாதவ், சுப்ரமணிய சாமி இவர்களை சுனாமி கொண்டு போனால் யார் காப்பற்றபடுவார்கள்.
இந்த நாடு காப்பாற்றப்படும்
ஸ்பின் பௌலருக்கு பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பார்?
பால திருப்புற சுந்தரி
கடவுள் காளிக்கும் குத்துச் சண்டைக்கும் என்ன ஒற்றுமை?
நாக் அவுட்
எல்.ஐ.ஸி மாடியிலிருந்து லட்டைப் போட்டால் என்னவாகும்?
பூந்தியாகும்.
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளையை கொடைக்கானலா வளர்க்கும்.
பிரசவ ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
கர்ப்பமா போவணும்
லீப் வருடத்தில் எந்த மாதத்தில் இருபத்தி ஒன்பது நாட்கள்?
எல்லா மாதத்திலும்
(30 - 31 நாட்களுக்குள் 29 நாட்களும் அடக்கம் )
(இந்த கேள்வி அமிதாப்பச்சன் வழங்கிய "கௌன் பனேகா க்ரோர்பதி" (யார் ஆவார் கோடீஸ்வரர்?)ல் கேட்கப்பட்டது. இது போட்டியாளருக்கு முதல் கேள்வியாக வந்தது, (போட்டியாளர் அளித்த பதில் ஒன்று), அமிதாப்பே கொஞ்சம் சீரியஸ் ஆகி பிப்ரவரி மாதத்தில் மட்டும்தானே 29 நாட்கள் வரும், என்றார் குழப்பத்தினூடே.) பாவம் போட்டியாளர்
கேள்வி : உலகத்திலேயே பெரிய மிருகம் எது?
பதில் : யானை
கேள்வி :அதை விட பெரிய மிருகம்
பதில் : இன்னொரு யானை
|
|
|
| உரத்த சிந்தனைகள் |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 08:27 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (4)
|
 |
உரத்த சிந்தனைகள்
அறிவியலில் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு செங்கல் செங்கலாக அடுக்குவதில் வருகிறது. திடீரென தேவதைக்கதை மாளிகைகள் இதில் தோன்றுவதில்லை - ஜே. எஸ். ஹக்ஸ்லி
முக்கியமான விஷயம், கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருப்பது - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வில்லியம் ஜேம்ஸ் "நம்புவதற்கான மன உறுதி"யை பிரச்சாரம் செய்தார். என் பங்குக்கு நான் "சந்தேகப்படுவதற்கான மன உறுதியை" பிரச்சாரம் செய்யவேண்டும். தேவையான விஷயம் நம்புவது அல்ல. கண்டுபிடிப்பது. இரண்டும் நேர்மாறான விஷயங்கள் - பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
நாம் மற்றவர்களைப் போல வரலாற்றில் சிக்கித்தவிக்கவில்லை என்று நினைத்துக்கொள்வது 20ஆம் நூற்றாண்டு வியாதி - புரூஸ் ஸ்டெர்லிங்
உன் 70 வருடங்களின் மொத்த நாட்கள் 26,250. இந்த அத்தனை நாட்களில், ஒரு நாளும் இன்னொரு நாளைப்போல இருக்கவில்லை. இதிலிருந்து, கிரியோஸஸ், மனிதன் முழுமையாக சந்தர்ப்பத்தின் மிருகம் என்பதை நீ பார்க்கலாம். - வரலாறுகள் என்ற புத்தகத்தில் ஹெரோடோடஸ்
நம்மிடம் மற்றவர்களை வெறுக்க போதுமான மதங்கள் இருக்கின்றன. ஆனால் மற்றவர்களை அன்பு செய்ய போதுமான மதங்கள்தான் இல்லை - ஜோனதன் ஸ்விஃப்ட்
கால்பந்தாட்டம் என்பது வாழ்க்கையைப் போல. இதில் கடின உழைப்பு, தியாகம், விடாமுயற்சி, போராட்டகுணம், சுயநலமின்மை, மேலதிகாரிகளுக்கு மரியாதை என்ற அனைத்து விலைகளையும் கொடுத்துத்தான் நம்மால் உருப்படியான எதையும் அடையமுடியும் என்று நமக்கு கற்றுதருகிறது - வின்ஸ் லொம்பார்டி
இங்கே வெறுமே உயிர்வாழ நீங்கள் இருக்கவில்லை. உலகத்தை மேலும் வளமையாகவும், நல்ல தூரதரிசனத்தோடும், நம்பிக்கை சாதனை போன்றவற்றின் உணர்ச்சியோடும் வாழவைக்கவே இருக்கிறீர்கள். இந்த உலகத்தை மேலும் வளப்படுத்தவே இங்கே இருக்கிறீர்கள். இந்த வேலையை மறந்துவிட்டீர்களென்றால் நீங்கள் உங்களையே ஏழையாக்கிக் கொள்கிறீர்கள் - உட்ரூ வில்ஸன்
ஒன்றுமில்லாததைவிட நிஜமானது வேறு ஒன்றுமில்லை - டெமாக்ரிடஸ்
கிரிஸ்துவின் ராஜ்யத்தை விட அதிக ரத்தம் சிந்திய ராஜ்யம் வேறெதுவுமில்லை - மோன்டிஸ்க்
ம
மனிதர்கள் ஏன் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதன் காரணம், அவர்கள் வானத்திலும் பூமியிலும் நடக்கும் வினோதமான காரணமற்ற விஷயங்களை பார்த்து அவைகளை கடவுளின் எண்ணத்தால் அவை நடக்கின்றன என்று நினைப்பதால்தன் - அகிலத்தின் இயற்கை என்ற புத்தகத்தில் லுக்ரேஷியஸ்
உலகம் அமைதியற்றுப் பிறந்தது, அன்றிலிருந்து எப்போதும் அசைவன்றி நின்றதில்லை - ரூஸோ
ஆயிரம் மைல் பிரயாணம் ஒரு சின்ன அடியிலிருந்தே ஆரம்பிக்கிறது - லாவோ-ட்சு
ஏதாவது ஒரு பேரழிவு நடந்து, எல்லா அறிவியல் அறிவும் அழிந்து போகும் என்ற நிலை வந்து, ஒரே ஒரு வரி மட்டும் அடுத்த தலைமுறை உயிர்களுக்கு செல்லலாம் என்ற நிலை வந்தால் எந்த வரி நிறைய விஷயத்தை குறைந்த வார்த்தைகளில் வைத்திருக்கும்? "ஒன்றைச்சுற்றி ஒன்று நிரந்தரமாக சுற்றிக்கொண்டிருக்கும் மிகமிகச்சிறிய பொருள்கள் சற்று தூரத்தில் இருக்கும்போது ஒன்றை ஒன்று ஈர்க்கவும் நெருக்கினால் விலகிப் போகவுமான குணங்கள் கொண்ட சின்னச்சின்ன பொருள்களால் ஆன அணுக்களாலேயே எல்லாப்பொருள்களும் கட்டப்பட்டிருக்கின்றன" என்னும் வாக்கியத்திலேயே, உலகத்தைப் பற்றிய ஏராளமான விஷயத்தை ஒரு வரியில் அடக்கலாம். கொஞ்சம் கற்பனையும் சிந்தனையும் வேண்டும். - ரிச்சர்ட் பி ஃபெயின்மான்
சுதந்திரத்துக்கும் உண்மைக்குமாக போராட வெளியே சென்றால் உன்னிடமிருக்கும் மிக நல்ல உடைகளை அணிந்து கொண்டு போகாதே -ஹென்ரிக் இப்ஸன்
நமது காட்சியியே நமது அத்தனை அறிவுக்கும் ஆரம்பம் - லியோனர்டோ டா வின்ஸி
இன்றைக்கு இருக்கும் நிலையில் யார் நம்புகிறார்கள் யார் நம்பவில்லை என்பது முக்கியமான வித்தியாசம் இல்லை. யார் அக்கறைப்படுகிறார்கள் யார் அக்கறைப்படவில்லை என்பதே முக்கியமானது - அபே பைர்
இலட்சியத்துக்கு வந்த மனிதர்கள் திரும்பக்கூடாது - புளூடார்க்
கார்ல் சாகன் நம்ப விரும்பவில்லை. அறிய விரும்பினார் - ஆன் ட்ருயன்
தாங்களே கண்டறிந்த காரணங்களாலேயே மனிதர்கள் மனம் தேறுகிறார்கள். மற்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டகாரணங்களால் அல்ல - பிளைஸ் பாஸ்கல்
உண்மையிலேயே மகத்தான சமூகம் எது தெரியுமா? மக்களை வித்தியாசமாக இருக்க விடும் சமூகம்தான் - டேவிட் க்ரேசான்
என்னத்தை நம்புகிறானோ அதுதான் அந்த மனிதன் - ஆண்டன் செக்காவ்
"கிரிஸ்தவ கடவுள் முந்தைய கலாச்சார சமூகங்களின் பழைய கடவுள்கள் போலவே பார்க்கலாம். கிரிஸ்தவ கடவுள் மூன்று முகங்கள் கொண்ட அரக்கன். குரூரம், பழிவாங்குதல், தான்தோன்றித்தனம் ஆகியவைதான் அந்த மூன்று முகங்கள். இந்த அரக்ககுணம் கொண்ட மூன்று முகங்கள் கொண்ட மிருகம் போன்ற கடவுளை அறிய வேண்டுமாயின் இந்த கடவுளுக்கு சேவை செய்வதாகக் கூறிக்கொள்ளும் மனிதர்களைப் பார்த்தால் போதும். இவர்கள் இரண்டுவகை. ஒன்று முட்டாள்கள் இரண்டாவது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள்" - தாமஸ் ஜெஃபர்ஸன் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி)
நேற்றைய கனவு இன்றைய நம்பிக்கையாகவும் நாளைய நடப்பாகவும் இருக்கும்போது எது நடக்கவே நடக்காது என்று கண்டுபிடிப்பது கடினம் - ராபர்ட் கொட்டார்ட்
எதிர்காலம் பற்றிய கனவில்லாதபோது மக்கள் அழிகிறார்கள் - ப்ரோவர்ப்ஸ் 29:18
தெரிந்த விஷயங்கள் இருக்கின்றன, தெரியாத விஷயங்கள் இருக்கின்றன, இரண்டுக்கும் நடுவில் தேடுதல் இருக்கிறது - யாரோ
நாம் என்னத்தை திரும்பத்திரும்ப செய்கிறோமோ அதுவே நாமாக ஆகிவிடுகிறோம். சிறப்பு என்பது செயலில் இல்லை, பழக்கத்தில் இருக்கிறது - அரிஸ்டாட்டில்
எதிர்காலத்தை கணிக்க முடியாது, கண்டுபிடிக்கலாம் - டென்னிஸ் கபோர்
கடவுள்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். ஆனால் அணுக்கள் காலம்காலமாக இருந்துகொண்டே இருக்கின்றன. - அலெக்ஸாண்டர் சேஸ்
நிழலைப்பிடிக்கபோய் நிஜத்தை விட்டுவிடாதே - ஏஸாப் நீதிக்கதைகளில்
நீண்டகாலத்தில், மனிதர்களை எதைக் குறிவைக்கிறார்களோ அதையே அடிக்கிறார்கள் - தோரோ
|
|
|
| கனடாவில் கடன் |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 08:13 PM - Forum: புலம்
- Replies (5)
|
 |
கனடாவில் கடன்
கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையில் இருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை. கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்கு கனடாவில் இவ்வளவு மா¤யாதை இருப்பது எனக்கு அன்றுவரை தொ¤யாது.
எந்த அங்காடியிலோ, சந்தையிலோ, கடையிலோ என்ன பொருள் வாங்கினாலும் கடன் அட்டை இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் காசை எடுத்து எண்ணிக் கொடுப்பதை விநோதமாக பார்த்தார்கள். நூறு டொலர் தாளை நீட்டினால் அதை மேலும் கீழும் சோதித்து, என்னை திரும்பி திரும்பி பார்த்தபடி உள்ளே சென்று அதை உற்று நோக்கி உறுதிசெய்தார்கள். ஒரு அங்காடியில் கத்தைக் காசை எண்ணி வைக்கும்போது, கடன் அட்டையில் கணக்கு தீர்த்தால் 10% தள்ளுபடி என்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. இந்த நாட்டில் கடனாளிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கண்டு கொண்டேன். அன்றே தீர்மானித்தேன், ஒரு கடன் அட்டை எப்படியும் எடுத்துவிட வேண்டும் என்று.
Visa, American Express, Master Card என்று தொடங்கி குட்டி தேவதை நிறுவனங்கள் வரை சகல கடன் விண்ணப்ப பாரங்களையும் நிரப்பி, நிரப்பி அனுப்பினேன். அவர்களிடமிருந்து ஒரே மாதி£¤யான பதில்கள்தான் வந்தன. உங்களுக்கு இந்த நாட்டில் கடன் மதிப்பு இல்லை. மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்டது.
எப்படியும் மிகவும் மதிப்புக்கு£¤ய ஒரு கடன்காரனாகி விடவேண்டும் என்ற என்னுடைய வைராக்கியம் இப்படியாக நிலை குலைந்து போனது. மாணவர்களும், பச்சிளம் பாலகர்களும் வழுவழுப்பான வண்ண அட்டைகளை விசுக்கி காட்டினார்கள். சுப்பர் மார்க்கட்டில் தள்ளு வண்டியில் சாமான்களை நிரப்பிவிட்டு காசுத்தாள் சுருள்களை பி£¤த்து பி£¤த்து கொடுக்கும்போதும், மீதிச் சில்லறையை எண்ணி எடுக்கும்போதும், பத்து சதத்துக்கு பதிலாக ஒரு சதத்தை கொடுத்து தடுமாறும்போதும், இளம் பெண்கள் பளபளக்கும் அட்டைகளை மின்னலாக அடித்தபடி என்னை கடந்து சென்றார்கள். எனக்கு அவமானமாக இருந்தது.
என்ன செய்யலாம் என்று நாடியில் கைவைத்து மூளைத் தண்ணீர் வற்ற யோசித்தேன். கடைசி முயற்சியாக விசா நிறுவனத்து மெத்த பொ¤யவருக்கு 'மிக அந்தரங்கம்' என்று தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதுவதென்று முடிவு செய்தேன்.
பெருமதிப்பிற்கு£¤ய தலைமையாளர் அவர்களுக்கு,
இந்த நாட்டுக்கு வந்த நாளில் இருந்து எப்படியும் பெரும் கடனாளியாகிவிட வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் படு தோல்வியடைந்து கொண்டே வருகின்றன. என்னுடைய சகல கடன் அட்டை விண்ணப்பங்களும் ஈவிரக்கமில்லாமல் நிராகா¤க்கப் பட்டுவிட்டன. அதற்கு காரணம் எனக்கு இந்த நாட்டில் கடன் சா¤த்திரம் இல்லாததுதான் என்கிறார்கள். அப்படி வந்த மறுப்பு கடிதங்களில் ஒரு கட்டை இத்துடன் இணைத்திருக்கிறேன். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அவற்றை தாங்கள் படித்து முடித்துவிடுவீர்கள்.
எனக்கு கடன் வரலாறு கிடையாது. ஏனென்றால் நான் இந்த நாட்டுக்கு வந்து சொற்ப நாட்களே ஆகின்றன. இது என்னுடைய பிழை அன்று. தாங்கள் கடன் அட்டை தரும் பட்சத்தில் நான் எப்படியும் முயன்று ஒப்பற்ற சா¤த்திரத்தை படைத்து, மதிப்புமிக்க கடனாளியாகி விடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
குருவி சேர்ப்பதுபோல என் வாழ்நாள் எல்லாம் சிறுகச் சிறுக சேர்த்து முழுக்காசும் கொடுத்து நான் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். அதை தாங்கள் பார்க்கலாம். கடன் வைக்காமல், கைக்காசு கொடுத்து லிட்டருக்கு 20 கி.மீட்டர் ஓடும் சிக்கனமான ஒரு கார் வாங்கியிருக்கிறேன். அதையும் தாங்கள் பார்க்கலாம். எனக்கு கிடைக்கும் மாத வருமானத்தில் 1% குறைவான பாலில், கோதுமை சக்கையை கலந்து காலை உணவாகவும், ஏனைய உணவாகவும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன். அதைக்கூட தாங்கள் பார்க்கலாம்; உணவிலும் பங்கு கொள்ளலாம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்னும் ஒரு கடனும் எனக்கு ஏற்படவில்லை. எவ்வளவு கடன் தொல்லை இருந்தால் தாங்கள் எனக்கு ஒரு கடன் அட்டை கொடுப்பீர்கள் என்று முன்கூட்டியே சொன்னால் நான் எப்படியும் முயன்று அந்த இலக்கை அடைந்துவிடுவேன். ஆனால் அதற்கு ஒரு கடன் அட்டை மிகவும் முக்கியம் என்று எனக்கு படுகிறது.
தாங்கள் எனக்கு இந்த உதவியை செய்வீர்களாயின் நான் எப்படியும் முயன்று என் கடன் ஏத்தும் திறமையை தங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன்.
இப்படிக்கு
என்றும் தங்கள் உண்மையான,
கீழ்ப்படிந்த,
தாழ்மையான,
நிலத்திலே புரளும்
நிர்மலன்
இந்தக் கடிதத்தை நான் அனுப்பி சரியாக மூன்றாவது நாள் கூரியர் மூலம், ஒரு இணைப்பு கடிதம்கூட இல்லாமல், ஒரு கடன் அட்டை என்னிடம் வந்து சேர்ந்தது. அதன் மழமழப்பும், மினுமினுப்பும் என் கண்ணில் நீரை வரவழைத்தது. அந்தக் கணமே முழுமூச்சாக கடன் படுவதற்கு என்னை தயார் செய்து கொண்டேன்.
மிக நீளமான பட்டியல்கள் போட்டுக்கொண்டு சுப்பர் மார்க்கட்டுக்கும், பல்கடை அங்காடிக்கும் அடிக்கடி சென்றேன். வட்டமான பெட்டிகளிலும், தட்டையான அட்டைகளிலும் அடைத்து விற்கும் சாமான்களை வாங்கினேன். வாங்கிவிட்டு அவற்றை எப்படி, என்ன உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம் என்பதை கற்றுக்கொண்டேன். சிலவற்றை திருப்பினேன்; மீண்டும் வாங்கினேன். என் கடன்களை கருணை இல்லாமலும், கண்துஞ்சாமலும் கூட்டினேன். கடன் அட்டை உரசி உரசி தேய்ந்தபோது, கடனும் ஏறியது. மறுபடி கணக்கு தீர்த்தேன்; மறுபடியும் ஏறியது.
இப்படி நான் பாடுபட்டு தேடி வைத்த கடன் புகழ் வீணாகவில்லை. ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது. அதில் சொல்லியிருந்த விஷயத்தை நீங்கள் நம்ப மாட்டீர்கள். அப்பட்டமான பொய் என்று என்னை அலட்சியப்படுத்தாதீர்கள். முற்றிலும் உண்மை; பொய்யென்றால், நீருக்கு வெளியே, நின்ற கோலத்தில் பெண்ணை புணர்ந்தவன் போகும் நரகத்துக்கு நானும் போவேன்.
இந்தக் கடிதம் விசா தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது. என்னுடைய கடன் தீர்க்கும் திறமையை இது மெச்சியது. என்னுடைய தகுதிக்கும், சாமர்த்தியத்திற்கும் ஏற்ற ஒரு கடன் சுமையை மேலும் தருவதற்கு அந்த நிறுவனம் தயாராக இருந்தது. இலையான் பறந்ததுபோல கையொப்பமிட்ட அந்தக் கடிதத்தில் இருந்த வாசகம் இதுதான்.
அன்புடையீர்,
நீங்கள் எங்களிடம் வாடிக்கையாளராகியதில் நாங்கள் மிகவும் திருப்தியும், பெருமிதமும் கொண்டிருக்கிறோம். உங்கள் கண்ணியத்திலும், நம்பிக்கைத் தன்மையிலும் நாங்கள் வைத்திருக்கும் பெரு மதிப்பில் ஒரு சிறு பகுதியை காட்டும் முகமாக நாங்கள் இத்துடன் $2000 க்கு ஒரு காசோலையை இணைத்திருக்கிறோம். இது அன்பளிப்பில்லை; கடன்தான். இதை நீங்கள் மாதாமாதம் $10 க்கு குறையாத ஒரு தொகையில் கட்டித் தீர்க்கலாம்.
தங்கள் உண்மையுள்ள,
இணை தலைமையாளர்.
என் கடன் சுமைகள் விரைவில் தீர்ந்துவிடக்கூடும். அதற்கு பிறகு நான் என்ன செய்வேன் என்று அவர்கள் கருணை உள்ளம் கவலைப்பட்டிருக்கக்கூடும். நல்ல காரியத்தை நான் தள்ளிப் போடுவதில்லை. ஆகையால் வெகு சீக்கிரத்திலேயே ஒரு பதில் அனுப்பினேன்.
அன்புள்ள ஐயா,
தங்கள் அன்பும், கரிசனமும் என்னை உருக்குகிறது. தங்களுடைய விசா கடன் அட்டை என் வாழ்வில் இன்றியமையாத ஒரு அம்சமாகிவிட்டது. நான் எங்கே போனாலும் அதை காவியபடியே செல்கிறேன். என் இருதயத்துக்கு பக்கத்தில் அது கொடுக்கும் இனிமையான சத்தத்தை கேட்டுக்கொண்டே, இந்த அட்டை வசிக்கிறது. எனக்கு வேண்டியவற்றையும், என் உற்றாருக்கு வேண்டாதவற்றையும் அதைக் கொடுத்தே வாங்குகிறேன். அதன் ஸ்பா¤சம் எனக்கு சந்தோசத்தை தருகிறது. அதன் பாரம் காசுத் தாள்களிலும் பார்க்க லேசானதாக இருக்கிறது.
ஆனாலும் எனக்கு ஒரு அல்லல் உண்டு. என்னுடைய அட்டையின் கடன் எல்லை $10,000 என்று ஆக்குவீர்களாயின் நான் தங்களுக்கு என்றென்றும் மிகவும் கடன் பட்டவனாக இருப்பேன். அப்போதுதான் என் கடன் பளுவை நான் கடல்போல பெருக்கி அதில் ஆனந்தமாக நீந்தமுடியும். ஆகவே இந்த $2000 காசோலையை இத்துடன் திருப்பி அனுப்புகிறேன்.
தங்கள் மேலான கடாட்சத்தை கோரும்,
மேற்படி கடிதத்துடன் பிணைத்தபடி காசோலை திரும்பிப்போனது. அதற்கு இன்றுவரை பதில் இல்லை.
|
|
|
| பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 08:02 PM - Forum: நகைச்சுவை
- Replies (2)
|
 |
பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்
பட்டு:
அடுத்தாத்து எலிஸபெத்தெ பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறதெ கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு கிஃப்டா வாங்கிக்கறா
பெரிய கிஃப்டா வாங்கிக்கறா
(அடுத்தாத்து)
கிட்டு:
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி
அவன் அங்கொரு ஆளு இங்கொரு ஆளு வெச்சிருக்காண்டி
போன மாசம் முன்னூறு டாலர் ஃபோன் பில்லாச்சேடி
டெலிஃபோனுக்கே சம்பளம் போனா
கிஃப்டுக்கு ஏதடி ஒனக்கு கிஃப்டுக்கு ஏதடி
(அடுத்தாத்து)
பட்டு:
உங்களுக்குன்னு வாக்கப்பட்டு என்னத்தெ கண்டா பட்டு
கிட்டு:
அமெரிக்காவில் வாழுறியே நீ அத மறந்தாயா பட்டு
பட்டு:
நாளுங்கெழமையும் போட்டுக்க ஒரு ப்ளூ ஜீன்ஸ் உண்டா நேக்கு
போட்டுண்டேன்னா ரெண்டு பேரா போகல்லான்னா வாக்கு (walk)
கிட்டு:
பொடவைய விட்டா வேறென்ன அழகு தெரியாதோடி நோக்கு
பட்டு:
வாங்கித்தராமெ இருக்கறதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு உக்கூம்
(அடுத்தாத்து)
கிட்டு:
ஏட்டிக்கு போட்டி பேசாதேடி பட்டூ
பட்டு:
பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டூ
கிட்டு:
ஆத்திரம் வந்தா க்ரெடிட் கார்டெல்லாம் கட்டூ
பட்டு:
என்னத்தெ செய்வேள் ...
கிட்டு:
ஊம் ... சொன்னத்தெ செய்வேன்
பட்டு:
வேறென்ன செய்வேள்
கிட்டு:
... அடக்கி வெப்பேன்
பட்டு:
அதுக்கும் மேலெ
கிட்டு:
... டைவர்ஸ் பண்ணுவேன்
பட்டு:
ஊம் ஊம் உம் உம் உம் (அழுகுரலில்)
|
|
|
| அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு |
|
Posted by: Vaanampaadi - 02-06-2005, 07:56 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (25)
|
 |
நிலப்பிரபுத்துவம் : உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார்.
ராணுவ பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது.
கிளப்டோகிராடிக் பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொண்டு உன்னைச் சுட்டுக் கொல்கிறது
நைஜீரியா ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. உன்னைச் சுட்டுக் கொல்கிறது. பசுக்களை அரசாங்கம் ஸ்விட்சர்லாந்துக்கு அனுப்புகிறது.
சோஷலிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. அவைகளை கவனித்துக்கொள்ள உன்னை வேலைக்கு வைத்துக்கொள்கிறது. பாலை உன்னிடம் நல்ல விலைக்கு விற்கிறது.
யுரோபியன் கம்யூனிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளை கவனித்துக்கொள்ள உன் பக்கத்து வீட்டுக்காரர்கள் உனக்கு உதவுகிறார்கள். நீங்கள் எல்லோரும் பாலை பங்கிட்டுக்கொள்கிறீர்கள்.
லெனினிஸ கம்யூனிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எல்லாப்பாலையும் எடுத்துக்கொள்கிறது.
மாவோயிஸம், ஸ்டாலினிஸ கம்யூனிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் அவைகளை எடுத்துக்கொள்கிறது. பிறகு பசுக்கள் இருந்ததையே மறுக்கிறது. அரசாங்கம் பாலை தடை செய்கிறது.
சுத்தமான ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் முடிவு செய்வார்கள்
பிரதிநிதித்துவ ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று உன் பக்கத்துவீட்டுக்காரர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆள் நிர்ணயம் செய்வான்.
சிங்கப்பூர் ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அபார்ட்மெண்ட்டுக்குள் இரண்டு விவசாய மிருகங்களை வைத்திருந்ததற்காக அரசாங்கம் உனக்கு அபராதம் விதிக்கிறது.
அமெரிக்க ஜனநாயகம்: அரசியல்வாதிகள், அவர்களை தேர்ந்தெடுத்தால் உனக்கு இரண்டு பசுக்கள் தருவதாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பசு யாருக்குக் கிடைக்கும் என்பதற்கான தகுதிகளை நிர்ணயம் செய்வார்கள். அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்கு அதிகப் பணம் கொடுத்தவர்கள் மட்டுமே தகுதி போல நிர்ணயம் நடக்கும். பசுவை ஒப்பந்தத்தில் இழுத்துவிட்டதால், உன் மீது விலங்குகள் உரிமைகள் பற்றி அக்கறைப்படும் இயக்கங்கள், பசுக்களின் சார்பாக, வழக்கு தொடுக்கும். இதே வேளையில் பாலின் விலை ஒரேயடியாக ஏறிப்போய், நீ கோககோலா குடிக்க ஆரம்பித்து விடுவாய்.
இங்கிலாந்து ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு ஆட்டு மூளையைச் சாப்பிடக் கொடுக்கிறாய். பசுக்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது. அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை.
ஐரோப்பிய ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு என்ன கொடுக்கலாம், எப்போது பால் கறக்கலாம் என்று நிர்ணயம் செய்கிறது. அப்புறம் நீ அவைகளை பால் கறக்காமல் இருக்க உனக்குப் பணம் கொடுக்கிறது. பிறகு இரண்டையும் எடுத்துக்கொண்டு ஒன்றை சுட்டுக்கொல்கிறது, ஒன்றை பால் கறக்கிறது. பாலை கடலில் கொட்டுகிறது. பிறகு ஏன் பசுக்கள் காணாமல் போயின என்று இரண்டு படிவங்கள் முழுமையாக எழுதி அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்.
நவீன உலக அமைப்பு முதலாளித்துவம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனம் அதில் முதலீடு செய்கிறது, பாலை மிகவும் குறைந்த விலையில் உன்னிடம் இருந்து வாங்குகிறது. பிறகு அதை இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்து பதனப்படுத்துகிறது. நீ தயிர் வாங்க ஏராளமாக காசு கொடுக்க வேண்டும் ஏனெனில், பால் தொழிற்சாலை கூட்டமைப்பும், பால் தொழிலாளர்கள் யூனியனும் இறக்குமதி வரியை அதிகப்படுத்த போராடியிருப்பார்கள்.
ஹாங்காங் முதலாளித்துவம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அந்த மூன்று பசுக்களையும் உனது நிறுவனத்துக்கு விற்கிறாய். அதற்கு உன் மச்சான் ஆரம்பித்த வங்கியை கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, கடன்/பங்குகள் மாற்றி உன் நான்கு பசுக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறாய். அத்தோடு கூட ஐந்து பசுக்களையும் வைத்துக்கொள்ள வரி விலக்கு கிடைக்கும். உன் ஆறு பசுக்களையும் பால்கறக்கும் உரிமைகளை ஒரு பனாமா கம்பெனி வழியாக கேய்மன் தீவுகளில் இருக்கும் ஒரு பேப்பர் கம்பெனிக்கு ரகசியமாக விற்று நீ பெரும்பான்மை பங்குகளுக்கு சொந்தக்காரனாக ஆகிறாய். ஏழு பசுக்களுக்குமான மொத்த உரிமைகளை மீண்டும் பழையக்கம்பெனிக்கே விற்கப்படுகிறது. கம்பெனியின் வருடாந்தர அறிக்கை கம்பெனிக்கு எட்டுபசுக்கள் வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது என்றும் இன்னொரு பசு வைத்துக்கொள்ள ஆப்ஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கிறது. இதே நேரத்தில் நீ உன்னிடம் இருக்கும் இரண்டு பசுக்களையும் கெட்ட ஃபெங் சுயி (சீனத்து வாஸ்து சாஸ்திரம்) காரணமாக கொன்று விடுகிறாய்.
சவூதி அரேபியா: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளைப் பற்றி உனக்குக் கவலையில்லை. ஏனெனில், பங்களாதேஷிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு பெண்களை உனது பெட்ரோல் பணம் கொடுத்து வாங்கியாய் விட்டது.
|
|
|
|