![]() |
|
கைத்தொலைபேசியை அடிக்கடி தொலைக்கும் நபரா நீங்கள்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: கைத்தொலைபேசியை அடிக்கடி தொலைக்கும் நபரா நீங்கள்? (/showthread.php?tid=5421) |
கைத்தொலைபேசியை அடிக்கடி தொலைக்கும் நபரா நீங்கள்? - Vaanampaadi - 02-05-2005 அப்படியானால் இதை கொஞ்சம் படியுங்கள்; அனைத்து கைத்தொலைபேசிகளும் வெவ்வேறு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டாலும் அதற்கென தனித்தனி வரிசை எண்(SERIAL NUMBER)கொடுக்கப்பட்டிருக்கும். உலக அளவில் ஒவ்வொரு கைத்தொலைபேசி நிறுவனத்திற்கும் என தனி வரிசை எண்கள் உள்ளன. கைத்தொலைபேசியில் நாம் பயன்படுத்தும் SIM CARD என்பது நாம் பயன்படுத்தும் கைத்தொலைபேசியின் எண்களாகும். கைத்தொலைபேசியின் வரிசை எண் என்பது வேறு. நம் கைத்தொலைபேசியில் உள்ள KEY BOARD பொத்தான்களில் உள்ள *#06# என்ற பொத்தான்களை அழுத்தினால் உடனடியாக நமது கைத்தொலைபேசியின் வரிசை எண் (SERIAL NUMBER) திரையில் தோன்றும். இந்த எண் 15 இலக்கங்களைக் கொண்டிருக்கும். இந்த எண்ணை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய கைத்தொலைபேசி தொலைந்து விட்டால் இந்த 15 இலக்க எண்ணை நம்முடைய கைத்தொலைபேசி அலுவலகத்தில் (SERVICE PROVIDER) அளித்தால் அந்த கைத்தொலைபேசி வேலை செய்யாதபடி அவர்கள் செயலிழக்கச் செய்து விடுவார்கள். திருடர்கள் நம்முடைய கைத்தொலைபேசியை செயல்படுத்தவும் முடியாது. என்ன *#06# என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்து விட்டீர்களா? - Mathan - 02-05-2005 கைத்தொலைபேசியை கண்டெடுத்தவர்கள் உடனடியாக அதிலிருந்த் சிம் கார்ட்டை அகற்றிவிட்டால் SERVICE PROVIDER ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கின்றேன். பின்பு கைத்தொலைபேசியில் குறிப்பிட்ட நெற்வேக்கில் மட்டும் உபயோகிக்க கூடிய லொக் இருந்தால் அதனை கேபிள் மூலம் உடைத்து விடுவார்கள். - vasisutha - 02-05-2005 மதன் நீங்கள் சொல்வது சரியே... ஆனாலும் வானம்பாடி சொன்ன தகவல் ஒருவகையில் நன்மை தான் Line phone என்றால் திருடியவர்கள் பில்லை ஏற்றிவிடுவார்களே?? - Mathan - 02-06-2005 நிச்சயமாக வானம்பாடி சொன்னது நன்மை, நான் அந்த முறையில் இருந்து திருடர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சொன்னேன் அவ்வளவு தான். இந்த Line phoneஐ தொலைத்து பில் ஏறுவதை தவிர்க்க இதனுடன் இந்த பாதுகாப்பு முறையையும் மேற்கொள்ளுங்கள், சிம் கார்டை இரகசிய இலக்கத்தை (பின் நம்பர்) இட்டு லொக் செய்து விடுங்கள், இப்படி செய்தால் தொலைபேசியை ஓவ் செய்து ஓன் பண்ணினாலோ அல்லது சிம் கார்டை வேறு தொலைபேசிக்கு மாற்றினாலோ இரகசிய இலக்கம் இல்லாமல் அழைப்புகளை மேற் கொள்ள முடியாது. - kavithan - 02-06-2005 Mathan Wrote:நிச்சயமாக வானம்பாடி சொன்னது நன்மை, நான் அந்த முறையில் இருந்து திருடர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சொன்னேன் அவ்வளவு தான். இந்த Line phoneஐ தொலைத்து பில் ஏறுவதை தவிர்க்க இதனுடன் இந்த பாதுகாப்பு முறையையும் மேற்கொள்ளுங்கள், வானம் பாடி சொன்னது நல்ல தகவல்..... திருடர்கள் .. யார் ..? ஓ அவர்கள் எல்லாம் உடைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்... ம் எத்தனை என்று உடைப்பது .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |