Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 571 online users.
» 0 Member(s) | 568 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,261
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  புலிகளின் `சிங்கள உளவாளிகள்'
Posted by: adsharan - 07-10-2005, 12:32 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் முத்தலிப்பின் கொலை தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூவினத்தையும் சேர்ந்தவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல்கள் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் கூறும் தகவல்கள் உண்மையானால், எதிர்காலத்தில் படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென படைத்தரப்பு பெரும் கவலை கொண்டுள்ளது.

பண்டாரகம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று தமிழர்களும் ஒரு சிங்களவரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் முஸ்லிம் ஒருவரும் சிங்களவரொருவரும் கைது செய்யப்பட்டனர். இறுதியாகக் கடந்த வியாழக்கிழமை, சிங்களப் பத்திரிகையாளரொருவர் கைது செய்யப்பட்டார்.

இவர்களில் இருவர் பெண்கள். அதிலொருவர் சிங்களப் பெண். மற்றவர் தமிழ்ப் பெண். இவர்கள் அனைவரும், மேஜர் முத்தலிப்பின் கொலைக்காக புலிகளுக்காக உளவு பார்த்ததாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகின்றனர்.

பெருந் தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இவர்களில் சிலர் இராணுவ அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளையும் ஏற்படுத்தி புலிகளுக்காக உளவு பார்த்து வந்தது, விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

பெருந்தொகைப் பணத்துக்காக இராணுவ இரகசியங்களைக் கூட புலிகளுக்கு வழங்குமளவிற்கு இராணுவ அதிகாரிகள் தயாராயிருப்பது இதன் மூலம் தெரிய வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் ,முத்தலிப்பின் கொலைக்காக மூவினத்தையும் சேர்ந்தவர்கள் உளவு பார்த்தது அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேநேரம், கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் இன்னும் எவ்வளவோ இரகசியங்கள் இதற்குள் புதைந்து கிடக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இரத்மலானையில் விமானப் படைத்தளமுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியுமுள்ளது. இங்கு அடிக்கடி வரும் முத்தலிப்பு பற்றி உளவு பார்க்க, இந்தப் பாதுகாப்பு கல்லூரியின் எல்லையிலுள்ள பேக்கரி ஒன்றின் முகாமையாளரைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனராம். புதிய பேக்கரி ஒன்றை உருவாக்க பல இலட்சம் ரூபா தருவதாக இவருக்கு உறுதியளிக்கப்பட்ட அதேநேரம், இரத்மலானையில் இவரது வீட்டில் தமிழ் இளைஞர்கள் சிலரும் தங்க வைக்கப்பட்டிருந்த போதே அவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

முத்தலிப்பின் நடமாட்டத்தை இவர் மூலம் கண்காணித்ததுடன் இவரது செல்வாக்கைப் பயன்படுத்தி இராணுவ அதிகாரிகள் சிலருடனும் புலிகள் நெருங்கிய நட்பை ஏற்படுத்தி அங்குள்ள இராணுவத்தினரின் உணவுச் சாலைக்கும் சென்று, அவர்கள் பலருடனும் சேர்ந்து மதுவருந்தி அவர்களிடமிருந்தும் இராணுவ இரகசியங்களைப் புலிகள் பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ அதிகாரிகளுடனான தொடர்பில், முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரது மகனும் (இராணுவக் கப்டன்) சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர். முத்தலிப்பின் கொலைக்கு இவரும் உடந்தையாக இருந்ததுடன் இராணுவ இரகசியங்களையும் இவர் புலிகளுக்கு வழங்கியுள்ளாராம்.

முதலில் இரத்மலானையில் இராணுவ ஆட்லறிப் பிரிவில் கடமையாற்றிய இவர் பின்னர் பொலநறுவை மாவட்டம் மின்னேரியாவிலுள்ள இராணுவத் தளத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இரத்மலானையிலும் மின்னேரியாவிலும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் (தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்) இவரை அடிக்கடி சந்தித்து பல்வேறு தகவல்களையும் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இவருக்கு பல இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், கிளிநொச்சியிலிருந்து புலிகளின் கொழும்பு வருகைக்கும் அவர்கள் கொழும்புக்குள் முக்கிய ஆயுதங்கள் சிலவற்றைக் கடத்தவும் உதவியதாகத் தேடப்பட்டு வந்த சிங்களப் பத்திரிகையாளரொருவர் வியாழக்கிழமை இறக்குவானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது வாகனத்தில், "Press' என்று அச்சிடப்பட்ட அட்டையைப் பொருத்தி, புலிகளை வன்னிக்கும் கொழும்புக்குமிடையில் ஏற்றியிறக்கவும் ஆயுதங்களைக் கடத்தவும் உதவி வந்ததாகப் பொலிஸார் கூறுகின்றனர்.

இவருக்கும் புலிகள் பல இலட்சம் ரூபா பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட தமிழர்களை விட நான்கு சிங்களவர்களுக்கும் ஒரு முஸ்லிமுக்கும் பெருந்தொகைப் பணம் இவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பதிலும் படையினருடன் சேர்ந்து இயங்குவதிலும் பல தமிழ்க் குழுக்கள் போட்டி போட்டு செயற்படுகின்றன. பணம், பொருள், சுகபோக வாழ்க்கை, பழிவாங்கல் என பல்வேறு காரணங்களுக்காகவும் இந்தக் குழுக்கள் படைத் தரப்புடன் இணைந்து செயற்படுகின்றன.

இனத்தின் விடுதலைக்கு எதிராகவும் சொந்த இனத்திற்கு விரோதமாகவும் செயற்படும் இவர்களைப் பயன்படுத்தி எதுவும் செய்ய முடியுமெனப் படையினருக்கு நன்கு தெரியும்.

தங்களை மாற்றுக் குழுக்களென இவர்கள் அழைத்துக் கொண்டாலும் இவர்களது முழு நோக்கமும், தற்போது களத்தில் நிற்கும் புலிகளை அழித்து விடுவதற்காக அவர்களை படைத் தரப்புக்கு காட்டிக் கொடுப்பதுதான். இவர்கள் போராளிகளையே காட்டிக் கொடுப்பவர்களென்பதால் இவர்கள் இன விடுதலைக்காக எதுவுமே செய்யாதவர்களென்பதையும் படைத்தரப்பு அறியும்.

கடந்த இரு சகாப்த காலப்போரில், இவ்வாறான பலர் கொல்லப்பட்டபோதிலும் இவ்வாறானவர்களின் எண்ணிக்கையில் குறைவேதுமில்லை. இந்த வரிசையில் தற்போது கருணா குழுவும் சேர்ந்துள்ளது. வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியை உடைத்தது போல் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்ற காலத்தில் இயக்கத்திற்குள் கிளர்ச்சி செய்து வெளியேறியவர் கருணா.

ஆனாலும், அவரது கிளர்ச்சி அடக்கப்பட்டு விடவே, தற்போது படைத்தரப்புடன் சேர்ந்தியங்கும் கும்பலமாக அவர் மாறிவிட்டார். கிழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளும் நிழல் யுத்தத்தில், இவர்களின் பெயரைப் பயன்படுத்தியே புலிகளுக்கெதிரான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகப் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில்தான் புலிகளுக்கெதிரான புலனாய்வுப் போரின் முக்கிய புள்ளியும், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தும் படையணியின் பிரதம கர்த்தாவுமான மேஜர் முத்தலிப் அண்மையில் கொழும்பில் வைத்து கொலை செய்யப்பட்டார். இவரது கொலை படைத்தரப்புக்கு மட்டுமல்லாது அரசுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிழக்கில் தொடரும் நிழல் யுத்தத்தை வடக்கில் தொடர இராணுவ புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிருந்த போதே முத்தலிப் கொலை செய்யப்பட்டார். போர் நடைபெற்ற காலப் பகுதியில் வன்னிக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தும் படையணியை வழி நடத்தியவர் இவரே. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இவ்வாறான தாக்குதல்களுக்கு வழி காட்டிய இவர், கொழும்பு தலைநகரில் தனது வீட்டுக்குச் சமீபமாக வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இவரைக் கொல்வதற்கான திட்டத்திற்கு சிங்களவர்கள் பலரும் இராணுவத்திற்குள் இருந்தவர்களும் உதவி செய்ததாக தற்போது வெளியாகும் தகவல்களால் படைத்தரப்பு பேரதிர்ச்சியடைந்துள்ளது. எவ்வாறான பலவீனங்களைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிராக படையினர் தமிழர்களைப் பயன்படுத்தினார்களோ அந்தப் பலவீனங்களைப் பயன்படுத்தி தங்களுக்கெதிராக சிங்களவர்களைப் பயன்படுத்த புலிகள் தொடங்கி விட்டார்களா என்ற கேள்வியை படைத்தரப்பு எழுப்புகிறது.

புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் எப்படி தமிழ்க் குழுக்களை படைத் தரப்பு பயன்படுத்துகின்றதோ அப்படி படையினருக்கு எதிராக சிங்களவர்களைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால், படையினர் பற்றியும் அவர்களது நடமாட்டங்கள் பற்றியும் சாதாரண சிங்களவர்களை பணத்தின் மூலம் பயன்படுத்த முடியமென புலிகள் உணரத் தொடங்கி விட்டார்களா என்ற கேள்வியும் படையினர் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.

அதேநேரம், புலிகளிலிருந்து விலகியவர்களை அல்லது கருணா குழுவினரை அல்லது தமிழ்க் குழுக்களை படைத்தரப்பினர் தங்கள் முகாம்களில் வைத்துக் கொண்டே புலிகளுக்கெதிரான தாக்குதல்களை தொடுக்கின்றனர். ஆனால், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை தங்களுடன் வைத்துக் கொண்டு படையினருக்கு எதிராக புலிகளால் செயற்பட முடியாது அது சாத்தியமுமில்லை. களநிலையும் அதற்குப் பொருந்தாது.

ஆனால், அவர்களை உளவுத் தகவல்களைப் பெறுவதற்காக புலிகள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது, முத்தலிப்பின் கொலை விசாரணைகள் மூலம் தெரிய வருவதை படைத் தரப்பு உணர்கிறது.

முத்தலிப் கொலை தொடர்பாக இவ்வளவு நடந்துள்ளதென்றால், இவ்வாறு மேலும் பல சிங்களவர்கள் புலிகளின் உளவாளிகளாகச் செயற்படலாமென்ற சந்தேகமும் படைத் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் படைமுகாம்கள், இராணுவ நிலைகள் மற்றும் படையினரின் அமைப்புகளுக்கு அருகிலிருப்போர் விடயத்திலும் சிரேஷ்ட படை அதிகாரிகள் தங்குமிடங்களுக்கு அருகிலிருப்போர் தொடர்பாகவும் படையினர் இனிமேல் மிக விழிப்பாகவேயிருப்பர்.

புலிகளைப் பொறுத்தவரை, அவர்களுடன் இருந்துகொண்டு எதிரிக்கு உளவு கூறுபவர்கள் என்று எவருமில்லை. அது சாத்தியமுமில்லை. ஆனால், புலிகளிலிருந்து விலகி அல்லது அங்கிருந்து தப்பியோடிச் சென்ற பின்னர் பணத்திற்காகவும், பொருளுக்காகவும் வேறு வாய்ப்புகளுக்காகவும் புலிகளைக் காட்டிக் கொடுப்பதென்பது சாதாரணம்.

ஆனால், இராணுவத்திற்குள் இருந்துகொண்டு புலிகளுக்கு தகவல் கொடுப்பதென்பது சாதாரணம். படையினரின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தி முக்கிய இராணுவ இரகசியங்களை அவர்களிடமிருந்து அறிந்துகொள்ள முடியும். தற்போதுகூட அது நடப்பதாகவே முத்தலிப் கொலை விசாரணையை நடத்திவரும் பொலிஸார் கூறுகின்றனர்.

தமிழ்க் குழுக்களையும் உளவாளிகளையும் புலிகளுக்கெதிராகப் பயன்படுத்துவதற்கு அரசும், படையினரும் பெருந்தொகைப் பணத்தைச் செலவிடுகின்றனர். பாதுகாப்பு அமைச்சுக்கு வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாவில் இது சாத்தியம். ஆனால், சிங்கள உளவாளிகளுக்கு பெருந்தொகைப் பணத்தைக் கொடுப்பதென்பது புலிகளுக்கு மிகவும் சிரமமானகாரியம்.

அவர்கள் ஓர் அரசல்ல. ஆனால், ஒரு அரசுக்கான கட்டமைப்பைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதால் அவர்களும் குறிப்பிட்டளவில் பணத்தை வசூலிக்கின்றனர். என்றாலும் உளவாளிகளுக்கு பெருந்தொகைப் பணத்தை வழங்குவதென்பது கடினமான காரியம். எனினும் தற்போது அவர்கள் சிங்கள உளவாளிகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்களா என்ற கேள்வியை படைத் தரப்பினர் எழுப்புகின்றனர்.

இதிலொன்றை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். கரும்புலிகள் தினத்தையொட்டி புலிகளின் உளவுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மான் மிக முக்கிய விடயமொன்றை வலியுறுத்தியிருந்தார். `கரும்புலிகளின் தற்கொலையால் கிடைக்கும் வெற்றிகளை, நவீன தொழில்நுட்ப வளத்தாலும், நல்ல இராணுவ பலத்தாலும் பெறுவதற்காக, அதனைப் பொருளாதார பலத்தாலும் ஈட்டமுடியும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியதற்கு பல அர்த்தங்களுண்டு. தற்கொலைக் குண்டுதாரியாக, திறமை மிகு போராளி ஒருவரைப் பயன்படுத்துவதால், அந்தச் சம்பவத்துடன் அந்த போராளியும் அழிந்துபோகிறார். அதனை எவ்வளவுக்கெவ்வளவு தவிர்க்க முடியுமோ அந்தளவிற்கு தவிர்க்க வேண்டுமானால், புலிகள் நவீன தொழில்நுட்ப வளத்தையும், இராணுவ பலத்தையும் பெறவேண்டும். இதற்கு அவர்களுக்கு பெரும் பொருளாதார பலம் வேண்டும்.

முத்தலிப்பின் கொலையில் பணம் எவ்வளவு வேலைகளைச் செய்ததென்பதை தற்போது பொலிஸ் விசாரணைகள் காட்டுகின்றன. இல்லையேல் தற்போதைய சமாதானச் சூழ்நிலையில் கரும்புலி ஒருவரையல்லவா இதற்காக அனுப்பியிருக்கவேண்டும்.

இதேநேரம், இன்னும் எத்தனையோ காரியங்களுக்காக புலிகள் எத்தனை சிங்கள உளவாளிகளை தென்பகுதியில் பயன்படுத்துகிறார்களோ எனத் தெரியாது படைத்தரப்பு கலக்கமடைந்துள்ளது. இதனால் சிங்கள உளவாளிகள் குறித்து இனிமேல் சிந்திக்க வேண்டிய நிலைக்கு படைத் தரப்பு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலைமை இவ்வாறிருக்கையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளூடான புலிகளின் பாதுகாப்பான போக்குவரத்துத் தொடர்பாக புலிகள் விதித்த இருவாரகால அவகாசம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. இது குறித்து அரசு தரப்பு இதுவரை எதுவித பதிலையும் தெரிவிக்கவில்லை. அரசதரப்பின் பதிலுக்காக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு காத்திருக்கிறது.

புலிகளின் கோரிக்கை குறித்துப் பாதுகாப்பு அமைச்சு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றியளிக்காததால் படைத்தரப்பு மீண்டும் தங்களுக்கிடையில் கூடி இது குறித்து சில தீர்மானங்களை எடுத்துள்ளன. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியூடான புலிகளின் போக்குவரத்துக்கு எந்த வகையில் பாதுகாப்பளிக்க முடியுமென அவர்களது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தைப் படைத்தரப்பு அரச சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜெயந்த தனபாலவிடம் கையளித்திருந்தது.

இது குறித்து ஜெயந்த தனபால சனிக்கிழமை ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கவிருந்ததார். இந்தக் கலந்தாலோசனையின் முடிவில் இதில் மாற்றங்களேதுமிருப்பின் அந்த மாற்றங்களோடு கண்காணிப்புக் குழுவிடம் படையினரின் தீர்மானங்கள் இன்று அல்லது நாளை கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. படையினரின் யோசனையை புலிகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இல்லையேல், இரு வாரகாலக்கெடு முடிவடைய, போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து தாங்கள் விலகுவதாகக் கூறும் இரு வாரகாலக்கெடுவை புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தைக் கண்காணிப்புக் குழுவே கையாள்கிறது. புலிகளின் காலக்கெடு அவர்களுக்கு திருப்தியின்றி முடிவடையும் பட்சத்தில் நிலைமை மோசமடையலாமென்பதால் இந்த விவகாரத்தில் சிலவேளைகளில் நோர்வே அனுசரணையாளர்கள் தலையிடக்கூடும். தற்போதைய நிலையில் இந்த விவகாரமே புலிகளைப் பொறுத்தவரை முக்கியமாகவுள்ளது.

இந்த விவகாரத்திற்கு தீர்வொன்று எட்டப்படும் பட்சத்திலேயே அனைத்துவிடயத்திலும்
thinakural[/size][size=9]

Print this item

  எனக்கு உதவி செய்யமுடியுமா?
Posted by: kavithaa - 07-10-2005, 11:26 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (5)

DivX to DVD maththirathukku program enna enru theriyuma therinsal uthavi sevinkala

Quote:DivX to DVD மாற்றுவதற்கு மென்பொருள் என்ன என்று தெரியுமா தெரிஞ்சா உதவி செய்வீங்களா


<b>*** தயவு செய்து தமிழில் எழுத முயற்சிக்கவும் - வலைஞன்</b>

Print this item

  திருமலை மாவட்ட கடற்புலிகளின் தளபதி வீரச்சாவு
Posted by: Sriramanan - 07-10-2005, 06:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (20)

திருகோணமலையில் இன்று இடம்பெற்றுள்ள தாக்குதல் ஒன்றில் திருமலை மாவட்ட கடற்புலிகளின் தளபதி டிக்கான் உட்பட இருபோராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக சங்கதி செய்திவெளியிட்டுள்ளது:

மேலதிக விபரத்தைப் படிக்க:
http://www.sankathi.net/index.php?option=c...=1529&Itemid=41

Print this item

  அந்தனிசில் காலமானார்
Posted by: Vaanampaadi - 07-10-2005, 04:32 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (2)

அந்தனிசில்
காலமானார்

சொல்லேருழவர் ம.க.அ.அந்தனிசில் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் மட்டக் களப்பில் காலமானார்.
"தீப்பொறி', "ஒரு தீப்பொறி' ஆகிய பத் திரிகைகளின் ஆசிரியராக இருந்த அந்தனிசில் தமது அனல் கக்கும் வசனங்களாலும் சந்தம்
நிறைந்த தமது அதிரடித் தலைப்புகளி னாலும் தமது பத்திரிகையைப் பரபரப்புக்கு உட்படுத்தியவர்.
இலங்கை அரசினால் தமது பத்திரிகை "சீல்' வைக்கப்பட்ட பின்னரும் அந்தப் பத் திரிகையின் பெயருக்கு முன்னால் "ஒரு' என்ற சொல்லைச் சேர்த்து புதிய பெயரில் அதே சூட்டோடு பத்திரிகையை வெளியிட்டு இலங் கைச் சட்டங்களுக்கு "டிமிக்கி' கொடுத்தவர். பத்திரிகையாளனுக்குரிய மிடுக்கோடு விட யங்களை அணுகி அதற்காக இரண்டு வரு டங்கள் சிறை வாசமும் அனுபவித்தவர்.
சிறந்த மல்யுத்த வீரரான அவர், சிறையி லும் தமது மல்யுத்த திறமையை வெளிப்படுத்தி சிறை அதிகாரிகளை வியக்க வைத்தவர்.
தமது இறுதிக் காலத்தில் தமிழின் தொன்மையையும் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்தும் கருத்துச் செறிவுள்ள கட்டுரை களை எழுதிவந்தார். அவை "சுடர் ஒளி' வார இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருந் தன.
தமது இறுதிக் காலத்தில் கண்பார்வைக் கோளாறை எதிர்கொண்ட அந்தனிசில் அதற் காகக் கலங்காமல் தமது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு மத்தியிலும் திடகாத்திரமாக இருந்த அவர், நேற்றுப் பிற்பகல் திடீரென சுகவீனமுற்றார். வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லமுன்னர் அவர் உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Uthayan

Print this item

  தந்தை தற்கொலை
Posted by: hari - 07-10-2005, 03:38 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

<b> சுனாமியால் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தந்தை தற்கொலை</b>


சுனாமி பேரலையில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக் கிழமை மட்டக்களப்பு நாவலடியில் இடம்பெற்றுள்ளது.

நாவலடியைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார். சுனாமி பேரலையினால் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த இவர் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். தமது முச்சக்கர வண்டி உட்பட சொத்துகளை உறவினர்களிடம் கையளித்து இவர் நாவலடி காயத்திரி பீடத்திற்கு அருகில் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனைக்கண்ட பொது மக்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளை உயிரிழந்தார். இவர் நஞ்சருத்தியே மரணம் அடைந்ததாக தெரியவந்தது.

Print this item

  அந்நியன்' ஆதிக்கம்
Posted by: SUNDHAL - 07-10-2005, 02:33 AM - Forum: சினிமா - Replies (1)

மாபைல் ஃபோன்களில் தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும் எஸ்.எம்.எஸ்.,களில் அந்நியன் திரைப்படம் சம்பந்தமான ஜோக்குகளே தற்போது அதிகம் இடம் பெறுகின்றன.

தொலைத்தொடர்பு துறையில் மொபைல் ஃபோன்கள் வருகை ஒரு புரட்சி ஏற்படுத்தியது. மொபைல் ஃபோன்களில் தகவல் பரிமாற்றத்துக்கு எஸ்.எம்.எஸ்., (ஷார்ட் மெசெஜ் சர்வீஸ்) பயன்படுகிறது.

அவ்வப்போது நாட்டு நடப்புகளைக் கிண்டல் செய்து மொபைல் ஃபோன்களில் எஸ்.எம்.எஸ்., உலா வரும். ஜெயலட்சுமி கைது மற்றும் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை சம்பந்தப்படுத்தி அப்போது பரபரப்பாக ஒரு எஸ்.எம்.எஸ்., உலா வந்தது.

சினிமா பாடல்களை ரிங் டோனாக வைத்துக் கொள்ளும் மொபைல் பிரியர்கள். எஸ்.எம்.எஸ்., களிலும் தங்கள் சினிமா விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றனர்.

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "அந்நியன்' தொடர்பான எஸ்.எம்.எஸ்., களே தற்போது மொபைல் ஃபோன்களில் அதிகம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

அந்நியன் நாயகன் அம்பி அநியாயங்கள் கண்டு பொங்குகிறான். அம்பி அந்நியன் வடிவம் கொண்டு தவறு செய்தவர்களைக் கருட புராணத்தின் படி தண்டிக்கிறான். காதலிக்காக நவநாகரீக இளைஞன் "ரெமோ'வாக மாறுகிறான்.

எஸ்.எம்.எஸ்., செய்பவர்கள் தனக்கு ஃபோன் செய்யாத நண்பர்களை அந்நியன் பாணியில் இப்படி மிரட்டுகின்றனர்.

"அந்நியன் அவதரித்துவிட்டான், எஸ்.எம்.எஸ்., அனுப்பாதவர்கள், கால் செய்து பேசாதவர்கள், மிஸ்டு கால் கொடுப்பவர்கள், கடலைப் போட்டு நெட்வொர்க் பிஸியாக்குபவர்கள், தேவையில்லாமல் ஸ்விட்ச் ஆஃப் செய்பவர்கள் அனைவரும் கருடபுரணத்தின் படி 24 மணி நேரத்தில் தண்டிக்கப்படுவார்கள்'என நண்பர்களுக்கு காலை வணக்கம் கூறி எழுப்புபவர் இப்படி மெசெஜ் கொடுக்கின்றனர்.

அம்பி: ""நாழியாயிடுத்து எழுந்திரிங்கோ''

ரெமோ: ""ஹேய் பேபி கமான் யா, இட்ஸ் ஆல்ரெடி லேட், கெட் அப் யா!''.

அந்நியன்: ""யேய் பாடு, கம்மனாட்டி, எழுந்திரிடா''.

"குட் மார்னிங்' என முடிகிறது.

அந்நியன் தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் வெற்றி பெறவில்லை. எஸ்.எம்.எஸ்., உலகிலும் அந்நியனுக்கு வெற்றி தான்

Print this item

  குழந்தைகளை கொல்லும் தாய்மார்கள்
Posted by: SUNDHAL - 07-10-2005, 02:28 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (9)

இத்தாலியில் தாய் மார்கள் வணங்கத்தக்க வாழும் தெய்வங்களாக போற்றிப் பாராட்டப்படுகின்றனர். அப்படிப்பட்ட நாட்டில் சமீப காலமாக பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கொல்வது அதிகரித்துள்ளது. இதனால், அம்மாக் கள் மீது இத்தாலியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சீர்குலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள நகரமான லெக்கோவைச் சேர்ந்தவர் மரியா பேட்ரிஜியோ (29). இந்தப் பெண் கடந்த ஜூன் மாதத்தில் தனது ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றார்.

பின்னர் வீட்டில் திருடர்கள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்து விட்டு, தனது குழந்தையையும் கொன்றது போன்ற தோற்றத்தை <உருவாக்கினார். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மை அம்பலமானது.

இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அழகுசாதன பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 23 வயது பெண் ஒருவர் தனது மகளைக் கொன்றார்.

பின்னர் தன் கையிலேயே பிளேடால் அறுத்துக் கொண்டு கொலையை மறைக்க வேறு விதமாக நாடகமாடினார்.

அதேநாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கடலோர நகரமான ரிமினியில் வசிக்கும் ஒரு பெண் தனது மகளை ஜன்னலில் இருந்து துõக்கியெறிந்து கொன்றார். இந்த சம்பவங்கள் இத்தாலி நாட்டை உலுக்கியுள்ளன.

Print this item

  சொகுசு வாகனத்திலிருந்து நால்வரின் சடலங்கள் மீட்பு
Posted by: AJeevan - 07-09-2005, 10:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>சொகுசு வாகனத்திலிருந்து நால்வரின் சடலங்கள் மீட்பு</b>
<img src='http://www.virakesari.lk/VIRA/20050710/images/1.jpg' border='0' alt='user posted image'>

டி.சார்ள்ஸ் பீட்டர்ஸ்
கம்பளை வெலம்பட எனுமிடத்தில் நேற்று முன்தினம் கடத்திச் செல்லப்பட்ட மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பிரபல வர்த்தகர்களுமான அமீர் ஹாஜி உட்பட நால்வர். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக சொகுசு வாகனம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான அமீர் ஹாஜி (வயது 38 ), அவரது மருமகன் சகீர் டீன் (வயது 19), சாரதியான பாஹிம் மற்றும் பணியாளர் என்பவருமே இவ்வாறு கறுவாத்தோட்ட பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.

சொகுசு வாகனம் ஒன்று நீண்ட நேரமாக மலலசேகர மாவத்தையில் நின்றதையடுத்து அவ்வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட பொலிஸார் வாகனத்தில் இருந்து கைகள், கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் சடலங்களை மீட்டுள்ளனர்.

கம்பளை, வெலம்பட எனுமிடத்தில் வசித்து வந்த அமீர் ஹாஜி, ஆறு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் தனது சகோதரியின் மகனான சகீர்டீன், சாரதி பாஹிம் மற்றும் பணியாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பகல் ஜும்மா தொ கைக்கு பின் பள்ளிவாசலில் இருந்து வெளியே வரும் போது பொலிஸ் சீருடையில் பள்ளிவாசலில் வானுடன் காத்துநின்ற மூவர் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வருமாறு அவர்களை அழைத்தபோது அமீர் ஹாஜியும் அவரது மருமகனும் அந்த வாகனத்தில் செல்ல சாரதியும், பணியாளரும் அமீர் ஹாஜிக்கு சொந்தமான மொண்டரோ சொகுசு வாகனத்தில் சென்றனர். அமீர் ஹாஜி கொண்டு செல்லப்பட்ட வாகனத்துக்கு பின்னால் இவர்களின் வாகனம் சென்றது. அதன் பின்னர் இவர்கள் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டனர் எனவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

தேயிலை வர்த்தகத்திலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்த அமீர் ஹாஜிக்கு வர்த்தக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இடையூறுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் பழிவாங்கல் காரணமாகவும் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

அமீர் ஹாஜியுடன் கொலை செய்யப்பட்ட அவரது மருமகன் சகீர் டீன் கல்வி பயின்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏனைய இருவரும் இன்னமும் திருமணம் செய்யாதவர்கள் எனவும் தெரிய வருகிறது.

கொழு ம்பில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திரிகளும், முக்கியஸ்தர்களும் வசித்து வரும் இடத்தில் இருந்து இந்த நான்கு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

அதுதவிர, பொலிஸ் சீருடையில் வந்தவர்கள், இந்தக் கொலையைச் செய்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் கேட்டபோது,

""தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் சீருடையில் வந்தவர்கள் இவர்களை அழைத்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இக்கொலையுடன் பொலிஸார் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட அமீர் ஹாஜி உட்பட நால்வரின் சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-virakesari

Print this item

  அட சாத்திரிக்கே அல்வா
Posted by: SUNDHAL - 07-09-2005, 03:38 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (5)

ஜோதிடம் கேட்பதுபோல் வந்து 18 பவுன் நகைகளைக் களவாடினர்.

முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜோதிடர் கிருஷ்ணராஜ் (62). இவரது வீட்டுக்கு ஜோதிடம் கேட்பது போல் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வியாழக்கிழமை வந்தார். தனது மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜாதகம் ஒன்றைத் தந்தார். ஜோதிடம் கேட்டவுடன், ""சிறப்பாகச் சொன்னீர்கள்; நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை'' என பாராட்டினார். ""உங்கள் கையாலேயே மகளுக்கு நகை எடுக்க வேண்டும்'' என்று அவரை நகைக் கடைக்கு அழைத்தார்.

ஜோதிடரும் அந்த நபரின் பேச்சை நம்பி முகலிவாக்கத்தில் உள்ள நகைக் கடைக்கு அவருடன் சென்றார். 18 பவுன் நகைகளைத் தேர்வு செய்தனர். நகைக் கடையில் பணம் கேட்டபோது பணத்தை ஜோதிடரிடம் கொடுத்தனுப்புகிறோம் என்று அந்த நபர் கூறினாராம். இதையடுத்து கடை ஊழியரை அவர்களுடன் அனுப்பினர். ஜோதிடரின் மனைவியிடம் நகைகளைக் காட்ட வேண்டும் என்று அந்த நபர் கூறியதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் ஜோதிடர்.

அங்கு சென்றதும் ஜோதிடர் பாத்ரூம் சென்றார். மனைவி காபி கொண்டு வந்து தந்தார்.

அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த ஜோதிடரின் மகன் வீடு திரும்பினார். அவரிடம் பேச்சுகொடுத்த அந்த நபர் ""ஜோதிடம் பார்க்க வந்தேன்; போரூர் பஸ் நிலையத்தில் விட்டுவிடவும்'' என்று அவரிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அந்த நபரை மோட்டார் சைக்கிளில் போரூரில் விட்டுவந்தார் ஜோதிடரின் மகன்.

சிறிதுநேரம் கழித்து ஜோதிடர் வந்து, அந்த நபர் எங்கே என்று கேட்டபோது போரூரில் விட்டுவந்ததாக அவரது மகன் கூறினார். அப்போது தான் பணம் தராமல் அந்த நபர் நகைகளுடன் தப்பிவிட்டது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் பற்றி நகைக் கடை ஊழியர் கடைக்கு வந்து விவரத்தைச் சொன்னார்.

"அந்த நபரை எங்களுக்கு தெரியாது, நீங்கள்தான் அழைத்து வந்தீர்கள்; நகையாகவோ பணமாகவோ கொடுங்கள்' என அந்த ஜோதிடரைக் கடையிலேயே உட்காரவைத்துவிட்டனர்.

என்ன செய்வதென்று தெரியாது திகைத்த ஜோதிடர் தனது மனைவி அணிந்திருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தார். அதுதவிர மீதி பணத்துக்கு கடன் பத்திரம் எழுதித் தந்துவிட்டு வெளியே வந்தார். இது குறித்து மாங்காடு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Print this item

  ஆசை வார்த்தையில் மயங்கி கற்பு இழக்கும் இளம்பெண்கள
Posted by: SUNDHAL - 07-09-2005, 02:33 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

சென்னை புறநகர் பகுதிகளில் இளம்பெண்களை ஏமாற்றி, கர்ப்பமானதும் கை கழுவி விட்டு ஓடும் சம்பவங்கள் அதிகாpத்து வருகின்றன.

சிறுமிகள், மணமாகாத இளம்பெண்கள், மணமாகி கணவனைப் பிhpந்த பெண்கள் என பல தரப் பட்ட பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களை பணிய வைத்து கர்ப்பமாக்கி விட்டு பின்னர் கம்பி நீட்டுவது அதிகாpத்து வருகிறது. ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த பெண்கள் போலீசில் முறையிட்ட பின்னர் தான் இந்த அந்தரங்க விஷயங்கள் எல்லாம் அம்பலத்துக்கே வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இந்தக் கொடுமைகள் அதிகாpத்து விட்டன. சென்னையில் ஒரே நாளில் 3 வாலிபர்கள், காதலித்த பெண்களை ஏமாற்றிய குற்றத்துக்காக கைது செய்யப் பட்டனர். அதன் விவரம் வருமாறு„-

மாங்காடு„சென்னை அடுத்த மாங்காடு காவல் எல்லைக்குட்பட்ட கெருகம்பாக்கம் அன்னை இந்திராநகரைச் சேர்ந்தவர் பழனி - பெருமாயி தம்பதியினர். இவர்களுக்கு செல்வி (வயது15) என்ற மகள் உள்ளார். இவர்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள தனியார் செங்கல் Nளையில் லாhp டிரைவராக ரமேஷ் (வயது20) என்ற வாலிபர் வேலை செய்து வருகிறhர். அதே பகுதியைச் சேர்ந்த சின்னன் என்பவாpன் மகனான இவர் செல்வியிடம் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்தார். செல்வியின் தாய் - தந்தையர் வீட்டில் இல்லாத நேரங்களில் ரமேஷ் அங்கு சென்று காதல் லீலைகளில் ஈடுபடுவாராம்.

கர்ப்பம்„இந்தநிலையில் செல்வியை கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு வெளியூருக்கு அழைத்துச் சென்ற ரமேஷ் அங்கு வைத்து தவறhக நடக்க முயற்சித்தாராம். இதற்கு செல்வி உடன்படாததால் சாமி படத்தின் மீது சத்தியம் வைத்து, …உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் † என்று கூறினார். இதில் மயங்கிய செல்வி தன்னை ரமேசிடம் இழந்தாள். இந்த நிலையில் மூன்று மாத கர்ப்பமடைந்த செல்வியின் நிலைபற்றி தொpந்த அவளது பெற்றேhர் விசாhpத்தனர். இதில் உண்மைநிலை தொpயவந்தது. இதனையடுத்து ரமேசை செல்வி சந்தித்து, தான் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகவும், ஊரார் கேலி பேசுவதாகவும் கூறி அழுததுடன் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள் என கெஞ்சினாள். இதற்கு மறுப்பு தொpவித்த ரமேஷ், உன்னுடைய கர்ப்பத்திற்கு நான் காரணமில்லை என்று கூறி செல்வியை விரட்டியடித்தாராம். ஊரார் ரமேசிடம் நியாயம் கேட்டும் பயனில்லாமல் போனதால் இதுகுறித்து பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் செல்வியின் தந்தை பழனி புகார் செய்தார். புகாhpன் போpல் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதனடிப்படையில் ரமேசை நேற்று இரவு மகளிர் போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுமியான செல்வியை மருத்துவ பாpசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறிக்கைக்கு பின்னரே செல்வியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது தொpயவரும்.

ஆவடி‰ அடுத்த திருமுல்லைவாயல் அய்யப்பாக்கம் கிராமம் தெருவீதிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பலராமன். இவரது மகள் நிர்மலா (வயது 27). இவரது கணவர் ஜெயக்குமார். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் மட்;டுமே இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனராம். பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிhpந்தனர். நிர்மலா பெற்றேhர் வீட்டில் தங்கியிருந்து பூ வியாபாரம் செய்து வருகிறhர். இந்த நிலையில் நிர்மலாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் மகன் சிவராஜ; (வயது 28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிவராஜ; தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றுகிறhர். இவர் நிர்மலாவிடம், … உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்† என கூறி பலமுறை உல்லாசமாக இருந்தாராம். இதனையடுத்து நிர்மலா நான்குமாத கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில் காதலி நிர்மலாவைவிட்டு சிவராஜ; விலகிச் சென்றhராம். மேலும், சிவராஜுக்கு அவரது பெற்றேhர் மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடு செய்தனராம்.

கொலை மிரட்டல்„ இதனையறிந்த நிர்மலா காதலன் சிவராiஜ சந்தித்து நியாயம் கேட்டாராம். அப்போது சிவராஜ; மற்றும் அவரது உறவினர்கள் சேகர் (வயது 45), ராஜh (வயது 50), ஆண்டாள் (வயது 45) ஆகியோர் சேர்ந்து நிர்மலாவை கொலை செய்து விடுவதாக மிரட்டினராம். இதனையடுத்து நிர்மலா ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாலா வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். பின்னர் சிவராiஜயும், உறவினர் சேகரையும் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜh மற்றும் அவரது மனைவி ஆண்டாள் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பம்மல்„ ‰பம்மல், எம். ஜp.ஆர்.நகரை சேர்ந்த ராnஜந்திரன் என்பவர் மகள் Nhpயா (வயது20). இதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் மகன் துரை (வயது26). இவர்கள் நாகல்கேணியில் உள்ள ஒரு தோல் கம்பெனியில் ஒன்றhக வேலைபார்த்து வருகிறhர்கள். இதன் காரணமாக இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. காதலர்கள் பல இடங்களிலும் சுற்றித்திhpந்து உல்லாசமாக இருந்தனர். இதன் விளைவாக Nhpயா இரண்டு மாதம் கர்ப்பினியானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி Nhpயா கேட்;டுள் ளார். அதற்கு துரை மறுப்பு தொpவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கர்நகர் காவல்நிலையத்தில் Nhpயா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பூபதிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் காpயப்பா ஆகியோர் காதலர்கள் Nhpயாவையும் துரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது துரை கூறும்போது, Nhpயாவின் கர்ப்பத்துக்கு நான்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று மறுத்துவி;ட்டார். போலீசார் காரணம் கேட்டதற்கு Nhpயாவின் நடத்தை சாpயில்லை என்று கூறியதாக தொpகிறது.



இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்று இருந்தாலும் புலத்தில் கூட பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் ஆகவே அவதானமாக இருத்தல் நன்று.

Print this item