Yarl Forum
அந்தனிசில் காலமானார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: அந்தனிசில் காலமானார் (/showthread.php?tid=3946)



அந்தனிசில் காலமானார் - Vaanampaadi - 07-10-2005

அந்தனிசில்
காலமானார்

சொல்லேருழவர் ம.க.அ.அந்தனிசில் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் மட்டக் களப்பில் காலமானார்.
"தீப்பொறி', "ஒரு தீப்பொறி' ஆகிய பத் திரிகைகளின் ஆசிரியராக இருந்த அந்தனிசில் தமது அனல் கக்கும் வசனங்களாலும் சந்தம்
நிறைந்த தமது அதிரடித் தலைப்புகளி னாலும் தமது பத்திரிகையைப் பரபரப்புக்கு உட்படுத்தியவர்.
இலங்கை அரசினால் தமது பத்திரிகை "சீல்' வைக்கப்பட்ட பின்னரும் அந்தப் பத் திரிகையின் பெயருக்கு முன்னால் "ஒரு' என்ற சொல்லைச் சேர்த்து புதிய பெயரில் அதே சூட்டோடு பத்திரிகையை வெளியிட்டு இலங் கைச் சட்டங்களுக்கு "டிமிக்கி' கொடுத்தவர். பத்திரிகையாளனுக்குரிய மிடுக்கோடு விட யங்களை அணுகி அதற்காக இரண்டு வரு டங்கள் சிறை வாசமும் அனுபவித்தவர்.
சிறந்த மல்யுத்த வீரரான அவர், சிறையி லும் தமது மல்யுத்த திறமையை வெளிப்படுத்தி சிறை அதிகாரிகளை வியக்க வைத்தவர்.
தமது இறுதிக் காலத்தில் தமிழின் தொன்மையையும் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்தும் கருத்துச் செறிவுள்ள கட்டுரை களை எழுதிவந்தார். அவை "சுடர் ஒளி' வார இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருந் தன.
தமது இறுதிக் காலத்தில் கண்பார்வைக் கோளாறை எதிர்கொண்ட அந்தனிசில் அதற் காகக் கலங்காமல் தமது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு மத்தியிலும் திடகாத்திரமாக இருந்த அவர், நேற்றுப் பிற்பகல் திடீரென சுகவீனமுற்றார். வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லமுன்னர் அவர் உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Uthayan


- stalin - 07-10-2005

அந்தனிசில் அவர்கள் திமுக பாணியில பத்திரிகையை புதிய பாணியில் எழுதி அப்போதைய அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் .தீப்பொறி பத்திரிகை சுதந்திரன் பத்திரிகைக்கு நிகராக அரசியல் பத்திரிகையாய் இருந்துள்ளது அவருடைய எழுத்துக்களால் இளைஞர்க்கு ஒரு உத்வேகம் கொடுத்தவர் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூற தக்கது.


- Vasampu - 07-10-2005

அன்னார் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அன்னாரின் தமிழ்த் தொண்டு என்றும் நிலைத்திருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லார்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.