Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 576 online users.
» 0 Member(s) | 572 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,261
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  தாயே... தாயே...!
Posted by: sOliyAn - 07-13-2005, 08:48 PM - Forum: கவிதை/பாடல் - Replies (12)

ஐயிரு திங்கள் சுமந்தெனை யீன்று
பவ்விய மாகக் காத்தாயே
மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய்
ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே
ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய்
சுற்றம் உவக்க வாழ்ந்தாயே
கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய்
என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே.

சேயாய் உதித்துன் தாயையும் இழந்து
பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே
மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய
துணையைப் பிரிந்து தவித்தாயே
மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும்
தேசத்தால் சிதைய சகித்தாயே
நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை
சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே.

எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன்
ஈகை நிறுத்திக் களித்தாயே
வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து
உறவுப் பாலம் அமைத்தாயே
அள்ளி அமுது வந்தவர்க் கீந்து
அதிலே உன்னை நிறைத்தாயே
சொல்லில் அடங்காப் பண்பின் உருவே
அல்லல் அறுக்கப் பறந்தாயே!

பாதுகாப்பென நகரம் வந்தும்
பிறந்தமண் காணத் திரும்பி வந்தாயோ
போதும் வாழ்வென நினைந்து நீயும்
பரமன் பாதம் புகுந்தாயோ
தொப்புள் கொடியின் புனிதப் பந்தம்
போதும் எனவும் நினைந்தாயோ
மாயை உலகைத் துறந்த என்தாயே!
நின் ஆன்மா சாந்தி! சாந்தி!!

-இராஜன் முருகவேல் (திருமதி முருகவேல் சரோஜினிதேவி அவர்களின் நினைவுமலரிலிருந்து.. 1.07.2005)

Print this item

  விடுதலை விடுதலை விடுதலை..!!
Posted by: sOliyAn - 07-13-2005, 08:32 PM - Forum: நகைச்சுவை - Replies (18)

மகனது பள்ளி பெறுபேறுகளை பார்வையிடுகிறார் தாய்.
தாய்: இதென்னத்தில 4 ?
மகன்: டொச்..
தாய்: 3 வருசமா பள்ளி போறாய்.. டொச்ல 1 எடுக்க முடியாதா?
மகன்: (தனக்குள்) 15 வருசமா யேர்மனீல இருக்கிறா.. டொச் என்றதையே வாசிக்கத் தெரியேலை.. அதுக்கை ஒரு கேள்வி..!

Print this item

  கொலை செய்யப் பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் சஞ்சீவன்
Posted by: வினித் - 07-13-2005, 05:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

2000ஆம் ஆண்டில் கொலை செய்யப் பட்ட யாழ்.இந்துக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் சஞ்சீவனின் 5ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று காலை 9 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த தானம் இடம்பெறவுள்ளது.
யாழ்.இந்து பழைய மாணவர்கள் இணைந்து இரத்ததானம் வழங்க ஏற்பாடாகியுள்ளது.

இதேவேளை -
சஞ்சீவனின் நினைவு நிகழ்வுகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெறவிருக்கின்றன.

தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

நன்றி சூரியன்,com

Print this item

  2004 ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் ஆட்டோக
Posted by: SUNDHAL - 07-13-2005, 05:07 PM - Forum: சினிமா - No Replies

சிறந்த நடிகராக சாயிப் அலிகான் தேர்வு செய்யப்பட்டார் (படம்: ஹம்தும்)
சிறந்த நடிகையாக கன்னட நடிகை தாரா (படம்:ஹசீனா)
சிறந்த படமாக இந்தி படம் வீர் சாரா
சிறந்த பாப்புலர் படமாக தமிழ் படம் ஆட்டோகிராப் தேர்வு பெற்றது
சிறந்த பின்னணி பாடகர் உதித் நாராயணன்(படம்:யாக் தாரா ஓக் தாரா)
சிறந்த பின்னணி பாடகி சித்ரா சுப்பிரமணியம்(படம்:ஆட்டோகிராப்)
சிறந்த இயக்குனராக புத்தாவ் தேவ் தாஸ் குப்தா (பெங்காலி படம் ஸ்வப்னர் தின்)
சிறந்த குழந்த நட்சத்திரம் சோட்டா சிபய்
சிறந்த பாடலாசிரியராக தமிழ்நாட்டை சேர்ந்த பா. விஜய் தேர்வு பெற்றார்(படம்:ஆட்டோகிராப்)
நர்கிஸ் தத் விருது பெற்ற படம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Print this item

  வவுனியாவில் மாணவிகள் மீது சேட்டை புரிந்த ஆசிரியர்
Posted by: தமிழரசன் - 07-13-2005, 02:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வவுனியா தெற்கு கல்வி வலய பாடசாலையொன்றின் மாணவிகள் மீது அதே பாடசாலை ஆசிரியரொருவர் பாலியல் ரீதியான சேட்டைகளைப் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து பாடசாலை செல்லும் மூன்று மாணவிகளே இவ்வாறு ஆசிரியரால் விரும்பத்தகாத செயல்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட மாணவிகள் பாடசாலை செல்லாதுள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தொண்டர் நிறுவனமொன்றின் பணியாளர்களுக்கு தெரியவந்ததுடன், வவுனியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. பாதிப்புக்குள்ளான மாணவிகள் தாம் மீண்டும் பாடசாலைக்கு செல்வதாயின் தம்மை இம்சைப்படுத்திய ஆசிரியர் தமது பாடசாலையில் கற்பிக்கக்கூடாது அல்லது வேறு பாடசாலையில் கல்விகற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்து முகாம்களில் பல்வேறு நெருக்கடிகளுடன் வாழ்ந்து வரும் மாணவர்கள் பாடசாலை செல்வதைத் தவிர்த்து வரும் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதைக் குழப்புவது மிக மோசமான செயல்.

sooriyan.com

Print this item

  இராணுவப் பகுதிகளிலிருந்து போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகள
Posted by: narathar - 07-13-2005, 11:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (24)

தென்தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் போராளிகளும் வெளியேறி தமது நிர்வாகப் பகுதிகளுக்கு திரும்புமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் இன்று உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.


2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதிலிருந்து சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அரசியல் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

யுத்த நிறுத்த சரத்துகளின் படி நிராயுதபாணிகளாக அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிங்கள இராணுவம் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி ஒரு நிழல் யுத்தத்தை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தது.

நீடித்த இந்த நிழல் யுத்தம் ஒரு யுத்த சீண்டலுக்கானதே என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் பலமுறை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது விசனத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆயினும் கடந்த மாதம் வெலிக்கந்தையில் 40 போராளிகளின் உயிருக்குக் குறிவைத்து சிங்கள இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுக்களும் பாரிய தாக்குதலை நடத்தின. இதில் ஒரு போராளி படுகாயமடைந்தார்.

இதனால் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் அரசியல் பணியில் ஈடுபட்டுள்ள போராளிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 14 நாள் கெடு விதித்தனர். ஆனால் சிறிலங்கா அரசு இதற்கு உரிய பதிலை அளிக்காத நிலையில் மீண்டும் செல்வநாயகபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது தாக்குதல் நடத்தி இருவரை படுகொலை செய்தனர்.

இந்தச் சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்திருந்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையிலேயே தென் தமிழீழத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து போராளிகளை வெளியேறி தமது நிர்வாகப் பகுதிகளுக்குத் திரும்புமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் இன்று உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

http://www.eelampage.com/?cn=18516

Print this item

  Yahoo வின் புதிய பரீட்சார்த்த வலைப்பதிவு
Posted by: தமிழரசன் - 07-13-2005, 06:46 AM - Forum: இணையம் - No Replies

Yahoo வின் புதிய பரீட்சார்த்த வலைப்பதிவு(Yahoo! 360) சேவையினைப் பயன்படுத்த இங்கே அழுத்துக.
http://360.yahoo.com/login.html?.done=http...com%2F&.src=360

The beta testing of Yahoo 360, the social networking come blogging tool is now open to the general public.

If you never get an invite, or are interested in trying out the Yahoo offering, sign up here if you have a current Yahoo I.D, of follow the prompts if you don’t.
[senthazhal]

Print this item

  புதிய இனையம்
Posted by: தமிழரசன் - 07-13-2005, 06:29 AM - Forum: இணையம் - Replies (2)

www.tamilgoogle.com

Print this item

  திருமலையில் பதற்றம்
Posted by: தமிழரசன் - 07-13-2005, 06:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

படைக் காவலரணுக்குள் கைக்குண்டு வீச்சு: திருமலையில் பதற்றம்
றுசவைவநn டில நுடடயடயn றுநனநௌனயலஇ 13 துரடல 2005

திருமலையில் இருந்து கண்டி வீதியில் 3 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள காந்தி நகரில் அண்மைக்காலமாக சாதாரண பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிங்கள இராணுவம் நேற்று நிரந்தர காவலரண் ஒன்றை அமைத்தது. இதனையடுத்து இன்று காலை இக் காவலரண்மீது கைக்குண்டு வீசப்பட்டது. இதன்போது இரு சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த படையினர் தற்போது திருமலை பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கைக்குண்டுத் தாக்குதலையடுத்து அப்பகுதிகளில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகின்றது.

பாடசாலை வாசல்களுக்கு முன்னால் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த இருநாட்களில் படையினர் மீது கைக்குண்டு வீசும் சம்பவங்கள் பல நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
sankathi.net

Print this item

  போராளிகளின் வித்துடல்களுக்கு திரண்டு வந்து மக்கள் அஞ்சலி
Posted by: தமிழரசன் - 07-12-2005, 05:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

திருகோணமலை மாவட்டம் செல்வ நாயகபுரத்தில் விடுதலைப் புலிகளின் அலு வலகம் தாக்கப்பட்டுஇ போராளிகள் உட்பட நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண் டித்து நேற்று முழுநாளும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று பூரண கதவ டைப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
துக்கதினத்தை முன்னிட்டு வீதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. மஞ்சள்இ சிவப்புக் கொடிகளும் கட்டப்பட்டி ருந்தன. அனைத்து நடவடிக்கைகளும் அமைதியுடனும் சோகத்துடனும் இடம் பெற்றன.
உயிரிழந்த போராளிகளின் வித்துடல் களும் ஏனையவர்களின் புகழுடல்களும் மக்கள் அஞ்சலிக்காக நேற்று இராணுவக் கட் டுப்பாட்டுப் பிரதேசங்களில் வைக்கப்பட்டி ருந்தன.
பெரும் எண்ணிக்கையான மக்கள் திரண்டு வந்து போராளிகளுக்குத் தமது இறுதி அஞ் சலிகளைச் செலுத்தினர். தேசிய துணைப் படை வீரர் சின்னவனின் (அனுசன் குலவீர சிங்கம் 6ஆம் வட்டாரம்இ சாம்பல்தீவு) வித் துட திருகோணமலையிலுள்ள விடுதலைப் புலிகளின் மாவட்ட அரசியல்துறை அலு வலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டி ருந்தது.
லெப்டினன்ட் கேணல் டிக்கான் அல்லது வேங்கையின் (செபஸ்தியாம்பிள்ளை ஜெயச் சந்திரன்இ 6ஆம் வட்டாரம்இ பெரிய குளம்) வித்துடல் அவரது வீட்டில் மக்கள் அஞ் சலிக்காக வைக்கப்பட்டது.
2 ஆம் லெப்டினன்ட் இளம்புலியின் (தங்கராசா விஜேந்திரராசா) வித்துடல் 6ஆம் கட்டையில் அஞ்லிக்காக வைக்கப்பட் டுள் ளது.
நாட்டுப்பற்றாளர் பாபுவின் (முத்தையா கோணேஸ்வரன்இ அன்புவழிபுரம்)
புகழுடம்பு அன்புவழிபுரத்திலுள்ள அவ ரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது.
நான்கு இடங்களிலும் அப்பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
முற்பகல் 11 மணியளவில் நான்கு வித் துடல்களும் ஊர்வலமாக எடுத்துவரப்பட் டன. 6ஆம் கட்டையில் அவை இணைக்கப் பட்டு அங்கிருந்து ஒன்றாகக் கும்புறுப்பிட் டிக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அங்கும் அவை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட் டன.
அங்கு அஞ்சலிக்கூட்டம் முடிந்ததும் வித் துடல்கள் ஊர்வலமாக நிலாவெளிஇ சல்லிஇ சாம்பல்தீவு ஆகிய இடங்கள் வழியாக மூன் றாம் கட்டையடிக்கு எடுத்துவரப்பட்டன. வழி நெடுகிலும் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சர்ச்சைக்குரிய புத்தர் சிலை அமைந் துள்ள இடத்திற்கு இட்டுச்செல்லும் எம்.ஸி. வீதியில் வைத்துப் பொலீஸார் வித்துடல் களை அவ்வழியாகக் கொண்டுசெல்லாது தடுத்தனர். அதனையும் மீறி மக்கள் வித்து டல்களோடு அதேவழியால் சென்று மூன் றாம் குறுக்குத்தெரு வழியாகப் பிரதான வீதியை அடைந்தனர்.
அங்கிருந்து பஸ்தரிப்பு நிலைய வீதி யைக் கடந்து டொக்யாட் வீதிக்குக் கொண்டு செல்லப்பட்ட வித்துடல்கள் முற்றவெளி மைதானத்தில் வைக்கப்பட்டன.
முற்றவெளி மைதானத்தில் பொதுக்கூட் டம் நடைபெற்றது. அதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஆர்.சம்பந்தனும்இ புலி களின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனும் இரகல் உரைகளை ஆற்றினர்.
அதன் பின் அங்கிருந்து சர்வதேச செஞ் லுவைச் சங்க வாகனங்களில் பிற்பகல் ஐந்து மணியளவில் போராளிகளினதும் துணைப் படை வீரரதும் வித்துடல்கள் சம்பூர் ஆலங் கேணி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைப் பதற்காக எடுத்துச்செல்லப்பட்டன.
நாட்டுப்பற்றாளர் பாபுவின் புகழுடல் இறுதிக்கிரியைகளுக்காக அன்புவெளிபுரத் தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
போராளிகள் உட்பட நால்வரினதும் கொலைகளைக் கண்டித்து மாவட்டத்தில் இன்று முழுக்கடையடைப்பு இடம்பெறவுள் ளது. திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை இந்தக் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத் துள்ளது.
நேற்றைய அஞ்சலி நிகழ்வுகளையொட்டி திருகோணமலை நகர வீதிகள் எங்கும் பொலீஸாரும் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்புத் தீவிரப்படுத் தப்பட்டிருந்தது.

யாழிலும் துக்கம்

திருகோணமலையில் போராளிகள் உட் பட நால்வர் படுகொலை செய்யப்பட்டமைக் குக் கண்டனம் தெரிவித்து நேற்று யாழ். மாவட்டத்திலும் முழு அளவில் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
வர்த்தக நிலையங்கள்இ பொது இடங்கள்இ வாகனங்கள் என்பவற்றில் கறுப்புக் கொடி கள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் வாழை களும் கட்டப்பட்டிருந்தன. யாழ். பஸ்நிலையம் உட்பட பல இடங்களில் ஒலிபெருக்கி மூலம் சோக கீதமும் இசைக்கப்பட்டது. uthayan

Print this item