Yarl Forum
வவுனியாவில் மாணவிகள் மீது சேட்டை புரிந்த ஆசிரியர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வவுனியாவில் மாணவிகள் மீது சேட்டை புரிந்த ஆசிரியர் (/showthread.php?tid=3927)



வவுனியாவில் மாணவிகள் மீது சேட்டை புரிந்த ஆசிரியர் - தமிழரசன் - 07-13-2005

வவுனியா தெற்கு கல்வி வலய பாடசாலையொன்றின் மாணவிகள் மீது அதே பாடசாலை ஆசிரியரொருவர் பாலியல் ரீதியான சேட்டைகளைப் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து பாடசாலை செல்லும் மூன்று மாணவிகளே இவ்வாறு ஆசிரியரால் விரும்பத்தகாத செயல்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட மாணவிகள் பாடசாலை செல்லாதுள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தொண்டர் நிறுவனமொன்றின் பணியாளர்களுக்கு தெரியவந்ததுடன், வவுனியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. பாதிப்புக்குள்ளான மாணவிகள் தாம் மீண்டும் பாடசாலைக்கு செல்வதாயின் தம்மை இம்சைப்படுத்திய ஆசிரியர் தமது பாடசாலையில் கற்பிக்கக்கூடாது அல்லது வேறு பாடசாலையில் கல்விகற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்து முகாம்களில் பல்வேறு நெருக்கடிகளுடன் வாழ்ந்து வரும் மாணவர்கள் பாடசாலை செல்வதைத் தவிர்த்து வரும் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதைக் குழப்புவது மிக மோசமான செயல்.

sooriyan.com