![]() |
|
தாயே... தாயே...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தாயே... தாயே...! (/showthread.php?tid=3923) |
தாயே... தாயே...! - sOliyAn - 07-13-2005 ஐயிரு திங்கள் சுமந்தெனை யீன்று பவ்விய மாகக் காத்தாயே மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய் ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய் சுற்றம் உவக்க வாழ்ந்தாயே கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய் என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே. சேயாய் உதித்துன் தாயையும் இழந்து பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய துணையைப் பிரிந்து தவித்தாயே மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும் தேசத்தால் சிதைய சகித்தாயே நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே. எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன் ஈகை நிறுத்திக் களித்தாயே வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து உறவுப் பாலம் அமைத்தாயே அள்ளி அமுது வந்தவர்க் கீந்து அதிலே உன்னை நிறைத்தாயே சொல்லில் அடங்காப் பண்பின் உருவே அல்லல் அறுக்கப் பறந்தாயே! பாதுகாப்பென நகரம் வந்தும் பிறந்தமண் காணத் திரும்பி வந்தாயோ போதும் வாழ்வென நினைந்து நீயும் பரமன் பாதம் புகுந்தாயோ தொப்புள் கொடியின் புனிதப் பந்தம் போதும் எனவும் நினைந்தாயோ மாயை உலகைத் துறந்த என்தாயே! நின் ஆன்மா சாந்தி! சாந்தி!! -இராஜன் முருகவேல் (திருமதி முருகவேல் சரோஜினிதேவி அவர்களின் நினைவுமலரிலிருந்து.. 1.07.2005) - kuruvikal - 07-13-2005 அம்மாவை நினைந்து தந்த கவி அருமை...! - Vasampu - 07-13-2005 உங்கள் அன்னைக்கு நீங்கள் தந்த சமர்ப்பனம் என் அன்னையை நினைக்க வைத்தது. என் செய்வது சோழியான் வீட்டுக்கு வீடு வாசற்படி. - shanmuhi - 07-13-2005 தாயின் நினைவுகளோடு மலர்ந்த கவிதை அருமை. தாயின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்... - அனிதா - 07-13-2005 கவி வரிகள் நன்றாக இருக்குறது. நன்றி சோழியன் அண்ணா - sOliyAn - 07-13-2005 தாயைப்பற்றி எவ்வளவோ எழுதலாம்.. எழுத எழுத வந்துகொண்டே இருக்கும்.. இதுதான் ஒவ்வொருவரதும் நிலையாக இருக்கும்.. ஆனாலும் இருக்கும் போதுள்ள நினைவுகளிலும் பார்க்க இழந்த பின்னெழும் நினைவுகளின் தாக்கம் அதிகமாகத்தான் உள்ளது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->கருத்துகளுக்கு நன்றி. - வெண்ணிலா - 07-14-2005 அம்மாவின் நினைவில் வடித்த கவி அருமை. நன்றி சோழியன் அண்ணா - tamilini - 07-14-2005 அம்மாவின் நினைவு சுமந்த கவிதை அருமை. - Malalai - 07-14-2005 தாய்க்காக சேய் வடித்த கவி நன்றாகவும் உள்ளத்தை உருக்கும் வகையிலும் இருக்கிறது.... - Nitharsan - 07-14-2005 தாயின் நினைவில் தன் உணர்வுகளை கவியாக்கி களத்திலிட்ட சோழியன் அண்ணாவுக்கு அருமையான... பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும் - Mathan - 07-14-2005 உங்கள் தாயை நினைவில் நிறுத்தி எழுதிய கவிதை மனதை தொடுகின்றது, அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். - kavithan - 07-15-2005 அன்னைக்காய் நீங்கள் வடித்தகவிதை மனதை உருக்குகின்றது நன்றி - கீதா - 07-20-2005 தாய்க்காக வடித்த கவி நன்றாக இருக்கின்றன ? நன்றி அண்ணா அன்புடன் jothika |