![]() |
|
அட சாத்திரிக்கே அல்வா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: அட சாத்திரிக்கே அல்வா (/showthread.php?tid=3951) |
அட சாத்திரிக்கே அல்வா - SUNDHAL - 07-09-2005 ஜோதிடம் கேட்பதுபோல் வந்து 18 பவுன் நகைகளைக் களவாடினர். முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜோதிடர் கிருஷ்ணராஜ் (62). இவரது வீட்டுக்கு ஜோதிடம் கேட்பது போல் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வியாழக்கிழமை வந்தார். தனது மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜாதகம் ஒன்றைத் தந்தார். ஜோதிடம் கேட்டவுடன், ""சிறப்பாகச் சொன்னீர்கள்; நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை'' என பாராட்டினார். ""உங்கள் கையாலேயே மகளுக்கு நகை எடுக்க வேண்டும்'' என்று அவரை நகைக் கடைக்கு அழைத்தார். ஜோதிடரும் அந்த நபரின் பேச்சை நம்பி முகலிவாக்கத்தில் உள்ள நகைக் கடைக்கு அவருடன் சென்றார். 18 பவுன் நகைகளைத் தேர்வு செய்தனர். நகைக் கடையில் பணம் கேட்டபோது பணத்தை ஜோதிடரிடம் கொடுத்தனுப்புகிறோம் என்று அந்த நபர் கூறினாராம். இதையடுத்து கடை ஊழியரை அவர்களுடன் அனுப்பினர். ஜோதிடரின் மனைவியிடம் நகைகளைக் காட்ட வேண்டும் என்று அந்த நபர் கூறியதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் ஜோதிடர். அங்கு சென்றதும் ஜோதிடர் பாத்ரூம் சென்றார். மனைவி காபி கொண்டு வந்து தந்தார். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த ஜோதிடரின் மகன் வீடு திரும்பினார். அவரிடம் பேச்சுகொடுத்த அந்த நபர் ""ஜோதிடம் பார்க்க வந்தேன்; போரூர் பஸ் நிலையத்தில் விட்டுவிடவும்'' என்று அவரிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அந்த நபரை மோட்டார் சைக்கிளில் போரூரில் விட்டுவந்தார் ஜோதிடரின் மகன். சிறிதுநேரம் கழித்து ஜோதிடர் வந்து, அந்த நபர் எங்கே என்று கேட்டபோது போரூரில் விட்டுவந்ததாக அவரது மகன் கூறினார். அப்போது தான் பணம் தராமல் அந்த நபர் நகைகளுடன் தப்பிவிட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் பற்றி நகைக் கடை ஊழியர் கடைக்கு வந்து விவரத்தைச் சொன்னார். "அந்த நபரை எங்களுக்கு தெரியாது, நீங்கள்தான் அழைத்து வந்தீர்கள்; நகையாகவோ பணமாகவோ கொடுங்கள்' என அந்த ஜோதிடரைக் கடையிலேயே உட்காரவைத்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாது திகைத்த ஜோதிடர் தனது மனைவி அணிந்திருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தார். அதுதவிர மீதி பணத்துக்கு கடன் பத்திரம் எழுதித் தந்துவிட்டு வெளியே வந்தார். இது குறித்து மாங்காடு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். - kavithan - 07-09-2005 ஆகா சத்திரியாருக்கே ஆப்பா..... :wink: - அனிதா - 07-09-2005 பாவம் அந்த ஜோதிடர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வன்னியன் - 07-09-2005 களத்திலையும் ஒரு சாத்திரியார் திரிகிறார் ஒருதரும் ஆப்பு வைக்கினமில்லை. ஆரெண்டாலும் வைக்காமலா விடப்போயினம். பார்ப்பம் ஆர் ஆப்பு வைக்கினமெண்டு - வினித் - 07-09-2005 kakaivanniyan Wrote:களத்திலையும் ஒரு சாத்திரியார் திரிகிறார் ஒருதரும் ஆப்பு வைக்கினமில்லை. ஆரெண்டாலும் வைக்காமலா விடப்போயினம். பார்ப்பம் ஆர் ஆப்பு வைக்கினமெண்டு அவருகு அப்பு வைக்கா தெரியுணாம் ஆணா அவர் தாண் தப்பிகொண்டு தெரியுறார் - sathiri - 07-09-2005 Quote:களத்திலையும் ஒரு சாத்திரியார் திரிகிறார் ஒருதரும் ஆப்பு வைக்கினமில்லை. ஆரெண்டாலும் வைக்காமலா விடப்போயினம். பார்ப்பம் ஆர் ஆப்பு வைக்கினமெண்டுகாக்கை வன்னியன் நீர் ஆரெண்டு தெரியும் முடிஞ்சால் வைச்சு பாரும் ஊம்மடை ஆப்பையும் வேணுமெண்டால் நீர் ஆரெண்டு நான் சொல்லுறன் கருத்தை கருத்தால் வெல்லும் |