Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்நியன்' ஆதிக்கம்
#1
மாபைல் ஃபோன்களில் தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும் எஸ்.எம்.எஸ்.,களில் அந்நியன் திரைப்படம் சம்பந்தமான ஜோக்குகளே தற்போது அதிகம் இடம் பெறுகின்றன.

தொலைத்தொடர்பு துறையில் மொபைல் ஃபோன்கள் வருகை ஒரு புரட்சி ஏற்படுத்தியது. மொபைல் ஃபோன்களில் தகவல் பரிமாற்றத்துக்கு எஸ்.எம்.எஸ்., (ஷார்ட் மெசெஜ் சர்வீஸ்) பயன்படுகிறது.

அவ்வப்போது நாட்டு நடப்புகளைக் கிண்டல் செய்து மொபைல் ஃபோன்களில் எஸ்.எம்.எஸ்., உலா வரும். ஜெயலட்சுமி கைது மற்றும் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை சம்பந்தப்படுத்தி அப்போது பரபரப்பாக ஒரு எஸ்.எம்.எஸ்., உலா வந்தது.

சினிமா பாடல்களை ரிங் டோனாக வைத்துக் கொள்ளும் மொபைல் பிரியர்கள். எஸ்.எம்.எஸ்., களிலும் தங்கள் சினிமா விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றனர்.

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "அந்நியன்' தொடர்பான எஸ்.எம்.எஸ்., களே தற்போது மொபைல் ஃபோன்களில் அதிகம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

அந்நியன் நாயகன் அம்பி அநியாயங்கள் கண்டு பொங்குகிறான். அம்பி அந்நியன் வடிவம் கொண்டு தவறு செய்தவர்களைக் கருட புராணத்தின் படி தண்டிக்கிறான். காதலிக்காக நவநாகரீக இளைஞன் "ரெமோ'வாக மாறுகிறான்.

எஸ்.எம்.எஸ்., செய்பவர்கள் தனக்கு ஃபோன் செய்யாத நண்பர்களை அந்நியன் பாணியில் இப்படி மிரட்டுகின்றனர்.

"அந்நியன் அவதரித்துவிட்டான், எஸ்.எம்.எஸ்., அனுப்பாதவர்கள், கால் செய்து பேசாதவர்கள், மிஸ்டு கால் கொடுப்பவர்கள், கடலைப் போட்டு நெட்வொர்க் பிஸியாக்குபவர்கள், தேவையில்லாமல் ஸ்விட்ச் ஆஃப் செய்பவர்கள் அனைவரும் கருடபுரணத்தின் படி 24 மணி நேரத்தில் தண்டிக்கப்படுவார்கள்'என நண்பர்களுக்கு காலை வணக்கம் கூறி எழுப்புபவர் இப்படி மெசெஜ் கொடுக்கின்றனர்.

அம்பி: ""நாழியாயிடுத்து எழுந்திரிங்கோ''

ரெமோ: ""ஹேய் பேபி கமான் யா, இட்ஸ் ஆல்ரெடி லேட், கெட் அப் யா!''.

அந்நியன்: ""யேய் பாடு, கம்மனாட்டி, எழுந்திரிடா''.

"குட் மார்னிங்' என முடிகிறது.

அந்நியன் தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் வெற்றி பெறவில்லை. எஸ்.எம்.எஸ்., உலகிலும் அந்நியனுக்கு வெற்றி தான்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
<b>அந்நியன் வெற்றிகரமாக ஓடுதெண்டு யார் சொல்லுறது?
சொல்லுறவன் வாயளுகிச்சாக... விக்ரத்தை வைச்சு இனி யாராலையும் இதவிட ஒரு கேவலமான படம் எடுக்கெலாது சங்கரை மட்டும் நேரில கண்டால் எண்ணைச்..இல்லையில்லை ஆசிட் சட்டியில போட்டு வறுப்பன் .</b>[/b]
[size=16]<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)