Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 607 online users.
» 0 Member(s) | 603 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,238
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  நல்லூரில் நகை திருட்டு
Posted by: hari - 08-12-2005, 03:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

நல்லூரில்
நேற்று மட்டும்
13 பவுண் நகை திருட்டு

நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது.
ஆலய உள் வீதியில் கொடியேற்றம் இடம்பெற்றவேளை, இரண்டு தாலிக்கொடிகளும் ஒரு சங்கிலியும் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு பெண்மணியின் தாலிக் கொடியை அறுத்த மற்றொருபெண்மணி கையும்மெய்யுமாக அடியார்களால் பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தாலிக்கொடியும் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்படடுள்ளது
நவாலி வடக்கைச் சேர்ந்தவரான ரவி நாகேஸ்வரி என்பவரின் 9 பவுண் நிறையுடைய தாலிக்கொடியும் மற்றும் ஒரு பெண்னுடைய நான்கு பவுண் சங்கிலியும் திருட்டுப் போயுள்ளன.
இவை சம்பந்தமாக நல்லூர் ஆலய உற்சவ காலப் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Print this item

  கத்துகொடுங்க
Posted by: SUNDHAL - 08-12-2005, 03:31 AM - Forum: புலம் - No Replies

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த யுவதிக்கு தேநீர் தயாரிக்கத் தெரியாதிருந்தமைபற்றி இப்பத்தியில் எழுதியிருந்தேன் அல்லவா! இதை வாசித்துவிட்டு அன்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு புதிய தகவலொன்றைத் தெரிவித்தார்.

வெளிநாட்டிலுள்ள இவரின் உறவுப் பெடியன்கள் சிலர் இங்கு வந்து மணப்பெண் தேடும் படலத்தில் இறங்கியபோது பெண்ணுக்குச் சமைக்கத் தெரியுமா? என்பதை அறிவதில்தான் அதிக அக்கறை காட்டினார்களாம்.

பெண்ணுக்குச் சமைக்கத் தெரியாவிட்டால் ஹோட்டலில் சாப்பிடவேண்டும். இவர்களின் வருமானத்துக்கு இது அங்கு கட்டுப்படியாகாது. ஆகவே, தமக்கு வரப்போகும் மனைவி சமைக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தனராம்.

வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தேட முயற்சி செய்யும் பெற்றோர்களே! இப்பொழுதே உங்கள் மகளுக்குச் சமையல் கலையைக் கற்றுக் கொடுங்கள்!

Thanks:Thinakural

Print this item

  ஹாலிவுட்டில் மணிரத்னம்
Posted by: hari - 08-12-2005, 02:46 AM - Forum: சினிமா - Replies (5)

ஹாலிவுட்டில் மணிரத்னம்
<img src='http://thatstamil.indiainfo.com/images29/optimized/manirathnam-300.jpg' border='0' alt='user posted image'>
கோலிவுட், பாலிவுட்டை கலக்கி வந்த இயக்குனர் மணிரத்னம் இப்போது ஹாலிவுட்டில் கால் பதிக்கப் போகிறார். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரப்போகிறது.

மணிரத்னம் என்ற பெயரைக் கேட்டாலே நடிகர், நடிகைகளுக்கு ஒரு ஈர்ப்பு வரும். அவரது படத்தில் நடிக்க மாட்டோமா என்று ஏங்கும் கலைஞர்கள் ஏராளம். கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் கூட மணிரத்னத்திற்கென்று ஒரு தனி இடம் உண்டு.

தமிழில் சாதனை படைத்த ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் பாலிவுட்டிலும் பரபரப்பாக ஓடியது. இதனாலேயே இந்தி நட்சத்திரங்கள் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க இன்றும் போட்டி போடுகின்றனர்.

மணிரத்னம் படமென்றால் அதற்கு தேசிய விருது என்று அடித்துச் சொல்லாம். அந்த அளவிற்கு கிட்டத்தட்ட இவரது எல்லா படங்களுக்குமே எப்படியாவது தேசிய விருது கிடைத்து விடும். இவரது இயக்கத்தில், கமலஹாசன் நடித்த நாயகனுக்கு பல தேசிய விருதுகள் கிடைத்தது நினைவிருக்கலாம்.

சமீபத்தில் கூட இந்தப் படத்திற்கு சர்வதேச அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை, கடந்த 1927ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரையில் உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு மொழிகளில் வெளியான தலை சிறந்த 100 திரைப்படங்களைத் தேர்வு செய்தது.

இந்த 100 படங்களில் ஒன்றாகத் தான் நாயகனும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படம் குறித்த டைம் பத்திரிக்கையின் குறிப்பில், ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களை பொறாமைப்பட செய்யும் வகையில், நாயகன் படத்தில் கதையை அமைத்திருந்தார் மணிரத்னம். கதை சொல்லிய விதமும், ஒளிப்பதிவும் (பி.சி.ஸ்ரீராம்) மிக அருமையாக இருந்ததாக புகழாரம் சூட்டியது.

மணிரத்னத்திற்கு சர்வதேச பாராட்டு கிடைத்த நேரம், இப்போது அவர் ஹாலிவுட்டில் கால் பதிக்கப் போகிறார். தமிழில் ஆய்த எழுத்து, அப்படியே அதையே இந்தியில் "யுவா'வாக்கி கடந்த ஒரு வருடமாக ஓய்வில் இருந்து வந்தார் மணிரத்னம்.

இப்போது சுறுசுறுப்பாக மீண்டும் தனது மூளையை ஆங்கிலப் படத்திற்காக கசக்கத் தொடங்கி விட்டார். ஹாலிவுட்டிலுள்ள ஒரு பிரபலமான நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

முழுக்க, முழுக்க ஹாலிவுட்டிலேயே தயாராக உள்ள இந்தப் படத்திற்காக மணி, 3 அட்டகாசமான கதைகளை தயாரித்து வைத்திருக்கிறாராம். இவற்றில் சிறந்த ஒன்று படமாகும்.

செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் மணி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். மிக விரைவில் கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ஹாலிவுட்டிலும் "நாயகனா'வாரா மணிரத்னம்?

thatstamil

Print this item

  பகைவர்களாலும் போற்றப்படுகின்ற ஊடகவியலாளராக திகழ்ந்த சிவராம்
Posted by: Nellaiyan - 08-11-2005, 07:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கையிலுள்ள சகல இனங்களையும் சார்ந்த பத்திரிகையாளர்கள் சிவராமின் இழப்பை தமது இழப்பாகவே கருதினர்

அண்மையில்ஹதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்' கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்

நடத்திய 3 ஆவது மாத நினைவு தினத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆற்றிய உரை.

சிவராமைப் பற்றிய நினைவு இது. உண்மையில் அவர் மிக முக்கியமான அல்லது ஈடு இணையற்ற முன்னுதாரணமில்லாத ஊடகவியலாளராக தொழிற்பட்டார். அந்தத் தொழிற்பாடுகளிலே வெற்றியை ஈட்டினார் என்பதற்காகவே நாங்கள் அவரை நினைவு கூரவேண்டியிருக்கிறது.

ஏனெனில் அந்த வெற்றி காரணமாகத்தான் அந்த மறைவும் வந்தது என்பது உலகறிந்த விசயமாகும்.

ஒரு இதழியலாளன் அல்லது பத்திரிகையாளன் என்கின்ற வகையில் சிவராம் இலங்கை மட்டத்திலும் தமிழர்கள் மட்டத்திலும் குறிப்பாக இந்தப் பிராந்திய மட்டத்திலும் மிக முக்கியமான ஒரு இடத்தை வகித்து வந்தவர்.

அது மாத்திரமல்லாமல் இங்கு வகித்து வந்த இடம் காரணமாக ஒரு சர்வதேச கணிப்பினைப் பெற்றிருந்தவர். இந்த விடயங்களை, இவை எவ்வாறு நிகழ்ந்தன என்பதனை நினைவு கூருவது மிக அவசியமென்று கருதுகிறேன்.

இலங்கையில் உள்ள சகல இனங்களையும் சார்ந்த பத்திரிகையாளர்கள் சிவராமின் இழப்பை தங்களுக்கு ஏற்பட்ட சொந்த இழப்பாக் கருதி எழுதியிருந்தார்கள். அவருடைய கருத்துகளை மிக வன்மையாக எதிர்த்தவர்கள், சிவராம் யார் யாருடைய கருத்துகளை மிக வண்மையாக எதிர்த்தாரோ அவர்கள்; அவர்கள் எல்லோருமே சிவராமின் மறைவு இலங்கையின் பத்திரிகையியலுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு என்று கூறினார்கள்.

சிவராமினால் இந்தச் சாதனையை எவ்வாறு ஈட்ட முடிந்தது. அதாவது, பகைவர்களாலும் போற்றப்படுகிற எதிர்க் கருத்தாளர்களாலும் போற்றப்படுகிற அந்தச் சிறப்பு சிவராமுக்கு எங்கிருந்து வந்தது; என்று பார்க்கிற பொழுது நாங்கள் இரண்டு விடயங்களை முக்கியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஒன்றுஇ இலங்கையின் இனக் குழுமப் போர் தலைமையில் தீவிரவாத இளைஞர் இயக்கங்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு ஒரு யுத்தமாக மாறிக் கொண்டிருந்த வேளையில், அந்த இயக்க இளைஞர்களைப் பற்றி சரியான தெரிவிப்பு இலங்கை மட்டத்திலோ மற்றையோர் மட்டத்திலோ இல்லாத அந்த வேளையில் இந்தப் போராட்டத்தின் ஆழத்தையும் தமிழ் மக்களுடைய இந்த இளைஞர் இயக்கங்களுடைய போராட்டத்தின் ஆழத்தையும் போராட்டம் எவ்வெவற்றை சுட்டி நிற்கின்றது என்பதனையும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தையும் அவற்றின் இன்றியமையாமையும் முதன் முதலில் மற்றைய இனத்தவர்களுக்கு குறிப்பாக, இலங்கையில் உள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் அறிந்து கொள்ளத்தக்க வகையில் ஆங்கிலத்தில் எழுதிய பெருமை சிவராமையே சாரும்.

எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது காலஞ்சென்ற நண்பர் மேர்வின் டிசில்வா ("லங்கா கார்டியன்"," டெயிலி நியூஸ்") அவர் ஒரு முறை சொன்னார். ஹதராகி' யுடைய எழுத்துகளின் பின்னர்தான் இந்தப் பிரச்சினை எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பது மாத்திரமல்ல எத்தனை பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது என்பதனையும் உணர்ந்து கொண்டோம். இது முக்கியமானதாகும்.

இப்படியான முறையிலே எழுதுகின்ற பொழுது, சிவராமின் முக்கியமான அம்சம் என்னவென்றால், தான் எடுத்துக் கூறுபவற்றை தான் தெரிவிப்பதை அவர்கள் (மக்கள்) விளங்கக் கூடிய மொழியில் அவர்கள் (மக்கள்) விளங்கக் கூடிய பாணியில் எடுத்துக் கூறுவது.

இந்த தொடர்புறுத்தும் திறன் பத்திரிகைத்துறைக்கு உள்ள மொழியினுடைய பண்புகளுக்கு ஏற்ற முறையில் எடுத்து கூறியமைதான் சிவராமிக்கிருந்த முக்கியமான பண்பு.

அதனை (செய்திகளைஇ தகவல்களை) அவர் எடுத்துக் கூறிய முறைமையில் வெறுமனே ஒரு நடக்கின்ற விசயத்தை தெரிவிப்பதாக இல்லாமல், தன்னுடைய வாசகனுக்கு வேண்டிய பகுப்பாய்வைச் செய்தார். இதன் காரணமாக, சிவராமின் எழுத்தை வாசித்தவர்கள் ஈழத்துப் போராட்டம் பற்றி மேலும் அறிவதற்கு சிவராமை நாடினார்கள்.

அது அமெரிக்க தூதராலயமாக இருக்கலாம், இந்திய தூதராலயமாக இருக்கலாம், பிரித்தானிய தூதரலாயமாக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனாக இருக்கலாம், ஜப்பானாக இருக்கலாம்; இவர்கள் எல்லோரும் சிவராமிடம் மேலும் தகவல்கள் உள்ளன, சிவராம் பார்க்கின்ற முறைமையில் இன்னும் பல விசயங்கள் (ஈழப் போராட்டத்தில்) ஆழமாக உள்ளன என்பதன் காரணமாக, சிவராம் ஏறத்தாழ இலங்கையில் இருந்த வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் ஒவ்வொன்றினதும் மதிப்பு மிக்க விருந்தினர் ஆனார்.

தெளிவான முறையில் அவர் (இலங்கைப் பிரச்சினையை) எடுத்துக் கூறியதன் காரணமாகத்தான், இலங்கையில் முன்னர் இருந்த அமெரிக்கத் தூதுவர் ஒருவர், சிவராம் இறந்த பொழுது சொன்னார்இ "குணூடிடூச்ணடுச்ண கூச்ட்டிடூண் ‡ஞுஞுஞீ ட்ணிணூஞு கூச்ட்டிடூண் ஃடிடுஞு ஏடிட்". இது ஒரு முக்கியமான விடயம் .

அமெரிக்கா எவ்வாறு இயக்கங்களை, இலங்கை விடயங்களை பார்க்கின்றது என்பது எமக்குத் தெரியும்.

அப்படி இருந்தும் கூட, அமெரிக்காவின் முன்னாள் தூதுவராக இருந்த ஒருவர் அவ்வாறு கூறினார்.

சிவராமிடமிருந்த இன்னுமொரு மிக முக்கிய பண்பு என்ன வென்றால், முகஸ்துதிக்காகவோ நண்பர்களுக்காகவோ அல்லது சொல்லுகின்றவர்கள் முக்கியமானவர்கள் என்பதற்காகவோ, தான் சொல்லவிரும்பியதில் எந்த விதமான விட்டுக்கொடுப்பும் வைத்துக் கொள்வதில்லை.

அவர்களுக்காக ஒரு விடயத்தை சற்று குறைத்துக் கூறுவதில்லை. அந்த விடயத்தின் தாத்பரியத்தை மிக ஆழமாக, வன்மையாக எடுத்துக் கூறுவார்.

இது (இந்தப் பண்பு) இலங்கைப் போராட்டத்தில் தமிழ் நிலைப்பாட்டை வற்புறுத்திக் கூறுவதற்கு உதவுவதாக அமைந்தது.

சிவராம் நமக்கு சாதாரணமாக தெரிந்த பத்திரிகையாளர் அல்லது இதழியலாளர் என்கின்ற முறையில் அவர் விளங்கவில்லை.

சிவராமினுடைய இந்த ஈடுபாடு வெறுமனே பத்திரிகைக்கு எழுத வேண்டுமென்பதோ அல்லது அதனை ஒரு தொழிலாகக் கொண்டதாலேயோ ஏற்பட்டதல்ல. இது மிக மிக முக்கியமானது. சிவராம் அடிப்படையில் இந்த விடயங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்.

இலங்கையில் உள்ள தமிழ்ப் பிரச்சினை மாத்திரமல்ல, பாலஸ்தீனத்தில் உள்ள பிரச்சினைஇ இந்தியாவிலே உள்ள பல்வேறு இனக் குழுமங்களுடைய பிரச்சினை. குறிப்பாக திராவிட இயக்கத்தின் பிரச்சினை. இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இவ்வாறு போராடுவதற்கான காரணங்கள் யாது? இவ்வாறு இவர்கள் முந்திப் போராடுவதில்லையே என்கின்ற குரல் எழும்பிய பொழுது, இராணுவப் போக்கு 0 தமிழ் தன்மையிலே காணப்படுகிறது என்பதற்காக உண்மையில் புறநானூறு முதல் எல்லா வரலாற்று நூல்களையும் பார்த்து மிக அற்புதமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர் சிவராம்.

இவற்றை எழுதிய பொழுதெல்லாம் அவர் சம காலத்தில் வரலாறு எழுதியவர்களால் எந்த முறையில் எழுதப்படுகிறதோ அந்த முறையில் நின்று எழுதியதால்தான் சிவராமுக்கு இந்த முக்கியத்துவம் உண்டு. ஆராய்ச்சி மாத்திரமல்ல, எழுதுகிற முறை அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

இலங்கையில் உள்ள தமிழ்இ சிங்கள வரலாறு பற்றிய குறிப்பாகஇ பௌத்த வரலாறு பற்றிய தமிழ், சிங்கள ஊடாட்டங்கள் எங்கெங்கு உண்டோ அந்த விடயங்களை அறிய வேண்டும் என்ற அவாவோடு சிவராம் நிறைய வாசித்தார்.

உண்மையில்இ இலங்கைத் தமிழர்களின் வரலாறு பற்றிய பல விடயங்களைஇ அண்மைக் கால அரசியல் வரலாறு பற்றிய பல விடயங்களின் உண்மைகளை தன்னுடைய எழுத்துகளின் மூலம் வெளிக் கொணர்ந்தவர் சிவராம்.

சிவராம் பலமுறை என்னிடம் பல கேள்விகளை கேட்டிருக்கிறார். அவர் என்னிடம் கேட்ட கடைசிக் கேள்விகளில் இதுவுமொன்று.

ஹபாளி மொழி இலங்கையில் எப்படி, திபெத்தில் எப்படி எழுதப்படுகிறது" என்று கேட்டார்.

ஏனெனில், பாளி மொழி அந்த அந்த பிரதேசத்தில் பாவிக்கப்படும் எழுத்துகளால் எழுதப்படுகிறது. இதனைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்டார். இலங்கையில சிங்களத்தில் எழுதப்படுகிறது.

இந்த மாதிரியான விடயங்களை என்னால் மறக்க முடியவில்லை.

சிவராம் வாழ்ந்த காலத்தில் மிகவும் தப்பாக விளங்கப்பட்டவர். சிவராமினுடைய நேர்மை, அவரது உண்மைத் தன்மை, அவரது புகழ் பலருக்கு அவர் இறந்ததன் பின்னர்தான் நிரூபணமாயிற்று.

இலங்கை தமிழ் மக்கள் மீது அவர் செலுத்திய கவனம், சிரத்தை இதற்கொரு காரணமாக இருந்தது. அவர் மட்டக்களப்புப் பிரதேசம் பற்றிய மிக முக்கியான சிரத்தையைக் காட்டினார்.

குறிப்பாக, அந்தப் பிரதேசத்தின் வரலாறு அந்தப் பிரதேசத்தின் சமூக, பொருளாதார நிலைமைகள் போன்றவற்றில் மிக ஆழமான அக்கறையைக் காட்டினார்.

இன்று கூட மட்டக்களப்பு வரலாறு பற்றிய கணிக்கப்படத்தக்க எழுத்தாக உள்ளது. சிவராம் அது பற்றி எழுதியுள்ள இரண்டு, மூன்று கட்டுரைகள் தான்.

சிவராமுக்கு மட்டக்களப்பு பிரதேசம் பற்றிய விருப்புக்கள் ஆர்வங்கள் நிறைய இருந்தன. அவை இலங்கைத் தமிழ் ஆர்வத்துக்குள் அமைவனவாக, இணைவனவாக இருந்தன. இலங்கைத் தமிழ் என்று வரும் பொழுது அதனை பிராந்திய ரீதியிலும் இறுதியில் சர்வதேச ரீதியிலும் பார்க்கின்ற ஒரு தன்மை இருந்தது அவரிடம் (சிவராமிடம்).

இதனாலேதான் தமிழ் பிரதேசங்களின் நிலை, இலங்கை தமிழ் மக்களின் நிலைஇ சிங்களஇ முஸ்லிம் மக்களின் நிலை போன்றவற்றை தெளிவாக பார்க்கும் பார்வை அவரிடம் இருந்தது. அதனால் தான் அவரின்மீது எல்லோரின் கவனமும் திரும்பியது.

ஆங்கிலத்திலே எழுதும்போது ஒரு பரிமாணத்தையும் தமிழிலே எழுதும் போது வேறு ஒரு பரிமாணத்தையும் கொண்டிருந்தார்.

தமிழ் மக்களை சிந்திக்க வைப்பவராக, மக்களுடைய அறிவை தூண்டுபவராக இருந்தார்.

"தமிழ் தேசியம்" பற்றி எழுதும்போது கூட மற்றவர்களை திருப்திப் படுத்துவதற்காக அல்லாமல் "தமிழ் தேசியம்' எவ்வாறு சமூக, பொருளாதார சமத்துவத்தை கொண்டுவர வேண்டும் என்ற கருத்தையே முன் வைத்தார்.

மொழி பற்றி அவர் காட்டிய சிரத்தை, மொழியை கையாளுகை பற்றி சிவராமுக்கு இருந்த சிரத்தை, ஒரு சொல்லை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய அக்கறை இவற்றில் அவர் மிக மிக கவனமாக இருந்தார்.

அதனால் தான் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் மிக முக்கியமான சாதனைகளைச் செய்தார் சிவராம்.

நன்றி தினக்குரல்

Print this item

  600 விக்கற்றைக் கைப்பற்றிய ஷேன் வார்ன்
Posted by: AJeevan - 08-11-2005, 07:26 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40679000/jpg/_40679128_warne_270.jpg' border='0' alt='user posted image'>
<i>ஷேன் வார்ன்</i>

கிரிக்கட் சரித்திரத்தில் டெஸ்ட் ஆட்டங்களில் 600 விக்கட்டுகளைப் கைப்பற்றிய முதலாவது வீரர் என்ற பெருமையை அவுஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வார்ன் பெற்றுள்ளார்.

ஆசஸ் கிரிக்கட் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷேர் வார்ன் வீசிய பந்தை இந்திலாந்து அணி வீரர் மார்கஸ் ட்ரெஸ்கொதிக் அவர்கள், அவுஸ்திரேலிய விக்கற் காப்பாளர் அடம் ஹில்கிரிஸ்ட்டிடம் பிடிகொடுக்கவே, அந்த விக்கற் ஷேன் வார்ன் கைப்பற்றிய 600 வது விக்கற்றாக அமைந்தது.

இந்த ஆட்டம் மான்ஷெஸ்டரில் நடக்கிறது.

அதிக விக்கற்றை கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஷேன் வார்னுக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இருக்கிறார்.

முரளிதரன் இதுவரை 549 விக்கற்றுகளைக் கைப்பற்றியுள்ளார்.
-BBC

Print this item

  புலத்து புரட்டுக்கள்
Posted by: muniyama - 08-11-2005, 06:47 PM - Forum: புலம் - Replies (21)

வருகிறது வருகிறது அய்ரோப்பாவில் புதிதாய் இன்னுமோர் வானொலி வருகிறது மீன்பாடும் தேனாட்டு அன்ரியின் இயக்கத்தில் வெகுவிரைவில.; இவர் முன்நாள் கேணல் முரளியின் விசுவாசி பொறுத்திருந்து பார்ப்போம் இன்னொரு ரி பி சி யா எண்று

Print this item

  எந்த சினிமாவில் யார் சொன்னது?
Posted by: aathipan - 08-11-2005, 11:32 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (34)

எந்த சினிமாவில் யார் சொன்னது?

எத்தனையோ சினிமா பார்க்கிறோம். உடனேயே பலதைமறந்துதிடுறோம். ஆனால் சில பாத்திரங்கள் சொன்ன வசனங்கள் மறக்காது. அந்த வசனங்கள் ஏதோ ஒரு விதத்தில் எல்லோருக்கும் பிடித்துப்போய்விடுகிறது. அப்படிப்பட்ட வசனங்களை இங்கே எழுதுங்கள். யார் சொன்னது எந்த சினிமாவில் என்று மற்றவர்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்க்கலாம்.

ஒரு சினிமாவில் ஒரு பாத்திரம் அடிக்கடி "மகிழ்ச்சி சந்தோசம் " எனச் இப்படிச்சொல்கிறது கண்டுபிடிக்க முடிகிறதா? முயலுங்கள்.

சரி இன்னொரு படத்தில் ஒரு பாத்திரம் அடிக்கடி " எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" என்று சொல்வதாக வரும். இதைக்ண்டுபிடிக்க முடிகிறதா? முயலுங்கள்.

; என

Print this item

  தத்துவங்களை இங்கே உதிருங்க
Posted by: aathipan - 08-11-2005, 10:45 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (559)

நம்மில் பலர் அப்பப்போ ஏதாவது தத்துவங்களை போறபோக்கில் உதிர்த்து விட்டுபோவோம். அவற்றை உடனே எழுதிவைக்க அசைப்பட்டாலும் ஏடும் ஏழுத்தாணியும் இல்லையே என்று விட்டுவிடுவோம். அப்படிப்பட்ட சில தத்துவங்களை இங்கே பதிந்து வையுங்கள். எதிர்கால சந்ததிகள் பயன்பெறட்டும். ஒவ்வோரு மாதமும் ஒரு சிறந்த தத்துவத்தை தேர்வுசெய்து அதை தஞ்சைக்கோவிலிலே கல்லிலே எழுத ஏற்பாடு செய்வோம். என்ன தயாரா...

ஒவ்வோருவரும் உங்கள் தத்துவங்களை எழுதி அது எத்தனையாவது என்று இலக்கத்தையும் எழுதிவையுங்கள்.

Print this item

  `கம்ப்யூட்டர் கேம்ஸ்'
Posted by: Vaanampaadi - 08-11-2005, 08:57 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

தொடர்ந்து 50 மணி நேரம் `கம்ப்யூட்டர் கேம்ஸ்' ஆடியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்

சியோல், ஆக. 11-

தென் கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்தவர் லீ. இவருக்கு வீடியோ கேம்ஸ் ஆடுவது என்றால் அலாதி பிரியம். கம்ப்யூட்டர் மையங் களுக்கு சென்று மணிக்கணக் கில் வீடியோ கேம்ஸ் ஆடுவார். வேலைக்கு மட்டம் போட்டு விட்டு இவர் அடிக்கடி கம்ப் ïட்டர் கேம்ஸ் ஆடியதால் இவரை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள்.

கம்ப்யூட்டர் கேம்ஸ் இவரது வேலை பறித்த பிறகும் கூட லீ யின் கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆர்வம் தணியவில்லை.

அவர் சியோல் நகரில் உள்ள ஒரு கம்ப்ïட்டர் மையத் துக்கு சென்றார். அங்கு அவர் வீடியோ கேம்ஸ் ஆடத் தொடங்கினார். மணிக்கணக் கில் ஆடிக்கொண்டிருந்த அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஒருநாள் முழு வதும் நிறுத்தாமல் தொடர்ந்து ஆடிய அவர் இடையே ஒரு தடவை கழிப்பறைக்கும் டீ குடிக்கவும் மட்டும் நேரம் ஒதுக்கினார்.

மீண்டும் தொடர்ந்து ஆடிய இவர் 50 மணி நேரம் கம்ப்ïட்டர் கேம்ஸ் ஆடிய பிறகுதான் நிறுத்தினார்.

ஆடி முடித்து இருக்கையில் இருந்து எழுந்ததும் அவரது ஆட்டமும் முடிந்து விட்டது. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்தவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது.

கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆர்வம் அவரது வேலையையும் பறித்து இப்போது உயிரையும் பறித்து விட்டது.

-------------------------------------------------


<b>Man dies after online game marathon</b>

Tuesday, August 9, 2005; Posted: 7:02 a.m. EDT (11:02 GMT)


SEOUL, South Korea (Reuters) -- A South Korean man who played computer games for 50 hours almost non-stop died of heart failure minutes after finishing his mammoth session in an Internet cafe, authorities said on Tuesday.

The 28-year-old man, identified only by his family name Lee, had been playing online battle simulation games at the cybercafe in the southeastern city of Taegu, police said.

Lee had planted himself in front of a computer monitor to play on-line games on August 3. He only left the spot over the next three days to go to the toilet and take brief naps on a makeshift bed, they said.

"We presume the cause of death was heart failure stemming from exhaustion," a Taegu provincial police official said by telephone.

Lee had recently quit his job to spend more time playing games, the daily JoongAng Ilbo reported after interviewing former work colleagues and staff at the Internet cafe.

After he failed to return home, Lee's mother asked his former colleagues to find him. When they reached the cafe, Lee said he would finish the game and then go home, the paper reported.

He died a few minutes later, it said.

South Korea, one of the most wired countries in the world, has a large and highly developed game industry.

Print this item

  பெற்ற தாயை கொலை செய்ததாக தமிழ்ப் பெண் டாக்டர் கைது
Posted by: Vaanampaadi - 08-11-2005, 08:39 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

அமெரிக்காவில்
பெற்ற தாயை கொலை செய்ததாக தமிழ்ப் பெண் டாக்டர் கைது


வாஷிங்டன், ஆக.11-

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டுப் பெண் டாக் டர் ஒருவர் பெற்ற தாயைக் கொலை செய்த குற்றத்துக் காக கைது செய்யப்பட்டு

இருக்கிறார்.டாக்டர் மலர்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மலர்பாலசுப்பிரமணியன். 28 வயதான இவர் டாக்டர், குழந்தை களுக்கான மருத்துவம் படித்தவர் இவர் அமெரிக்காவில் தாயார் சரோஜா (வயது 53) உடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந் தார்.

சம்பவத்தன்று இவர் அலங் கோலமாக, அரைகுறை ஆடை யில் கார் ஓட்டிச்சென்றார். இவ ரது கோலத்தை பார்த்த போலீ சார் காரைத் தடுத்து நிறுத்தினர். போலீசார் கேட்ட கேள்வி களுக்குச் சரியாகப்பதில் சொல் லாமல் குழம்பிய நிலையில் இருந்தார்.

தாயார் கொலை

காரின் பின் இருக்கையில் ஒரு பிணம் கிடந்ததை போலீசார் பார்த்தனர். அது யார் என்று கேட்ட போது தன் தாயார் என்று கூறி னார். தாயாரை அவர் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் கொண்டனர். அவரைக் கைது செய்தனர்.

ஹாமில்டன் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டடார். கொலை செய்த பிறகு அளவுக்கு அதிக மான மாத்திரைகளை அவர் விழுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தம்பிக்கு இ.மெயில்

டாக்டர் மலர் தன் தம்பி, தங்கைக்கு அனுப்பிய இ.மெயி லில் "நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் நான் இறந்த பிறகு உங்களை அம்மா விடம் விட எனக்கு விருப்பம் இல்லை. எனவே அம்மாவையும் கொல்லப்போகிறேன். யாரை யும் துன்புறத்த இனி அம்மா இருக்க மாட்டாள் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கி றது" என்று எழுதி இருக்கிறார்.

"டாக்டர் மலரின் தாயார் கொடுமைக்காரராக இருக்க வேண்டும் அவரிடம் இருந்து தம்பி, தங்கையை பாதுகாக்க இந்த கொலையைச் செய்து இருக்கவேண்டும் என்று போலீ சார் கூறினர்.


Dailythanthi

Print this item