Yarl Forum
ஹாலிவுட்டில் மணிரத்னம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஹாலிவுட்டில் மணிரத்னம் (/showthread.php?tid=3690)



ஹாலிவுட்டில் மணிரத்னம் - hari - 08-12-2005

ஹாலிவுட்டில் மணிரத்னம்
<img src='http://thatstamil.indiainfo.com/images29/optimized/manirathnam-300.jpg' border='0' alt='user posted image'>
கோலிவுட், பாலிவுட்டை கலக்கி வந்த இயக்குனர் மணிரத்னம் இப்போது ஹாலிவுட்டில் கால் பதிக்கப் போகிறார். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரப்போகிறது.

மணிரத்னம் என்ற பெயரைக் கேட்டாலே நடிகர், நடிகைகளுக்கு ஒரு ஈர்ப்பு வரும். அவரது படத்தில் நடிக்க மாட்டோமா என்று ஏங்கும் கலைஞர்கள் ஏராளம். கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் கூட மணிரத்னத்திற்கென்று ஒரு தனி இடம் உண்டு.

தமிழில் சாதனை படைத்த ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் பாலிவுட்டிலும் பரபரப்பாக ஓடியது. இதனாலேயே இந்தி நட்சத்திரங்கள் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க இன்றும் போட்டி போடுகின்றனர்.

மணிரத்னம் படமென்றால் அதற்கு தேசிய விருது என்று அடித்துச் சொல்லாம். அந்த அளவிற்கு கிட்டத்தட்ட இவரது எல்லா படங்களுக்குமே எப்படியாவது தேசிய விருது கிடைத்து விடும். இவரது இயக்கத்தில், கமலஹாசன் நடித்த நாயகனுக்கு பல தேசிய விருதுகள் கிடைத்தது நினைவிருக்கலாம்.

சமீபத்தில் கூட இந்தப் படத்திற்கு சர்வதேச அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை, கடந்த 1927ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரையில் உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு மொழிகளில் வெளியான தலை சிறந்த 100 திரைப்படங்களைத் தேர்வு செய்தது.

இந்த 100 படங்களில் ஒன்றாகத் தான் நாயகனும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படம் குறித்த டைம் பத்திரிக்கையின் குறிப்பில், ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களை பொறாமைப்பட செய்யும் வகையில், நாயகன் படத்தில் கதையை அமைத்திருந்தார் மணிரத்னம். கதை சொல்லிய விதமும், ஒளிப்பதிவும் (பி.சி.ஸ்ரீராம்) மிக அருமையாக இருந்ததாக புகழாரம் சூட்டியது.

மணிரத்னத்திற்கு சர்வதேச பாராட்டு கிடைத்த நேரம், இப்போது அவர் ஹாலிவுட்டில் கால் பதிக்கப் போகிறார். தமிழில் ஆய்த எழுத்து, அப்படியே அதையே இந்தியில் "யுவா'வாக்கி கடந்த ஒரு வருடமாக ஓய்வில் இருந்து வந்தார் மணிரத்னம்.

இப்போது சுறுசுறுப்பாக மீண்டும் தனது மூளையை ஆங்கிலப் படத்திற்காக கசக்கத் தொடங்கி விட்டார். ஹாலிவுட்டிலுள்ள ஒரு பிரபலமான நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

முழுக்க, முழுக்க ஹாலிவுட்டிலேயே தயாராக உள்ள இந்தப் படத்திற்காக மணி, 3 அட்டகாசமான கதைகளை தயாரித்து வைத்திருக்கிறாராம். இவற்றில் சிறந்த ஒன்று படமாகும்.

செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் மணி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். மிக விரைவில் கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ஹாலிவுட்டிலும் "நாயகனா'வாரா மணிரத்னம்?

thatstamil


- ப்ரியசகி - 08-12-2005

ம்ம்ம் :roll: வடிவா ..கொஞ்சம் சத்ததையும் வெளிச்சத்தையும் கூட வைத்தால்...ஆகலாம்
இல்லையா ஹரி அண்ணா


- Mathan - 08-12-2005

அண்மைக்கால படங்களில் சத்தம் வெளிச்சம் குறைவாக இல்லை என்று நினைக்கின்றேன்


- ப்ரியசகி - 08-13-2005

எந்த படத்தை சொல்றீங்கள் மதன் அண்ணா?


- Mathan - 08-13-2005

உ+ம் அலைபாயுதே, ரோஜா


- ப்ரியசகி - 08-14-2005

ம்ம்ம்...