Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 387 online users.
» 0 Member(s) | 384 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,435
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,642
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,239
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,477
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  ``பீரோ புல்லிங்" கொள்ளையன்
Posted by: Vaanampaadi - 08-09-2005, 07:14 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://www.dailythanthi.com/images/news/20050809/pulling.jpg' border='0' alt='user posted image'>

சென்னையை 3 வருடங்களாக கலக்கும்
``பீரோ புல்லிங்" கொள்ளையன்
வடநாட்டு ஆசாமியா?
புதிய வியூகத்தில் போலீசார் தேடுதல் வேட்டை


சென்னை, ஆக. 9-

சென்னையை கலக்கும் `பீரோ புல்லிங்' கொள்ளை யன் வடநாட்டு ஆசாமியா, அல்லது பிரபல கொள்ளை யன் கவுஸ் பாஷாவின் மகனா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனி ஆளாக கலக்குகிறான்

சென்னை புறநகர் பகுதி களான, நங்கநல்லூர், பழவந்தாங் கல், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் தனி ஆளாக நின்று கொள்ளை அடித்து வருபவன் `பீரோ புல்லிங் கொள்ளையன்" 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கொள்ளை வேட் டையை தொடங்கிய இவன், கடந்த 3 ஆண்டுகளாக சுமார் ஆயிரம் பவுன் நகைகளை கொள்ளை அடித்து சாதனை படைத்துள்ளான். சுமார் 200-க் கும் மேற்பட்ட வீடுகளில் இவன் தனது கைவரிசையை காட்டி இருக்கிறான். ஆனால் 65 வீடு களில் மட்டும் இவனது கைரேகை பதிவாகி உள்ளதால், 65 வழக்கு கள் மட்டும், ``பீரோ புல்லிங்" கொள்ளையன் மீது பதிவாகி உள்ளது.

பார்க்காத முகம்

கடந்த 3 ஆண்டுகளாக 200-க் கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை அடித்து இருந்தா லும், பீரோ புல்லிங் கொள்ளை யனின் முகத்தை இதுவரை நேருக்கு நேர், தெளிவாக யாரும் பார்த்ததில்லை. பொதுமக்கள் இருட்டில்தான் அவனை பார்த்துள்ளனர். இருட்டில் பார்த்த அங்க அடையாளங் களை வைத்து அவனது உரு வத்தை கம்ப்ïட்டரில் வரைய போலீசார் முயற்சி மேற்கொண் டனர். ஆனால் கம்ப்ïட்டரில் படம் சரியாக வரைய முடிய வில்லை.

வடநாட்டு ஆசாமியா?

பீரோ புல்லிங் கொள்ளை யனின் படத்தை வரைய முடியா விட்டாலும் அவன் யாராக இருப்பான்? என்று போலீசார் ஓரளவு கற்பனை செய்து பார்த்தனர். பீரோ புல்லிங் கொள் ளையன் கொள்ளை தொழி லுக்கு முழுக்க, முழுக்க புதிய வன். இதனால் அவனது கைரேகை பழைய குற்றவாளி களின் கைரேகைப்பட்டியலில் இல்லை.

பீரோ புல்லிங் கொள்ளையன் 5 அடி உயரத்தில், வாட்ட, சாட்டமாக கறுப்பாக இருப் பான். போலீஸ்காரர்களை போல தலைமுடியை வெட்டி இருப்பான். இதனால் அவன் ``டிஸ்மிஸ்" போலீஸ்காரனாக இருப்பானோ என்று முதலில் சந்தேகப்பட்டார்கள். அடுத்து அவன் வடமாநில ஆசாமியாக இருக்கலாம் என்று கூட போலீசார் ஆராய்ச்சியில் ஈடு பட்டனர்.

கவுஸ்பாஷா மகனா?

பிரபல கொள்ளையன் கவுஸ் பாஷா என்றால் போலீஸ் வட் டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவன் ஒரு பிறவிக் கொள்ளையன். சிறு வயதிலேயே கொள்ளைத் தொழிலை தொடங்கிய இவ னுக்கு இப்போது வயது 55-ஐ தாண்டிவிட்டது. இதனால் கொள்ளைத் தொழிலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தனது மகனை கொள்ளைத் தொழிலில் ஈடுபட வைத்துள்ளதாக போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.

கவுஸ்பாஷாவின் மகன் இது வரை போலீசார் கையில் சிக்க வில்லை. பீரோ புல்லிங் கொள் ளையன், கவுஸ்பாஷாவின் மகனாக இருக்கலாம் என்றும் போலீசாருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அவன் வேலூர், திருவண்ணாமலை பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத் தது.

இதனால் அந்த பகுதியில் ஒரு வாரம் தேடிப்பார்த்தனர். கவுஸ் பாஷாவும் சிக்கவில்லை. அவனது மகனும் மாட்ட வில்லை.

கமிஷனர் நேரடி நடவடிக்கை

ஏற்கனவே பீரோ புல்லிங் கொள்ளையனைப்பிடிக்க 100 போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அதில் வெற்றி கிட்டவில்லை. சந்தனை கடத்தல் வீரப்பனைப் போல், பீரோ புல்லிங் கொள்ளையனும் போலீசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளான்.

பீரோ புல்லிங் கொள்ளையன் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எந்தவித புதிய கொள்ளையிலும் ஈடுபடவில்லை. புலி பாய்வதற்கு பதுங்குவது போல அவன் பதுங்கி இருக்கிறான். இதனால் போலீசாரின் தேடுதல் வேட்டை யிலும் சற்று தொய்வு ஏற்பட்டது.

தொடர்ந்து வேட்டை

ஆனால் போலீஸ் கமிஷனர் நடராஜ், ``இந்த தொய்வு ஏற்படக் கூடாது என்றும் தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமாக இருக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளார். தினமும் காலையிலும், இரவிலும், வயர் லெஸ்சில் பேசி, இரவு ரோந்துப் பணியில் எத்தனை போலீசார் ஈடுபட்டனர்.

அவர்கள் சந்தேகத்தின்பேரில் எத்தனை பேரை பிடித்து விசாரித்தார்கள் என்ற விவரங் களை கமிஷனர் நடராஜ் கேட்ட றிகிறார்.

கைரேகை பதிவு

செய்ய உத்தரவு

கடந்த ஒரு வாரமாக கமிஷனர் நடராஜ் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இப்போது ஒரு புதிய உத்தரவும் போலீசாருக்கு கமிஷனரால் பிறப்பிக்கப்பட்டுள் ளது. இரவில் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிப்பார் களின் கைரேகையையும் பதிவு செய்யவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ள பீரோ புல்லிங் கொள் ளையனின் கைரேகையோடு சந்தேக நபர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இதன் மூலம், பீரோபுல்லிங் கொள்ளை யன் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்க முடியும் என்றும், அல்லது அவன் கொள் ளையில் ஈடுபட்டால் பிடிக்க முடியும் என்றும் கமிஷனர் நம்புகிறார்.

நம்பிக்கை

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 600 சந்தேக நபர்களின் கைரேகையை பதிவு செய்து போலீசார் ஒப்பிட்டு பார்த்துள் ளனர்.

``மீண்டும் பீரோபுல்லிங் கொள் ளையன் தனது கொள்ளை வேட் டையை தொடங்கும்போது நிச்சயமாக அவனைப் பிடித்து விடுவோம்" என்று போலீசார் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

*****



`பீரோ புல்லிங்' கொள்ளையை

பொதுமக்களே தடுக்கலாம்

பீரோபுல்லிங் கொள்ளையன் ஒன்றும் வீராதி வீரனோ, சூராதி சூரனோ அல்ல. கத்தியைத் தீட்டாமல் தனது புத்தியை மட்டுமே தீட்டி இதுவரை கொள்ளைச் சம்பவங்களை அவன் நிகழ்த்தி இருக்கிறான். பொதுமக்கள் சற்று விழிப்போடு, சிந்தித்து செயல்பட்டால், இந்த கொள்ளையை எளிதில் தடுத்துவிடலாம். பீரோபுல்லிங் கொள்ளையன் முதலில் ஜன்னல் திறந்து கிடக்கும் வீட்டை தேர்ந்தெடுக்கிறான். ஜன்னல் பூட்டி இருந்தால் அதை ஓசையில்லாமல் உடைத்து திறக்கிறான்.

அடுத்து ஜன்னல் ஓரம் பீரோ இருந்தால் அதை எளிதில் திறந்து, அதற்குள் இருக்கும் பணம், நகையை அள்ளிச்சென்றுவிடுவான். பீரோ ஜன்னலிலிருந்து அறைக்குள் சற்று தூரம் தள்ளி இருந்தால், பீரோவை இரும்பு கொக்கி கம்பி மூலமோ அல்லது சுருக்கு கயிறு மூலமோ கட்டி அருகில் இழுத்து கொள்ளை அடிப்பான். பீரோவை இழுக்கும் போது ஓசையில்லாமல் இழுக்க, அது இருக்கும் அறைக்குள் ஒருவித எண்ணையை தெளித்துவிடுவான். அருகில் கட்டி இழுத்த பீரோ பூட்டி இருந்தால், அதை எளிதில் உடைத்து கொள்ளை அடிப்பான். ஒரு வேளை உடைக்க முடியாவிட்டால், அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுவான்.

தடுக்கலாம்

பீரோவை இழுத்து (புல்லிங்) கொள்ளை அடிப்பதால், அதற்கு ``பீரோ புல்லிங்" கொள்ளை என்று பொதுமக்களும், போலீசாரும் பெயர் வைத்துவிட்டார்கள். இந்த கொள்ளையை பொதுமக்கள் எளிதில் தடுக்கலாம். அதாவது பீரோ இருக்கும் அறை பெரிதாக இருந்தால், பீரோவை ஜன்னலிலிருந்து எவ்வளவு தூரத்தில் வைக்க முடியுமோ அவ்வளவு தூரத்தில் நேர் எதிரில் போடாமல் சற்று தள்ளி போடலாம். அதாவது கொள்ளையனால் கட்டி இழுக்க முடியாதபடி வைக்கலாம்.

குறுகிய அறையாக இருந்தால் ஜன்னலுக்கும், பீரோவுக்கும் இடையில் கட்டிலோ அல்லது மேஜை போன்ற கனமான பொருட்களை போட்டுவிட்டால், கொள்ளையனால் பீரோவை கட்டி இழுத்து அருகில் கொண்டு வரமுடியாது. இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்களே சிந்தித்து கையாண்டால், பீரோபுல்லிங் கொள்ளை பயம் இல்லாமல் நிம்மதியாக படுத்து தூங்கலாம்.

---



`பீரோ புல்லிங்' கொள்ளையனுக்கு

போலீசாரே உளவு சொல்கிறார்களா?

பீரோபுல்லிங் கொள்ளையன் போலீசாரின் நடமாட்டத்தை தெளிவாக தெரிந்து கொண்டு செயல்படுகிறான். போலீசாரால் அவனைப் பிடிக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணாக சொல்லப்படுகிறது. சந்தனக் கடத்தல் வீரப்பன், போலீசாரால் நெருங்க முடியாத அளவுக்கு 15 ஆண்டு காலம் பெரும் சவாலாக இருந்தான். போலீசாரின் நடமாட்டம் பற்றி போலீஸ் துறையைச் சேர்ந்த சிலரே வீரப்பனுக்கு உளவு சொன்னதாகவும், அதனால் தான் வீரப்பன் எளிதில் தப்பித்து வந்தான் என்றும் சொல்லப் படுவதுண்டு.

பீரோபுல்லிங் கொள்ளையனுக்கு கூட, இதுபோல போலீஸ் துறையைச் சேர்ந்த சிலர் உளவு சொல்கிறார்களா? என்ற சந்தேகம் இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

``போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டதும், பீரோபுல்லிங் கொள்ளையன் தனது கொள்ளை வேட்டையை நிறுத்திக் கொண்டான். இது சந்தேகத்தை கொடுத்துள்ளது" என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

அதிரடிப்படை

``மீண்டும் பீரோபுல்லிங் கொள்ளையன் தனது கைவரிசையை காட்டத் தொடங்கினால், அவனைப் பிடிக்கும் பணியில் அதிரடிப்படை பிரிவு போன்ற சிறப்பு போலீஸ் படை பிரிவை களத்தில் இறக்க போலீஸ் கமிஷனர் முன்வரவேண்டும்" என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Dailythanthi

Print this item

  விடுதலைப் புலிகளுடன் பயணிக்க படையினருக்கு சிறிலங்கா அரசு உத்
Posted by: sinnappu - 08-09-2005, 07:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

விடுதலைப் புலிகளுடன் பயணிக்க படையினருக்கு சிறிலங்கா அரசு உத்தரவு!
[திங்கட்கிழமை, 8 ஓகஸ்ட் 2005, 17:58 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் ஊடாக வடக்கிலிருந்து கிழக்கிற்கும், கிழக்கிலிருந்து வடக்கிற்கும் சென்று திரும்பும் விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் போது விடுதலைப் புலிகளுடன் படையினரும் பயணிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கம் படையதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


விடுதலைப் புலிகள் பயணிக்கும் வாகனங்களில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்ற எண்ணிக்கைக்கு ஏற்ப வழித்துணையாக பயணிக்கும் படை அதிகாரிகளினதும் வீரர்களினதும் எண்ணிக்கை அமையும்.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் ஊடாக பயணிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அவர்கள் பயணிக்கும் வாகனங்களில் பாதுகாப்புப் படையினரும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெலி ஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் பயணித்த வாகனம் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதையடுத்து விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

வெலி ஓயா சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் காயமடைந்தமையும் அதனையடுத்து தமது பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரி விடுதலைப் புலிகள் 14 நாள் கால அவகாசம் சிறிலங்கா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சுட்டது புதினத்தில் இருந்து

Print this item

  மர்மம் விலகுமா? ;)
Posted by: தூயா - 08-09-2005, 03:48 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (57)

யாழில் உலாவும் போது திடீரென "எரெர்" வந்து போஜ் தானாக மறைகிறது. இப்படி மற்றய இணையத்தளங்களுக்கு நடக்கவில்லை? காரணம் என்ன?

Print this item

  பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா?
Posted by: vasisutha - 08-08-2005, 11:21 PM - Forum: சினிமா - No Replies

<b>பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா? </b>
-<i>சின்னராசு</i>

துரோணரை நேரிலே கண்டு அவரிடம் பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து அதில் தலை சிறந்தவானாய் விளங்கிய ஏகலைவன் மாதிரி, பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று பாரதிதாசனே வியந்து பாராட்டும் விதம் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதை பறிகொடுத்து அவரிடம் மரியாதை செலுத்தி பழகியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். அதே மாதிரி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் அலாதியான அன்பை செலுத்தி வந்தார்.

கண்ணதாசன் சொந்தமாக படம் தயாரித்தபோது, அப்போது முன்னணியில் இருந்த ஒரு திரைப்பட கவிஞரிடம் தனது படத்திற்கு பாடல் எழுதித்தர கேட்டபோது, அந்த கவிஞர் மிக அலட்சியமாக, Ôஎனக்கு புதிதாக எழுத நேரமில்லை. இதில் ஏதாவது பாடல் தேறினால் எடுத்துக்கொண்டு போÕ என்று பழைய காகிதங்களை தூக்கித் தந்ததாக வேதனையுடன் கண்ணதாசன் கூறினார்.

அதேசமயம் அந்த காலக்கட்டத்தில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை கண்ணதாசன் நேரில் பார்த்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டபோது, அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாளில் தமிழ் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சில திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்து வந்தார். அந்த ஆசிரியரின் ஏளனத்துக்கு பலியானவர்களில் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர்.

ஒரு சமயம் ஒரு விழாவிற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் வந்திருந்தார்கள். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்த நேரம், அப்பக்கமாக குறிப்பிட்ட அந்த சினிமா பத்திரிகையின் ஆசிரியர் வரவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென பாய்ந்து அந்த சினிமா பத்திரிகை ஆசிரியரின் சட்டை கழுத்தை பிடித்துக் கொண்டார். அந்த ஆசிரியர் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி ஏளனமாக அந்த வாரத்தில் தன் பத்திரிகையில் எழுதி இருந்ததை பட்டுக்கோட்டையார் குறிப்பிட்டு, <b>'என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?''</b> என்று கேட்டு உதைக்கப் பொய்விட்டார்.

தனக்காக ஒரு மனிதரிடம் சண்டைக்கு போகிற அளவு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நடந்து கொண்டார் என்றால் அவருக்கு தன் மீதுள்ள மதிப்பு எவ்வளவு என கண்ணதாசன் நெகிழ்ந்து போனார்.

அதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. <b>'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!'</b> என்று கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.

சுமார் 29 வயதிலேயே காலமாகிவிட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது எழுத்தைப் போலவே உயர்ந்த சுபாவங்களை கொண்ட மனிதராவார். பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.

ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், <b>'எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்'</b> என்றார்.

பொதுவுடமை லட்சியம் என்றால் வாழ்க்கையில்லாதவர்களை முதலில் கை தூக்கி விடுகின்ற பணிதான் முக்கியமானது. அந்தப் பணியில் நாட்டம் உள்ளவர்கள் சொந்த துன்பங்களை பெரிதுபடுத்தமாட்டார்கள்.

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.

<b>'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'</b>

இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், <i>'அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே''</i> என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த 'ஆரவல்லி' படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.

பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமல்லாமல் நகைச்சுவையான பாடல்களும் எழுதுவதில் வல்லவர். அவரும் அந்த காலத்தில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி பாடல்கள் எழுதுவதுண்டு. ஆனால் அர்த்தம் விளங்குமாறு பாடல்கள் எழுதியதுதான் சிறப்பு!

<b>'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'</b>


என்று மிக நயமாக பட்டுக்கோட்டை நையாண்டி செய்கிறார். 'நான் வளர்த்த தங்கை' என்ற படத்திலே போலி பக்தர்களை விநயமாகக் கேலி செய்கிறார்.

<b>'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'</b>

வெறும் கேலி கிண்டல் என்றில்லாமல் ஒரு சிறந்த சிந்தனைவாதியின் சீற்றமும் பட்டுக்கோட்டையார் பாடலிலே காணலாம். 'பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே காணலாம்.

<b>'சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!'</b>

என்று ஆத்திரமாய் கேட்கிறார். அதேமாதிரி 'கண்திறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிகரமான வரிகளை பட்டுக்கோட்டையார் பாடலாக்கி இருக்கிறார்.

<b>'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...' </b>

என்கிறார் வேதனையுடன். இதே போல் 'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக்கோட்டையார் எழுதி இருந்தார்.


<b>'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
எதற்கும் உழைப்பு தேவை!</b>

என்கிறார். 'பாண்டித்தேவன்' என்ற திரைப்படத்தில் இன்றைய நாட்டு நடப்பை சொன்னதுபோல பட்டுக்கோட்டையார் எழுதியுள்ள பாடல் சில வரிகள்.

<b>'நாடு முன்னேற பலர்
நல்ல தொண்டு செய்வதுண்டு
நல்லதை கெடுக்கச் சிலர்
நாச வேலையும் செய்வதுண்டு
ஓடெடுத்தாலும் சிலர்
ஒற்றுமையாய் இருப்பதில்லை - இந்த
உண்மையை தெரிந்தும், நீ
ஒருவரையும் வெறுப்பதில்லை!' </b>

என்கிறார். 'திருடாதே' திரைப்படத்தில் குழந்தைக்கு புத்தி சொல்வது மாதிரி பெரியவர்களுக்கே பொதுவுடமை தத்துவத்தின் சாறு எடுத்து கவிதையாக்கி ஊட்டி இருக்கிறார். அதில் சில வரிகளை பாருங்கள்.

<b>'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
கீழும் மேலும் புரளாது</b>


பட்டுக்கோட்டையாரின் சிந்தனை செல்வமான அற்புதமான பாடல்களை குறைந்த காலத்திலேயே நிறைந்தளவு எழுதி இருக்கிறார். அவற்றில் இன்னும் சில பகுதிகளை அடுத்த பகுதியில் நாம் பார்க்கலாம்.


vikatan

Print this item

  கவிதை கேட்டாய் உன்நினைவே கவிதைதானென
Posted by: inthirajith - 08-08-2005, 10:50 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

உன்னிடம் நான் வந்த போது நான் கவி இல்லை
உன்னை பிரிந்தபோது நான் கவி ஆனேன்
நானே பண்ணாத தப்புக்காக சிலுவை சுமக்கிறேன்
நம்பிய நண்பன் மனவிகாரத்தில் தன்னை மறந்து
தப்புகணக்கு பண்ணிவிடடான் அதற்கு பரிசு என்
மனசு அளுகிறது ஆனாலும் செக்குக்கும்
சிவனுக்கும் மாறுபாடு புரியவில்லை அவெனுக்கு
உனக்குமா என்னை புரியவில்லை
புரிந்தால் என்னிடம் ஏன் அப்படி ஒரு வினா???

Print this item

  கனவுகளே வாழ்க்கை
Posted by: inthirajith - 08-08-2005, 10:35 PM - Forum: கவிதை/பாடல் - Replies (12)

மரணம் ஒன்று வரும்வரை உன்னினைவுகள்
என்னை தாலாட்டும் என்னை உன்னால்
புரியமுடியாது ஏன் என்றால் உன்மனது என்னிடம்
உன் நலம் ஒன்றுதான் என் தோத்திரம்
என் அருகில் உன்னினைவுடன் உன் வாசமும் தான்
உயிரை பிரிந்தால் உடல் இருக்கும் மம்மிபோல்
இப்போ என் நண்பனின் வார்த்தைகள் உனக்கு வேதம்
உன்னை என்னால் வெறுக்கமுடியாது என்னுயிரை
பிரிவேன் என்று உன்னால் கற்பனை பண்ணமுடிமா
நாடு விட்டு நான்போகலாம் என்னுயிர்
உன்னை மட்டும் தான் நேசிக்கும் யாரோ
ஆடும் நாடகதில் நான் ஒரு பொம்மை

தலைப்பு திருத்தப்பட்டுள்ளது . மதன்

Print this item

  மொறு மொறு மீன்
Posted by: Rasikai - 08-08-2005, 08:53 PM - Forum: சமையல் - Replies (48)

தேவையான பொருட்கள் :

10 மீன் துண்டுகள்
2 ஸ்பூன் வினிகர்
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 ஸ்பூன் கரம் மசாலா
2 முட்டை
ஒன்றரை கப் ப்ரெட் தூள், கடுகு எண்ணெய் பொரித்தெடுக்க,
உப்பு சுவைக்கேற்ப, சிறிது கொத்துமல்லி (அலங்கரிக்க)

செய்முறை :

மீன் துண்டின் மீது உப்பு தடவி 5 நிமிடம் வைக்கவும். வினிகர், இஞ்சு பூண்டு பேஸ்ட், கரம் மசாலா ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதை மீன் துண்டின் மேல் தடவி வைக்கவும். முட்டையை உடைத்து நன்றாக அடித்து மீன் துண்டுகளை அதில் தோய்த்து எடுத்து உடனே அதை ப்ரேட் தூளில் புரட்டி எடுக்கவும். இதே போல் எல்லா மீன் துண்டுகளையும் தயார் செய்யவும். கடுகு எண்ணெயைச் சூடாக்கி பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மொறு மொறு மீன் தயார்!

Print this item

  நாடகம்
Posted by: sathiri - 08-08-2005, 03:43 PM - Forum: நகைச்சுவை - Replies (55)

களத்தில் குட்டி கதை பார்த்தபோது ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற அதில் யாழ்கள் உறவுகளின் பெயரையே பாவிக்கின்றேன்.யாருக்காவது மனசங்கடங்கள் ஏற்படின் எனக்கு அறிய தரவும் நீக்கி விடுகிறேன்.(யாழினி கவனிக்க)
இதோ குறு நாடகம்

அங்கம் ஒன்று

திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன்

வீணானவன்: ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக்


நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால் சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண் ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த பழம்கஞசியும் சில பச்சை மிளகாய் களையும் கொண்டு வந்து அவருக்கு அருகில் வைத்து வணங்கி விட்டு போகிறாள்.

மன்னர்: ஆகா அருமை காலையில் பழம்கஞ்சியும் பச்சமிளகாயும் குடிப்து எத்தனை இனிமை

(கஞ்சியை எடுத்து வாயருகே கொண்டு போகிறார் அப்போது வாசலில் ஆராச்சி மணி அடிக்கும் சத்தம் கேட்க எல்லோரும் திடுக்கிட்டு வாசலை பார்க்கிறனர் அப்போது இரு இளம் பெண்கள் தலைவிரி கோலமாக உள் நுளைகிறனர்.

ஒருத்தி: மன்னா தங்கள் ஆட்சியில் அநீதி நடக்கிறது நீதி வேண்டும் மன்னா

மன்னர்: என்ன இங்கு மலிவு விலையில் நீதி கிடைக்கும் எண்டு எழுத்திப்போட்டிருக்கா காலங்காத்தாலை வந்திட்டாங்க கஞசியை கூட குடிக்க விடாமல் சே . சரி நீங்கள் யார் என்ன பிரச்சனை

ஒருத்தி : மன்னா எனது பெயர் தமிழினி இதோ இவளது பெயர் அஸ்வினி

மன்னர் : மொத்தத்திலை எனக்கு பிடிச்சிருக்கு சனி பிரச்னையை சொல்லுங்கப்பா

தமிழினி: மன்னா

மன்னர்: என்னா

தமிழினி: நான் எனது கணவர் சிதம்பரத்தாருக்கு காச்சல் எண்டு முகத்தாரின் கடையில் பாண் வாங்கி கொண்டு போய் கொண்டிருக்கும்போது இதோ இந்த அஸ்வினி பாணை பறித்து வைத்துகொண்டு அது தன்னுடைது எண்டு பொய் சொல்லுகிறாள் நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும்.

அஸ்வினி: இல்லை மன்னா இல்லை இதோ பாருங்கள் பாண் வாங்கியதற்கான இரசீது என்னிடமுள்ளது இவள்தான் பொய் சொல்கிறாள்(என்று தன்னிடமிருந்த இரசீதை மன்னனிடம் நீட்டுகிறாள்)

தமிழினி: மன்னா என்னிடமும் இரசீது உள்ளது இதோ பாருங்கள்

(மன்னர் இரண்டு இரசீதையும் வாங்கி உற்று பார்த்து விட்டு)

மன்னர்: சே இதற்கு பெயர் இரசீதா? பழைய சீமெந்து பேப்பரில் கிழிச்சு ஏதோகிறுக்கியிருக்கு முதல் வேலையா முகத்தானை தூக்கி உள்ளை போடவேணும்.

தமிழினி: மன்னா உங்கள் தீர்ப்பில்தான் இந்த நாட்டின் பெருமையே தங்கியுள்ளது நல்ல தீர்ப்பாக கூறுங்கள்

மன்னர்: ஆமா இந்த நாட்டுக்கு அரசனா இருக்கிறதை விட பேசாமல் பிச்சையெடுக்க போகலாம். சரி உங்களிற்கு பாண் தானே பிரச்சனை யாரங்கே எமது படையணியில் வெட்டு கொத்து தளபதி மதனை வரச்சொல்லுங்கள்

மதன் வந்து வணங்கிவிட்டு: மன்னா என்ன பிரச்சனை ஆணையிடுங்கள் எந்த நாட்டை பிடிக்க வேண்டும் யாரை வெட்ட வேண்டும். துடிக்கிறது முக்கு முடி(அவருக்குமீசையில்லை)

மன்னர்: அமெரிக்காவை அடிச்சு பிடிக்கவேண்டும் முடியுமா? வயித்தெரிச்சலை கிளப்பாமல் பாரும் நமது நாட்டில் பாணிற்கு அடிபடுகிறார்கள் வெட்ககேடு அந்த பாணை வாங்கி ஆளுக்கு பாதியா வெட்டி கொடுத்து ஆக்களை முதலில் வெளியிலை விடும்

தளபதி மதன்: மன்னா ஒரு பிரச்சனை

மன்னர்; : உமக்குமா என்னய்யா பிரச்சனை

தளபதி மதன் : பலகாலமாக எனது வீரவாளை பாவிக்காததால் துருப்பிடித்து விட்டது அதுதான்.....

மன்னர்: யோவ் நாம் இப்ப சண்டை தான் பிடிக்கிறேல்லலை இடைக்கிடை அதை தீட்டி இளனியாவது சீவவேண்டியதுதானே எதாவது செய்து தொலையும் ஆனால் அந்த இரு பெண்மணிகளையும் இடத்தை விட்டு காலி பண்ண சொல்லும்(மன்னர் மீண்டும் கஞ்சி குடிக்க கிண்ணத்தை தூக்குகிறார்)

;தளபதி மதன்:ஆகட்டும் மன்னா( வெற்றிவேல் வீர வேல்என்ற கத்தியவாறு பாணை வெட்டுவதற்காக வாளை ஓங்குகிறார்)

(வாசல் பக்கமாக ஒருவர் நிறுத்துங்கள் மன்னா நிறுத்துங்கள் என்றவாறு ஒருவர் ஓடி வருகிறார்)

மன்னன்: யாரய்யா அது புதிசா திறந்த வீட்டிற்கை சே கோட்டைக்கை டண்ணின்ரை நாய் புகுந்த மாதிரி.நான் கஞ்சி குடிக்கிறதை ஏன் நிறுத்த வேண்டும்

வந்தவர்:மன்னா நான்தான் கடை வைத்திருக்கும் முகத்தார் எனது கடை பாணை நீங்கள் வெட்ட கட்டளையிட்டதாக அறிந்து அதை நிறுத்த ஓடோடிவந்தேன்

மன்னர்: கொஞ்சம் முதல் வந்திருந்தால் எனக்கு வேலை மிச்சமாக போயிருக்கும் சரி பாணை வெட்டவில்லை இந்த இரு பெண்மணிகளில் யார் உமது கடையில் பாணை வாங்கியவர் என்றாவது அடையாளம் காட்டும் அவரிடமே அதை ஒப்படைக்கலாம்

முகத்தார் : மன்னிக்கவும் மன்னா நான் ஏக பத்தினி விரதன் நான் எனது மனைவி பொன்னம்மாளை தவிர வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை தலை குனிந்த படிதான் வியாபாரம் செய்வேன் அதனால் யாரெண்று என்னால்: அடையாளம் காட்ட முடியாது. ஆனால் பாணை மட்டும் வெட்ட சொல்லாதீர்கள் அதை வெட்டினால் இந்த மங்களா புரிக்கே ஆபத்து

மன்னர்: கிழிஞ்சுது போ அடையாளமும் காட்ட முடியாது எண்டுறீர் ஏன் பாணை வெட்ட கூடாது எண்டாவது சொல்லும்

முகத்தார்: மன்னா ஒருமுறை தேவ லோகத்திலிருந்து நாரதர் என்கடைக்கு வந்திருந்தார்

மன்னர் ஆச்சரியமாக : நாரதரா உமது கடைக்கா உண்மையாகவா எதற்கு?

முகத்தார் : பீடி வாங்கத்தான் மன்னா இழுக்க இழுக்க இன்பம் தரும் எனது கடை பீடியை ஊதிய நாரதர் மன மகிழ்ந்து எனக்கு ஒரு வரம் தந்தார் என்து கடை பாணை வாங்கி அப்படியே வெட்டாமல் உண்பவர்கள் நோய் நொடியின்றி கனகாலம் இப்புவியில் வாழ்வார்கள் மீறி வெட்டினால் இந்த நாட்டிற்கும் எமக்கும் எமது மன்னருக்கும் கெட்ட காலம் வரும் என்றார் அதை தடுக்கதான் ஓடோடி வந்தேன்

மன்னர் : காலங்காத்தாலை என்னது வில்லங்கம் என்ன செய்யலாம் (திடீரென ஒரு யேசனை தோன்ற மன்னர் விறு விறுவென வந்து பாணை பறித்து தனது வாயில் அடைகிறார் பாண் தொண்டையில் சிக்கி முச்சு விட முடியாமல் மன்னர் மயங்கி விழுகிறார்)திரையும் விழுகிறது

Print this item

  நீதிக்கதைகள்
Posted by: vasisutha - 08-08-2005, 01:32 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (12)

<img src='http://img240.imageshack.us/img240/1489/chery1qf.jpg' border='0' alt='user posted image'>

ஒரு சின்ன சம்பவம்.
அந்தச் சிறுவன் வீட்டுத் தோட்டத்தைச் சுத்தம் செய்கிறேன் என்று அடர்ந்து கிடந்த புதர்களையும் செடிகளையும் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தான்.

அப்படி வெட்டிய போது அவனுடைய தந்தை ஆசையாய் வளர்த்துக் கொண்டிருந்த செர்ரி செடியும் வெட்டுப்பட்டுவிட்டது.

குடும்பத்தினர் எல்லோருக்கும் பயம். ஏனென்றால் அவனது தந்தை கோபக்காரர். அவர் ஆசையாய் வளர்த்த செடி இல்லை என்றால்... என்ன செய்வது என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள்.

மறுநாள்.

''யார் என் செடியை வெட்டியது?'' என்று தோட்டத்துக்குச் சென்று வந்த தந்தை கோபமாய்க் கேட்டார்.

''நான்தாம்பா வெட்டினேன். தோட்டத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தவறுதலாய் வெட்டிவிட்டேன்'' என்றான் சிறுவன்.

அடுத்து அடிதான் விழப் போகிறது என்று காத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அவர் ஒன்றும் செய்யவில்லை. 'இனிமேல் கவனமாய் இரு' என்று மட்டும் சொன்னார்.

ஏன் அடிக்கவில்லை?

அதற்கு தந்தை சொன்ன பதில், ''தைரியமாய் உண்மையைச் சொல்பவனைத் தண்டித்தால், அவன் வாழ்க்கையே பொய்யாகிவிடும். அவனால் உண்மையாக, வீரமாக வாழ முடியாது''.

அன்று உண்மை பேசிய சிறுவன் பிற்காலத்தில் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக உயர்ந்த ஜார்ஜ் வாஷிங்டன்.

<b>நீதி:</b> உண்மை எப்போதும் உயர்வு தரும்

Print this item

  மனநிம்மதியைக் கெடுப்பது எது??
Posted by: MUGATHTHAR - 08-08-2005, 11:36 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (36)

[b]மனநிம்மதியைக் கெ(h)டுப்பது எது??

இப்பத்தைய காலத்தில் இளைஞர் இளைஞிகளுககு கலியாணம் கட்டமுன்னம் இருக்கும் தனி வாழ்க்கையா அல்லது கலியாணம் கட்டிய பின் துணையுடன் நடத்தும் வாழ்க்கையா சந்தோஷத்தை . மனநிம்மதியை . வாழ்க்கையில் ஒரு பிடிப்பைக் கொடுக்கிறது . . . . . .
உங்களின் கருத்துக்களையும்(அனுபவம்) சொன்னீங்க எண்டால் கலியாணம் கட்ட இருக்கிற சனத்துக்கு ஒரு அட்வைஸ் ஆக இருக்குமெல்லோ . . .

ஏனெனில் அனேமானவர்கள் பெற்றோரின் வற்புறுத்தலுகளினால் திருமணம் எண்ட ஒண்டைச் செய்து போட்டு வாழ்க்கையில் நிம்மதி இழந்து திரிகிறார்கள் களத்திலை புலம்பித்திரியுற ஆட்களைப் பாக்கேக்கை எல்லாம் கட்டின ஆட்கள் போலத்தான் தெரியுது (ஜயோ நான் சின்னப்பு சாத்திரி என்னைச் சொன்னன் சண்டைக்கு வந்திடாதைங்கோ. . . )

Print this item