![]() |
|
மனநிம்மதியைக் கெடுப்பது எது?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: மனநிம்மதியைக் கெடுப்பது எது?? (/showthread.php?tid=3718) Pages:
1
2
|
மனநிம்மதியைக் கெடுப்பது எது?? - MUGATHTHAR - 08-08-2005 [b]மனநிம்மதியைக் கெ(h)டுப்பது எது?? இப்பத்தைய காலத்தில் இளைஞர் இளைஞிகளுககு கலியாணம் கட்டமுன்னம் இருக்கும் தனி வாழ்க்கையா அல்லது கலியாணம் கட்டிய பின் துணையுடன் நடத்தும் வாழ்க்கையா சந்தோஷத்தை . மனநிம்மதியை . வாழ்க்கையில் ஒரு பிடிப்பைக் கொடுக்கிறது . . . . . . உங்களின் கருத்துக்களையும்(அனுபவம்) சொன்னீங்க எண்டால் கலியாணம் கட்ட இருக்கிற சனத்துக்கு ஒரு அட்வைஸ் ஆக இருக்குமெல்லோ . . . ஏனெனில் அனேமானவர்கள் பெற்றோரின் வற்புறுத்தலுகளினால் திருமணம் எண்ட ஒண்டைச் செய்து போட்டு வாழ்க்கையில் நிம்மதி இழந்து திரிகிறார்கள் களத்திலை புலம்பித்திரியுற ஆட்களைப் பாக்கேக்கை எல்லாம் கட்டின ஆட்கள் போலத்தான் தெரியுது (ஜயோ நான் சின்னப்பு சாத்திரி என்னைச் சொன்னன் சண்டைக்கு வந்திடாதைங்கோ. . . ) - vasisutha - 08-08-2005 முகத்தாரின் கேள்விக்கு பதிலை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 08-08-2005 உங்கினை படுறவையின்ர பாட்டைப்பாத்தா (முகத்தார் சின்னப்பு) போன்றவர்களின் பாட்டைப்பாத்தா தனியா இருக்கிறது தான் நல்லம் போல. :wink: - Danklas - 08-08-2005 நம்மட புலனாய்வின் படி.. தற்பொழுது இலங்கையில் ஆணின் பெற்றோர்கள் ஆண்களை திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்துவது தாங்கள் (ஆணின் பெற்றோர்)நன்றாக இருப்பதற்க்கு.. காரணம் சீதனம்... உங்களுக்கு தெரியுமா தற்போதைய சீதனத்தின் அளவு என்ன என்பது?? இலங்கையில் இடத்துக்கு இடம் வித்தியாசம்.. இலங்கையில் தற்போதைய நிலவரப்படி யாழ்ப்பாணம் (புலிகளின் பார்வை இருந்தும் கூட வெளிப்படையாக நிகழாவிட்டாலும் உள்ளுக்குள்ளேயே) ஆக குறைந்த சீதனமாக 25 லட்சம்.. (கிட்டத்தட்ட 20,000 யூரோ) இதில் என்ன கேவலமான விடயம் என்றால்.. அந்த சீதன ரேட் வேலை வெட்டி இல்லாமல் ஊதாரி தனமா திரியும் கட்டாக்களிகளிகளுக்கு மாத்திரம்.. அப்ப படிச்சு நல்ல வேலையில மாதம் 25,30 ஆயிரம் எண்டு சம்பளம் எடுக்கும் ஒரு இளைஞன் என்ன் சீதனம் வாங்குவார் எண்பதை சிம்பிளாக கணக்கு பன்னிப்பாருங்கள்.. இதற்க்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண புலம்பெயர் தமிழர்கள்... ஆனால் புலத்திலே வாழும் இளைஞிகள் ஈரோப்பியன் ஸ்ரைலில் வாழ நினைக்கிறார்கள்.. (கொஞ்சக்காலம் திருமணம் கட்டாமல் வாழ்வது.. அதுவும் ஆணுடன் வாழுவது.. பிறகு ஜோசிக்கலாம் (சுவிஸ், ஜேர்மன், ஹலண்ட், லண்டன்.. 40%).. ஆனால் யூரோப்பில் சீதனம் கொஞ்சம் குறைந்த மாதிரி தென்படுகிறது,, காரணம் பெரும்பாலனவர்கள் காதல் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. அதைவிட வேலைய் காசு என்று கையில் பிளங்கு வதனால்... அதனால் பெற்றோர்களை எதிர்க்கும் சக்தி அவர்களிடையே குழப்பம் இல்லாமல் மிகத்தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்..
- MUGATHTHAR - 08-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> உங்கினை படுறவையின்ர பாட்டைப்பாத்தா (முகத்தார் சின்னப்பு) போன்றவர்களின் பாட்டைப்பாத்தா தனியா இருக்கிறது தான் நல்லம் போல <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதை நாங்கள் சொன்னா யார் போலோ பண்ணுவியள் "கொஞ்சம் பொறு அப்பு 31வயசிலை கலியாணத்தைக் கட்டு" எண்டாலே ஓ நீங்க மாத்திரம் 20 வயசிலை கட்டி அனுபவிக்கலாம் நாங்கள் கிடந்து காயிறதோ எண்டு கேக்கிறாங்கள் நாங்கள் அனுபவிக்கிறதாலைதான் சொல்லுறது அவங்களுக்கு வேறுமாதிரி தெரியுது என்ன பிள்ளை செய்யிறது...... தம்பி டண் உன்ரை கருத்துக்கு இனுவிலிலை நடந்த மாதிரிதான் நடக்கப்போகுது (ஆர் எண்டு தெரியாமல்) - Malalai - 08-08-2005 திருமணம் என்பதை ஏன் விலங்காகவும் சுதந்திரம் பறிபோகும் நிலையாகவும் சித்தரிக்கப்படுகிறது? ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை ஏன் சுதந்திரம் பறிபோகிறது என எண்ணிக் கொள்ளவேண்டும்? தனியாக பெற்றோருடன் வாழும் வாழ்க்கையையும் திருமணத்திற்கு பிறகு வாழும் வாழ்க்கையும் ஒத்துப்பார்க்க முடியாது ஏன் என்றால் பெற்றோருடன் வாழும்போது நாங்கள் பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறோம்..ஆனால் வளர்ந்து திருமணம் செய்யும் போது அதற்குரிய பொறுப்புக்கள் வந்துதானே ஆகும்....ஒருத்தருக்கொருத்தர் நல்ல கணவனும் நல்ல மனைவியுமாக வாழும் நிலையில் இப்படி சலிப்பு வராது தானே... நம்பிக்கையின்றியும்..ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி வாழும் போது தான் பிரச்சினைகள் வரும்....அப்படியாயின் ஒன்றாக வாழ்வதில் அர்த்தம் இல்லை....திருமணத்திற்கு முன் நல்ல பெற்றார் இருந்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் திருமணத்திற்கு பின் நல்ல துணை அமைந்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்....தாத்தா நான் சொன்னது சரி தானே? :wink: - tamilini - 08-08-2005 அடடடா எப்படி மழலை இப்படி அள்ளி வீசிறியள் ? சரியா சொன்னியள் மழலை ஆனா.. எல்லாரும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது இப்படித்தான் தொடங்குவினம். நடைமுறைப்படுத்தும் போது தான் சிக்கலோ?? :wink: - Malalai - 08-08-2005 இரண்டு சக்கரமும் சரியா இருக்கணுமே அக்கா...இல்லாட்டி சரி வண்டியும் கோவிந்தா..பயணமும் கோவிந்தா தான்...:wink: - Rasikai - 08-08-2005 மழலை உங்கள் கருத்து வெகு அருமை. அதே கருத்துத்தான் எனது கருத்தும். இரு கைகளும் தட்டும் போது தான் ஓசை உண்டாகும் அதே போல் ஒரு கணவனும் மனைவியும் ஒருவர் மேல் மற்றவர் நம்பிக்கை உள்ளவராகவும். ஒருவர் உணர்வுகளை மற்றவர் மதிப்பவராகவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பவரகவும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களது வாழ்வில் கசப்பேது? அத்துடன் ஒருவர் மேல் மற்றவர் அன்பு பாசம் காதல் நேசம் உள்ளவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாழ்வு நிச்சயமாக இனிமையானதாக மிக மிக மகிழ்ச்சியானதாகவே இருக்கும். - stalin - 08-08-2005 ஓம் ஓம் சொல்றது ஈசி.....ஆண் திங் பண்ணி தீர்மானம் எடுக்கும் முறையும் பெண்கள் திங் பண்ணி எடுக்கு முறையும் வித்தியாசம் என்று சொல்றாங்கள்.....பிறகென்ன திருமண பந்தத்திலை இரண்டையும் கட்டிவிட்டா நிம்மதி வந்த மாதிரி தான் - MUGATHTHAR - 08-09-2005 <b>இதில் நான் இளைஞர்களுக்கு கருத்துக்கூறுவதானால்</b>. . . 1. நீங்கள் அம்மா அப்பாவுடன் இருந்த போது 8 . 9 மணிமட்டும் நல்லாத் தூங்கி எழும்புவீங்கள் ஆனால் கலியாணம் கட்டிவிட்டால் 6 மணிக்கெல்லாம் எழுப்பபழகுங்கள் (சிலவேளைகளில் மனைவிக்கும் டீ போட்டுக் குடுக்கலாம் தப்பில்லை) 2. கலியாணத்திற்கு 2மாதத்திற்கு முன்னமே வீட்டில் அம்மாவிடம் சமைப்பதற்கு நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் (கலியாணத்தின் பின் உங்கள் மனைவி எனது கணவர் நல்லா சமைப்பார் என தோழிகளிடம் சொல்லிப் பெருமைப்படலாம்) 3. மனைவிக்கு பிடிக்காத டி.வி நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள் (கிரிக்கெட் மச் அரசியல் நிகழ்ச்சிகள் போன்றவை) அவவுடன் சேர்ந்து மெகா சீரிஸ் பார்க்க பழகுங்கள் 4. வீட்டில் மனைவி செய்யும் எந்த விசயத்தையும்; உங்கள் அம்மாவுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் (உலகிலேயே தனக்கு எதிரான போட்டியாளர் உங்கள் அம்மாதான் என அவர்கள் நினைப்பதால்) 5. பெண்ணைத் தேடும்போது ஆகலும் அடக்கமான பெண்ணைத் தேடினால் கடைசிலை என்னைப் போலத்தான் கஷ்டப்படவேணும் நல்லபாம்பிலைதான் விஷம் அதிகம் எண்டு சொல்வார்கள் (நம்மடை பொண்ணம்மாக்கா அப்பிடித்தான் முந்தி றோட்டிலை போண தலைநிமிந்து பாக்கமாட்டாள் அதைப்பாத்துத் தான் நானும் மயங்கினது அப்பவே கூட்டாளிமார் சொல்லுவாங்கள் ;என்ன மச்சான் உன்ரைஆள் ஒழுங்கை வேலிக்கறையான் எல்லாம் தட்டிக்கொண்டு போகுது ; எண்டு ஆட்களைக் கண்டால் ஒதுங்கிப் போறாவாம் அப்பிடி ஒரு அடக்கம் ஆனால் இப்ப??????????? இந்த ஜடியாக்களையும் கொஞ்சம் பயன்படுத்தினீர்கள் எண்டால் கலியாண வாழ்க்கையும் முழமையாக இல்லாவிடிலும் எதோ சந்தோஷமாக அமையும் என நினைக்கிறேன். . . . . - tamilini - 08-09-2005 முகத்தார் ஆண்கள் தேனீர்போட்டால் என்ன? சமையல் கூட்டல் பெருக்கல் எல்லாம் இரண்டு பேருக்கும் சமன். ஒருவர் ஒருவேளையைச்செய்யறது தான். இப்பத்தைய இளைஞர்கள் எல்லாம் கற்றுவைச்சிருக்க வேணும். அதுவும் தாய் தந்தையைவிட்டு பிரிஞ்சு வெளிநாடு வந்தவை உதுகள் தெரியாது என்று சொன்னா அடி எல்லோ கொடுப்பாளவை. இப்பத்தைய பெண்களும் நல்ல கிறிகட் பாக்கிறார்கள். மெகாசீரியல் யார் பாக்கிறா பொன்னம்மாக்கா மாதிரியான அம்மாக்காவை தான் இப்ப பாக்கினம். மற்ற இளசுகள் தியெட்டர் வழிய எல்லோ இருக்கினம். பின்ன அதென்ன ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டு பேசிறது. அதுவும் அம்மாவோட அவங்களுக்கு சமையல்ல எத்தனை வருச அனுபவம் இருக்கும். கத்துக்குட்டிகளைஒப்பிட்டா எப்படி?? பெண்கள் தந்தையோட ஒப்பிடீனமோ ஆண்களை பிறகென்ன.. வெட்டி ஜம்பம். அதென்ன இன்னும் தலைகுனிஞ்சு கொண்டு திரியிற பெண்கள் இருக்கிறார்களா என்ன?? நல்ல வேளை பொன்னம்மாக்கா சீக்கிரம் நிமிந்து கொண்டா? ஆனா இப்ப பெண்கள் தலைகுனிவதில்லை ஏன் குனியவேணும் அவசியம் இல்லை. :wink: - Thala - 08-09-2005 முகத்தார் இப்பிடி கேள்வி கேக்கிறது நல்லால்ல பெரியமனுசன் கேட்டிங்கள் எண்டு சொல்லுறன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எவர் ஒருவர் விட்டுக்கொடுப்பு களுக்கு தயாராகிறாரோ அவருக்குத்தான் குடும்பவாழ்வு சரிப்படும் காத்திருத்<b>தல் </b>பாத்திருத்<b>தல்</b> எதிர்பாத்திருத்<b>தல்</b> என்று நிறைய "தல்". கா<b>தல்</b> வரவின் விட்டுக்கொடுப்புகள்... "நான்" என்ற தனிமனிதனின் கருத்து என்ன வென்றால். எனக்கு சரியெனப்படுவதை சரியாகச்செய்ய வேண்டும். அதுக்கு தடையாக திருமணம் குடும்ப வாழ்க்கை இருக்க கூடாது.... தாலி பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வேலியாக இருக்கக்கூடாது.. - vasisutha - 08-09-2005 <!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->திருமணம் என்பதை ஏன் விலங்காகவும் சுதந்திரம் பறிபோகும் நிலையாகவும் சித்தரிக்கப்படுகிறது? ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை ஏன் சுதந்திரம் பறிபோகிறது என எண்ணிக் கொள்ளவேண்டும்? தனியாக பெற்றோருடன் வாழும் வாழ்க்கையையும் திருமணத்திற்கு பிறகு வாழும் வாழ்க்கையும் ஒத்துப்பார்க்க முடியாது ஏன் என்றால் பெற்றோருடன் வாழும்போது நாங்கள் பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறோம்..ஆனால் வளர்ந்து திருமணம் செய்யும் போது அதற்குரிய பொறுப்புக்கள் வந்துதானே ஆகும்....ஒருத்தருக்கொருத்தர் நல்ல கணவனும் நல்ல மனைவியுமாக வாழும் நிலையில் இப்படி சலிப்பு வராது தானே... நம்பிக்கையின்றியும்..ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி வாழும் போது தான் பிரச்சினைகள் வரும்....அப்படியாயின் ஒன்றாக வாழ்வதில் அர்த்தம் இல்லை....திருமணத்திற்கு முன் நல்ல பெற்றார் இருந்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் திருமணத்திற்கு பின் நல்ல துணை அமைந்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்....தாத்தா நான் சொன்னது சரி தானே? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மழலை நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். - Malalai - 08-09-2005 நன்றி நன்றி வசி அண்ணா :wink: - Malalai - 08-09-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஓம் ஓம் சொல்றது ஈசி.....ஆண் திங் பண்ணி தீர்மானம் எடுக்கும் முறையும் பெண்கள் திங் பண்ணி எடுக்கு முறையும் வித்தியாசம் என்று சொல்றாங்கள்.....பிறகென்ன திருமண பந்தத்திலை இரண்டையும் கட்டிவிட்டா நிம்மதி வந்த மாதிரி தான் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> காந்தத்தில் + ம் - ம் தானே சேர்ந்திருக்க முடியும்...:wink: - tamilini - 08-09-2005 மழலை காந்தத்தை அங்கால வையுங்கோ. இப்ப தான் ஆணும் ஆணும். பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யிறாங்களே. அப்ப இதுதுதுதுதுதுதுதுது. :wink: <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> காந்தத்தில் + ம் - ம் தானே சேர்ந்திருக்க முடியும்... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - Malalai - 08-09-2005 அப்பவும் நினைச்சனான் போடும் போது...இப்படி இசகு பிசகா ஏதன் கேள்வி வரும் என்று...:wink: அக்கோய் எனக்கு தெரியாது அக்கா அது எல்லாம்....:wink: - tamilini - 08-09-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அப்பவும் நினைச்சனான் போடும் போது...இப்படி இசகு பிசகா ஏதன் கேள்வி வரும் என்று... அக்கோய் எனக்கு தெரியாது அக்கா அது எல்லாம்.... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நினைச்சுக்கொண்டு போட்டியளா. சரி சரீ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-09-2005 <img src='http://img288.imageshack.us/img288/64/vasisig7op.gif' border='0' alt='user posted image'> வசி யார் இது...மிசிஸ் வசியா. திருமணம்...என்பது இரு மனம்... ஒரு மனம் ஆதல்...அப்படி என்றாங்க....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|