Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
``பீரோ புல்லிங்" கொள்ளையன்
#1
<img src='http://www.dailythanthi.com/images/news/20050809/pulling.jpg' border='0' alt='user posted image'>

சென்னையை 3 வருடங்களாக கலக்கும்
``பீரோ புல்லிங்" கொள்ளையன்
வடநாட்டு ஆசாமியா?
புதிய வியூகத்தில் போலீசார் தேடுதல் வேட்டை


சென்னை, ஆக. 9-

சென்னையை கலக்கும் `பீரோ புல்லிங்' கொள்ளை யன் வடநாட்டு ஆசாமியா, அல்லது பிரபல கொள்ளை யன் கவுஸ் பாஷாவின் மகனா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனி ஆளாக கலக்குகிறான்

சென்னை புறநகர் பகுதி களான, நங்கநல்லூர், பழவந்தாங் கல், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் தனி ஆளாக நின்று கொள்ளை அடித்து வருபவன் `பீரோ புல்லிங் கொள்ளையன்" 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கொள்ளை வேட் டையை தொடங்கிய இவன், கடந்த 3 ஆண்டுகளாக சுமார் ஆயிரம் பவுன் நகைகளை கொள்ளை அடித்து சாதனை படைத்துள்ளான். சுமார் 200-க் கும் மேற்பட்ட வீடுகளில் இவன் தனது கைவரிசையை காட்டி இருக்கிறான். ஆனால் 65 வீடு களில் மட்டும் இவனது கைரேகை பதிவாகி உள்ளதால், 65 வழக்கு கள் மட்டும், ``பீரோ புல்லிங்" கொள்ளையன் மீது பதிவாகி உள்ளது.

பார்க்காத முகம்

கடந்த 3 ஆண்டுகளாக 200-க் கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை அடித்து இருந்தா லும், பீரோ புல்லிங் கொள்ளை யனின் முகத்தை இதுவரை நேருக்கு நேர், தெளிவாக யாரும் பார்த்ததில்லை. பொதுமக்கள் இருட்டில்தான் அவனை பார்த்துள்ளனர். இருட்டில் பார்த்த அங்க அடையாளங் களை வைத்து அவனது உரு வத்தை கம்ப்ïட்டரில் வரைய போலீசார் முயற்சி மேற்கொண் டனர். ஆனால் கம்ப்ïட்டரில் படம் சரியாக வரைய முடிய வில்லை.

வடநாட்டு ஆசாமியா?

பீரோ புல்லிங் கொள்ளை யனின் படத்தை வரைய முடியா விட்டாலும் அவன் யாராக இருப்பான்? என்று போலீசார் ஓரளவு கற்பனை செய்து பார்த்தனர். பீரோ புல்லிங் கொள் ளையன் கொள்ளை தொழி லுக்கு முழுக்க, முழுக்க புதிய வன். இதனால் அவனது கைரேகை பழைய குற்றவாளி களின் கைரேகைப்பட்டியலில் இல்லை.

பீரோ புல்லிங் கொள்ளையன் 5 அடி உயரத்தில், வாட்ட, சாட்டமாக கறுப்பாக இருப் பான். போலீஸ்காரர்களை போல தலைமுடியை வெட்டி இருப்பான். இதனால் அவன் ``டிஸ்மிஸ்" போலீஸ்காரனாக இருப்பானோ என்று முதலில் சந்தேகப்பட்டார்கள். அடுத்து அவன் வடமாநில ஆசாமியாக இருக்கலாம் என்று கூட போலீசார் ஆராய்ச்சியில் ஈடு பட்டனர்.

கவுஸ்பாஷா மகனா?

பிரபல கொள்ளையன் கவுஸ் பாஷா என்றால் போலீஸ் வட் டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவன் ஒரு பிறவிக் கொள்ளையன். சிறு வயதிலேயே கொள்ளைத் தொழிலை தொடங்கிய இவ னுக்கு இப்போது வயது 55-ஐ தாண்டிவிட்டது. இதனால் கொள்ளைத் தொழிலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தனது மகனை கொள்ளைத் தொழிலில் ஈடுபட வைத்துள்ளதாக போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.

கவுஸ்பாஷாவின் மகன் இது வரை போலீசார் கையில் சிக்க வில்லை. பீரோ புல்லிங் கொள் ளையன், கவுஸ்பாஷாவின் மகனாக இருக்கலாம் என்றும் போலீசாருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அவன் வேலூர், திருவண்ணாமலை பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத் தது.

இதனால் அந்த பகுதியில் ஒரு வாரம் தேடிப்பார்த்தனர். கவுஸ் பாஷாவும் சிக்கவில்லை. அவனது மகனும் மாட்ட வில்லை.

கமிஷனர் நேரடி நடவடிக்கை

ஏற்கனவே பீரோ புல்லிங் கொள்ளையனைப்பிடிக்க 100 போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அதில் வெற்றி கிட்டவில்லை. சந்தனை கடத்தல் வீரப்பனைப் போல், பீரோ புல்லிங் கொள்ளையனும் போலீசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளான்.

பீரோ புல்லிங் கொள்ளையன் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எந்தவித புதிய கொள்ளையிலும் ஈடுபடவில்லை. புலி பாய்வதற்கு பதுங்குவது போல அவன் பதுங்கி இருக்கிறான். இதனால் போலீசாரின் தேடுதல் வேட்டை யிலும் சற்று தொய்வு ஏற்பட்டது.

தொடர்ந்து வேட்டை

ஆனால் போலீஸ் கமிஷனர் நடராஜ், ``இந்த தொய்வு ஏற்படக் கூடாது என்றும் தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமாக இருக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளார். தினமும் காலையிலும், இரவிலும், வயர் லெஸ்சில் பேசி, இரவு ரோந்துப் பணியில் எத்தனை போலீசார் ஈடுபட்டனர்.

அவர்கள் சந்தேகத்தின்பேரில் எத்தனை பேரை பிடித்து விசாரித்தார்கள் என்ற விவரங் களை கமிஷனர் நடராஜ் கேட்ட றிகிறார்.

கைரேகை பதிவு

செய்ய உத்தரவு

கடந்த ஒரு வாரமாக கமிஷனர் நடராஜ் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இப்போது ஒரு புதிய உத்தரவும் போலீசாருக்கு கமிஷனரால் பிறப்பிக்கப்பட்டுள் ளது. இரவில் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிப்பார் களின் கைரேகையையும் பதிவு செய்யவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ள பீரோ புல்லிங் கொள் ளையனின் கைரேகையோடு சந்தேக நபர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இதன் மூலம், பீரோபுல்லிங் கொள்ளை யன் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்க முடியும் என்றும், அல்லது அவன் கொள் ளையில் ஈடுபட்டால் பிடிக்க முடியும் என்றும் கமிஷனர் நம்புகிறார்.

நம்பிக்கை

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 600 சந்தேக நபர்களின் கைரேகையை பதிவு செய்து போலீசார் ஒப்பிட்டு பார்த்துள் ளனர்.

``மீண்டும் பீரோபுல்லிங் கொள் ளையன் தனது கொள்ளை வேட் டையை தொடங்கும்போது நிச்சயமாக அவனைப் பிடித்து விடுவோம்" என்று போலீசார் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

*****



`பீரோ புல்லிங்' கொள்ளையை

பொதுமக்களே தடுக்கலாம்

பீரோபுல்லிங் கொள்ளையன் ஒன்றும் வீராதி வீரனோ, சூராதி சூரனோ அல்ல. கத்தியைத் தீட்டாமல் தனது புத்தியை மட்டுமே தீட்டி இதுவரை கொள்ளைச் சம்பவங்களை அவன் நிகழ்த்தி இருக்கிறான். பொதுமக்கள் சற்று விழிப்போடு, சிந்தித்து செயல்பட்டால், இந்த கொள்ளையை எளிதில் தடுத்துவிடலாம். பீரோபுல்லிங் கொள்ளையன் முதலில் ஜன்னல் திறந்து கிடக்கும் வீட்டை தேர்ந்தெடுக்கிறான். ஜன்னல் பூட்டி இருந்தால் அதை ஓசையில்லாமல் உடைத்து திறக்கிறான்.

அடுத்து ஜன்னல் ஓரம் பீரோ இருந்தால் அதை எளிதில் திறந்து, அதற்குள் இருக்கும் பணம், நகையை அள்ளிச்சென்றுவிடுவான். பீரோ ஜன்னலிலிருந்து அறைக்குள் சற்று தூரம் தள்ளி இருந்தால், பீரோவை இரும்பு கொக்கி கம்பி மூலமோ அல்லது சுருக்கு கயிறு மூலமோ கட்டி அருகில் இழுத்து கொள்ளை அடிப்பான். பீரோவை இழுக்கும் போது ஓசையில்லாமல் இழுக்க, அது இருக்கும் அறைக்குள் ஒருவித எண்ணையை தெளித்துவிடுவான். அருகில் கட்டி இழுத்த பீரோ பூட்டி இருந்தால், அதை எளிதில் உடைத்து கொள்ளை அடிப்பான். ஒரு வேளை உடைக்க முடியாவிட்டால், அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுவான்.

தடுக்கலாம்

பீரோவை இழுத்து (புல்லிங்) கொள்ளை அடிப்பதால், அதற்கு ``பீரோ புல்லிங்" கொள்ளை என்று பொதுமக்களும், போலீசாரும் பெயர் வைத்துவிட்டார்கள். இந்த கொள்ளையை பொதுமக்கள் எளிதில் தடுக்கலாம். அதாவது பீரோ இருக்கும் அறை பெரிதாக இருந்தால், பீரோவை ஜன்னலிலிருந்து எவ்வளவு தூரத்தில் வைக்க முடியுமோ அவ்வளவு தூரத்தில் நேர் எதிரில் போடாமல் சற்று தள்ளி போடலாம். அதாவது கொள்ளையனால் கட்டி இழுக்க முடியாதபடி வைக்கலாம்.

குறுகிய அறையாக இருந்தால் ஜன்னலுக்கும், பீரோவுக்கும் இடையில் கட்டிலோ அல்லது மேஜை போன்ற கனமான பொருட்களை போட்டுவிட்டால், கொள்ளையனால் பீரோவை கட்டி இழுத்து அருகில் கொண்டு வரமுடியாது. இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்களே சிந்தித்து கையாண்டால், பீரோபுல்லிங் கொள்ளை பயம் இல்லாமல் நிம்மதியாக படுத்து தூங்கலாம்.

---



`பீரோ புல்லிங்' கொள்ளையனுக்கு

போலீசாரே உளவு சொல்கிறார்களா?

பீரோபுல்லிங் கொள்ளையன் போலீசாரின் நடமாட்டத்தை தெளிவாக தெரிந்து கொண்டு செயல்படுகிறான். போலீசாரால் அவனைப் பிடிக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணாக சொல்லப்படுகிறது. சந்தனக் கடத்தல் வீரப்பன், போலீசாரால் நெருங்க முடியாத அளவுக்கு 15 ஆண்டு காலம் பெரும் சவாலாக இருந்தான். போலீசாரின் நடமாட்டம் பற்றி போலீஸ் துறையைச் சேர்ந்த சிலரே வீரப்பனுக்கு உளவு சொன்னதாகவும், அதனால் தான் வீரப்பன் எளிதில் தப்பித்து வந்தான் என்றும் சொல்லப் படுவதுண்டு.

பீரோபுல்லிங் கொள்ளையனுக்கு கூட, இதுபோல போலீஸ் துறையைச் சேர்ந்த சிலர் உளவு சொல்கிறார்களா? என்ற சந்தேகம் இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

``போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டதும், பீரோபுல்லிங் கொள்ளையன் தனது கொள்ளை வேட்டையை நிறுத்திக் கொண்டான். இது சந்தேகத்தை கொடுத்துள்ளது" என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

அதிரடிப்படை

``மீண்டும் பீரோபுல்லிங் கொள்ளையன் தனது கைவரிசையை காட்டத் தொடங்கினால், அவனைப் பிடிக்கும் பணியில் அதிரடிப்படை பிரிவு போன்ற சிறப்பு போலீஸ் படை பிரிவை களத்தில் இறக்க போலீஸ் கமிஷனர் முன்வரவேண்டும்" என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)