| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 478 online users. » 0 Member(s) | 475 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,435
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,642
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,239
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,477
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,054
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,247
|
|
|
| ரஷிய நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு |
|
Posted by: SUNDHAL - 08-07-2005, 01:42 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
பசிபிக் கடலில் பெரிய வலை மற்றும் கேபிளில் சிக்கி வெளியே வரமுடியாமல் மூன்றுநாள்களாக தவித்த ரஷிய சிறிய நீர்மூழ்கிக் கப்பலை பிரிட்டிஷ் நீர்மூழ்கி ரோபோட் பத்திரமாக மீட்டது. அதிலிருந்த 7 பேரும் மீட்கப்பட்டனர்.
பசிபிக் கடலில் 190 மீட்டர் ஆழத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் நீர்மூழ்கிக் கப்பல் தவித்தது. இதையடுத்து, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உதவியை நாடியது ரஷியா.
பிரிட்டிஷ் நீர்மூழ்கி ரோபோட் ரஷிய கப்பலை பிடித்திருந்த வலையை அறுத்து கப்பலை மீட்டது.
|
|
|
| எப்படி அழைப்பது? |
|
Posted by: Vaanampaadi - 08-07-2005, 01:41 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
எப்படி அழைப்பது?
சுந்தரம், சண்முகம்,குமார்,ராஜன்.... இப்படியான பெயர்களை கேட்ட உடனேயே எமக்கு புரிகிறது இது ஒரு தமிழ் பெயர் அல்லது ஹிந்து சமயத்தவரின் பெயர் என்று...அதேபோல் இப்ராஹிம், ஹாசான்,அலி,முகமட் ..... இப்படியான பெயர்களை கேட்டதும் இது ஒரு இஸ்லாமிய சமயத்தவரின் பெயர் அல்லது அரப்நாட்டவரின் பெயர் என்று கூறிவிடுகிறோம்.... அப்படியே லிங்,சுங், கொங் .... என்ற பெயர்களை கேட்டவுடன் இவர் ஏதோ ஜப்பான், சீனா அல்லது கொரியநாட்டவர் என்று சொல்லிவிடுகிறோம்.......
இப்ப விஷயம் என்னவென்றால்.......
ஜோசப், அந்தோனி,வின்சண்ட் .... இப்படியான பெயர்களை கேட்டதும் உடனே நம்மவர்கள் இது கிரிஸ்ரியன் (christian) பெயர் என்கிறார்கள் .... எனது விவாதம் அவர்கள் அதை அப்படி கிரிஸ்ரியன் பெயர் என்று அழைப்பது தவறு என்பதுதான் ...காரணம் கிரிஸ்ரியன் (christian) அல்லது கிரிஸ்ரியானிட்டி (christianity) என்பது கிறிஸ்துவிற்க்கு பின்னர்தான் அந்த வசனம்/சொல் நடைமுறைக்கு வந்தது ...இயேசுநாதரின் தாய் தந்தையரின் பெயர்கள் ஜோசப், மேரி என்பதாகும் ..... அப்படிபார்த்தால் நம்மவர்கள் இன்றும் கிரிஸ்ரியன் பெயர் என்று அழைக்கும் ஜோசப்.... மேரி என்ற பெயர்கள் இயேஸுநாதர் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே இப்பெயர்கள் பாவணையில் இருந்திருக்கும் போது அதனை எப்படி இன்று கிரிஸ்ரியன் பெயர் என்று சொல்லமுடியும் ....
சரி போனால் போகட்டும் இவைகள் அனைத்தும் ஆங்கிலேயனின் பெயர்கள் அல்லது வெள்ளைக்காரரின் பெயர்கள் என்றும் சொல்லமுடியாதுள்ளது .... காரணம் பைபிளின் படி பார்க்கும்போது இவ்வுலகில் ஆண்டவன் படைத்த முதல் மனிதர்களின் பெயர்கள் ஆதம் (Adam), (Eva) ஏவா ..... இந்த பெயர்கள் இன்றும் நடைமுறையில் பிரபல்யமாகி இருக்கிறது ....
அப்ப இன்றும் நம்மவர்களால் கிரிஸ்ரியன் பெயர் என்று அழைக்கப்படும் பெயர்களை உண்மையில் எப்படி அழைப்பது ..... இப்பெயர்களுக்கு உரிய இனத்தவர்கள் யார்?
தெரிந்தவர்கள் சொல்லுங்கோ......
(இக்கேள்வி மிக நீண்டநாட்களாக எனது மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது ... எனக்கும் இதுவரை தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை ..... ஆகவே உங்களிடம் விடுகிறேன் - நன்றி)
|
|
|
| கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் |
|
Posted by: hari - 08-07-2005, 10:11 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
[size=14]<b>கனாக் கண்டேன் தோழா</b>
* * * * *
கனவெனப் படுவது
மனதின் நீட்சி
அது
ஆழியளக்கும் நாழி
பொய்யில் பூத்த நிஜம்
அன்றி
நிஜத்தில் மலரும் பொய்
* * * * *
என் கனவுகள்
வினோதமானவை
கோளங்களற்ற பெருவெளியில்
உட்கார இடம்தேடுமொரு
பட்டாம்பூச்சியும்
வீழ ஒரு தளமின்றிப்
பயணித்துக் கொண்டேயிருக்கும்
அனாதை மழைத்துளியும்
வாரம் ஒருமுறை வந்துபோகும்
என் கனவில்
* * * * *
ஆயிரம்மைல் நீளத்தில்
உலகராணுவ ஊர்வலம்
அது
அலையற்ற ஒரு கடலில் முடிகிறது
ஒவ்வொரு வீரனும்
கைக்கொண்ட ஆயுதம்
கடலில் எறிகிறான்
எறிந்த ஆயுதம்
விழுந்த இடத்தில்
ஆளுக்கொரு கலப்பை
ஆளுக்கொரு ரோஜாப்பூ
மிதந்து மிதந்து மேலேறி வருகிறது
ஒருமுறை கண்டும்
மறவாத கனவிது
* * * * *
மேகத்தில் ரத்தம்
பூக்களில் மாமிசம்
கத்தியில் கண்ணீர்
வழிந்தன கனவில்
கண்கசக்கி விழிக்குமுன்
ஜாதிக்கலவரம்
* * * * *
கொம்பு முளைத்த
புலியன்று துரத்தும்
ஆற்றில் விழுந்து
சேற்றில் புதைவேன்
கிட்ட இருக்கும் மரத்தின் வேர்
என்ன முயன்றும் எட்டவே எட்டாது
எழுந்து... எழுந்து... அழுந்தி... அழுந்தி...
பரீட்சை மாதம் அதுவென்பதை
எங்ஙன்ம் அறியுமோ என் கனவு?
* * * * *
போக்குவரத்துக்கிடமின்றிச்
சாலைகள் எல்லாம்
தானிய மூட்டைகள்
மூட்டைகளுக்கடியில்
நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள்
பொருளாதாரமும்
புரியும் என் கனவுக்கு
மேலே
மேலே
மேலே
மேலே
பறக்கிறேன்
எங்கிருந்தோ ஓர் அம்புவந்து
இறக்கை உடைத்து இரைப்பை கிழிக்கக்
கீழே
கீழே
கீழே
கீழே
விழுகிறேன்
ஒரு கையில் வாளும்
ஒரு கையில் வீணையும் கொண்ட
பெண்ணொருத்தி
என்னைத் தன் மடியில் ஏந்திக்கொள்கிறாள்
அடிக்கடி தோன்றும்
அதிகாலைக் கனவிது
அவள்
முகம்பார்க்குமுன் முடிந்துபோகிறது
* * * * *
வெயிலஞ்சும் பாலைவனம்
வெறுங்காலொடொரு சிறுமி
அவளுக்கு மட்டும்
குடைபிடிக்கும் ஒரு மேகம்
அவள் நடந்தால் நகரும்
நின்றால் நிற்கும்
இன்றவள்
எங்குற்றாளோ?
என்னவானாளோ?
இன்று
இருந்தால் அவளுக்கு
இருபத்தொரு வயதிருக்கும்
* * * * *
ஷேக்ஸ்பியர் வீடு...
பிரம்பு வாத்தியார்...
பிரபாகரன் தொப்பி...
கம்பங்கொல்லைக் குருவி...
கலைஞர் கண்ணாடி...
ராத்திரிவானவில்...
அராபத்தின் குழந்தை...
டயானாவின் முழங்கால்...
கொடைக்கானல் மேகம்...
வீட்டில் வெட்டிய ஆட்டின் தலை...
இப்படி...
அறுந்தறுந்துவரும் கனவுகள் ஆயிரம்
* * * * *
கடந்த சில காலமாய்
இப்படியோர் கனவு
இமயமலை - பனிப்பாளம்
தலை இல்லாத ஒற்றை மனிதன்
ஏந்தி நடக்கிறான் தேசியக்கொடியை
அடிவாரத்தில்
கோடி ஜனங்கள் கைதட்டுகிறார்கள்
நிர்வாணம் மறைத்த கையை எடுத்து
என்ன கனவிது?
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?
* * * * *
கவிதைகள் தொடரும்.....
|
|
|
| உலக நீதி |
|
Posted by: hari - 08-07-2005, 09:24 AM - Forum: தமிழும் நயமும்
- Replies (5)
|
 |
உலக நீதி
ஆசிரியர்: உலகநாதர்
#1
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
#2
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
#3
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
#4
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
#5
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
#6
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே
#7
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே
#8
சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
#9
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
#10
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே
#11
அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே
#12
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
#13
ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே
முற்றும்.
|
|
|
| இலங்கையில் பிக்குகள் பற்றி |
|
Posted by: aathipan - 08-07-2005, 09:11 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
இலங்கையில் பிக்குகள் பற்றி
இலங்கைகயில் பிக்குகள் பலர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக உள்ளார்கள்.
புத்த மதத்தில் "தான" எனப்படும் தானம் மக்களால் பிக்குகளுக்கு வழங்கப்படுகிறது. இது பொரும்பாலும் உணவுவையே கொணடிருக்கும்.சில பிக்குகள் தங்களுக்கு என்ன என்ன வேண்டுமென பட்டியலிட்டு கொடுப்பதும் உண்டாம். அதில் சிக்கின் 65 மற்றும் "கட்டா சம்போல்", நெத்தலி மீன் குழும்பு, மாசிச்சம்போல் என மீன்வகைள் கட்டாயம் இருக்குமாம். அதனால்தான் பிக்குகள் வாட்ட சாட்டமாக சாதாரண குடிமகனைவிட குண்டாக காணப்படுகிறார்கள்.
சில புத்த பிக்குகள் இரகசியமாக தொழில் செய்வதும் உண்டு. இந்தியாவில் உள்ள காயாவிற்கு செல்கிறோம் எனக்கூறி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பலபொருட்களை எடுத்துவந்து விற்பதும் உண்டு.
புத்த பிக்குகள் திருமணம் வெளிப்படையாகச்செய்வதில்லை. ஆனால் மறைமுகமாக சிலருக்கு ஒன்றுக்குமேற்பட்ட மனைவிகள் உண்டு.
|
|
|
| Robin Cook காலமானார் |
|
Posted by: vasisutha - 08-06-2005, 08:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40640000/jpg/_40640697_cook_203.jpg' border='0' alt='user posted image'>
<b>Former minister Robin Cook dies</b>
Former foreign secretary Robin Cook dies after
collapsing while hill walking in Scotland, police confirm.
<img src='http://img172.imageshack.us/img172/9886/snapshot13as.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img172.imageshack.us/img172/9421/snapshot57nr.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img172.imageshack.us/img172/3410/snapshot107ky.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| கணிப்பொறி வாங்க முன் சில விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் |
|
Posted by: tamil03 - 08-06-2005, 02:42 PM - Forum: கணினி
- Replies (2)
|
 |
<img src='http://www.luxinfo.ch/Photo%20Icon/MsPC.gif' border='0' alt='user posted image'>
வாங்க முதல் கணிப்பொறி பற்றி நல்ல அணுபவம் உடையவர்கள்
மூலம் ஆலோசித்து முடிவு எடுங்கள்
விபரங்கள்
CPU : Central Processing Unit
(சிபியு) இதன் வேகம் , இனம், தராதரம்
RAM : Random Access Memory
(ராம்) இதன் வேகம் , இனம், தராதரம்
AGP : Accelerated Graphics Port
(ஆஜிபே) இதன் வேகம் , இனம், தராதரம், நினைவகம்
Main Board :
இதன் வேகம் , இனம், தராதரம் , உதாரணம் : PIC,ISA,CNR
இவ்வகையான உருதிப்பாகங்களை பொருத்துமிடங்கள், (இன்றய நிலையில் ISA இல்லை)
Hard Disk :
இனம், வேகம், நினைவகம், அதன் சேமிப்பு அளவுகள்
CD ROM :
இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம்
DVD:- Digital Versatille Disc
இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம்
Floppy Disk :
வண்தடடின் சுழல் வேகம் அதன் சேமிப்பு அளவுகள்
Mouse :
இதன் இனம், பயன்பாட்டின் முறைகள்
Keyboard :
அச்சுதட்டின் இனம், நாடு, செயலாக்கம்
Soubd Card :
ஒலித்தட்டு இனம், செயலாக்கம்
Power Box (Tower) : மின்சாரத்தின் செயலாக்கம்
Monitor (TV) : இனம், திரையின் அளவு அதன் தன்மைகள்
ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் எவ்வளவு கால உத்திரவாதம்.
ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் அதற்கான மென்பொருட்கள்
அதாவது Driver வர்களை கேட்டு வாங்கவேண்டும்.
|
|
|
| தமிழ் எழுத்துப் பிழைகளுடன் யாழில் பெயர்ப்பலகை! |
|
Posted by: வினித் - 08-06-2005, 12:33 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (3)
|
 |
தமிழ் எழுத்துப் பிழைகளுடன் யாழில் பெயர்ப்பலகை!
[சனிக்கிழமை, 6 ஓகஸ்ட் 2005, 15:03 ஈழம்] [தாயக செய்தியாளர்]
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட வீடுகளின் மீள்கட்டமைப்பிற்கான அலகின் யாழ். மாவட்ட காரியாலய பெயர்ப்பலகையில் தமிழ் எழுத்துக்களில் பிழைகள் காணப்படுகின்றன.
மேற்படி பெயர்ப்பலகை நகர அபிவிருத்தி நீர் விநியோக அமைச்சினால் கொழும்பில் தயாரிக்கப்பட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட வீடுகளின் மீள் கட்டமைப்பிற்கான யாழ். மாவட்டக் காரியாலயத்தில் போடப்பட்டுள்ளது.
காரியாலயம் என்பது கார்யாலம் என எழுதப்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதியில் அதுவும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறானதொரு பெயர்பலகை போடப்பட்டுள்ளமை குறித்து பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்
¿ýÈ¢ Ò¾¢Éõ
|
|
|
|