![]() |
|
கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் (/showthread.php?tid=3732) |
கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் - hari - 08-07-2005 [size=14]<b>கனாக் கண்டேன் தோழா</b> * * * * * கனவெனப் படுவது மனதின் நீட்சி அது ஆழியளக்கும் நாழி பொய்யில் பூத்த நிஜம் அன்றி நிஜத்தில் மலரும் பொய் * * * * * என் கனவுகள் வினோதமானவை கோளங்களற்ற பெருவெளியில் உட்கார இடம்தேடுமொரு பட்டாம்பூச்சியும் வீழ ஒரு தளமின்றிப் பயணித்துக் கொண்டேயிருக்கும் அனாதை மழைத்துளியும் வாரம் ஒருமுறை வந்துபோகும் என் கனவில் * * * * * ஆயிரம்மைல் நீளத்தில் உலகராணுவ ஊர்வலம் அது அலையற்ற ஒரு கடலில் முடிகிறது ஒவ்வொரு வீரனும் கைக்கொண்ட ஆயுதம் கடலில் எறிகிறான் எறிந்த ஆயுதம் விழுந்த இடத்தில் ஆளுக்கொரு கலப்பை ஆளுக்கொரு ரோஜாப்பூ மிதந்து மிதந்து மேலேறி வருகிறது ஒருமுறை கண்டும் மறவாத கனவிது * * * * * மேகத்தில் ரத்தம் பூக்களில் மாமிசம் கத்தியில் கண்ணீர் வழிந்தன கனவில் கண்கசக்கி விழிக்குமுன் ஜாதிக்கலவரம் * * * * * கொம்பு முளைத்த புலியன்று துரத்தும் ஆற்றில் விழுந்து சேற்றில் புதைவேன் கிட்ட இருக்கும் மரத்தின் வேர் என்ன முயன்றும் எட்டவே எட்டாது எழுந்து... எழுந்து... அழுந்தி... அழுந்தி... பரீட்சை மாதம் அதுவென்பதை எங்ஙன்ம் அறியுமோ என் கனவு? * * * * * போக்குவரத்துக்கிடமின்றிச் சாலைகள் எல்லாம் தானிய மூட்டைகள் மூட்டைகளுக்கடியில் நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள் பொருளாதாரமும் புரியும் என் கனவுக்கு மேலே மேலே மேலே மேலே பறக்கிறேன் எங்கிருந்தோ ஓர் அம்புவந்து இறக்கை உடைத்து இரைப்பை கிழிக்கக் கீழே கீழே கீழே கீழே விழுகிறேன் ஒரு கையில் வாளும் ஒரு கையில் வீணையும் கொண்ட பெண்ணொருத்தி என்னைத் தன் மடியில் ஏந்திக்கொள்கிறாள் அடிக்கடி தோன்றும் அதிகாலைக் கனவிது அவள் முகம்பார்க்குமுன் முடிந்துபோகிறது * * * * * வெயிலஞ்சும் பாலைவனம் வெறுங்காலொடொரு சிறுமி அவளுக்கு மட்டும் குடைபிடிக்கும் ஒரு மேகம் அவள் நடந்தால் நகரும் நின்றால் நிற்கும் இன்றவள் எங்குற்றாளோ? என்னவானாளோ? இன்று இருந்தால் அவளுக்கு இருபத்தொரு வயதிருக்கும் * * * * * ஷேக்ஸ்பியர் வீடு... பிரம்பு வாத்தியார்... பிரபாகரன் தொப்பி... கம்பங்கொல்லைக் குருவி... கலைஞர் கண்ணாடி... ராத்திரிவானவில்... அராபத்தின் குழந்தை... டயானாவின் முழங்கால்... கொடைக்கானல் மேகம்... வீட்டில் வெட்டிய ஆட்டின் தலை... இப்படி... அறுந்தறுந்துவரும் கனவுகள் ஆயிரம் * * * * * கடந்த சில காலமாய் இப்படியோர் கனவு இமயமலை - பனிப்பாளம் தலை இல்லாத ஒற்றை மனிதன் ஏந்தி நடக்கிறான் தேசியக்கொடியை அடிவாரத்தில் கோடி ஜனங்கள் கைதட்டுகிறார்கள் நிர்வாணம் மறைத்த கையை எடுத்து என்ன கனவிது? வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ? * * * * * கவிதைகள் தொடரும்..... - ப்ரியசகி - 08-07-2005 ஆகா..ஹரி அண்ணா..நல்ல கவிதைகள்..நன்றி.. வைரமுத்தோட கவிதைகளில ஏதொ ஒரு வித்தயாசம் இருக்கும்..நல்லாவும் இருக்கும்.. - Vishnu - 08-07-2005 நன்றி ஹரி அண்ணா... நல்ல கவி வரிகள். <b>காதலித்துப்பார்</b> என்று வைரமுத்துவின் கவிவரிகள் யாராவது எங்காவது கிடைத்தால் இங்கே பதிக்க முடியுமா?? பல தடவைகள் கேட்டு இருக்கிறேன்.. ஆனால் முழுமையாக வாசிக்க விரும்புகிறேன். - hari - 08-07-2005 http://www.amuthu1.5gigs.com/kAVITHI/Amuth...athalithupar.rm - Vishnu - 08-07-2005 நன்றி ஹரி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sinnakuddy - 08-07-2005 உந்த ஆள் பேச வெளிக்கிட்டால் நிற்பாட்டாது .பேசுற மைக்குக்கே உந்தஆளை பிடிக்காது.கொஞ்சகாலம் சுகாசினிக்கு பின்னாலை திரிஞ்சிச்சுத்து. - vasisutha - 08-07-2005 நன்றி ஹரி - அனிதா - 08-07-2005 நன்றி ஹரி அண்ணா.. - kavithan - 08-07-2005 நன்றி மன்னா - tamilini - 08-18-2005 <b>உள்முகம்</b> வருந்தாதே வைரமுத்து! வாய்ப்பிழந்து போகவில்லை இக்கணம் நினைத்தாலும் நீ அழுக்கறுக்கலாம் காலத்தின் ஒரு பகுதி நீ கடந்திருப்பது வாழ்வைச் சலவைசெய்து உடுத்தும் வயது தோல் சுருங்காமல் உள்ளே பழுத்திருக்கும் மனது இன்று தெளிந்தாலும் நீ முழுமை நோக்கி முதலடி வைக்கலாம் * * * * * காலமுனக்குச் சிறகுதந்தது ஈக்களோடு பறக்கவல்ல குயில் நீ! முப்பதுநாளும் முட்டையிடும் கோழியல்ல எப்படித்தான் சகிக்கிறாயோ? கருவாட்டுச் சந்தையில் ரோஜா விற்கிறாய் ஒருவகையில் நீ புத்திசாலி சந்தையில் சம்பாதித்தவர்க்கிடையில் ஒரு சந்தையைச் சம்பாதித்தவன் * * * * * சந்தைப் பொருள் செய்யவோ ஜனித்தாய் நீ? சந்தைசேராத பொருளெதுவோ அதுவன்றோ உயர்ந்த பொருள்? எந்தச் சந்தையில் வாங்குவாய்? சிறகுள்ள காற்றை... சிதறும் மழையை... இரவில் பூமிக்கு ஆகாயமூட்டும் ஒற்றைமுலைப் பாலை... மொட்டின் மலர்வை... சூரியப் புலர்வை... எந்தச் சந்தையில் விற்பாய்? உன்னெழுத்து ஒவ்வொன்றும் காற்றாய் மழையாய் நிலவாய் மலராய் சூரியப் புலர்வாய்ச் சுடர்கொள்ள வேண்டுமெனில் சந்தைக்கு வெளியே தமிழ் செய் உன் போதிமரம் தேடு உட்கார் உலகக் காற்றையெல்லாம் உள்ளிழு வாழ்வெனும் கடலை மூச்சுமுட்டக் குடி ஊன் உருக்கு உள்ளளி பெருக்கு மெய்ப்பதம் தேடு ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை * * * * * சில காலம் எழுதுகோல் மூடிவை கல்வியின் கர்ப்பத்தில் மீண்டும் கண்வளர் உலகம் உன்மீது திணித்த முன் முடிபுகள் அழி மனிதரோடு மெளனவிரதமிரு ஜீவராசிகளோடு பேசு ஓரிடமிராதே ஓடு....ஓ....டு ஒருநாள் நதிக்கரை ஒருநாள் சுடுகாடு ஒருநாள் ஒரு குகைப்பிளவு ஒருநாள் ஒரு மரக்கிளை பன்றிபடுக்கும் திண்ணை ஒருநாள் ஆட்டுக்கிடையில் அடுத்தொரு நாள் சுக்காகட்டும் உடம்பும் மனசும் இதுவரை நீயென்று கருதிய நீயழிந்தொழிய நீயல்லாத நீதான் நீ. அதன்பின் எழுது அன்று சுருக்கும் உன் பேனாவில் உலக மானுடம் பருகும் ஞானப்பால். * * * * * http://members.optushome.com.au/mayuranet/...hu/ulmugam.html - ப்ரியசகி - 08-18-2005 இதுவும் நல்லா இருக்க - வெண்ணிலா - 08-19-2005 நன்றி அக்கா & ஹரியண்ணா - கீதா - 08-26-2005 நன்றி உங்கள் கவிதைக்கு நன்றி - Mathan - 08-27-2005 <span style='color:green'>ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடக்கிறது தமிழ் இலக்கியப் பரப்பு. காதல் என்ற உள்ளடக்கம் மட்டும் மாறாமல் தொடர்கிறது வடிவங்களை மாற்றிக்கெண்டு. அந்தந்தக் காலங்களில் மேலோங்கி விளங்கும் இயக்கங்களில் காற்றெடுத்துக் கொண்டுதான் காதல் சுவாசித்து வந்திருக்கிறது. இதை உணர்த்தவே - இந்தக் கவிதைகளில் அந்தந்தக் கால உள்ளீடுகளையும் வடிவங்களையும் சொல்லாட்சிகளையும் கையாண்டிருக்கிறேன் - வைரமுத்து <b>1. சங்க காலம்</b> ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து வாட்கண் மயங்க உண்டதை மீண்டும் பசலை உண்ணும் பாராய் தோழி <b>2 காவிய காலம்</b> பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும் கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில் கரும்பிருக்கும் என்பார் கவி. <b>3 சமய காலம்</b> வெண்ணிலவால் பொங்குதியோ விரக்தியால் பொங்குதியோ பெண்ணொருத்தி நான்விடுக்கும் பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால் விண்ணளந்து பொங்குதியோ விளம்பாய் பாற்கடலே! <b>4 சிற்றிலக்கியக் காலம்</b> தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம் துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத் தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும் சண்டையாள் - வெள்ளித் தண்டையாள் முலை அதிரும்படி மணி உதிரும்படி மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில் மாரன் பகைமுடிக்கத் தேவையாள் <b>5 தேசிய காலம்</b> சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என் சித்தத்திலே வந்து மேவினாள் கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என் கவியில் காதல்ரசம் ஊற்றினாள் விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன் வீணை கரம்கொண்டு மீட்டினாள் மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள் மறைந்தகதை எங்கு சொல்குவேன்? <b>6 திராவிட காலம் - 1</b> இல்லாத கடவுள் போன்ற இடைகொண்ட பெண்ணே உந்தன் பொல்லாத அழகு பாடப் பூவாடும் கூந்தல் பாட சல்லாப விழிகள் பாடத் தனித்தமிழ் கொண்டு வந்தேன் நில்லாமற் போனால் கூட்டில் நிற்குமோ எந்தன் ஆவி? <b>7 திராவிட காலம் - 2</b> விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல் விண்ணப்பம் எழுதுகின்ற இரவு முத்தமென்ற சொல்போல - நான் இதழ்சேர வரும்போது உதடுஒட்டாத குறள்போல - நீ தள்ளியா நிற்பது? விடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே விடிவெள்ளி கண்ணயரும் முன்னே <b>8 புதுக்கவிதைக் காலம் - 1</b> ஏப்ரல் சூரியன் டீசல் புகை பேருந்து நெரிசல் அலுவலக எரிச்சல் இவையெதிலும் வாடாமல் பத்திரமாய் வைத்திருக்கிறேன் உனக்குத் தெரியாமல் உதிர்ந்து யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த உன் கருங்கூந்தற் சிறுபூவை <b>9 புதுக்கவிதைக் காலம் - 2 </b> உன்வீட்டு ஆன்ட்டனாவிலும் என்வீட்டு நைலான் கொடியிலும் தனித்தனியே காயும் நேற்று ஊருக்கு வெளியே நாம் ஒன்றாய் அழுக்குச் செய்த ஆடைகள். </span> |