Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
பசிபிக் கடலில் பெரிய வலை மற்றும் கேபிளில் சிக்கி வெளியே வரமுடியாமல் மூன்றுநாள்களாக தவித்த ரஷிய சிறிய நீர்மூழ்கிக் கப்பலை பிரிட்டிஷ் நீர்மூழ்கி ரோபோட் பத்திரமாக மீட்டது. அதிலிருந்த 7 பேரும் மீட்கப்பட்டனர்.
பசிபிக் கடலில் 190 மீட்டர் ஆழத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் நீர்மூழ்கிக் கப்பல் தவித்தது. இதையடுத்து, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உதவியை நாடியது ரஷியா.
பிரிட்டிஷ் நீர்மூழ்கி ரோபோட் ரஷிய கப்பலை பிடித்திருந்த வலையை அறுத்து கப்பலை மீட்டது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<b>கடலுக்கடியில் சிக்கிய ரஷ்ய மாலுமிகள் மீட்பு</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40663000/jpg/_40663432_crew203i.jpg' border='0' alt='user posted image'>
பசிபிக் பெருங்கடலில் ரஷ்யாவின் கம்சட்கா பகுதிக்கு அப்பால் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக ஆழ்கடலில் சிக்கித் தவித்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் பத்திரமாக கடற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு அதிலிருந்த ஏழு ரஷ்ய மாலுமிகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு முயற்சிக்கு ரஷ்யா தனது நன்றியினைத் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரஷிய நீர்மூழ்கிக் கப்பல் மீன்பிடி வலைகளிலும், கம்பிகளிலும் சிக்கிக் கொண்டதையடுத்து ரஷியா சர்வதேச உதவியினைக் கோரியது.
பிரிட்டன் சிறிய தானியங்கி நீர்மூழ்கி ஒன்றினை உடனடியாக விமானத்தில் அனுப்பிவைக்க, இந்தத் தானியங்கி நீர் மூழ்கி, ரஷிய நீர்மூழ்கிக் கப்பலைச் சுற்றி இருந்த கம்பிகளையும், மீன் பிடி வலைகளையும் அறுத்தெறிந்ததை அடுத்து, ரஷ்ய நீர் மூழ்கி கடல் மட்டத்திற்கு வரமுடிந்தது.
ரஷிய நீர்மூழ்கியினுள் பிராணவாயுவின் அளவு வேகமாக குறைந்த நிலையில் இன்றைய மீட்பு நடவடிக்கைகள் நடந்துள்ளன.
ரஷ்ய நீர்மூழ்கியில் இருந்து எவ்வித பிரச்சனைகளுமின்றி ரஷ்ய மாலுமிகள் வெளிவந்துள்ளனர்.
-BBC tamil