![]() |
|
கத்துகொடுங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கத்துகொடுங்க (/showthread.php?tid=3689) |
கத்துகொடுங்க - SUNDHAL - 08-12-2005 வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த யுவதிக்கு தேநீர் தயாரிக்கத் தெரியாதிருந்தமைபற்றி இப்பத்தியில் எழுதியிருந்தேன் அல்லவா! இதை வாசித்துவிட்டு அன்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு புதிய தகவலொன்றைத் தெரிவித்தார். வெளிநாட்டிலுள்ள இவரின் உறவுப் பெடியன்கள் சிலர் இங்கு வந்து மணப்பெண் தேடும் படலத்தில் இறங்கியபோது பெண்ணுக்குச் சமைக்கத் தெரியுமா? என்பதை அறிவதில்தான் அதிக அக்கறை காட்டினார்களாம். பெண்ணுக்குச் சமைக்கத் தெரியாவிட்டால் ஹோட்டலில் சாப்பிடவேண்டும். இவர்களின் வருமானத்துக்கு இது அங்கு கட்டுப்படியாகாது. ஆகவே, தமக்கு வரப்போகும் மனைவி சமைக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தனராம். வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தேட முயற்சி செய்யும் பெற்றோர்களே! இப்பொழுதே உங்கள் மகளுக்குச் சமையல் கலையைக் கற்றுக் கொடுங்கள்! Thanks:Thinakural |