![]() |
|
600 விக்கற்றைக் கைப்பற்றிய ஷேன் வார்ன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 600 விக்கற்றைக் கைப்பற்றிய ஷேன் வார்ன் (/showthread.php?tid=3692) |
600 விக்கற்றைக் கைப்பற்றிய ஷேன் வார்ன் - AJeevan - 08-11-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40679000/jpg/_40679128_warne_270.jpg' border='0' alt='user posted image'> <i>ஷேன் வார்ன்</i> கிரிக்கட் சரித்திரத்தில் டெஸ்ட் ஆட்டங்களில் 600 விக்கட்டுகளைப் கைப்பற்றிய முதலாவது வீரர் என்ற பெருமையை அவுஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வார்ன் பெற்றுள்ளார். ஆசஸ் கிரிக்கட் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷேர் வார்ன் வீசிய பந்தை இந்திலாந்து அணி வீரர் மார்கஸ் ட்ரெஸ்கொதிக் அவர்கள், அவுஸ்திரேலிய விக்கற் காப்பாளர் அடம் ஹில்கிரிஸ்ட்டிடம் பிடிகொடுக்கவே, அந்த விக்கற் ஷேன் வார்ன் கைப்பற்றிய 600 வது விக்கற்றாக அமைந்தது. இந்த ஆட்டம் மான்ஷெஸ்டரில் நடக்கிறது. அதிக விக்கற்றை கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஷேன் வார்னுக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இருக்கிறார். முரளிதரன் இதுவரை 549 விக்கற்றுகளைக் கைப்பற்றியுள்ளார். -BBC |