| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 256 online users. » 0 Member(s) | 253 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,290
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,047
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது |
|
Posted by: Vaanampaadi - 01-15-2006, 05:08 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
<b>தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது : சீக்கிய மாணவனுக்கு மலேசியாவில் உத்தரவு</b>
கோலாலம்பூர்: மலேசியாவில் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் சீக்கிய மாணவனை தாடி மற்றும் மீசையை நீக்கி விட்டு வரும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் ரன்வீர் சிங். வயது 17. இவரை முகச்சவரம் செய்து விட்டு பள்ளிக்கு வரும்படி அவர் படிக்கும் பள்ளியின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரன்வீர் சிங் தந்தை ஜஸ்மெல் சிங் கூறுகையில்,"" எங்கள் சீக்கிய மதப்படி உடம்பின் எந்த பகுதியில் இருந்து முடியை அகற்ற கூடாது என்ற நடைமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலேசிய பள்ளி எனது மகனுக்கு அதற்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது. முகச்சவரம் செய்து விட்டு வராவிட்டால் வேறு பள்ளியை பார்த்து கொள்ளும்படியும் அந்த பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது,'' என்றார்.
இது குறித்து மலேசிய கல்வி துறை அதிகாரி கூறுகையில், ""ரன்வீர் சிங் இன்னும் அந்த பள்ளியில் இருந்து இட மாற்றம் செய்யப்படவில்லை. அவர் முகச்சவரம் செய்து தான் தீர வேண்டும் என கட்டாயப் படுத்தப்படவில்லை. எனினும், இப்பிரச்னை குறித்து கல்வி துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளி கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதும்படி ரன்வீர் சிங்குக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
Dinamalar
|
|
|
| ஒரு கணவருக்கு 3 பெண்கள் சொந்தம் கொண்டாடும் அதிசயம் |
|
Posted by: Vaanampaadi - 01-15-2006, 05:07 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>நான்தான் உண்மையான மனைவி என்கிறார்கள், சென்னையில் ருசிகர வழக்கு
ஒரு கணவருக்கு 3 பெண்கள் சொந்தம் கொண்டாடும் அதிசயம்
ரூ.1 கோடி சொத்துக்காக குடுமிபிடி சண்டை </b>
சென்னை, ஜன.14-
ஒரு கணவருக்கு 3 பெண்கள் நான்தான் அவருடைய மனைவி என்று சொந்தம் கொண்டாடும் அதிசய வழக்கு சென்னை நகர போலீசில் விசாரணையில் உள்ளது. ரூ.1 கோடி சொத்துக்காக அவர்களிடையே இந்த குடுமி-பிடி சண்டை நடக்கிறது. இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதில் போலீசார் தலையை பிய்த்தபடி உள்ளனர்.
அதிசயம்
சென்னை நகரில் காலியாக கிடக்கும் நிலங்களை புரோக்கர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் போட்டி போட்டு கொள்ளை அடித்து வருகிறார்கள். சொத்துக்களை அபகரிப்பதில் உறவினர்களே போட்டிபோடும் நிலை உள்ளது. தந்தை, பிள்ளைகளை ஏமாற்றுகிறார், பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றுகிறார்கள், மனைவியே கணவரை ஏமாற்றும் அவலநிலையும் உள்ளது. இங்கே 42ஆண்டுகளாக கணவர் ஒருவர் காணாமல் போன நிலையில் சொத்துக்காக, அவருக்கு மனைவி என்று வயதான பெண்கள் 3 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள். கணருக்குரியவர் காணாமல் போனதால், அவர் வந்து தனது மனைவி என்று அடையாளம் காட்டமுடியாது என்ற நிலை இருப்பதால், இந்த போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ருசிகர வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-
42 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூளைமேடு ஐரோட்டில் நானாஆசாரி என்ற நகை செய்யும் தொழிலாளி வசித்து வந்தார். இவரது உண்மையான மனைவி பெயர் சேதுபாய் என்பதாகும். இவர் வசித்த ஓட்டு வீடு 3 கிரவுண்டு சொந்த இடத்தில் இருந்தது. அந்த நேரத்தில் அந்த பகுதியில் நானா ஆசாரி பிரபலமாக வாழ்ந்தார். திடீரென்று அவர் காணாமல் போய் விட்டார். அவர் என்ன ஆனார், உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது.
வாழ்ந்த பெண்
நானாபாய் காணாமல் போன பிறகு அவருடைய மனைவி சேதுபாய் என்று சொல்லிக்கோண்டு அவருடைய வீட்டில் ஒரு பெண் வாழ்ந்து வந்தார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டுவரை இந்தப் பெண்தான் நானா ஆசாரியின் உண்மையான மனைவியாக காட்சி தந்தார்.
கடந்த ஆண்டு திடீரென்று அவர் தான் வாழ்ந்த நானாபாயின் வீட்டில் காலிமனையாகக்கிடந்த நிலத்தில் முக்கால் கிரவுண்டு இடத்தை விற்றுவிட்டார். அதோடு நின்றால் பரவாயில்லை. மீதி 2 கிரவுண்டு இடத்தோடு இருந்த வீட்டை ராமலிங்கம் என்ற கட்டிட காண்டிராக்டருக்கு கொடுத்து, அதில் பல அடுக்கு மாடி கட்டிடம் கட்டி விற்று அதில் கிடைக்கும் பணத்தை, இருவரும் பங்கு போட்டுக் கொள்ள ஒப்பந்தம் போட்டிருந்தனர். இதன் பிறகுதான் பிரச்சினை வெடிக்க ஆரம்பித்தது.
ரூ.1 கோடி மதிப்பு
ஒப்பந்தம் போடப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும். இந்த நிலம் இப்போது 3 பெண்களின் குடுமிபிடி சண்டையில் சிக்கி தவிக்கிறது. காணாமல் போன நானாபாய் கூட இப்போது திரும்பி வந்தால் நொந்து போய் விடுவார். நான்தான் நானாபாயின் உண்மையான மனைவி சேதுபாய் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். நிலத்தை விற்ற சேதுபாய் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். இன்னொரு சேதுபாய் வடபழனியில் வசிக்கிறார். 3-வது சேதுபாய் வசிக்கும் இடம் தெரியவில்லை.
இவர்கள் 3 பேரும் சொத்துக்கு சொந்தம் கொண்டாடி, போலீஸ் கமிஷனர் நடராஜிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் உள்ளது. துணைகமிஷனர் மாரியப்பன், உதவிகமிஷனர் அன்புமொழி, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். முதலில் நுங்கம்பாக்கம் போலீசார்தான் இந்த வழக்கை விசாரித்தார்கள். ஆனால் அவர்களால் வழக்கை தீர்க்க முடியாமல் கைவிட்டு விட்டனர். இப்போது இந்த வழக்கை தீர்க்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உயில் எங்கே?
காணாமல் போவதற்கு முன்பு நானாபாய் தனது நிலம் மனைவி சேதுபாய்க்குத்தான் சொந்தம் என்று உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயில் யாரிடம் இருக்கிறதோ, அந்த பெண்ணிடம் சொத்தை ஒப்படைக்கலாம் என்று போலீசார் முடிவு செய்தனர். உயில் ஒரு பெண்ணிடம் உள்ளது. ஆனால் உயில் போலியானது என்று உயில் கையில் இல்லாத மற்ற இருவரும் சொல்கிறார்கள். காணாமல் போன நானாபாய்க்கு 3 மகன்கள் இருப்பதாக ஒரு புதிய கதையும் சொல்லப்படுகிறது. 3 மகன்களையும் அழைத்து உங்களின் உண்மையான தாய் யார் என்று விசாரித்து அதன் மூலம் பிரச்சினையை தீர்த்து விடலாமா என்றும் போலீசார் யோசித்து வருகிறார்கள். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
எப்படியாவது உண்மையான சேதுபாயை கண்டுபிடித்து சொத்தை ஒப்படைக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். காணாமல் போன நானாபாயே திரும்பி வந்தால்தான் இதில் பிரச்சனை தீரும் என்று போலீஸ்காரர் ஒருவர் நகைச்சுவையோடு கூறினார். அதில் கூட போலி நானாபாய் வந்து விடுவார் என்று இன்னொரு போலீஸ்காரர் பதிலுக்கு ஜோக் அடித்தார். எப்படியோ இந்த பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று போலீசார் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Dailythanthi
|
|
|
| விடுதலைப் புலிகளின் தைத்திருநாள் விழா படங்கள் |
|
Posted by: Vaanampaadi - 01-15-2006, 04:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
விடுதலைப் புலிகளின் விசேட பயிற்சிக் கல்லூரியில் தைத்திருநாள் விழா (படங்கள் உள்ளே)
உழவர் திருநாளாம் தைத்திரு நாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல படைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்காண போராளிகள் ஒன்றுகூடி தைத்திருநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்கள்.
சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த மித்திரன் தலைமையில், மாதிரியாக வடிவமைக்கப்பட்ட தமிழீழத்தின் மாவட்டங்களின் பிரதேசங்களில் பல பொங்கல் பானைகளை வைத்து பொங்கி தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் எற்றப்பட்ட தேசியக் கொடியின் முன்னால் பொங்கலைப் படைத்த தைத்திருநாள் நடைபெற்றது.
தமிழீழ தேசியக் கொடியினை படைப்பயிற்சி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பாளர் லெப். கேணல் வீரப்பன் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அகவணக்கம் உறுதி உரை நடைபெற்ன. சாள்ஸ் அன்ரனி விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாலவன் சிறப்புரையினை நிகழ்த்தினார்.
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal6.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal7.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal8.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal9.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal10.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal11.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal12.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/ltte-thaithirunal13.jpg' border='0' alt='user posted image'>
இணைப்பு : : kugan
Sat, 14 Jan 2006, 10:48:38 GMT
http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
|
|
|
| பொங்கலோ பொங்கல்! |
|
Posted by: வர்ணன் - 01-14-2006, 10:29 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
<b>ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன்
மேதினிதழைக்க வேர்வை சிந்தி-
ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ
பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>
<b>மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட -
வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள-
பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு!
சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி-
சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>
<b>
நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை!
இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை!
நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்!
நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று
இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>
<b>ஊர்மனையாவிலும் பால் சொரிந்து - உறைந்த
இருளில் கிடந்தவர் வாயிலெங்கும் அகல்விளக்கேற்றி
சேதிகள் இனியாவும் நல்லதென்றே வரும் இந்த செந்தமிழர்நாள் முதல் ஒருவாழ்வு வரும்... என்று
கதிரவனிடம் எமக்கு சொல்ல சொல்லு!
கவலை தரவேண்டாமினியும் என்று அவன் காதில் சொல்லு!
தாயகத்தின் கண்ணீர் நிறுத்தச்சொல்லி ததிங்கிணத்தோம்-என்று
பாடு பாடு குயிலே பொங்கலோ பொங்கல்!!</b>
-வர்ணன் -
|
|
|
| பாதுகாப்பில் விழிப்புடன் இருக்குமாறு புலிகள் அறிவுறுத்தல் |
|
Posted by: வினித் - 01-14-2006, 10:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>பாதுகாப்பில் விழிப்புடன் இருக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</b>
<b>இராணுவத்தின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையடுத்து தமிழ் மக்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், எந்நிலையிலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோன்றியிருப்பதால் பாதுகாப்பில் கவனம் செலுத்தும்படியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரியுள்ளனர்.
பளையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட நிர்வாக சேவை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் யாழ். குடாநாட்டில் எழுந்துள்ள நெருக்கடிநிலை குறித்தே அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இளைஞர், யுவதிகளின் பாதுகாப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகவும் விழிப்புடன் செயற்படுவது குறித்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி சந்தித்து மக்களின் குறைபாடுகளை ஆராய்ந்து அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது </b>
நன்றி:வீரகேசரி
|
|
|
| இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப இந்திய பிரதமர் விரும்பவில்லை |
|
Posted by: வினித் - 01-14-2006, 06:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப இந்திய பிரதமர் விரும்பவில்லை</b> குமுதம் ரிப்போட்டரில்
இந்திய இராணுவத்தை ஈழத்து மண்ணில் இறங்க வைப்பதற்கு இலங்கை அரசு பெரும் பாடுபடுகிறது. அதற்காக கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்று கூறுகிறது. நியாயமாக நடந்து கொள்ளும் நோர்வேயை புறந்தள்ளிவிட்டு இந்தியாவை மோதவிடப் பார்க்கிறது. இலங்கையின் இந்த யோசனைகளை இந்திய பிரதமர் மன் மோகன்சிங் புறந்தள்ளியிருக்கிறார். இதனை ஈழத்த தமிழர்களோடு இரத்த உறவுள்ள இந்தியாவில் உள்ள தமிழர்களும் வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள்'' என இந்தியாவிலிருந்து வெளிவரும் "குமுதம் ரிப்போட்டரில்' சோலை எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்தியத் தலைநகருக்கு வருகை தந்தார். அவருடைய வருகை இலங்கைக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் போர் நிறுத்த உடன்பாடுகாண நோர்வே நன்முயற்சி எடுத்தது. ஆனால், அதன் பணிகள் இன்றுவரை சிங்கள இனவாதிகளுக்குத் திருப்தி தரவில்லை. எனவே, பேச்சுவார்த்தையில் இந்தியாவை இழுத்துவிட விரும்பினர். பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அரசின் இந்த யோசனையை ஏற்கவில்லை, நல்ல காரியம். "நோர்வே நாட்டுடன் ஜப்பான், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளையும் இணைத்து விடுகிறோம்' என்று இலங்கை அரசு கூறுகிறது. அதனையும் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கவில்லை. "ஈழ விடுதலை இயக்கத்துடன் பேச்சுவார்த்தையைத்தொடங்குங்கள்' என்று கூறியிருக்கிறார். நோர்வே நாட்டை நடுநாயகமாக வைத்துத்தான் பேச்சுவார்த்தை தொடரமுடியும். ஈழத்தில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற போர்ச் சூழலுக்கு ஈழவிடுதலை இயக்கம்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டவேண்டும் என்று சிங்கள இனவாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் துடியாய் துடித்தனர். ஆனல் கூட்டறிக்யில் அப்படிக் குறிப்பிடப்படவில்லை. இது அவர்களுக்கு ஏமாற்றம்தான். இந்தியா வந்த இலங்கை அதிபர் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. காரணம், ஈழப் பிரச்னையில் நமது முதல்வரின் நிலை நாடறிந்ததுதான்.
ஆனால், தமிழக முதல்வருக்கு வேறு பணிகள் இருப்பதால் இந்தச் சந்திப்பு சாத்தியமில்லை என்று டெல்லியில் அறிவித்தனர். இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலைத் தமிழகம் சந்திக்கப் போகின்ற நிலையில் எப்படி இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று எண்ணிப் பார்க்க மறந்துவிட்டனர்.
எனவே, இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் எல்லா வகையிலும் தோல்வியைத்தான் சந்தித்தது. இன்றைக்கு ஈழத்தில் என்ன நடைபெறுகிறது ராஜபக்ஷ பரிபாலனம் செய்ய வந்த நாள் முதலாய் ஈழம் எரிந்து கொண்டிருக்கிறது. அநியாயத்தைத் தட்டிக் கேட்டால் ராணுவம் துப்பாக்கி தூக்குகிறது. யாழ் பல்கலைக்கழக மாணவி தர்சினி இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டார். கற்பழிக்கப்பட்டார். படுகொலை செய்யப்பட்டார். ஈழ மாணவர்கள் குமுறி எழுந்தனர். யாழ் நகர மாணவர்களோடு ராணுவம் மோதிப் பார்த்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், பல்கலைக்கழக வளாகத்திற்குள் இலங்கை ராணுவம் நுழைந்திருக்கிறது. ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து போராடி வந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பர ராஜசிங்கம். அவர் மட்டக்களப்பு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைக்குப் பின்னே இலங்கை ராணுவமும் அதன் சூத்திரப் பாவைகளும் இருக்கிறார்கள் என்பதனை ஈழ மக்கள் அறிவார்கள் . குறி பார்க்காது சுடுவதைப் போல விளைவுகளை எண்ணிப் பார்க்காது ஈழ அரசும் ராணுவமும் செயல்படுகின்றன. அந்த ராணுவம் யாழ். அருகில் உள்ள பலாலி விமான நிலையத்தைப் பயன்படுத்துகிறது. ஈழ விடுதலை இயக்கத்தினரின் தாக்குதலால் பலாலி பாழாகி இருந்தது. அந்த விமான நிலையத்தை இந்தியா புதுப்பித்துத் தந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து பறந்த இலங்கை ராணுவ விமானங்கள் எத்தனை ஆயிரம் ஈழத்தமிழர்களைப் பலி கொண்டிருக்கின்றன போர் நிறுத்தத்தை மீறிச் செயல்படும் அரசிற்கு இத்தகைய உதவிகள் அளிப்பதென்பது, கள் குடித்த குரங்கு கையில் தீப்பந்தத்தைக் கொடுப்பதற்குச் சமமாகும்.
சென்ற மாதம் இலங்கை இந்திய கடற்படையின் கூட்டுப் பயிற்சியும் நடைபெற்றிருக்கின்றன. இந்த நிகழ்வுகளை இங்குள்ள தமிழர்கள் கவலையோடு காண்கிறார்கள். இந்தியா அளிக்கும் இத்தகைய உதவிகளை சர்வதேச அரங்கில் இலங்கை எப்படி எடுத்துக் கூறும் ஈழ மக்கள் மீது தொடுக்கும் அநியாய யுத்தத்திற்கு இந்தியா ஆதரவாக நிற்கிறது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்காதா இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் இலங்கை அரசிற்குச் சாதகமான காரியங்களைச் செய்வதாகத் தகவல்கள் வருகின்றன. ஈழ விடுதலை இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச் செல்வனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகத் தொண்டைமான் சந்தித்துப் பேசினார். உடனே இலங்கை அதிபர் ராஜபக்ஷவை அவர் சந்திக்க இந்தியத் தூதர் திருமதி நிருபமா ஏற்பாடு செய்ததாகச் செய்திகள் வருகின்றன.
இதற்கு முன்னர் எப்படிச் செயல்பட்டிருந்தாலும் இலங்கை அதிபர் தேர்தலுக்குப் பின்னர் இந்திய அரசு எச்சரிக்கையோடு செயல்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அளந்து அடியெடுத்து வைக்கிறார். "ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டோம்' என்ற எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் விழிப்போடு இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுடன் கூட்டுப் பாதுகாப்பு உடன்பாடு காண இலங்கை முயற்சித்தது. அந்த முயற்சியை முறியடித்ததில் மறுமலர்ச்சி தி.மு.கழகத் தலைவர் வைகோவிற்குப் பெரும்பங்கு உண்டு. அப்படி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் முழுக்க முழுக்க சிங்கள இனவாதம் முடிசூட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஈழம் எரிந்து சாம்பலாகி இருக்கும். இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது ராஜபக்ஷ என்ன சொன்னார் "இலங்கை ஒரே நாடு. அதற்குள்ளே எந்த சுயாட்சிக்கும் இடமில்லை' என்றார்.
சிங்கள இனவெறியர்களின் இதயத்தைத் தடவிக் கொடுக்க எந்த அளவிற்கு ஈழத்தமிழர்களுக்கு எதிராக அனல் கக்க முடியுமோ அந்த அளவிற்குக் கக்கினார். "ஆனால் இந்திய அரசியல் அமைப்பைப்போல் இலங்கையிலும் ஏற்பாடு செய்வோம்' என்று இப்போது சொன்னார்.
தேர்தல் பிரசாரத்தின்போது அவர் முன்வைத்த முழக்கங்களை இப்போது வெத்துவேட்டு என்று அவர் ஒப்புக்கொள்ளத் தயாரா கொழும்பு நகரில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திற்குள்ளும் இலங்கை ராணுவமும் காவல்துறையும் நுழைகிறதே ஏன் ஏறத்தாழ ஆயிரம் தமிழ் இளைஞர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் உயிரோடு திரும்புவர் இந்த நிலையில் எப்படியாவது இந்திய ராணுவத்தை ஈழத்து மண்ணில் இறக்க இலங்கை பெரும்பாடு படுகிறது. அதற்காகக் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்கிறது. நியாயம் பேசும் நோர்வேயைப் புறந்தள்ளி இந்தியாவை மோதவிடப் பார்க்கிறது. இலங்கையின் இந்த ஆலோசனைகளை பிரதமர் மன்மோகன்சிங் புறந்தள்ளியிருக்கிறார். ஈழத்தமிழர்களோடு இரத்த உறவுள்ள இங்குள்ள தமிழர்கள் பிரதமர் எடுத்துள்ள நிலையை வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள்.
நன்றி:லங்காசிறி
|
|
|
| பூங்கா |
|
Posted by: சந்தியா - 01-14-2006, 04:21 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (16)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>பூங்கா</span>
மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம்
பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம்
சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம்
காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம்
இவை மட்டுமா?
மரம், செடி, கொடிகள்
அசையும் இனிய கீதங்கள்
அத்துடன் கூடியே
அழகிய பூக்களின்
நறுமணங்கள்
இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர்
அழகிய இடம் பூங்கா!
|
|
|
| இளமைக்காலம் |
|
Posted by: சந்தியா - 01-14-2006, 03:52 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
[size=18]இளமைக்காலம்
இதுவொரு இனிய காலம்
இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்
பட்டாம் பூச்சி போன்று
படபடத்து திரியும் காலம்
பட்டென்று பாசமும்
சட்டென்று காதலும்
நச்சென்று கோபமும்
கூடியே வரும் காலம்
துடி துடிப்புடனே உற்சாகத்துடன்
துள்ளித் திரியும் -ஒரு
இனிமையான காலமது
|
|
|
| பொங்கல் அரட்டை |
|
Posted by: vasisutha - 01-14-2006, 03:03 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (16)
|
 |
எல்லோருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
|