![]() |
|
தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது (/showthread.php?tid=1379) |
தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது - Vaanampaadi - 01-15-2006 <b>தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது : சீக்கிய மாணவனுக்கு மலேசியாவில் உத்தரவு</b> கோலாலம்பூர்: மலேசியாவில் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் சீக்கிய மாணவனை தாடி மற்றும் மீசையை நீக்கி விட்டு வரும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் ரன்வீர் சிங். வயது 17. இவரை முகச்சவரம் செய்து விட்டு பள்ளிக்கு வரும்படி அவர் படிக்கும் பள்ளியின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரன்வீர் சிங் தந்தை ஜஸ்மெல் சிங் கூறுகையில்,"" எங்கள் சீக்கிய மதப்படி உடம்பின் எந்த பகுதியில் இருந்து முடியை அகற்ற கூடாது என்ற நடைமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலேசிய பள்ளி எனது மகனுக்கு அதற்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது. முகச்சவரம் செய்து விட்டு வராவிட்டால் வேறு பள்ளியை பார்த்து கொள்ளும்படியும் அந்த பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது,'' என்றார். இது குறித்து மலேசிய கல்வி துறை அதிகாரி கூறுகையில், ""ரன்வீர் சிங் இன்னும் அந்த பள்ளியில் இருந்து இட மாற்றம் செய்யப்படவில்லை. அவர் முகச்சவரம் செய்து தான் தீர வேண்டும் என கட்டாயப் படுத்தப்படவில்லை. எனினும், இப்பிரச்னை குறித்து கல்வி துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளி கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதும்படி ரன்வீர் சிங்குக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார். Dinamalar - Mathan - 01-18-2006 தற்போது நீதிமன்ற உத்தரவின்படி அந்த சீக்கிய மாணவர் தாடி மீசையுடன் பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் படித்தேன். அதுதவிர தீவிரமற்ற மத நம்பிக்கைகளை பள்ளிகளில் பின்பற்ற மலேசிய அரசு அனுமதிக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. - Snegethy - 01-18-2006 கனடாவிலும் பாடசாலை வளாகத்துள் நுழைந்தவுடன் தொப்பி பன்டான எல்லாம் கழட்ட வேண்டும் ஆனால் இஸ்லாமிய மாணவர்களுக்கு அந்தக் கட்டுப்பாடில்லை.அத்தோடு வெள்ளிக்கிழமைகளில் அவர்களை தொழுகைக்குச் செல்ல அனுமதிப்பதுண்டு. - Mathan - 01-18-2006 இஸ்லாமிய மாணவர்கள் மத ரீதியான காரணங்களுக்காக முடிவளர்க்க அனுமதிக்கப்பட்டால் சீக்கிய மாணவர்களும் தமது மத ஒழுங்குமுறைகளுக்கு அமைய முடிவளர்க்க தொப்பி அணிய அனுமதிக்கபடவேண்டும் தானே? அல்லது மத ரீதியான நடைமுறைகள் எவற்றையும் பள்ளிகளில் அனுமதிக்க கூடாது. - Luckyluke - 01-19-2006 17 வயதில் கூட எனக்கு ரொம்ப ஒல்லியாக தான் மீசை இருந்தது.... தாடி சுத்தம்... இப்போ இருக்குற பசங்களுக்கு எல்லாமே சீக்கிரம் வந்துடுது.... |