Yarl Forum
பொங்கலோ பொங்கல்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பொங்கலோ பொங்கல்! (/showthread.php?tid=1383)



பொங்கலோ பொங்கல்! - வர்ணன் - 01-14-2006

<b>ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன்
மேதினிதழைக்க வேர்வை சிந்தி-
ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ
பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>


<b>மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட -
வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள-
பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு!
சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி-
சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>

<b>
நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை!
இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை!
நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்!
நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று
இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>

<b>ஊர்மனையாவிலும் பால் சொரிந்து - உறைந்த
இருளில் கிடந்தவர் வாயிலெங்கும் அகல்விளக்கேற்றி
சேதிகள் இனியாவும் நல்லதென்றே வரும் இந்த செந்தமிழர்நாள் முதல் ஒருவாழ்வு வரும்... என்று

கதிரவனிடம் எமக்கு சொல்ல சொல்லு!
கவலை தரவேண்டாமினியும் என்று அவன் காதில் சொல்லு!
தாயகத்தின் கண்ணீர் நிறுத்தச்சொல்லி ததிங்கிணத்தோம்-என்று
பாடு பாடு குயிலே பொங்கலோ பொங்கல்!!</b>

-வர்ணன் -


- Rasikai - 01-16-2006

வர்ணன் மிக அழகாக உங்கள் ஆதங்களை கவிதையாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுங்கோ


- வர்ணன் - 01-16-2006

நன்றி ரசிகை அவர்களே! முயற்சிப்பேன்! 8)


- தூயா - 01-18-2006

அழகன கவிதை. வாழ்த்துக்கள் வர்ணன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- RaMa - 01-18-2006

நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை!
இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை!
நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்!
நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று
இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!
*********************************
வர்ணன்.... இன்று இருப்பவர் நாளை இருப்பாரே நமக்கு தெரியாது. ஆகவே இருக்கும் பொழுதில் சந்தோசமாக வாழ பழகி கொள்ளவேண்டும் என்பதை சொல்லி பொங்கலை வரவேற்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.


- sWEEtmICHe - 01-22-2006

வாழ்த்துக்கள் வர்ணன் :wink:


- ப்ரியசகி - 01-22-2006

பொங்கலைப்பற்றிய அழகான கவி வர்ணன்..தொடர்ந்தும் எழுதுங்கள்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கீதா - 01-22-2006

நல்ல கவிதை நன்றி வர்ணன்