Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 385 online users.
» 0 Member(s) | 382 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,285
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,470
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  இருக்கிறேன் உனக்காக...
Posted by: Nitharsan - 01-22-2006, 11:01 AM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

<b><span style='font-size:21pt;line-height:100%'>இவள் முகம் பார்த்தால்
இவனுக்குள் காதல்
இல்லையேன்று மறுத்திட
இதயமில்லை என்னிடம்
இனியவளின் வார்த்தை
இதமாய் தானிருக்கும்
இடிகள் விழும் காலமும்
இனியாய் தானிக்கும்
இது என் காதலின் ஆரம்பம்
இவள் முடிவின் இறுதியாகுமோ?
இமை மூடி திறந்தால் -என்
இமைகளை தாண்டி நீர் சொறியும்
இசையதை கேட்டால்- அதில்
இனிமையின்றி இருக்கும்
இப்படியேன் ஆகிவிட்டேன்
இறைவனிடம் கேட்டேன்
இன்று வரை பதில்லை -அருகில்
இருப்பவரிடம் கேட்டேன்
இது என்ன கேள்வி என்றார்
இப்படியேன்னை சாகவிட
இனியவளே நான் என் செய்தேன்
இதயமதை கேட்டதற்க்கு
இறக்கும் வரம் தருவதா?
இதிலுனக்கென்ன ஆனந்தம்
இன்றும் நம்புகின்றேன்
இறுதிவரை பார்க்கமாட்டேன்
இன்னோருவள் முகமதை
இருக்கிறேன் உனக்காக
இவ்வுலகில்.......</b></span>

Print this item

  டன்னின் புலநாய்.
Posted by: வெண்ணிலா - 01-22-2006, 08:22 AM - Forum: நகைச்சுவை - Replies (18)

<img src='http://img16.imageshack.us/img16/2346/att000424pg.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img16.imageshack.us/img16/4682/att000450lj.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img41.imageshack.us/img41/6763/att000669vr.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img16.imageshack.us/img16/2249/att000481sf.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img73.imageshack.us/img73/1626/att000515hu.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  யுத்த முன்னெடுப்பில் சிங்களம்
Posted by: மேகநாதன் - 01-22-2006, 07:29 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

<span style='color:red'><b>யுத்தகால அமைச்சரவையை உருவாக்குகிறார் மகிந்த? </b>

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச யுத்தகாலத்துக்கான அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த சில நாட்களாக கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள மகிந்தவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.

மகிந்தவின் நண்பரான மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிக் அலுவிகார மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகியோர் மகிந்தவை அண்மையில் சந்தித்தனர். தம்மைச் சந்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சி நண்பர்களிடம், விடுதலைப் புலிகள் யுத்தத்தைத் தொடங்கினால் யுத்த கால அமைச்சரவையை தாம் அமைக்க உள்ளதாகவும் அப்போது உங்களுக்குப் பணிகள் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த யுத்த கால அமைச்சரவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முக்கியப் பங்காற்றக் கூடும் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன</span>

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

Print this item

  பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
Posted by: Aaruran - 01-22-2006, 04:07 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (31)

<span style='color:green'>சிலர் திட்டமிட்டபடி அந்தத் தலைப்பைத் திசைதிருப்பி மூடச் செய்து விட்டார்கள், தமிழ்நாட்டில் தான், தமிழரை விடத் தமிழரல்லாதவர்களின் கொட்டம் அதிகமென்றால், இன்று ஈழத்தமிழர்களிடையேயுள்ள, தம்மையே வெறுக்கும், தன்னம்பிக்கையற்ற,அடிவருடிகளால் ஈழத்தமிழர்களின் மத்தியில் கூட தமிழரல்லாத, தமிழெதிரிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதென்பதற்கு இந்த ஈழத்தமிழரின் தளம் நல்ல எடுத்துக்காட்டு



Quote:[size=12]<b>ஆரூரண்ணா நீங்கள் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவில்லை என எழுதினீர்கள்.. பின்பு நீங்களே 1804 ஆண்டும் அதற்குப்பின்னம் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைத்து மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினீர்கள்</b></span>..


[size=15]சுகுமாரன் ஐயனே! ஈழத்தில் எட்டாம் வகுப்புப் படித்தவர்களுக்கும் பரந்த அறிவுண்டு, நீர் ஈழத்தில் எட்டாம் வகுப்பு படிக்கவில்லைப் போலிருக்கிறது. முதலில், <b>தமிழரின் சதிர் தான் இப்பொழுது பரதநாட்டியம் என்றழைக்கப் படுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறீரல்லவா.</b> இன்று யாராவது தமிழரின் கோயில்களில் ஆடப்பட்ட சதிரின் வரலாற்றை எழுதும் போதும் அதைப் பரதநாட்டியம் என்று எழுதுவது தான் வழக்கம். <b>ஏனென்றால் சதிர் என்ற பெயர் இன்று வழக்கிலிலில்லை.</b> இது வரை நான் சொன்னது உமக்கு விளங்குகிறதா?
இன்றைய பரதநாட்டியத்தின் முன்னோடிகளும், அழிந்து போகவிருந்த சதிராட்டத்தைக் காத்தவர்களுமாகிய தஞ்சாவூர்ச் சகோதரர்கள். அவ்ர்களின் பிறந்த வருடங்கள் <b>Chinnaiah (1802), </b><b>Ponniah(1804),</b> <b>Sivanandam(1808), and Vadivelu(1810).</b> அந்த நால்வரும் தான், அழிந்து போகவிருந்த சதிராட்டத்தைக் காத்தவர்கள். இன்றும் பரதநாட்டியத்தில், தஞ்சாவூர் நால்வர் என்றால் அவர்கள் தான். அந்த நட்டுவனார் பரம்பரையில் வந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவ்ர்கள் தான் கலாசேத்திரத்தினதும், திருமதி ருக்மணிதேவி அருண்டேலினதும் பரதநாட்டியக் குரு.

<b>சதிருக்குப் பரதநாட்டியம் என்ற பெயரை 1930 இன் முற்பகுதியில் தான் கிருஸ்ணையர் வழங்கினார்</b>, இதைக் கலாசேத்திரத்தின் வரலாறும், ருக்மணிதேவியின் சுயசரிதையும் கூடக் கூறுகிறது. <b>இந்த தஞ்சாவூர் சகோதரர்கள் நாலவரும் தான் கதகளியையும், பரதநாட்டியம் (சதிரையும்) இணைத்து மோகினியாட்டதை உருவாக்கினரென்பதாக வரலாறு.இதற்கு தஞ்சாவூரின் சரபோஜி மன்னர் {1798-1833}</b>ஆதரவளித்தாராம்.

இன்று அதைப்பற்றி எழுதும் போது, <b>"கதகளியையும், சதிரையும் இணைத்து"</b> என்பதற்குப் பதிலாக, இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில், <b>இன்று சதிராட்டத்துக்கு நடைமுறையிலுள்ள பெயரான பரதநாட்டியம் என்றதைப் பாவித்ததும் குழம்பி விட்டீர்</b>.

நீர் எட்டாம் வகுப்பிலும் கடைசி வரிசை மாணவன் போலிருக்கிறது. சதிராட்டத்துக்கு 1930 இல் தான் கிருஸ்ணையர் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றியதை முதல் பக்கத்திலியே தந்திருந்தேன். எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் போது, மற்றவர்கள் சொல்வதையும் முழுமையாக வாசித்துவிட்டுப் பதிலளித்தால் இப்படிப் பட்ட குழப்பம் வருவதற்குச் சாத்தியக் கூறுகள் குறைவு. தெரியாததைத் தெரிந்ததாக விதண்டாவாதம் பண்ணும் பழக்கமும் என்னிடம் கிடையாது.

Print this item

  துன்னாலையில் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப இயக்குநர் சுட்டுக் கொலை
Posted by: killya - 01-22-2006, 01:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

யாழ். துன்னாலையில் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப இயக்குநர் இளையதம்பி இராமகிருஸ்ணன் (வயது 61) நேற்று சனிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


துன்னாலை கரவெட்டி தாமரைக்குளம் பகுதியில் இராமகிருஸ்ணன் வீட்டுக்குள் நேற்று இரவு 10.50 மணியளவில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் இந்தப் படுகொலையை செய்துள்ளனர்.

இராமகிருஸ்ணனை வீட்டை விட்டு வெளியே வருமாறு ஆயுதக்குழுவினர் அழைத்துள்ளனர். ஆனால் இராமகிருஸ்ணன் மறுத்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த ஆயுதக் குழுவினர் கைத்துப்பாக்கி மூலம் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர்.

யாழ்ப்பாண அரச அலுவலகத்தி தொழிநுட்ப இயக்குநராக பணியாற்றி வந்த இராமகிருஸ்ணன் அண்மையில் ஓய்வு பெற்றவராவார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்துள்ள 3 ஆவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இது

Print this item

  நோர்வேயில் பேச்சில்லை ஜனாதிபதி திட்டவட்டம்
Posted by: Mathuran - 01-22-2006, 01:35 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>நோர்வேயில் பேச்சில்லை
ஜனாதிபதி திட்டவட்டம்
புலிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து
எதையும் செய்யவே மாட்டாராம்</b>


""விடுதலைப் புலிகளுடனான உத்தேச சமாதான பேச்சுகளின் முதலாவது சுற்றை விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டபடி நோர்வேயில் நடத்தமுடியாது. எக்காரணம் கொண்டும் ஒஸ்லோவில் பேச்சுக்களை நடத்த இணங்கமாட்டேன். அப்படி ஒஸ்லோ வில் நடத்த நாம் இணங்கினால் அது புலிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி நாம் அடி பணிந்ததாகவே அமைந்துவிடும். புலிகளின் மிரட்டல்களுக்குப் பயந்து எந்த நடவடிக் கையையும் நான் எடுக்க மாட்டேன்.'' இவ்வாறு திட்டவட்டமாக உறுதியாக கூறி யிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஆங்கில, சிங்கள செய்திப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்றுக்காலை அழைத்து அவர்களுக்குக் காலைப் போசன உணவளித்து அவர்களுடன் உரையாடிய சமயமே அவர் இவ்வாறு தெரிவித்தார் என அறியவந்தது.
இந்தச் சந்திப்புக்கு கொழும்பு தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அழைக்கப்பட வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
அமைதி முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பாக ஒரு முக்கியமான திருப்புமுனை யில் நாடு இருப்பதால் பொறுப்புணர்வோடு செய்திகளை வெளியிடுமாறு பத்திரிகை ஆசிரியர்களை இச்சந்திப்பில் உரிமையோடு கேட்டுக்கொண்டார் ஜனாதிபதி.
""தாக்குதல்களை நடத்தி, அழிவுகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசுத் தலைமையை அடிபணிய வைக்கலாம் எனப் புலிகள் எண்ணுகின்றனர். அவர்களின் அச்சுறுத்தலுக்கு எக்காரணம் கொண்டும் நாம் விட்டுக் கொடுத்துக் கீழிறங்க மாட்டோம். எனவே, புலிகளின் தாக்குதல் செய்திகளுக்கு அள வுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து நிலைமையைக் குழப்பாதீர்கள்'' என்று இச் சந்திப்பின்போது பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி கோரினார் எனத் தெரியவருகிறது.
""புலிகள் அரசுப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழ்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று நோர்வேயில் பேசுவதற்கு இணங்கினால், அது, புலிகளின் அச்சுறுத்தலுக்கு நாம் பயந்து அடி பணிந்ததாகிவிடும். ஆகவே, நாம் எக்காரணம் கொண்டும் முதல் சுற்றுப் பேச்சை நோர் வேயில் நடத்தவேண்டும் என்ற புலிகளின் கோரிக்கைக்கு இணங்கவே மாட்டோம்.''
இவ்வாறு அங்கு உறுதியாகத் தெரிவித் திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
தமிழர் பிரதேசத்தில் படையினரால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்று கூறப்படுவது குறித்தும்,அதற்கு ஜனாதி பதி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன வென்பது குறித்தும் பத்திரிகை ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினர்.
தேடுதல் மற்றும் பொதுமக்களோடு படை யினர் நேரடியாகத் தொடர்புபடும் சமயங்க ளில் சிவில் பிரதிநிதிகளும் அங்கு பிரசன்னமாக இருக்கும் ஒரு முறையை அறிமுகப் படுத்துவதன் மூலம் இப்பிரச்சினையைச் சமாளிப்பதற்குத் தாம் திட்டமிட்டிருக்கின்றார் எனப் பதிலளித்தார் ஜனாதிபதி.
இச் சந்திப்பின் இடையே ஒரு சில பத்தி ரிகையாளர்களோடு தனியாக உரையாடும் சந்தர்ப்பத்தில் நோர்வேயின் விசேட பிரதிநிதி யும் அந்த நாட்டின் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் குறித்துத் தமக்குத் தொடர்ந்து அதிருப்தி இருப்பதை அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை என அறிய முடிந்தது.
பல விடயங்கள் குறித்து சிங்கள, ஆங்கி லப் பத்திரிகைகளின் ஆசிரியர்களோடு மனம் திறந்து உரையாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, படைகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்த விவகாரங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து, நீதி முறையின் படி தாம் கடும் நடவடிக்கை எடுப்பார் எனக் குறிப்பிட்டார் என்றும் அறிய வந்தது.(ஐக)

நன்றி: உதயன் நாளிதழ் http://www.uthayan.com/pages/news/today/01.htm

Print this item

  சோதிடம்
Posted by: kuloth - 01-21-2006, 11:13 PM - Forum: புலம் - Replies (1)

சோதிடம் என்று பலர் கனடாவுக்கு வந்து எமது மக்களிடம் பண்த்தைக்கறந்து கொண்டு போகிரார்கள். என்னமும் பல ஈழத்தமிழர்கள் திருந்த மாட்டார்களா

Print this item

  பாடல் தேவை
Posted by: Mathan - 01-21-2006, 08:20 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (85)

மைக்கல் மதன காமராஜல் படத்தில் (?) வரும் ரம் பம் பம் ஆரம்பம் பாடல் எம்பி3 வடிவில் யாரிடமாவது இருக்கின்றதா?

Print this item

  நீங்களும் இரவும் நாங்களும்
Posted by: மேகநாதன் - 01-21-2006, 07:37 PM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

[size=18]எனது பிரத்தியேக கோவையை
நேற்று இரவு சரிபார்த்தபோது
அதனுள் இருந்த சில "நிழற் பிரதி"களுல் ஒன்றாய் பின்வரும் கவிதையும் இருந்தது...
ஆழமான அர்த்தமும் உணர்வுகளும் நிரம்பிய
இக் கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்..
"நிலா"என்ற பெயரிலான பெண்போராளி எழுதியிருக்கிறார்.....

<b>நீங்களும் இரவும் நாங்களும்</b>

<i>ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க
விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து
உங்களின் கரங்கள் நீளும்
நிற்போம்
"அண்ணை நானும் வரட்டா?"
என்பீர்கள்
வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம்.
ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள்
ஒரு கணம் நிதானம் இழ்ந்து போனால்
"டிம்" இல்லையோடா?
என்று திட்டுவீர்கள்.
சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும்.

பாதுகாப்பாக பீரங்கிகளை நிலைப்படுத்தி
எண்ணியெண்ணி எறிகணை செலுத்திய
காலங்கள் விலகிப்போக
எதிரிகள் ஓடும் வேகத்திற்கேற்ப
எறிகணை செலுத்திகளை நகர்த்தும்
வாகங்களை செலுத்தும் வல்லமை பெற்ற
சகோதரிகளினுடைய சகோதரர்களே,
இரவிலே வாகனங்கள் செலுத்தும் அனைவரும்
ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்று
எப்படி உறுதியாகத் தீர்மானிக்கிறீர்கள்?
உங்களின் எழுதாத சட்டங்களைத்
தூக்கி எறிந்துவிட்டு
தயவு செய்து கவனியுங்கள்.
நாளைக்கு உங்கள் அக்கா
ஹையேஸ் செலுத்திச் செல்லக்கூடும்
உங்களது கடைசித் தங்கை
பஷனில் பறத்தல் நேரும்
கப்பற் தொகுதிக் கட்டளைத் தளபதியாய்
மருமகள் பிறத்தல் ஆகும்.
தமிழீழத்தில் ஓர் நல்ல விமானியாய்
பெறாமகள் இருத்தல் -னிகழும்.
சட்டங்கள் பெற்றாலும் சுதந்திர தமிழீழத்தில்
வேலையில்லாச் சிக்கலிற்குள்
சிக்காது உங்கள்து
புதல்வியால் கூட வீதிப் புனரமைப்பில் ஈடுபடும்
கனரகங்களை கன கச்சிதமாய்ச் செலுத்த முடியும்
உருளச் சிரமப்படும் உலகத்தை ஒற்றைக் கையால் உருட்டப்
போகும் உங்களது
பேத்தியின் பெருமை காணும்
பேறு உங்களுக்கு இருத்தல் நல்லது.

எமதருமை உறவுகளே
இனியேனும் வாகனங்களை மறிக்கும் போது
பொதுப்பெயரில் விளித்துதவி கேளுங்கள்.
உறவுப் பெண்களாயிருந்தால் உந்துருளிகளிலும்
ஏனையவர்களானால் ஏனைய வாகனங்களிலும்
இடமிருந்த்தால் நிச்சயம் உதவுவார்கள்

நேற்றும் இன்றும் நாளையும்
ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்பதுடன்
இது
சூரியனின் புதல்விகள் உலவும் தேசம்</i>

<i><b>நன்றி-"எரிமலை" (பெப்ருவரி 2003)</b></i>

Print this item

  யாழ்ப்பாணத்தில் சிங்களத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் அடாவடி
Posted by: மேகநாதன் - 01-21-2006, 07:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (28)

<b>யாழிலிருந்து இன்று 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன </b>
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 20:08 ஈழம்] [வி.நவராஜன்]
யாழ். குடா நாட்டிலிருந்து 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிக்குள் வந்துள்ளன என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.


தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

யாழிலிருந்து இன்று காலை 8.00 மணியிலருந்து மாலை 5.00 மணிவரையிலுமாக 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்புப் பகுதிக்குள் வந்துள்ளன.

இக்குடும்பங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முகமாலையிலுள்ள பிரதான பேரழிவு முகாமைத்துவப் பிரிவுப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களது விருப்பத்திற்கு அமைவான இடங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இடம்பெயர்ந்தோருக்கான விசேட போக்குவரத்துச் சேவைக்கூடாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அந்தந்த இடங்களில் அமைந்துள்ள நலன்பேணும் நிலையங்களிலும் உறவினர்கள் உள்ளவர்கள் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகமே தொடர்ந்தும் வழங்கிவருகின்றது.

சமைத்த உணவு உட்பட உலர் உணவுப் பொருட்கள மற்றும் ஏனைய வகையிலான நிவாரண உதவிகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமே வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தும் மற்றும் ஏனைய இடங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களிலுள்ள நலன்பேணும் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் குடுப்பங்களுக்கான நிவாரண உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

யாழ். குடாநாட்டிலிருந்து நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி நகர்ப் பகுதியை அண்மித்த உறவினர் வீடுகளிலும், நலன்பேணும் நிலையங்களிலும் தங்கிவாழ்கின்ற குடும்பங்களுள் 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான வீட்டு உபகரணங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனமான கிளிநொச்சி அபிவிருத்தி புனர்வாழ்வுக் கழக நிறுவன வளாகத்தில் வைத்து வழங்கியது.

இதனிடையே கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ள நலன்பேணும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களில் பலவற்றுக்கும் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான விட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

<i><b>புதினம்.கொம்</b></i>

Print this item