| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 221 online users. » 0 Member(s) | 218 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,285
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,470
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்! |
|
Posted by: KULAKADDAN - 01-21-2006, 05:26 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இது தொடர்பில் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கடந்த மார்கழி 2005 இன் முற்பகுதியில் வன்செயல்கள் அதிகரித்து காணப்பட்டன.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிலுள்ள பெரும் பகுதியான மக்கள் அங்கு நடைபெறும் வன்செயல்களினால் தங்கள் உயிருக்கு பேராபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து வன்னிக்கு இடம்பெயர்நது வந்துள்ளனர்.
இத்தகைய வன்செயல்களை சிறிலங்கா இராணுவமும் அதன் கூட்டாகச் செயற்படும் ஆயுதக் குழுக்களுமே மேற்கொள்வதாக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் முறையிட்டுள்ளது. இடம்பெயரும் மக்கள் தங்களுக்கு வன்னிப் பெருநிலமே பாதுகாப்பு என நினைத்து தொடர்ந்தும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
3,325 குடும்பங்கள் (16.01.2006 வரை சுமார் 14,500 தனிநபர்களாக) தங்கள் நிரந்தர குடியிருப்புக்களை விட்டு, கையில் எடுத்துச் செல்லக்கூடிய சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு தடை முகாம்களையும், நீரேரிகளையும் கடந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
பெருமளவில் இடம்பெயரும் மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்வதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளிநாடுகளிலிருந்தும், வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமும் அவசர நிதி உதவியை வேண்டி நிற்கின்றது.
இடம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக புகலிடங்கள் அமைப்பதற்கும் உணவு, நீர், உணவல்லாத நிவாரணப் பொருட்கள், வைத்தியப் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு நிதி உதவி இன்றியமையாத ஒரு அவசரத் தேவையாக இருக்கின்றது.
ஆழிப்பேரலைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கான கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு தற்போது நடைபெற்று வரும் இராணுவ அச்சுறுத்தல்களால் ஏற்பட்டுவருகின்ற இடம்பெயர்வுகளும், அதன் விளைவுகளால் துன்பப்படும் மக்களுக்கான நிவாரணப்பணிகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பது என்பது பெரும் பொறுப்பாக உள்ளது.
மக்களின் தேவைகளைப் பொறுத்த வரையில் இன்று வரைக்கும் கிடைக்கப்பெற்ற நிதி உதவியானது போதியளவு இல்லாது இருக்கின்றது.
மக்களின் தேவைகளை நிறைவு செய்யமுடியாது உள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நிவாரணப் பணிகளையும், ஏனைய புனர்நிர்மாண வேலைத்திட்டங்களையும் நேர்த்தியாகவும் திறம்படவும் முன்னெடுப்பதற்கு தேவையான பணியாளர்களையும், கட்டமைப்புக்களையும், துறைசார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் கொண்டுள்ளது.
ஆனால் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவதற்கு நிதிப்பங்களிப்புதான் அவசரமாகத் தேவைப்படுகின்றது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேச ரீதியிலான பங்காளி நிறுவனங்களும் அல்லலுறும் மக்களுக்கு மனிதாபிமான ரீதியாகத் தொடர்ந்தும் அதிகளவில் பல வழிகளிலும் குறிப்பாக நிதிப்பங்களிப்பு செய்து கைகொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
இடம்பெயர்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அந்தந்த நாடுகளில் வாழும் எமது தமிழ் மக்கள் உள்ளுர் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய ஸ்தாபனங்கள் போன்றவற்றிற்கு தாயகத்தில் தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற அவல வாழ்வுகளை நன்கு எடுத்து விளக்கி அவர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்றுத் தருவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றி இன்றைய அவசர தேவைகளை நிறைவேற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி....
http://www.eelampage.com/?cn=23598
|
|
|
| சன் டிவிக்கு ஆபத்து? |
|
Posted by: Mathan - 01-21-2006, 03:44 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (14)
|
 |
சன் டிவியை முடக்க ஜெ. புதிய சட்டம்: பர்னாலாவிடம் கருணாநிதி புகார்
சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் மற்றும் ஹாத்வே கேபிள் நிறுவனத்தை கையகப்படுத்த தமிழக அரசு அதிரடியாக ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை எஸ்.சி.வி எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் (சன் டிவி குழுமத்தைச் சேர்ந்தது) நிறுவனம்தான் பன்முக கேபிள் இணைப்புகளைக் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 80 சதவீத வீடுகளுக்கு சுமங்கலி கேபிள் விஷன் மூலமாகத் தான் சேட்டிலைட் டிவி இணைப்பு தரப்பட்டுள்ளது.
இந் நிலையில் சட்ட அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டசபையில் ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பன்முக கேபிள் இணைப்புகள் நடத்துவோர் மற்றும் ஆப்டிகல் கேபிள் மூலம் கேபிள் இணைப்புகளைக் கொடுப்பார் குறித்தும், அது தொடர்பான நிறுவனங்கள் மீதும் எண்ணற்ற புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன.
கேபிள் இணைப்புகளை கொடுப்பதில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுமக்களை மிரட்டும் வகையிலும் இவர்கள் செயல்படுவதாக பொதுமக்கள் புகார்கள் கொடுத்து வருகின்றனர்.
தங்களுக்குப் பிடிக்காத தொலைக்காட்சிகள் சரியாக தெரியாத வகையில் இவர்கள் இணைப்பு கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே அந்த கேபிள் டிவி இணைப்பின் நிர்வாகத்தை கையகப்படுத்தவும், அதன் உரிமையை மாற்றவும், அதன் நிர்வாகத்தை அரசே மேற்கொள்ளவும் வகை செய்யும் விதத்தில் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
(சன் டிவியின்) சுமங்கலி கேபிள் விஷன், ஹாத்வே ஆகிய நிறுவனங்களுக்கும் இந்த சட்ட மசேதா பொருந்தும். இருப்பினும், சிறிய அளவில் கேபிள் இணைப்பு நடத்தும் தெருவோர கேபிள் நிறுவனங்கள் இந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அவை பிழைப்புக்காக இந்தத் தொழிலை மேற்கொண்டு வருவதால் அவர்களை இந்த சட்டத்திலிருந்து விலக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் உள்ள சுமங்கலி கேபிள் விஷன் அலுவலங்களும், சொத்துக்களும், சென்னையில் உள்ள ஹாத்வே அலுவகமும் அரசால் கையகப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களின் கருவிகள், ஆப்டிகல் பைபர் நெட்வோர்க் உள்ளிட்டவற்றை அரசு எடுத்துக் கொள்ளும்.
நிறுவனத்தின் பெயர் உரிமையும் அரசின் கட்டுப்பாட்டில் வரும். இதை எதிர்த்து வழக்கு தொடரவோ, சொத்துக்களை ஒப்படைக்க மாட்டோம் என்று மறுக்கவோ முடியாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
கையகப்படுத்தப்படும் இந்த நிறுவனங்களுக்கு ஒரு தொகை நஷ்ட ஈடாக வழங்கப்படும். இதன் பின்னர் இந்த நிறுவனங்களை ஒரு பொறுப்பாளரை நியமித்து அரசே நடத்தும்.
அரசின் கட்டுப்பாட்டில் வரும் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்துவிடலாம். இவர்களில் சிறந்த ஊழியர்களுக்கு மட்டுமே மீண்டும் பணி வழங்கப்படும். வயது, தகுதி, நேர்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டு மட்டுமே மீண்டும் அவர்களுக்கு பணி தரப்படும்.
பணியை விட்டு விலகும் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை பின்னர் வழங்கப்படும். எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது பின்னர் நிர்ணயிக்கப்படும். இழப்பீடு கோருவோர் 30 நாட்களுக்குள் கமிஷ்னர் ஆப் அப்பாயின்மெண்ட்ஸை அணுகி மனு செய்யலாம்.
இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா, முழுக்க முழுக்க சன் டிவியை குறி வைத்தே கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
பர்னாலாவிடம் கருணாநிதி புகார்:
தமிழக அரசின் இந்த அதிரடி சட்ட மசோதா சன் டிவி வட்டாரத்திலும், கருணாநிதி குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் சன் டிவியை முடக்குவதற்கு அதிமுக அரசு முயலுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இதையடுத்து தமிழக ஆளுர் சுர்ஜித் சிங் பர்னாலாவை, திமுக தலைவர் கருணாநிதி இன்று சந்தித்தார். அவருடன் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் தம்பியும், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சருமான தயாநிதி மாறனும் உடன் சென்றார்.
அப்போது கேபிள் டிவி நிறுவனங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கான புதிய சட்டத்திற்கு கருணாநிதி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
கேபிள் டிவி தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் கையில் உள்ளது என்றும், இதில் மாநில அரசு தலையிட உரிமையில்லை என்றும் கூறிய கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள மசோதா சட்ட விரோதமானது. இதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து இன்று பிற்பகலில் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து ந்தித்து சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
சன் டிவி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பூமாலை என்ற பெயரில் வீடியோ நிகழ்ச்சிகளை தயாரித்து வந்தது. பின்னர் அது சன் டிவியாக உருமாறியது. அதன் பின்னர் எஸ்.சி.வி. என்ற பெயரில் முன்பு திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பி வந்தது. சமீபத்தில் அந்த அலைவரிசை, சன் மியூசிக் என மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாத்வே:
தமிழகத்தில் சிறிய அளவிலும் கேரளத்தில் பெரிய அளவிலும் தனது கேபிள் நெட்வோர்க்கை வைத்திருக்கும் நிறுவனம் ஹாத்வே. இது மும்பையைச் சேர்ந்த ரஹேஜா நிறுவனத்துக்குச் சொந்தமானது.
இவர்களுக்கு அதிமுகவுடன் நல்ல நெருக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுமங்கலி நெட்வோர்க்கை மட்டும் முடக்கினால் அப்பட்டமான அரசியலாக வெளியில் தெரியும் என்பதால் ஹாத்வேயையும் சேர்த்து கையகப்படுத்த அதிமுக திட்டமிட்டதாகத் தெரிகிறது
தட்ஸ் தமிழ்
|
|
|
| வணக்கம் வணக்கம். |
|
Posted by: karuna - 01-21-2006, 02:12 PM - Forum: அறிமுகம்
- Replies (26)
|
 |
வணக்கம் வணக்கம்.
உங்கள் எல்லோருடனும் கருத்து களத்தில் சண்டையிட(நான் பார்க்காத களமா) நான் வந்திருக்கின்றேன்.
உண்மையை சொன்னால் என்ர பேரைவைத்து கண்டவனெல்லாம் அறிக்கை விடுகிறான். நான் விடுகிறதிற்கு ஒருதரும் தருகிறாங்களில்லை. அதனால நானே களத்தில குதிச்சுட்டன். நான் சண்டையிட்டு படைநடத்திய களங்கள் ஏராளாம். என்ர திறமையால நடந்ததுகள் பல.
அட நானோ தொடர்ந்து சொல்லாமல் நீங்களும் ஏதாவது சொல்லுங்களேன்....
|
|
|
| காதல் கடிதம் |
|
Posted by: Mathuran - 01-21-2006, 01:44 PM - Forum: சினிமா
- Replies (12)
|
 |
எங்கள் திரைப்படத்துறையை எப்படி கட்டியெழுப்புவது? எங்களுக்கென ஓர் திரைக்களத்தை எங்கு நிறுவுவது போன்ற கேள்விகளோடு நம்முள் வாழ்கின்ற பல ஈழத்துக் கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் ஆங்காங்கே குறும்படங்களாகவும், முழுநீளத் திரைப்படங்களாகவும் வெளிவந்த வண்ணமுள்ளன. இருப்பினும் எத்தனையோ நல்ல கலைஞர்கள் இந்த முயற்சியில் இறங்கி முயன்று பார்த்து மூச்சறுந்த நிலையில், போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் கலைத்துறையில் இருந்து விலகிச் செல்லும் சூழலே புலம்பெயர் நாடுகளிலும் சரி இலங்கையிலும் சரி இருந்து வருகிறது.
'எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் நிற்க அதற்குத் தக" என்ற வாக்கினைப் பின்பற்றாத எந்தப் படைப்பாளியும் எங்கள் வாழ்வைத் தரமான முறையில் பதிவு செய்ய முடியாது.! இந்த உண்மையை உணர்ந்து காதல் கடிதம் திரைப்படக்குழுவினர் செயற்;பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இசை உலக வரலாற்றில் புதிய முயற்சியாக வெளிவந்த காதல் கடிதம் இசைத்தொகுப்பு அமைந்தது. இந்த இசைத் தொகுப்பு தமிழ் மக்கள் மத்தியிலும், பத்திரிகைகள் மற்றும் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இப்பொழுது உலகத் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் இசைத்தொகுப்பில் இருந்து ஒர் திரைப்படமென காதல் கடிதம் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காதல் கடிதம் இசைத்தொகுப்பை வழங்கிய அதே கூட்டணியின் அடுத்த இசைத்தொகுப்பும் வெளிவர இருக்கின்ற வேளையில் காதல் கடிதம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எங்கள் வாழ்வை நாமே பதிவு செய்வோம். அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம். இலங்கை, இந்தியாவில் வாழ்கின்ற எமது கலைஞர்களோடும், தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத்துறை சார்ந்த தேர்ந்த கலைஞர்களின் ஆதரவோடும், இத்திரைப்படத்தை உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.
இத் திரைப்படத்தின் தயாரிப்பிற்காக கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நானும் வசீகரனும் காத்திருந்தோம். இப்பொழுது ஒரு நல்ல இளம் தயாரிப்பாளர் கிடைத்த மகிழ்ச்சியில், அவரே முழுத் தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்க தொடங்கிவிட்டோம் என்கிறார் படப்பிடிப்புத் தளத்தில் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அவர்கள்.
<img src='http://img41.imageshack.us/img41/4381/59nv.jpg' border='0' alt='user posted image'>
கடந்த 14.12.2005 அன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, 21.12.2005 முதல் இலங்கையில் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இத் திரைப்படத்தை றுயவநச குயடடள ஆழஎநை ஆயமநசள நிறுவனர் வு.தில்லைவண்ணன் அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ்த் திரைப்படக் கூட்டுத்தாபனமும் இவருக்கு தங்களால் ஆன முழு உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காதல் கடிதம் படப்பிடிப்பின் முக்கிய விடயமாக உலகத் தமிழர்களின் காதுகளைக் கொள்ளையடித்த 'யாழ்தேவியில் காதல் செய்தால்" பாடல் யாழ். தேவி தொடரூந்திலேயே மூன்று நாட்களுக்கு மேலாகப் படப்பிடிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பின் போது நு}ற்றுக்கும் அதிகாமான எமது மக்கள் சக்தி குஆ வானொலியுூடாகத் தெரிவு செய்யப்பட்டு, யாழ். தேவி தொடரூந்தில் பயணிப்பது போன்று படமாக்கப்பட்டது.
இந்தப் பாடலை உயிரோட்டமாகப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்ட சாம்.பி.கீர்த்தன் அவர்களே பாடி நடித்தது இந்தப் படத்திற்கு மேலும் சிறப்புூட்டுகிறது.
இந்தப் பாடலுக்கான முழுமையான அனுசரனையை வழங்கி, திறந்த மனதோடு காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கு தங்கள் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சக்தி குஆ வானொலி மற்றும் சக்தி தொலைகாட்சியினர்.
இத்திரைப்படத்தில் இடம் பெற இருக்கும் ஆறு பாடல்களில் 'ஈழப்பெண்ணே ஈழப்பெண்ணே", 'ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே", 'எழுது எழுது என் அன்பே", 'யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை", ஆகிய பாடல்கள் இலங்கை முழுவதும் உள்ள எழில் கொஞ்சும் இயற்கைத் தாயின் மடியில் படம்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதுவரையில் எந்தத் தமிழ்த் திரைப்படங்களிலும் இடம்பெறாத அழகு தளங்களில் காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், படம்பிடிக்கப்பட்டு, வவுனியாவில் இத்தரைப்படத்தின் திருப்புமுனைக் காட்சி படம்பிடிக்கப்பட்ட போது வவுனியாவில் வாழ்கின்ற தமிழ்; மக்கள் மனமுருகி அக்காட்சியோடு ஒன்றிப்போய் கண்ணீர் சிந்தும் வகையில் இக்காட்சி படமாக்கப் பட்டது மறக்கமுடியாது என்கிறார் காதல் கடிதம் திரைப்படக் குழுவில் பணியாற்றும் ஒருவர்.
உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழரின் வாழ்வியலை அவர்களின் வளமான குடும்ப வாழ்க்கையை, ஒரு பிள்ளைக்கு காதல் வந்தால் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை, எங்கள் கலை கலாச்சார பண்பாட்டுத் தன்மைகள் சிதையாத வகையில் அழகிய திரைக்காவியமாக வெளிக் கொண்டுவரும் கடிதம்தான் காதல் கடிதம்.
காதல் கடிதம் திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிபாலாஐp கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு இணையாக உங்கள் இதயத்தை வருடும் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிசா ஈழத்துப் பெண்ணாக அறிமுகமாகிறார். அறிமுக நடிகர்களாக இருந்தாலும் கதையின் தரம் கருதி இருவரும் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்துக் கொண்டிருக்கிறர்கள்.
<img src='http://img41.imageshack.us/img41/6941/47uz.jpg' border='0' alt='user posted image'>
இத்திரைப்படத்தை குறுகிய காலத்திற்குள் உருவாக்கியே தீருவேன் என உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் முன்வந்த இளைய தயாரிப்பாளர் வு.தில்லைவண்ணன் இப்படத்தின் இயக்குனர் திரு.முகேஷ் அவர்களுக்கும், காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கும் திருப்தி தரும் வகையில் தயாரிப்புச் பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
பாரதி கண்ணம்மா முதல் ஆட்டோக்கிராப் திரைப்படம் வரை 'தவமாய்த் தவமிருந்து" திரையில் ஓர் நாவல் தந்த இயக்குனர் சேரனிடன் உதவி இயக்குனராகப் பணியாhற்றிய திரு.முகேஷ் அவர்கள் திருமதி.வினோலியா நீதிதேவன் அவர்களின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி மிகவும், அழகாக நெறியாள்கை செய்து கொண்டிருக்கிறார்.
காதல் கடிதம் இசைத்தொகுப்பின் மூலம் தனது உன்னதமான இசையை பாடல்களுக்கு வழங்கி, பின்னணி இசையினை வழங்கவும், காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கு மிகவும் பக்கபலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அவர்கள்.
திரைப்படக் கல்லுரியில் படித்துப் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, தங்கப் பதக்கம் வென்று தன் புதுமையான ஒளிப்பதிவில் கண்ணுக்குக் குளிர்மையான காட்சிகளை கவிதையாக தந்து கொண்டிருக்கிறார் டீ.சு.ராஐன் அவர்கள்.
இத்திரைப்படத்தின் முழுப் பாடல்களையும் முதல் முறையாக புலம்பெயர்ந்து நோர்வே மண்ணில் வாழ்கின்ற வசீகரன் அவர்கள் எழுதியிருக்கின்றார்.
இப்படி எல்லாமே புதிய, இளைய முகங்களின் அறிமுகங்களோடு உங்களுக்கு ஏற்கனவே பரிட்சயமான பிரபல தென்னிந்திய நடிகர்களும் காதல் கடிதம் திரைப்படத்தில் இணைகின்றார்கள்.
<img src='http://img77.imageshack.us/img77/3757/21hw.jpg' border='0' alt='user posted image'>
நடிப்பில் கலக்கப் போகும், உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்கள். நிழல்கள் ரவி, சிறிரஞ்சனி, காதல் திரைப்படப் புகழ் சுகுமார், ராசி அழகப்பன், விஐய் கணேஸ், பிரவீன், இவர்களோடு இலங்கைக் கலைஞர்களில் பொப்பிசைப் பாடகர் யு.நு.மனோகரன். எங்கள் மூத்த கலைஞர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிப்பாளர் திரு.நடராஐசிவம் அவர்கள் கதாநாயகியின் தந்தையாக வாழ, கதாநாயகியின் தாயாக தோன்றுகிறார் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான குணச்சித்திர நடிகை ஒருவர்.
தொழிநுட்பக் கலைஞர்கள்:
தயாரிப்பு: வு.தில்லைவண்ணன் றுயவநச குயடடள ஆழஎநை ஆயமநசள.
மூலக்கதை: வினோலியா
திரைக்கதை, வசனம், இயக்கம்: முகேஷ்
ஒளிப்பதிவு: டீ.சு.ராஐன்
இசை: வி.எஸ்.உதயா
பாடல்கள்: வசீகரன் (நோர்வே)
கலை: கலைராஐ;
நடனம்: காதல் படப் புகழ் கந்தாஸ், மன்மதராசா பாடல் புகழ் சிவசங்கர்
படத்தொகுப்பு: வாசு சலிம்
நிழற்ப்படம்: சிற்றரசு
திரைப்படத்தில் பணியாற்றத் துடித்துக் கொண்டிருக்கும் இலங்கைக் கலைஞர்கள், தொழிநுட்பக் கலைஞர்கள், மற்றும் அறிமுக நடிகர்கள் பலர் இந்தக் 'காதல் கடிதம்" திரைப்படத்தினூடக ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
ஒரு தொலைபேசி உரையாடல் வாயிலாக உருவான நட்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஓர் இசைத்தொகுப்பு திரைப்படமாவதை எண்ணி எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் இத்திரைப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
உங்கள் வாழ்வை திரையில் பார்த்து மகிழ மாசி மாதம் வரை காத்திருங்கள்.
காதுகளுக்கு விருந்து படைத்தோம் உங்கள் கண்களுக்கும் விருந்து படைக்க மிக விரைவில் வருவோம்! என்கிறார்கள் காதல் கடிதம் திரைப்படக் குழுவினர்.
இத்திரைப்படம் தொடர்பான மேலதிக தகவல்கள், படப்பிடிப்பு தளங்களில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற நிழல் படங்களைப் பார்வையிட றறற.எnஅரளiஉனசநயஅள.உழஅ பாருங்கள
நன்றி: தமிழ்நாதம்[img][/img]
|
|
|
| வட, தென் தமிழீழத்தில் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்கப்படும் |
|
Posted by: நர்மதா - 01-21-2006, 01:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
வட, தென் தமிழீழத்தில் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்கப்படும்: துணைத் தளபதி றமணன்
வட, தென் தமிழீழப் பகுதிகளில் ஒரே நேரத்தில் யுத்தம் தொடங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட மற்றும் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் பொதுமக்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (17.01.06) நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்க விழாவில் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் ஆற்றிய உரை:
உலகத்திலே இருக்கின்ற எந்த சக்தியாலும் வெல்ல முடியாத இராணுவமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயார் நிலையில் இருக்கின்றார்கள்.
எங்களது போராட்டத்தை பொறியிலே சிக்க வைக்க கடந்த அரசியல் கால கட்டத்தில் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. எங்கள் தலைவருடைய இராஜதந்திரமான செயற்பாட்டால் அந்தச் சூழலை மாற்றப்பட்டு நாம் இறுதி உரிமையைப் பெறுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தச் சூழலை வெல்வதற்காக இந்த இராணுவப் படையோடு மக்கள் படை திரண்டு பொங்கி எழ வேண்டிய காலம் இது. கடந்த யுத்த காலங்களில் சிறிலங்கா இராணுவத்துக்கு பல நாடுகள் பல பயிற்சிகளையும் தளபாடங்களையும் வழங்கினார்கள். அவற்றை எதிர்கொண்டு எங்கள் தலைவரின் நெறிப்படுத்தலில் அந்த யுத்தத்தை முறியடித்த போரில் மக்கள் எழுச்சி கொண்டதை வரலாறு மறந்துவிடாது.
ஜயசிக்குறு சண்டை காலத்தில் நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தபோது அங்கிருந்த போராளிகளின் எண்ணிக்கை 350. அகற்றப்பட்ட இராணுவ முகாம்கள் 45. வட தமிழீழத்திலும் தென் தமிழீழத்திலும் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்க வேண்டும் என்பதுதான் இன்று எங்களுடைய தலைவரின் திட்டம். அன்று 350 போராளிகள் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பல போராளிகள் குட்டிசிறி மோட்டார் படையணியில் தமது பயிற்சிகளை எடுத்துவிட்டு தலைவரின் கட்டளைக்குக் காத்திருக்கிறார்கள்.
அங்கு இருக்கக் கூடிய படையினரது எணிக்கை 4 ஆயிரம். ஒரு டிவிசனுக்கும் குறைவானது. விசேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை 900. அவர்கள் போருக்குத் தயார்படுத்தப்பட்டவர்கள் அல்ல. 96 ஆம் ஆண்டு விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது சந்திரிகா மீது படையினர் வழக்குத் தொடர்ந்தனர். பெரும் யுத்தத்துக்கு தயார்படுத்தப்பட்டவர்கள் அல்ல நாங்கள். எங்களை போரிலே ஈடுபடுத்துவது பிழையான விடயம். நாங்கள் ஏரியா கொமாண்டோக்கள் மட்டுமே என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
மட்டக்களப்பிலே இருக்கக் கூடிய இராணுவத்தினரது தொகையை நாங்கள் இலகுவாக வெற்றி கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்று உருவாகிறது. வட தமிழீழத்தில் 4 டிவிசன்கள் உள்ளன. அதை எதிர்கொள்ள மக்கள் படை தயாராக வேண்டும்.
இந்த விடுதலைப் போராட்டம் கெரில்லா அமைப்பாக இருந்த போது நீங்கள் உணவூட்டிய, சிறகால் காப்பாற்றிய போராளிகளே இன்று உள்ளனர். அதே உணர்வோடு இன்றும் மக்கள் செயற்பட வேண்டும்.
இன்றைய சிறிலங்கா அரசாங்கம் சமாதானத்துக்கான எந்த ஒரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. கடந்த மாவீரர் நாள் உரையிலே தலைவர் கால அவகாசத்தை கொடுத்தார். ஆனால் எந்த ஒரு தீர்வுத்திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கம் பல நாடுகளில் சென்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறது. ஜே.வி.பி.யினரும், ஜாதிக ஹெல உறுமயவினரும் சிறிலங்கா இராணுவத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
நாங்கள் எங்கள் கால்களிலே- தலைவரின் வழியில்- தலைவரின் காலத்தில்தான் உரிமையை வென்றெடுக்க முடியும்.
தமிழர்களுடைய கடந்த கால வரலாறுகளில் மக்களை வழிநடத்த ஒரு தலைவர் இல்லாமல் அல்லோகலப்பட்டோம். இன்று கூட உலகத்திலே பல நாடுகள் ஒரு தலைமைத்துவம் இல்லாமல் சின்னாபின்னமாக அலங்கோலமாக தத்தளிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். எங்கள் தேசத்துக்கான தலைவர் எந்த சக்தியாலும் வாங்கி விட முடியாதவர். பல நாடுகளின் விடுதலை யுத்தங்கள் குரங்கின் இடுப்பில் கயிற்றைப் போட்டு ஆட்டுவதைப் போல் ஆட்டுவிக்கப்படுகின்றன. ஆனால் எங்கள் தலைவரிடம் அது எடுபட்டதா? எங்களை யாரும் அசைக்க முடியாது. எங்களுக்கு யாரும் எல்லை போட முடியாது. எங்களுக்கு யாரும் அழுத்தத்தைப் போட முடியாது என்ற நிலையைத்தான் தலைவர் உருவாக்கி வைத்துள்ளார். அதனால் நாங்கள் தனித்துவமாக இருக்கிறோம்.
ஆயுதங்களை வைத்துவிட்டு சர்வதேசம் சொல்வதற்கு ஆடினால் சமாதானம் வரும் என்கிறார்கள். இதுதான் சர்வதேச நிலைப்பாடு. அது சமாதானம் அல்ல. 17,903 மாவீரர்கள் எதற்காக உயிர்நீத்தார்கள்? பல ஆயிரம் மக்கள் இந்த மண்ணிற்காக தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். சொத்துகளை இழந்திருக்கிறார்கள். இப்படி நாங்கள் இழந்துவிட்டு அவர்கள் சொல்வதைப் போல் ஆயுதங்களைக் கையளிப்பதா? அவர்கள் கூறுகிற சமாதானத்தை ஏற்றுக்கொள்வதா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாங்கள் எதிர்கொள்ளப் போகிற- வெற்றி கொள்ளப் போகிற யுத்தத்தை எல்லோரும் இணைந்து எழுச்சியோடு போராடுவோம்.
சிங்களத்தின் இடுப்பு, நெஞ்சு, தலைப்பகுதி என எல்லாப் பகுதியிலும் அடி விழ வேண்டும். மகிந்த ராஜபக்ச போடுகிற திட்டம் முட்டாள்தனமான திட்டம். சிங்களதேசம் அனுபவிக்கப் போகிற துன்பங்களை நாங்கள் பார்க்கப் போகிறோம். நாங்கள் நிச்சயம் வெல்வோம்.
யாராலும் அசைத்துவிட முடியாத அத்திவாரங்களாக எங்கள் மாவீரர்கள் இருக்கிறார்கள். அந்தத் தியாகத்தினூடாக, தெய்வங்களினூடாக விடுதலையை வென்றெடுப்போம்.
கடந்த காலங்களில் எப்படி படைகளை உடைத்து தகர்த்து சிதறடித்து ஓடவைத்தோமோ அதேபோல் இப்போதும் இருக்கிற இரானுவத்தை சிதறடித்து ஓட விரட்டி சர்வதேசம் வியந்து பார்க்கிற தமிழீழத்தை- உலகத்திலே சிறந்த இனமாக- நாடாக வளர்த்தெடுக்க உறுதி பூணுவோம் என்றார் றமணன்.
புதினம்
|
|
|
| "மஹிந்த சிந்தனை' யிலிருந்து வெளியே வர மஹிந்தர் தயாரா? |
|
Posted by: cannon - 01-21-2006, 10:10 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்வதற்காக நோர்வே அனுசரணைக்குழுவின் பொறுப்பாளரும், அந்த நாட்டு அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் நாளைமறுதினம் கொழும்பு வருகின்றார்.
சொல்ஹெய்முக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் இடையில் வன்னியில் நடைபெறக்கூடிய உத்தேச சந்திப்பின்போது தலைவர் பிரபாகரனுக்கு உதவுவதற்காக புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் அதேநாள் அதா வது நாளைமறுதினம் இலங்கை வருகின்றார்.
இந்த இருவரின் வருகையையும் ஒட்டி அமைதி முயற்சிகளில் நல்ல திருப்பம் கிட்டும் என்றும்
சமாதான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை முறியடிக்கும் திடீர் நகர்வு இந்த வருகையை ஒட்டி ஏற்படும் என்றும்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட் டிருக்கின்றார். இது பற்றிய தகவலை அவரின் சார்பில் அவரது அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் நிமால் ஸ்ரீபால டி சில்வா வெளி யிட்டுள்ளார்.
இதேசமயம், தம்மை சந்திக்கும் அரசியல் பிரமுகர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு விடயத்தைத் திரும்பத்திரும்பக் கூறிவருகின்றார். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இரண்டு தடவைகள் சந்தித்த போதும் அந்தக்கருத்தையே அவர் கூறியிருந்தார்.
""வன்னிக்குச் சென்றும் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்பதுதான் அந்தத் தக வலாகும்.
இலங்கைத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புலி களின் தலைவர் பிரபாகரனும் நேரடியாகப் பேசவேண்டும் என்று தற் போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரிஸ் புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் போராளி யுமான மார்டின் மெக்கினாஸும் கூடத் தெரிவித்திருக்கிறார்.
அனுசரணையாளர்கள் மற்றும் மதியுரைஞரின் வருகைகளி னாலும் அல்லது உயர் தலைவர்கள் மட்டத்தில் நடைபெறக்கூடிய நேரடியான சந்தப்புக்களினாலோ மட்டும் தீர்வுக்கு வழி பிறந்து விடும் என்று கருதுவதும், கூறுவதும் வெறும் அபத்தமாகும்.
ஏதோ உயர்மட்ட அனுசரணையாளர்கள் வராததாலும் உயர்தலைவர்கள் நேரில் சந்திக்காததாலும்தான் தீர்வு முயற்சி முன்நக ராமல் தேங்கிக் கிடக்கின்றது என்ற அர்த்தத்தையே இக்கருத்துகள் தரும்.
தீர்வு முயற்சி முன்நகர வேண்டுமானால், அதற்கு முதலில் உரிய சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்; தீர்வு காணும் நோக்கம் உண்மையாக இதய சுத்தியாக தங்களுக்கு உள்ளது என்பதை வெளிப் படுத்தும் விதத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் செயற்பாடுகள் அமையவேண்டும்.
ஆனால், அத்தகைய நிலைமையோ, வெளிப்படுத்தல்களோ தமிழர் தாயகத்தில் தோற்றவே இல்லை என்பதுதான் மெய்மை நிலையாகும்.
ஒரு பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தின் கொடூரப் பிடிக்குள் சிக்குண்டு தமிழ் மக்கள் அல்லல்பட்டு, அந்தரித்துக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சமயத்தில் அமைதி முயற்சிகள் முன்நகரும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுத்தரப்பும் வெளியிடுகின்றமை, அந்த நம்பிக்கை வெறும் பகல் கனவே என்ற எண்ணத்தையே தமிழர் தரப்புக்கு தருகின்றது.
ஈழத்தமிழ் மக்கள் தமது போராட்ட இலட்சியத்தை அடையும் அணுகுமுறை குறித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய வரலாற்றுத் திருப்பு முனையில் உள்ளனர் என்பதை தமது கடந்த மாவீரர் தின உரையில் வெளிப்படுத்திய தலைவர் பிரபாகரன், ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப் பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப்பார்க்கும்போது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படைகளையோ, அதன்மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டார் எனத்தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
கொள்கை ரீதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமி ழர்களின் அபிலாஷைகளுக்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது. எனினும், அவர் (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ) சமாதான வழி முறையை எவ்விதம் கையாளப்போகின்றார் என்பதையும் தமிழ் மக் களுக்கு எவ்விதம் நீதி வழங்கப்போகின்றார் என்பதையும் முதலில் அறிந்துகொள்வது அவசியம் என்று குறிப்பிட்ட தலைவர் பிரபா கரன், அதற்காக அவர் (ஜனாதிபதி மஹிந்த) மேற்கொள்ளும் நட வடிக்கைகளைச் சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்பதற்குத் தாங் கள் (விடுதலைப் புலிகள்) முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை யும் தெளிவுபடுத்தியிருந்தார்.
அந்தப் பொறுத்திருந்து பார்க்கும் இடைவெளிக்குள் மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வே இப்பொழுது இடம்பெறுகின்றது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுத்தரப் பும் புரிந்துகொள்வது நல்லது.
தென்னிலங்கை சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளையும் மேலாண்மைப்போக்கு உணர்வுகளையும் தூண்டிவிட்டு அதன்மூலம் இனவாதத்தைக் கிளப்பி, அந்த எழுச்சியில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டு வெற்றியீட்டும் இலக்கிலேயே தமது தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனையை மஹிந்தர் முன்வைத்தார்.
தலைவர் பிரபாகரன் தெட்டத்தெளிவாகச் சுட்டிக்காட்டியிருப்பதுபோல "மஹிந்த சிந்தனை' க்கும் தமிழர்களின் நியாயமான அபிலாஷை களுக்கும் இடையில் இட்டு நிரப்பமுடியாத பெரிய வெளி உண்டு.
அதை நிரப்புவதாயின் தமிழர்களின் நியாயமான அபிலாஷை களை நிறைவுசெய்யக்கூடிய ஒரு நிரந்தர, நீடித்து நிற்கக் கூடிய, நிலையான தீர்வை எட்டுவதாயின் பேரினவாத சட்டகத் துக்குள் அமைந்த "மஹிந்த சிந்தனை'யிலிருந்து ஜனாதிபதி மஹிந்த வெளிவரவேண்டும்.
அதைவிடுத்து, சொல்ஹெய்ம், மதியுரைஞர் பாலசிங்கம் போன் றோர் இலங்கை வருவதனாலேயோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைவர் பிரபாகரன் நேரில் சந்திப்பதாலேயொ தீர்வு வந்துவிடாது.
ஆகவே, பிரமுகர்களின் வருகைகள், விஜயங்களைக் காட்டி, அதன்மூலம் திருப்புமுனை ஏற்படும் என நம்பிக்கையை வெளி யிட்டு, மக்களை ஏமாற்றுவதை விடுத்து
"மஹிந்த சிந்தனை' போன்ற மேலாண்மைப்போக்குக் கொள்கைகளிலிருந்து வெளிவந்து, தமிழர்களுக்கு நீதி வழங்கும் நியாயப்போக்குக்குத் தாங்கள் தயாரா என்பதை அரசுத்தரப்பு அறிவிப்பதே பொருத்தமானது. அப்படியான உண்மை மனமாற்றம் நீதியின் பாலான எண்ணக்கரு தென்னிலங்கைச் சிங்களத்தலைமைகளின் அடிப்படைப்போக்கில் கருக்கொள்ளுமானால், அது நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும்; நம்பிக்கை தருவதாக இருக்கும்.
""தீர்வுக்காக தேவைக்கு மேலதிகமாக மேலும் ஒரு மைல் செல் லத் தயாராக இருக்கிறேன்'' என்று ஜனாதிபதி மஹிந்தர் கூறினார். "மஹிந்த சிந்தனை' என்ற கடும் இனவாதக் கோட்பாட்டிலிருந்து முற்றாகத் தம்மை விடுவித்து, அதிலிருந்து அவர் வெளியே வரு வதுதான் இன்றைய நிலையில் அமைதி முயற்சிகளுக்காக அவர் மேலும் அதிகமாகச் செல்லவேண்டிய முக்கிய தூரமாகும். அதற்கு அவர் தயாரா?
http://www.uthayan.com/editor.html
|
|
|
| இணையத்தில் இலவச இடம் - கோப்புக்களை பரிமாற |
|
Posted by: ragavaa - 01-21-2006, 07:14 AM - Forum: இணையம்
- Replies (6)
|
 |
உங்களது கோப்புக்களை இணையத்தின் ஊடாக இலவசமாக பரிமாற்றிக் கொள்வதற்கு பயன்படும் இணையத்தளங்கள்
Collection of 50+ free file hosting from 10MB to 2GB that do not require registration, with detailed of file size limit, download limit and file life.
SendOver
File Size Limit: 2GB
Download Limit: Unlimited
File Life: 7 Days (Deleted only if there is no download activity in 7 days)
URL: http://www.sendover.com
FileFactory
File Size Limit: 1.5GB
Download Limit: 25 Downloads
File Life: 7 Days
URL: http://www.filefactory.com
MegaShares
File Size Limit: 1.5GB
Download Limit: Unlimited
File Life: 25 Days (Deleted only if there is no download activity in 25 days)
URL: http://www.megashares.com
SendSpace
File Size Limit: 1.2GB
Download Limit: download bandwidth limit of 100GB
File Life: 14 Days (Deleted only if there is no download activity in 14 days)
URL: http://www.sendspace.com
YouSendIt
File Size Limit: 1GB
Download Limit: 25 Downloads
File Life: 7 Days
URL: http://www.yousendit.com
TransferBigFiles
File Size Limit: 1GB
Download Limit: 20 Downloads
File Life: 5 Days
URL: http://www.transferbigfiles.com
zUpload
File Size Limit: 500MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.zupload.com
Spread-It
File Size Limit: 500MB
Download Limit: Unlimited
File Life: 14 Days
URL: http://www.spread-it.com
FileFactory
File Size Limit: 500MB
Download Limit: Unlimited
File Life: 15 Days (Deleted only if there is no download activity in 15 days)
URL: http://www.filefactory.com
mooload
File Size Limit: 500MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.mooload.com
CyberUpload
File Size Limit: 500MB
Download Limit: Unlimited
File Life: 7 Days (Deleted only if there is no download activity in 7 days)
URL: http://www.cyberupload.com
Uploading
File Size Limit: 500MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.uploading.com
Snaggys
File Size Limit: 500MB
Download Limit: 999 Downloads
File Life: 15 Days
URL: http://www.snaggys.com
Bigupload
File Size Limit: 300MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.bigupload.com
RapidUpload
File Size Limit: 300MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.rapidupload.com
ShareBigFile
File Size Limit: 300MB
Download Limit: Unlimited
File Life: 21 Days
URL: http://www.sharebigfile.com
MegaUpload
File Size Limit: 250MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.megaupload.com
UpDownloadServer
File Size Limit: 250MB
Download Limit: Unlimited
File Life: Unlimited
http://www.updownloadserver.de
XtraFile
File Size Limit: 250MB
Download Limit: Unlimited
File Life: 15 Days (Deleted only if there is no download activity in 15 days)
URL: http://www.xtrafile.com
bonpoo
File Size Limit: 250MB
Download Limit: Unlimited
File Life: 10 Days
URL: http://www.bonpoo.com
FileCache
File Size Limit: 250MB
Download Limit: Unlimited
File Life: 31 Days
URL: http://www.filecache.de/upload
Supload
File Size Limit: 200MB
Download Limit: 30 Downloads
File Life: 7 Days
URL: http://supload.com/sendfile
RapidShare
File Size Limit: 100MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.rapidshare.de
myShareBox
File Size Limit: 100MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.mysharebox.com
TheUpload
File Size Limit: 100MB
Download Limit: Unlimited
File Life: 30 Days
URL: http://www.theupload.com
zSHARE
File Size Limit: 100MB
Download Limit: Unlimited
File Life: 10 Days (Deleted only if there is no download activity in 10 days)
URL: http://zshare.net
Upload.Sc
File Size Limit: 100MB
Download Limit: Unlimited
File Life: Unknown
URL: http://www.upload.sc
Store and Serve
File Size Limit: 100MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://storeandserve.com
BIGfileupload
File Size Limit: 100MB
Download Limit: Unlimited
File Life: Unlimited
URL: http://bigfileupload.com
QuickDump
File Size Limit: 100MB
Download Limit: download bandwidth limit of 500MB per hour
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://quickdump.com
Easy-Sharing
File Size Limit: 75MB
Download Limit: Unlimited
File Life: 30 Days
URL: http://www.easy-sharing.com
Turbo Upload
File Size Limit: 70MB
Download Limit: Unlimited
File Life: Unknown
URL: http://www.turboupload.com
SaveFile
File Size Limit: 60MB
Download Limit: Unlimited
File Life: 14 Days (Deleted only if there is no download activity in 14 days)
URL: http://www.savefile.com
FileHD
File Size Limit: 60MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.filehd.com
RapidSharing
File Size Limit: 50MB
Download Limit: Unlimited
File Life: 60 Days (Deleted only if there is no download activity in 60 days)
URL: http://www.rapidsharing.com
UploadSend
File Size Limit: 50MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.uploadsend.com
UploadFront
File Size Limit: 50MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.uploadfront.com
FreeUploader
File Size Limit: 50MB
Download Limit: Unknown
File Life: Unknown
URL: http://www.freeuploader.com
Momoshare
File Size Limit: 50MB
Download Limit: Unlimited
File Life: 15 Days (Deleted only if there is no download activity in 15 days)
URL: http://www.momoshare.com
FriendlyShare
File Size Limit: 50MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.friendlyshare.de
orb-z
File Size Limit: 50MB
Download Limit: 200 Downloads
File Life: 15 Days
URL: http://www.orb-z.com
UploadHut
File Size Limit: 50MB
Download Limit: Unlimited
File Life: 30 Days
URL: http://www.uploadhut.com
SupaShare
File Size Limit: 50MB
Download Limit: Unlimited
File Life: 14 Days
URL: http://www.supashare.com
FileHost
File Size Limit: 50MB
Download Limit: Unknown
File Life: Unknown
URL: http://www.filehost.ro
ushareit
File Size Limit: 50MB
Download Limit: Unknown
File Life: Unknown
URL: http://www.ushareit.com
SceneWorld
File Size Limit: 50MB
Download Limit: 1000 Downloads
File Life: 50 Days
URL: http://www.sceneworld.net/up
MyTempDir
File Size Limit: 40MB
Download Limit: Unlimited
File Life: 21 Days
URL: http://www.mytempdir.com
Send File
File Size Limit: 40MB
Download Limit: 10 Downloads
File Life: 10 Days
URL: http://www.send-file.co.uk
UltraShare
File Size Limit: 30MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.ultrashare.net
UploadTemple
File Size Limit: 30MB
Download Limit: Unlimited
File Life: 21 Days
URL: http://www.uploadtemple.com
SendMeFile
File Size Limit: 30MB
Download Limit: Unlimited
File Life: 14 Days
URL: http://www.sendmefile.com
Upload2
File Size Limit: 25MB
Download Limit: Unlimited
File Life: 1 Year
URL: http://upload2.net
UploadTown
File Size Limit: 20MB
Download Limit: Unlimited
File Life: 30 Days (Deleted only if there is no download activity in 30 days)
URL: http://www.uploadtown.com
11MBIT.in
File Size Limit: 20MB
Download Limit: Unknown
File Life: Unknown
URL: http://a1.11mbit.in
Refrozen
File Size Limit: 20MB
Download Limit: Unknown
File Life: Unknown
URL: http://www.refrozen.com
KeepMyFile
File Size Limit: 15MB
Download Limit: Unknown
File Life: Unknown
URL: http://keepmyfile.com
Hyperupload
File Size Limit: 10MB
Download Limit: Unlimited
File Life: Unlimited
URL: http://www.hyperupload.com
WebFileHost
File Size Limit: 10MB
Download Limit: Unlimited
File Life: 30 Days
URL: http://www.webfilehost.com
thanks - planetmayhem.org
களத்தில் பலர் இவ்வாறான இணையத்தளங்களை கேட்பதால் இத்தலைப்பை Sticky ஆக மட்டுறுத்தினர்மார் மாற்றினால் நல்லது.
|
|
|
| லண்டனுக்கு வந்த திமிங்கிலம் |
|
Posted by: Mathan - 01-21-2006, 06:29 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (21)
|
 |
லண்டனுக்கு வந்த திமிங்கிலம்
தேம்ஸ் நதியூடாக லண்டனின் மத்திய பிரதேசத்திற்குள் 5 மீற்றர் நீளமான திமிங்கிலம் உட்பிரவேசித்துள்ளது. வழக்கமாக வடக்கு அட்லாண்டிக் பகுதியின் ஆழ்கடல் பிரதேசங்களில் சிறு கூட்டமாக காணப்படும் இந்த சிறிய வகை திமிங்கிலம் தேம்ஸ் நதிக்கு வந்தது அதிசயமாக கருதப்படுகின்றது. இந்த அரிய காட்சியை காண தேம்ஸ் நதியருகே நேற்று பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். இதனை பாதுகாப்பான முறையில் மீண்டும் கடலுக்கு அழைத்து செல்வதற்காக முயற்சியில் கடல் வாழ் உயிரினங்களை காக்கும் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
நேற்று இந்த செய்தியே பிரத்தானிய தொலைக்காட்சிகளில் பரபரப்பான விடயமாக இருந்ததுடன் பல தொலைக்காட்சிகளில் திமிங்கிலம் பயணம் செய்வதை நேரடி ஒளிபரப்பாக காண கூடியதாக இருந்தது.
<b>திமிங்கிலத்தின் பயணத்தின் ஒளிப்பதிவை இந்த இணைப்பில் காணலாம்.</b>
நன்றி - http://news.bbc.co.uk/1/hi/england/london/4633878.stm
|
|
|
|