| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 457 online users. » 0 Member(s) | 455 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,287
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| பயப்பிடமா நல்லா கடலை போடலாம்ப்பா |
|
Posted by: SUNDHAL - 01-20-2006, 04:07 PM - Forum: மருத்துவம்
- Replies (6)
|
 |
செல்போன்கள்பயன் படுத்துகிறவர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. சாதாரண நடுத்தர மக்க ளுக்கும் செல்போன் அத் தியாவசிய தேவையாகி விட்டது.
செல்போன்களை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு இருதய நோய், மூளை புற்றுநோய் போன்ற கோளா றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சில தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் புதிய ஆய்வு நடத்தினார்கள். 2000-ம் ஆண்டு முதல் 2004- ம் ஆண்டு வரை தொடர்ந்து செல்போன் பயன்படுத்திய 18 வயதினர் முதல் 69 வயதினர் வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இது தவிர நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ள வர்களிடமும் தனியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மூளை புற்றுநோய்க்கும் செல்போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டாக்டர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். மூளை புற்று நோய் ஏற்பட்டவர்களுக்கு அந்த நோய் செல்போன் மூலம் வரவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு முன் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கிராமபுறங்களில் செல்போன் பயன்படுத்துகிறவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளது. கிராமப் புறங்களில் எல்க்ட்ரோ மெக்னடிக் சிக்னல்களை அதிக சக்திவாய்ந்ததாக அமைத்திருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
Thanks:Malaimalar...
|
|
|
| சென்னையில் எதற்கு இரண்டு இலங்கை தூதரகம்? |
|
Posted by: Mathan - 01-20-2006, 04:06 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (9)
|
 |
சென்னையில் எதற்கு இரண்டு இலங்கை தூதரகம்?
தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும்...இந்தியத் துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும், இந்த சனநாயத்தைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில் மூன்றாவதோ நான்காவதோ தூணான பத்திரிகைத்துறையின் பிதாமகன்களில் ஒருவருமான, அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சந்திக்கும் பாக்யம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ஆபத்து வந்தபோது தமிழகத்து பத்திரிகையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில் பேசும்போதுகூட இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது.
சுற்றி வளைப்பானேன்.. அவர்தான் இந்து ராம்.
காரல் மார்ச்சுக்கு அடுத்த இத்தகைய மாமேதையை குறித்து அண்மையில் நான் கேள்விப்பட்ட சில செய்திகள் என்னை அதிர்ச்சியின் விளிம்புக்கே இட்டுச் சென்றன என எழுதினால் அது பொய். மாறாக, மனசுக்குள் போட்டு வைத்திருந்த கணக்கை சரிபார்த்துக் கொள்ள கிடைத்த அரியதொரு வாய்ப்பாக அமைந்தது என்பதுதான் மெய்.
அதில் ஒன்றுதான்:
சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் கொடுத்து வருபவரும். சி.பி.எம். உடன் காற்றுக்கூட நுழைய இடமின்றி இறுக்கமான இணைப்பு வைத்திருப்பவரும்.. அதனது SFIயினது தந்திராலோசனைக் கூட்டங்களில் தவறாது பங்கேற்கும் தளகர்த்தரும்... கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளைக்கு இன்னல் நேரும்போதெல்லாம் கத்தியைச் சுழற்றுபவருமான இந்து ராம்.. எதற்காக பலமான குற்றாச்சாட்டுகளிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வரைக்கும் ஆளான விஜயேந்திரரை ஓடோடிச் சென்று தனது சொந்தக்காரில் அழைத்து வந்தார்? எனபதுதான்.
இது குறித்து நமது கேள்விகளெல்லாம் வெகு வெகு எளிதானவை.
தீவிர இடதுசாரி...சாதி மறுப்பாளர்... மதச்சார்பின்மையின் மொத்த உருவம்.. என்கிற அளவிற்கு உருவகப்படுத்தப்படும் இந்த ராம் எதற்காக விஜயேந்திரரை நேரில் சந்தித்து அழைத்து வந்தார்? அவருக்கும் இவருக்குமான உறவு வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் முகிழ்த்த உறவா..? அல்லது அவரும் இவரைப்போல SFIயின் அரசியல் வகுப்பெடுக்கும் மார்க்சீய ஆசானா..?
ராம் சார்ந்திருப்பதாக சொல்லப்படும் அக்கட்சி இச்செயலை எவ்விதம் பார்க்கிறது? (இந்து ராம் சார்ந்திருக்கும் என்பதைவிடவும்.. இந்து ராமைச் சார்ந்திருக்கும் என்று எழுதத்தான் ஆசை.. ஆனாலும் சந்திரிகாவின் இந்த இனிய நண்பர், அமைப்பு ரீதியாக இதில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா என்பது புரியாத எண்ணற்ற விக்ராமதித்தியன்கள் வேதாளங்களின் இத்தகைய கேள்விகளுக்கு விடை தெரியாமல் நம்மைப் போலவே தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சிக்கல்)
திலீபன் மன்றத்தைத் துவக்கியதற்காகவும்...ஈழத்தில் அமைதிப்படையின் அத்துமீறல்களுக்கு எதிராய் மனிதச் சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டதற்காகவுமே.. அநேகரைக் கட்சியை விட்டுக் கட்டம் கட்டிய காம்ரேட்டுகள் இதில் மட்டும் மெளனம் சாதிப்பதன் பின்னணி என்னவாக இருக்கக்கூடும்..?
சரி, இவைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம். சுனாமியின் சோகம் இன்னும்கூட மக்களின் மனங்களைவிட்டு அகலாத சூழலில்.. எத்தனை உயிர்கள் பறிபோயிற்று..? பெற்றோரைத் தொலைத்த மழலைகளின் நிலை என்ன..? அரசினது நிவாரணப் பணிகள் மக்களைச் சென்றடைகிறதா இல்லையா..? தமிழகக் கரையோரங்களில் ஒதுங்கிய உடல்கள் எவ்வளவு..? அரசினது உதவிகளுமின்றி ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் பலியானவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடுகின்றன..? என்கிற கவலைகளைக் காட்டிலும்..
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே
என்கிற கதையாய் சிறி லங்காவின் The island பத்திரிகை கிளப்பிய புரளியை ஆதாரமாக்கி is prabakaran dead or alive? என சனவரி 9ஆம் தேதியே முதல் பக்கத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
ஏன் இந்த அக்கறை..? அதிலும் யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதற்கு..? என பராசக்தி பாணியில்தான் நாம் ராமையும்.. 1878லிருந்து India National News paper ஆக இருந்துகொண்டிருக்கும் இந்து நாளிதழினையும் நோக்கி நாம் வினவவேண்டி வருகிறது. போதாக்குறைக்கு அடுத்த நாளே இதற்கென ஒரு தலையங்கம் வேறு.
இப்படி சங்கரராமனை மோட்சத்திற்கு அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் நபர் எண்பதுகளின் இறுதியில் பத்துப் பதினைந்து நாட்களுக்கும் மேலாய் காணாமல் போயிருந்தபோது கட்டம் கட்டிப்போட இவர்களுக்குத் தோன்றவில்லையே. அதற்கு என்ன காரணம்?
அவரோடும் அவரது இயக்கத்தோடும் ஆயிரம் முரண்பாடுகள் அநேகருக்கும் இருக்கலாம். ஆனால் தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் இறங்கினால் Freedom of Expression என தொண்டை கிழியக் கத்துகிற ஒரு நாளிதழ்.. புரளிகளை ஆதாரங்களாகவும் ஆதாரங்களைப் புரளிகளாகவும் பார்க்கிற போக்கிற்கு என்ன பெயர்?
பத்திரிகா தர்மம்..?
ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கச் சொல்கிறீர்களே அய்யா.. செய்திகளுக்கு எங்கே போவது? என ஒருமுறை பெரியாரிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், செய்திக்கா பஞ்சம்.. இன்னக்கு இந்து பேப்பர் வாங்கீட்டு வா.. அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ அதையெல்லாம் தப்புன்னு எழுது.. எதத் தப்புன்னு போட்டிருக்கானோ அதையெல்லாம் சரின்னு எழுது.. என்றாராம். இந்த மெளண்ட் ரோடு மகாவிஷ்ணு விஷயத்தில் அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.
எது எப்படி இருப்பினும் நம்முன் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றே ஒன்றுதான்:
அது சரி.. ஒரே ஊரில் எதற்காக இரண்டு இலங்கைத் தூதரகங்கள்..?
(பாமரன் கீற்று மின் சஞ்சிகையில் எழுதியது)
நன்றி - முத்து, பாமரன் மற்றும் கீற்று முன் சஞ்சிகை
|
|
|
| ஜெர்மனிய மக்கள் தொகை குறைந்து வருகிறது. |
|
Posted by: SUNDHAL - 01-20-2006, 04:01 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
ஜெர்மனிய மக்கள் தொகை 1972-ம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நாடு ஜெர்மனிதான். ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தை என்ற அளவிலேயே பிறப்பு விகிதம் இருக்கிறது.
1960 முதல் 1967-க்குள் உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் 30 சதவீதம் ஜெர்மானியர்கள் குழந்தை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.7 கோடியே 55 லட்சமாக உள்ள ஜெர்மானிய மக்கள் தொகை இன்னும் 45 ஆண்டுகளில் 5 கோடியாக குறைந்து விடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இது ஜெர்மானியத் தலைவர்களுக்கு கவலையை அளித்து உள்ளது.
Thanks:Malaimalar..
என்னப்பா நம்மட ஆக்கள் எல்லாம் தூங்கினமா? :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| விநோத வழக்கு |
|
Posted by: நர்மதா - 01-20-2006, 03:19 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (3)
|
 |
விநோத வழக்கு
உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி.
ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது.
1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன.
தகவல் - தினமுரசு
|
|
|
| என் மனதை கவர்ந்த பாடல்கள் உங்களையும்? |
|
Posted by: வியாசன் - 01-20-2006, 10:52 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (21)
|
 |
என் மனதை கவர்ந்த பாடல்கள்சிலதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த பகுதியை திறந்துள்ளேன். இங்கு இணைக்கப்படும் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தரவிறக்கத்தின்பின்போ அல்லது ஒரு வாரத்தின் பின்னரோ செயலற்றுப்போய்விடும். தேவைப்படுபவர்கள் உடனடியாக தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
என்னை கவர்ந்த பல பாடல்களுக்கு சொந்தக்காரி சுசீலா ஆவார்.
சுகமான குரலென்றால் சுசீலாவின் குரலென்பேன்.
நான் முதலாவதாக இணைக்கின்ற பாடல் ரோஜாவின் ராஜா படத்தில் இடம்பெற்ற
ஜனகனின் மகளை மணமகளாக
|
|
|
| உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை- |
|
Posted by: மேகநாதன் - 01-20-2006, 09:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b><span style='color:darkred'>உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை-
உடத்தலவின்ன படுகொலை வழக்கிலிருந்து முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரின் இரு புதல்வர்களான லொஹான் ரத்வத்தை, சானுக ரத்வத்தை ஆகியோர் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீபானி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் பொதுத் தேர்தலின் போது கண்டி உடத்தலவின்ன பிரதேசத்தில் வானில் பயணித்த 10 முஸ்லிம் வாலிபர்களை சுட்டுக் கொன்றமை மற்றும் பலரைக் காயப்படுத்தியமை, கொலைக்குத் திட்டமிட்டமை, அதற்கு ஆதரவளித்தமை, கள்ள வாக்குப் பதிவு, வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை அபகரித்தமை உட்பட 72 குற்றங்கள் தொடர்பாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரின் இரு புதல்வர்களான லொஹான் ரத்வத்தை, சானுக ரத்வத்தை, இராணுவ லெப்டினன் விஜேரத்ன, இராணுவ மற்றும் கொமாண்டோ படையினர் உட்பட 15 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீபானி விஜேசுந்தர, எரிக் பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் 2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் நாள் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.
பின்னர் நீதிபதி எரிக் பஸ்நாயக்க மேல்முறையீட்டு நீதிபதியாக பதவியேற்றதையடுத்து இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.
வழக்கு விசாரணையின் போது போதிய சாட்சியமின்மையினால் இரண்டு பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அனுருத்த ரத்வத்தை உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்</span>
[b]<i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
|
|
|
| தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார் |
|
Posted by: மேகநாதன் - 01-20-2006, 08:26 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (16)
|
 |
<span style='color:brown'>தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார்
நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக்கொடியினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் ஏற்றிவைத்தார் படத்திற்கான தமிழீழ தேசியத்தொலைக்காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் அணிவித்தார்கள் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவான போராளிகள், பொறுப்பார்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர் இவரின் இறுதிச் சடங்குகள் நாளையதினம் கொழுபில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. </span>
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
|
|
|
| விடுதலைப்புலிகளின் தலைவருடன் ஐரோப்பிய ஒன்றியக்குழு சந்திப்பு |
|
Posted by: மேகநாதன் - 01-20-2006, 08:23 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='color:green'><b>விடுதலைப் புலிகளின் தலைவருடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு அடுத்த மாதம் சந்திப்பு? </b>
ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் தலைமையிலான இணைத் தலைமை நாடுகளின் குழுவினர் பெப்ரவரி மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றியப் பேச்சாளர், விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் ஏற்படாத நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேரடியாக பேச ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது என்றார்.
இதனிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கை அமைதி முயற்சிகள் தொடர்பாக உறுப்பினர் சஜ்ஜித் கரீம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் லஸ்லொ கோவக்ஸ் கூறியதாவது:
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 4 ஆம் ஆண்டையொட்டி அடுத்த இணைத் தலைமை நாடுகள் கூட்டம் இலங்கையில் நடைபெற உள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டுதான் இலங்கை அமைதி முயற்சிகளில் மிக மோசமான ஆண்டு.
கதிர்காமர் படுகொலை, தேர்தல் புறக்கணிப்பு, வடக்கு - கிழக்கில் பாரிய எண்ணிக்கையில் படுகொலைகள் என நடந்துள்ளன. விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கிய ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பை அரசாங்கம் செயற்படுத்தியத் தவறியமை பாரிய பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் மறைமுகத் தாக்குதலில் 60 அரச படையினர் உயிரிழந்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் அமைதி முயற்சிகளில் இணைத் தலைமை நாடுகளின் பங்களிப்பு அதிகூடியதாக இருக்கும் என்றார்.</span>
<i><b>தகவல் மூலம்- புதினம் .கொம்</b></i>
|
|
|
| தமிழுக்கு வந்த சோதனை- தொல்காப்பியரும் தமிழன் இல்லையாம் |
|
Posted by: Aaruran - 01-20-2006, 07:00 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (3)
|
 |
[size=15]இடைக்காலத்தில் இருவேறு கருத்துக்கள் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் பார்ப்பன குலத்தவனாக இருக்க வேண்டும். மற்றொன்று தமிழில் நூல் செய்தால், அது வடமொழியில் இருந்து மொழிபெயர்த்ததாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கவேண்டும்.
தொல்காப்பியம் எமக்கு இன்று கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முந்தியது என்பதை எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது தொல்காப்பியம் நீர்மையும் தண்மையும் வண்மையும் தொன்மையும் நிறைந்த தமிழ்மொழியின் எழுத்துச் சொல் இலக்கணத்தையும் தமிழ்மக்களின் வாழ்வியல் இலண்கணத்தையும் (பொருள்) விளக்கும் சிறந்த நு}ல் ஆகும். மொழி, வாழ்வு இரண்டையும் இணைத்து இலக்கணம் சொன்ன சிறப்பு தொல்காப்பியத்துக்கு மட்டுமே உண்டு.
எழுத்ததிகாரம் ஒலி அளவு, உயிர், மெய் என்ற பிரிவுகள், குறில், நெடில். வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மொழிமரபு, புணரியல் போன்றவற்றுக்கு இலக்கணம் சொல்கிறது.
சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லின் சிறப்பும் திணை பால் முதலிய உயிர்ப்புகுப்பு உயிரியல் பகுப்பு முறையும் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்துக் காரணத்தோடு அமைக்கப்பட்டுள்ளன என்பவற்றை விளக்கிக் கூறுகிறது.
பொருளதிகாரம் நிலம் பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பாவின் பண்பு, மெய்ப்பாடு, உவமயியல், மரபியல் பற்றிச் சொல்கிறது.
<b>இவ்வளவு சீரும் சிறப்பும் நிறைந்த நூலைத் தமிழ்ப் புலவர் ஒருவர் இயற்றி இருப்பாரா? ஒருக்காலும் இருக்காதே! இருக்க முடியாதே! பின் தொல்காப்பியர் எழுதாவிட்டால் யார் அதனை இயற்றி இருப்பார்?
தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் அன்று, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல்.! </b>
<b>தொல்காப்பியர் வரலாறு போலவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் </b>முதல் குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்தி திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தவராகவும் காட்டல் வேண்டிக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனர்.
திருவள்ளுவர் <b>யாளிதத்தன் என்ற பிராமணனுக்கும்</b> சண்டாளப் பெண்ணுக்கும் பிறந்ததாக ஞானாமிர்தம் (6 ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கிறது. அதற்குப் பிந்திய கபிலர் அகவல் 'அருந்தவ முனியும் பகவற்குப் பருவுூர்ப் பெரும் பதிக்கட் பெரும்புலைச்சி ஆதி வயிற்றினில்" பிறந்தார் என்றும் அவரது பெற்றோர் தங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளைப் பிறந்த இடத்திலேயே விட்டு விட்டுப் போய்விடுவதால் 'தொண்டை மண்டலத்தில் வண்தமி;ழ் மயிலைப் பறையரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தார்" எனக் கூறுகிறது.
<b>மேலும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் இழித்துப் பழிக்கும் முகமாக திருக்குறள் அறத்துப் பால் இராமாயணம், மகாபாரதம், பராசர சம்கிதை, பாகவதம், இருக்கு வேதம், மனு ஸ்மிருதி போன்ற சாத்திரங்களைத் தழுவியது என்றும் பொருட்பால் சாணக்கியன் இயற்றிய அர்த்த சாஸ்திரம், காமந்தக நீதி, சுக்கிர நீதி, போதாயன ஸ்மிருதி ஆகியவற்றில் இருந்து கடன் வாங்கப்பட்டதென்றும் காமத்துப்பால் வாத்ஸ்யாயனார் வடமொழியில் இயற்றிய காமசூத்திரத்தின் தழுவல் என்றும் வடமொழிப் பற்றாளர்கள் பகர்கிறார்கள். </b>
வாதஸ்யாயனார் கூறும் பிறன்மனை நயத்தலை திருவள்ளுவர் அறத்துப் பாலில் கண்டிக்கிறார். அப்படியிருக்க வள்ளுவரின் காமப் பால் காமசூத்திரத்தில் இருந்து எப்படி வந்திருக்க முடியும்?
திருக்குறளில் வலியுறுத்தப்படும் அறம் என்ற சொல்லுக்கு விளக்கம் கூற வந்த பரிமேலழகர் தனது உரைப் பாயிரத்தில் 'அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியது ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.
<b>அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்ற, அவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்" எனப் பாலில் நஞ்சு கலப்பது போன்று ஆரிய நச்சுக் கருத்துக்களை முதலும் இடையும் முடிவுமாகப் புகுத்தி தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு விளைவித்துள்ளார். திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும். </b>
இவ்வாறு தமிழில் ஒன்றுமில்லை அது சூத்திரர் பேசும் நீச பாஷை வடமொழியே நிலத் தேவர் பேசும் தேவ பாஷை என்பது தமிழையும், தமிழரையும் வெறுப்பவர்களின் மத்தியில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது.
நன்றி: தமிழ்நாதம்- கனடா
|
|
|
|