Yarl Forum
விநோத வழக்கு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: விநோத வழக்கு (/showthread.php?tid=1276)



விநோத வழக்கு - நர்மதா - 01-20-2006

விநோத வழக்கு

உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி.

ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது.

1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன.


தகவல் - தினமுரசு


- Mathan - 01-20-2006

விநோதமான தகவல்களுக்கு நன்றி நர்மதா. இவற்றை இணையதளம் எதிலிருந்தாவது எடுத்திருந்தால் அவற்றை மறக்காமல் குறிப்பிட்டால் நல்லது.


- நர்மதா - 01-20-2006

நன்றி இணைத்துள்ளேன்


- RaMa - 01-21-2006

ஆகா இப்போ மனிதர்களுக்கே தண்டனை கொடுத்து முடியலை. முன்பு மிருகங்களுக்கும் கொடுத்து இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விடயமாக இருக்கின்றது.
இங்கு இனைத்தமைக்கு நன்றிகள்