Yarl Forum
நீங்களும் இரவும் நாங்களும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நீங்களும் இரவும் நாங்களும் (/showthread.php?tid=1249)



நீங்களும் இரவும் நாங்களும் - மேகநாதன் - 01-21-2006

[size=18]எனது பிரத்தியேக கோவையை
நேற்று இரவு சரிபார்த்தபோது
அதனுள் இருந்த சில "நிழற் பிரதி"களுல் ஒன்றாய் பின்வரும் கவிதையும் இருந்தது...
ஆழமான அர்த்தமும் உணர்வுகளும் நிரம்பிய
இக் கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்..
"நிலா"என்ற பெயரிலான பெண்போராளி எழுதியிருக்கிறார்.....

<b>நீங்களும் இரவும் நாங்களும்</b>

<i>ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க
விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து
உங்களின் கரங்கள் நீளும்
நிற்போம்
"அண்ணை நானும் வரட்டா?"
என்பீர்கள்
வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம்.
ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள்
ஒரு கணம் நிதானம் இழ்ந்து போனால்
"டிம்" இல்லையோடா?
என்று திட்டுவீர்கள்.
சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும்.

பாதுகாப்பாக பீரங்கிகளை நிலைப்படுத்தி
எண்ணியெண்ணி எறிகணை செலுத்திய
காலங்கள் விலகிப்போக
எதிரிகள் ஓடும் வேகத்திற்கேற்ப
எறிகணை செலுத்திகளை நகர்த்தும்
வாகங்களை செலுத்தும் வல்லமை பெற்ற
சகோதரிகளினுடைய சகோதரர்களே,
இரவிலே வாகனங்கள் செலுத்தும் அனைவரும்
ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்று
எப்படி உறுதியாகத் தீர்மானிக்கிறீர்கள்?
உங்களின் எழுதாத சட்டங்களைத்
தூக்கி எறிந்துவிட்டு
தயவு செய்து கவனியுங்கள்.
நாளைக்கு உங்கள் அக்கா
ஹையேஸ் செலுத்திச் செல்லக்கூடும்
உங்களது கடைசித் தங்கை
பஷனில் பறத்தல் நேரும்
கப்பற் தொகுதிக் கட்டளைத் தளபதியாய்
மருமகள் பிறத்தல் ஆகும்.
தமிழீழத்தில் ஓர் நல்ல விமானியாய்
பெறாமகள் இருத்தல் -னிகழும்.
சட்டங்கள் பெற்றாலும் சுதந்திர தமிழீழத்தில்
வேலையில்லாச் சிக்கலிற்குள்
சிக்காது உங்கள்து
புதல்வியால் கூட வீதிப் புனரமைப்பில் ஈடுபடும்
கனரகங்களை கன கச்சிதமாய்ச் செலுத்த முடியும்
உருளச் சிரமப்படும் உலகத்தை ஒற்றைக் கையால் உருட்டப்
போகும் உங்களது
பேத்தியின் பெருமை காணும்
பேறு உங்களுக்கு இருத்தல் நல்லது.

எமதருமை உறவுகளே
இனியேனும் வாகனங்களை மறிக்கும் போது
பொதுப்பெயரில் விளித்துதவி கேளுங்கள்.
உறவுப் பெண்களாயிருந்தால் உந்துருளிகளிலும்
ஏனையவர்களானால் ஏனைய வாகனங்களிலும்
இடமிருந்த்தால் நிச்சயம் உதவுவார்கள்

நேற்றும் இன்றும் நாளையும்
ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்பதுடன்
இது
சூரியனின் புதல்விகள் உலவும் தேசம்</i>

<i><b>நன்றி-"எரிமலை" (பெப்ருவரி 2003)</b></i>


- வர்ணன் - 01-21-2006

அருமயான கவிதை நன்றி இணைப்புக்கு மேகநாதன்! 8)


- RaMa - 01-22-2006

ஒரு தெளிவான கருத்துடன் கூடிய நகைச்சுவையுடன் படைத்திருக்கின்றார் கவிதையை நிலா. அவருக்கு எனது வாழ்த்துக்கள்
இங்கு இனைத்தமைக்கு நன்றி மேகநாதன்.


- அருவி - 01-22-2006

எம் சமூகத்தில் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் இன்று அத்தழைகளில் இருந்து வெளிவருவது மிகவும் மகிழ்வை தரும் ஒரு விடயம்.


- கறுப்பி - 01-22-2006

நன்றி இணைப்புக்கு


- வெண்ணிலா - 01-22-2006

மேகநாதன் நிலாவின் கவிதை இணைப்புக்கு நன்றி


- Nitharsan - 01-22-2006

நியத்தின் பிரதிபலிப்பாய்..அமைந்த கவிதைக்கு நன்றிகள்.....எழுதியவருக்கும் இதை இங்கே இணைத்தவருக:கும்


- Rasikai - 01-22-2006

அருமையான கவிதை இங்கு இணைத்தமைக்கு நன்றி மேகநாதன்


- மேகநாதன் - 01-24-2006

"நிலா" வின் கவிதையைப் படித்து,
வரவேற்ற உறவுகளுக்கு நன்றிகள்....

இவ்வாறான தாயகப் பெண் படைப்பாளிகளின் வித்தியாசமான சிந்திக்கத் தூண்டும் கவிதைகள்/ படைப்புக்களை நீங்களும் பகிருங்களேன்....


- அருவி - 01-24-2006

<b>கொழுந்துக்கூடைகள்.</b>
<img src='http://img3.imageshack.us/img3/9863/102600519yt.jpg' border='0' alt='user posted image'><img src='http://img3.imageshack.us/img3/8496/srilankawomen4xg.jpg' border='0' alt='user posted image'>

<b>சுரண்டல் தராசுகளில்
கொழுந்துக் கூடைகளை
கொழுவி விட்டு
தேனீருக்காக ஏங்கும் இத்
தேயிலைச் செடிகள்.....
அக்கினியாய் அணிவகுத்து
அவலங்களை எரிப்பதெந்நாள்?</b>

கப்டன் கஸ்தூரியின் ஆக்கங்களில் ஒன்று.