Yarl Forum
துன்னாலையில் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப இயக்குநர் சுட்டுக் கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: துன்னாலையில் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப இயக்குநர் சுட்டுக் கொலை (/showthread.php?tid=1245)



துன்னாலையில் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப இயக்குநர் சுட்டுக் கொலை - killya - 01-22-2006

யாழ். துன்னாலையில் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப இயக்குநர் இளையதம்பி இராமகிருஸ்ணன் (வயது 61) நேற்று சனிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


துன்னாலை கரவெட்டி தாமரைக்குளம் பகுதியில் இராமகிருஸ்ணன் வீட்டுக்குள் நேற்று இரவு 10.50 மணியளவில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் இந்தப் படுகொலையை செய்துள்ளனர்.

இராமகிருஸ்ணனை வீட்டை விட்டு வெளியே வருமாறு ஆயுதக்குழுவினர் அழைத்துள்ளனர். ஆனால் இராமகிருஸ்ணன் மறுத்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த ஆயுதக் குழுவினர் கைத்துப்பாக்கி மூலம் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர்.

யாழ்ப்பாண அரச அலுவலகத்தி தொழிநுட்ப இயக்குநராக பணியாற்றி வந்த இராமகிருஸ்ணன் அண்மையில் ஓய்வு பெற்றவராவார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்துள்ள 3 ஆவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இது


- killya - 01-22-2006

அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்