உலகச் செய்திகள்

தனது உயிரைப் பறித்த போரின் இறுதி தருணத்தை பதிவு செய்த ராணுவ புகைப்படக்காரர்

Fri, 05/05/2017 - 06:52
தனது உயிரைப் பறித்த போரின் இறுதி தருணத்தை பதிவு செய்த ராணுவ புகைப்படக்காரர்

 

 
 ஏபி
ஆப்கன் போரில் மரணமடைந்த ஹில்டா கிளேடன் எடுத்த கடைசி புகைப்படம் | படம்: ஏபி
 
 

அமெரிக்க ராணுவ பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது இறுதி தருணத்தின் போது எடுத்த புகைப்படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ராணுவ புகைப்படக் கலைஞர் ஹில்டா கிளேடன் (22), கடந்த 2013 ஆம் ஆண்டு ஆப்கனின் லக்மான் மாகாணத்தில் ஏற்பட்ட பீரங்கிக்குண்டு வெடிவிபத்தில் மரணமடைந்தார்.

கிளேடனுடன் ஆப்கனை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பலியாகினர். பீரங்கி குண்டுவெடிப்பில் கிளேடன் விபத்துக்குள்ளான போது அவரது கேமராவில் அவர் எடுத்த கடைசி புகைப்படத்தை அமெரிக்க ராணுவ திங்கட்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், "ஹில்டா கிளேடனின் இம்மரணம் பெண் ராணுவ வீராங்கனைகள், ஆண் ராணுவ வீரர்களுடன் இணையாக போரின் அபாயகரமான சூழ்நிலைகளை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. கிளேடன் தனது கடைசி தருணத்தில் எடுத்த புகைப்படம் அவரது குடும்பத்தினரின் அனுமதியோடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட காலம் போரின் முக்கிய தருணமாகும். அது அமெரிக்காவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆப்கானை உறுதிப்படுத்த ஆப்கன் வீரர்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டனர்.

போரின் எந்தச் சூழ்நிலையிலும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்வதற்கு அமெரிக்க ராணுவ வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கன் போர்

ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு தாலிபன்களுக்கு எதிராக அமெரிக்க - ஆப்கன் ராணுவ வீரர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். அக் காலக்கட்டங்களில் ஆப்கன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகினர்.

ஆனால் தற்போது அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது இதனால் ஆப்கனில் பெரும்பாலான பகுதிகள் மீண்டும் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/தனது-உயிரைப்-பறித்த-போரின்-இறுதி-தருணத்தை-பதிவு-செய்த-ராணுவ-புகைப்படக்காரர்/article9679986.ece

Categories: merge-rss, yarl-world-news

வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு

Fri, 05/05/2017 - 06:38
வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு

Geng-Shuang.jpg

Geng-Shuang.jpg
வடகொரியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேண விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவுடன் நட்புறவை பேண விரும்புவதாகவும் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் தொடர்ச்சியானதுமாகும் எனவும்  அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார்.

கொரிய பகுதியில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய சீனா  விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/25910

0
Categories: merge-rss, yarl-world-news

சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி

Fri, 05/05/2017 - 06:36
சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி

Abas-Abdullahi-Sheikh.jpg

சோமாலியாவில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான  Abas Abdullahi Sheikh என்ற அமைச்சரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் அரசாங்கப் படையினர் தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் மொகடிஸூவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவயது புகலிடக் கோரிக்கையாளரான Abas Abdullahi Sheikh  கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.  அல் கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சோமாலியாவில் குழப்பங்களை விளைவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/25913

 

Categories: merge-rss, yarl-world-news

மே 24-இல் போப் பிரான்சிஸ் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு

Fri, 05/05/2017 - 05:28
மே 24-இல் போப் பிரான்சிஸ் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு

 

மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

 
 
மே 24-இல் போப் பிரான்சிஸ் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு
 
ரோம்:
 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்த பின் பிரசல்ஸ்-இல் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் கலந்து கொண்டு பின் சிசிலியில் நடைபெறும் ஏழு நாடுகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்கிறார்.    
 
அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் போப் பிரான்சிஸ் இடையேயான சந்திப்பு அப்போஸ்தலிக் அரண்மனையில் காலை 8.30 மணிக்கு துவங்கும் என வாடிகன் தெரிவித்துள்ளது. வழக்கமாக போப் பிரான்சிஸ் மற்றவர்களை சந்திப்பதை விட சற்று முன்னரே டிரம்ப்-ஐ சந்திக்கிறார்.
 
1984 ஆம் ஆண்டு முதல் வாஷிங்டன் மற்றும் வாடிகன் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 21 சதவிகிதம் பேர் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/05060428/1083589/US-President-Donald-Trump-to-meet-Pope-Francis-on.vpf

Categories: merge-rss, yarl-world-news

ரஸ்யா இணைய தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி குற்றச்சாட்டு

Fri, 05/05/2017 - 05:23
ரஸ்யா இணைய தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி குற்றச்சாட்டு

hackers.jpg
ரஸ்யா இணையத் தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி; அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஜெர்மனியின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவு முகவர் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. சைபர் தாக்குதல்களை நடத்தி ஜெர்மனியின் முக்கிய தகவல்களை ரஸ்யா சேகரித்துள்ளதாகவும் இந்த தாகவல்கள் சில  வேளைகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது பயன்படுத்தப்படலாம் எனவும் ஜெர்மனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரஸ்யா இவ்வாறு சைபர் தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் ஜெர்மனியின் அரசியல் நிறுவனங்கள் மீது எவ்வித சைபர் தாக்குதல்களும் நடத்தப்படவில்லை என ரஸ்யா நிராகரித்துள்ளது.

http://globaltamilnews.net/archives/25907

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 04/05/17

Thu, 04/05/2017 - 17:48

 

இன்றைய (04/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* அரச பணிகளிலிருந்து ஓய்வு பெறும் அரசியின் கணவர்; எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறுகிறார்.

* மதநிந்தனை செய்ததாக கூறப்படுபவரை கொலைகார கும்பலிடமிருந்து காப்பாற்றிய பாகிஸ்தான் மதகுரு; அன்பை போதிப்பதே மதம் என்று வலியுறுத்தல்.

* சீனாவில் அதிகரிக்கும் சைக்கிள்களின் செல்வாக்கு; சுற்றுச்சூழலை பாதுகாக்குமென செயற்பாட்டாளர்கள் வரவேற்பு.

Categories: merge-rss, yarl-world-news

அரச கடமைகளில் இருந்து விலகுகிறார் இளவரசர் பிலிப்

Thu, 04/05/2017 - 17:39
அரச கடமைகளில் இருந்து விலகுகிறார் இளவரசர் பிலிப்

Published by Kumaran on 2017-05-04 16:40:52

 

எலிசபெத் மகாராணியின் கணவரும், பிரித்தானிய இளவரசருமான பிலிப், அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், பொது நிகழ்வுகளில் இனிக் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் என பக்கிங்ஹாம் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

5_V_Philip.jpg

70 வருடங்கள் இளவரசராக இருந்து வரும் பிலிப், பிரித்தானிய வரலாற்றில் அதிக காலம் அரச கடமைகளை ஆற்றிய இளவரசர் என்ற பெருமையையும் பெற்றவர்.

தற்போது 95 வயதாகும் பிலிப் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் (அவரது 95வது பிறந்த நாளுடன்) பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டார். எனினும் அறக்கட்டளை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்கவுள்ளார்.

அண்மைக் காலமாக இதயக் கோளாறுகளுக்கு முகங்கொடுத்திருந்தபோதும் பொது நிகழ்வுகளில் இளவரசர் பிலிப் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19737

Categories: merge-rss, yarl-world-news

மனிதர்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் பூமியை விட்டு 100 வருடங்களுக்குள் செல்லவேண்டும் : பிரபல விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்

Thu, 04/05/2017 - 10:54

மனித இனம் உயிருடன் வாழவேண்டுமென்றால் பூமியை துறந்து, வேறு கிரகங்களை நோக்கி 100 வருடங்களுக்குள் செல்லவேண்டுமென பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டிபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். 

Hawking.jpg

மேலு உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வரும் ஹாக்கிங், கரும் துளை ஆய்வின் மூலம் காலத்தை வெல்லும் சூட்சுமத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது உலக இருப்பு தொடர்பான ஆவணப்படமொன்றை உருவாக்கியுள்ளார். குறித்த காணொளியினுடாக இன்னும் 100 வருடங்களில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை கொண்டிருக்காது என தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்தோடு குறித்த ஆவணப்படத்தினுடாக, உலக சனத்தொகை பெருக்கம், தொற்றுநோய் பரவல்கள், வளங்கள் இழக்கப்படுகின்றமை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் அழிவு விதங்கள் குறித்த தெளிவுகளை ஹாக்கிங் வெளிப்படுத்துவதற்கு முயற்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் மனிதர்கள் வேறு கிரகத்தில் வாழ்வது குறித்து, ஹாக்கிங் மற்றும் அவரது முதன்மையான மாணவராய் திகழ்ந்த கிரிஸ்டோப்பே கல்பர்ட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு ஆய்வுகளில் மேற்கொள்ளவுள்ள நிலையில் குறித்த தகவல்களை ஹாக்கிங் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/19728

Categories: merge-rss, yarl-world-news

கலாநிதி மாறன் – தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமுலாக்கத்துறை மேல்முறையீடு :

Thu, 04/05/2017 - 05:52

kalathy-maran-thaynithy-maran.jpg

ஏயர்டெல் மக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பில்  சன் குழும தலைவர்  கலாநிதி மாறன் மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமுலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏயர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்து கடந்த பெப்ரவரி மாதம்  நீதிமன்றம் குறித்த வழக்கு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையிலேயே  கறுப்புப் பணம் பற்றி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் முறையாக பரிசீலனை செய்யவில்லை எனத் தெரிவித்து அவர்களை  விடுவித்தமைக்கு  எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமுலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

http://globaltamilnews.net/archives/25705

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 03/05/17

Wed, 03/05/2017 - 16:17

இன்றைய (03/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்காது; ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைக்குழுவின் தலைமை பேச்சாளர் அறிவிப்பு.

* வீட்டுப்பாடத்தை குறைத்து விளையாட்டை ஊக்குவிக்கும் சிங்கப்பூரின் புதிய கல்விக்கொள்கை; மனப்பாடத்தைவிட, வாழ்வின் சவால்களை சந்திக்க கூடுதல் பயிற்சி.

* மாதவிலக்கும் மாறாத நம்பிக்கைகளும்; நேபாள அரசு சட்டம் போட்டும் தீட்டு குறித்த மக்கள் மனநிலை மாறாமல் இருப்பதேன்?

Categories: merge-rss, yarl-world-news

பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்

Wed, 03/05/2017 - 06:16
பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்
 
 

சில நாட்களுக்கு முன்பு வரை வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியா என்று பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம்.

வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியாபடத்தின் காப்புரிமைCHANDAN KHANNA/AFP/GETTY IMAGES)

உணவு மற்றும் மருந்து உதவிகள் தவிர வட கொரியாவோடு இருக்கும் பிற எல்லா வர்த்தகங்களையும் நிறுத்திவிடுவதாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் தகவல் வெளியிட்டது.

வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் அவை விதித்துள்ள தடைகளை கடைபிடிக்கும் வகையில் இந்த வர்த்தக நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா கூறியிருக்கிறது.

ஆனால், சமீப காலம் வரை, இந்தியா வட கொரியாவுக்கு 76.52 மில்லியன் மதிப்பிலான ஏற்றுமதியையும், 132.53 மில்லியன் மதிப்புக்கான இறக்குமதியும் 2014-15 நிதியாண்டில் நடத்தியிருப்பதாக அரசு தரவுகள் குறிப்பிடுகின்றன.

 

எண்ணெய் உணவுகள், பருத்தி நூல், துணிகள், தாதுக்கள் மற்றும் கனிமப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்கள், ரெத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள், உலோகங்கள் மற்றும் இறைச்சி போன்றவை இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களில் முக்கியமானவைகளாகும்.

வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியாபடத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES

இந்தியாவில் இருந்து அதிக நுகர்வு பொருட்களை இறக்குமதி செய்ய வட கொரியா மிகவும் ஆர்வமாக இருந்தாலும், குறைவான அந்நிய செலாவணியும், நிறுவப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு அமைப்பு வழியாக உத்தரவாதமில்லாத பணம் வழங்கும் முறையும் இதனை மிகவும் கடினமாக்கிவிட்டன.

ஐக்கிய நாடுகள் அவை பொருளாதார தடைகளை விதித்த பின்னர் பெரும்பாலான மேற்குலக நாடுகள் வட கொரியாவோடு நடத்தி வந்த வர்த்தகம் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டன.

 

வட கொரியா பாகிஸ்தானோடு நெருங்கிய தந்திரோபாய உறவுகளை பேணி வந்தாலும், நீண்டகாலமாக வட கொரியாவோடு அதிகம் விளம்பரப்படுத்திக்கொள்ளாத ராஜீய உறவுகளை இந்தியா பேணிவந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 2015 ஏப்ரல் மாதம், வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி சு-யோங் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து, வட கொரியாவை இந்தியாவின் "கிழக்கு நாடுகள் கொள்கையில் சட்டத்தில்" இணைத்துகொள்ள வேண்டுகோள் விடுத்தார்,

வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியாபடத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES

இரண்டு தசாப்தங்களுக்கு மேலான காலத்தில், இவ்விரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது உயர்நிலை அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுதான்.

வட கொரியோவோடு நடத்திய அனைத்து வர்த்தகங்களுக்கும் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர் டாங்கிகள், தாக்குதல் வாகனங்கள், போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் மென்ரக ஆயுதங்கள் போன்ற பாதுகாப்பு ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட வர்த்தக பொருட்களில் அடங்குகின்றன.

 

வர்த்தக தடை தவிர, வட கொரியாவுக்கு வழங்கப்படும் அறிவியல் பயிற்சி, குறிப்பாக ராணுவ அல்லது போலீஸ் பயிற்சிகள், இயற்பியல், வானூர்தியியல் மற்றும் அணு பொறியியல் பயிற்சிகள் எல்லாம் தடைசெய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் வட கொரிய படைப்பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் மகாராஷ்டிராவிலுள்ள படைக்கல்வி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

http://www.bbc.com/tamil/global-39780322

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தொலைக்காட்சி செய்திகள் 02/05/2017

Tue, 02/05/2017 - 17:19
பிபிசி தொலைக்காட்சி செய்திகள் 02/05/2017

பிரெஞ்ச் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மரீன் லூபென் தனது எதிரணி வேட்பாளர் பேச்சின் பல பகுதிகளை களவாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த செய்தி;

வெனிசுவேலா போராட்டங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் நாட்டுக்கு புதிய தேசிய அவை ஒன்றை உருவாக்கபோவதாக அதிபர் அறிவித்திருப்பது குறித்த தகவல்கள்;

உகாண்டாவில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் சிறுமிகளை அவர்களின் குடும்பமே தனித்தீவுக்கு அனுப்பி உயிரிழக்கச் செய்யும் கொடுமையிலிருந்து தப்பி உயிர்வாழும் கடைசி பெண்ணின் கதை ஆகியவை இடம்பெறுகின்றன.

Categories: merge-rss, yarl-world-news

பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் மீது கருத்து திருட்டு குற்றச்சாட்டு

Tue, 02/05/2017 - 16:44
பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் மீது கருத்து திருட்டு குற்றச்சாட்டு

தனது முன்னாள் போட்டியாளர் ஒருவரின் உரையை திருடியதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லு பென் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

போட்டி வேட்பாளர் பிரான்ஸ்ஸுவா ஃபியோவின் உரையை ஒத்ததாக அவரது பெருமளவு உரை இருந்துள்ளது. பிரான்ஸ்ஸுவா பியோ ஏற்கனவே முதற்சுற்று வாக்கெடுப்பில் தோல்வியடைந்துவிட்டார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

Categories: merge-rss, yarl-world-news

'உலகிலேயே வயதான' 146 வயது இந்தோனேசிய முதியவர் மரணம்

Tue, 02/05/2017 - 07:07
'உலகிலேயே வயதான' 146 வயது இந்தோனேசிய முதியவர் மரணம்
 

உலகிலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜோ மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார்.

'உலகிலேயே வயதான' 146 வயது இந்தோனேசிய முதியவர் மரணம்படத்தின் காப்புரிமைEPA
 

சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, ம்பா கோட்டோ (தாத்தா கோட்டோ) 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்கள் சான்றளிக்கின்றன.

ஆனால், இந்தோனேசியாவில் 1900ஆம் ஆண்டில்தான் பிறப்புப் பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்கலாம்.

இருந்தபோதிலும், சோடிமெட்ஜோ அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது வயது 146 என்பது உண்மை என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். மேலும் இந்த முதியவரிடம் எடுத்த பேட்டியின்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் அவரது வயது 146 என்பது நம்பக்கூடியதுதான்.

 

உடல்நிலை கோளாறினால், ஏப்ரல் 12ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோடிமெட்ஜோ, ஆறு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பச் சொல்லி வற்புறுத்தினாராம்.

"மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு, சில ஸ்பூன்கள் கஞ்சியையும், சிறிதளவு பானங்களையுமே அவர் குடித்ததாக" சோடிமெட்ஜோவின் பேரன் சுயாண்டோ பிபிசியிடம் தெரிவித்தார்.

"அதுவும் சில நாட்கள் வரையில் தான் நீடித்தது, பிறகு அவர் சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் மறுத்துவிட்டார், இறுதியில் அவரது மூச்சுவிடுவதையும் நிறுத்திவிட்டார்."

'உலகிலேயே வயதான' 146 வயது இந்தோனேசிய முதியவர் மரணம்படத்தின் காப்புரிமைFAJAR SODIQ

பொறுமையும், அன்பும்

கடந்த ஆண்டு பிபிசியிடம் அவர் அளித்த பேட்டியின்போது, அவரது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்த கேள்விக்கு அவரது பதில் என்ன தெரியுமா? பொறுமைதான் அனைத்திற்கும் காரணம் என்று கூறிய தாத்தா கோட்டோ , "என் மீது அன்பு செலுத்தவும், என்னைப் பார்த்துக் கொள்ளவும் அன்பானவர்கள் என்னுடன் இருந்தார்கள்" என்று சொன்னார்.

தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்து புகைபிடிப்பவராக இருந்த 146 வயது சோடிமெட்ஜோவுக்கு பத்து உடன்பிறப்புக்கள். நான்கு மனைவிகள், பல குழந்தைகள் என பெரிய குடும்பியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார்.

கிராமத்தில் உள்ளூர் கதாநாயகராக போற்றப்பட்ட சோடிமெட்ஜோ, ஜப்பான் மற்றும் டச்சு குடியேற்றத்திற்கு எதிரான போர் குறித்த சுவராசியமான கதைகளை சொல்வாராம்.

 

தனக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூர் மயானத்தில் அவரே வாங்கி வைத்திருந்த இடத்தில் திங்கட்கிழமை காலை அவர் புதைக்கப்பட்டதாக, முதியவரின் பேரன் சுயாண்டோ தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கல்லில் அமர்வதை பழக்கமாக கொண்டிருந்த சோடிமெட்ஜோவின் கல்லறை மேல், இப்போது அந்தக் கல் அமர்ந்திருக்கிறது.

பக்கசார்பற்ற முறையில் சரிபார்க்கப்பட்டால், சதம் அடித்து 122 வயதில் இறந்த பிரான்சு நாட்டின் ஜீன் கால்மெண்ட்டைக் காட்டிலும், தாத்தா கோட்டோ முதியவர் என்று உறுதியாகும்.

பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் உலகில் நீண்ட காலம் வாழ்ந்த மனிதனாக இதுவரை பிரான்சின் ஜீன் கால்மெண்ட்தான் கருதப்படுகிறார்..

http://www.bbc.com/tamil/global-39776184

Categories: merge-rss, yarl-world-news

கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்?

Tue, 02/05/2017 - 07:06
கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்?
 
 

சரியான சூழ்நிலைகளில் வடகொரிய தலைவர் கிம்-ஜோங் உன்னை சந்தித்தால், தான்அதனை கவுரவமாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்?
 

இது குறித்து திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில், ''கிம்-ஜோங் உன்னை சந்திக்கும் சூழல் பொருத்தமாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் கவுரவமாகவும் கருதுவேன்'' என்று டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

இதற்கு முந்தைய நாளில், முடிவெடுப்பதில் கிம்-ஜோங் உன் மிகவும் புத்திசாலி என்று டிரம்ப் வர்ணித்தார்.

வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்கள் தொடர்பாக கொரிய பிராந்தியத்தில் அதிகரிக்கும் அழுத்தங்கள் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில் கிம்-ஜோங் உன் குறித்து டிரம்ப் இக்கருத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

அதிபர் டிரம்பின் கருத்துக்களைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், டிரம்ப் மற்றும் கிம்-ஜோங் உன் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே ஏதாவது சந்திப்பு நிகழ்வதற்கு முன்னர், வடகொரியா இது தொடர்பாக பல நிபந்தனைகளை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-39776018

Categories: merge-rss, yarl-world-news

வானில் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பில் விமானப் பயணிகள் 27 பேர் காயம்

Tue, 02/05/2017 - 05:37
வானில் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பில் விமானப் பயணிகள் 27 பேர் காயம்
flight.jpg


வானில் ஏற்பட்ட திடீர் காற்றுக் கொந்தளிப்பினால் விமானப் பயணிகள் காயமடைந்துள்ளனர். ரஸ்யாவின் மொஸ்கோவிலிருந்து தாய்லாந்தின் பாங்கொக் நகர் நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் சிலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த எவருக்கும் உயிராபத்து கிடையாது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காற்று கொந்தளிப்பினால் விமானம் ஆடத்தொடங்கியதாக பயணி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாங்கொக்கில் தரையிறக்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதெனவும் காயமடைந்தவர்களில் 24 பேர் ரஸ்யப் பிரஜைகள் எனவும், மூன்று பேர் தாய்லாந்து பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தெளிவான வானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென இந்த காற்றுக் கொந்தளிப்பு ஏற்பட்டதனால், விமான சிற்பந்திகளினால் பயணிகளுக்கு எவ்வித எச்சரிக்கையையும் விடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://globaltamilnews.net/archives/25589

Categories: merge-rss, yarl-world-news

கொரிய வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம் : காணொளி

Mon, 01/05/2017 - 22:16

கொரிய வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம் : காணொளி
-----------------------------------------------------------------
முன்கூட்டி, தாமாகவே அணுத்தாக்குதலை நடத்துவது உட்பட தமது இராணுவ வல்லமையை அதிகரித்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தொடரப்போவதாக வடகொரியா வலியுறுத்தியதை அடுத்து கொரிய வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகின்றது.

அதேவேளை, மேற்கு பசுபிக் கடலுக்கு வந்து சேர்ந்துள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு ஆதரவாக, ஜப்பான் தனது மிகப்பெரிய போர்க்கப்பலை அங்கு அனுப்பியுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இப்படியான நடவடிக்கைக்கு ஜப்பான் தனது போர்க்கப்பலை அனுப்புவது இதுவே முதற்தடவை.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

 

BBC

Categories: merge-rss, yarl-world-news

இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது

Mon, 01/05/2017 - 20:32
இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது

englan-police.jpg

இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இன்று மூவர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் பெண்கள் எனவும் அவர்களில் இருவர் 18 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் மற்றையவர் 19 வயது மதிக்கத்தக்கவர் எனவும்  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது பெண் ஒருவர் மேற்கொண்ட  துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தடுப்புக்காவலில் உள்ள குறித்த மூன்று பெண்களும் லண்டனுக்கு வெளியே உள்ள சிறைச்சாலை ஒன்றிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/25569

Categories: merge-rss, yarl-world-news

தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்! 

Mon, 01/05/2017 - 20:01
தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்! 
[Sunday 2017-04-30 09:00]
மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கி.மி தொலைவில் உள்ளது அகர் மால்வா என்ற கிராமம். இந்த கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய்யை கொட்டி அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் கொடுஞ்செயல் புரிந்துள்ளனர். இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர் தலித் மக்கள்.

மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கி.மி தொலைவில் உள்ளது அகர் மால்வா என்ற கிராமம். இந்த கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய்யை கொட்டி அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் கொடுஞ்செயல் புரிந்துள்ளனர். இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர் தலித் மக்கள்.   

கடந்த வாரம் சந்தர் மேக்வால் என்ற தலித் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். மணமகனை வரவேற்பதாக பேண்டு வாத்தியங்களை அவர் பயன்படுத்த முடிவு செய்திருந்தார். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் அந்த கிராமப்பகுதி வழக்கப்படி தலித்துகள் மேளம் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு என்றும், பேண்டு வாத்தியங்கள் உயர் சாதியினருக்கானது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். எதிர்ப்புகளை மீறி சந்தர் மேக்வால், மணமகனை வரவேற்க பேண்டு வாத்தியங்களை ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தல் காரணமாக போலீஸ் பாதுகாப்போடு திருமணம் நடத்தியிருக்கிறார். இதனால் மேலும் வெறுப்பு கொண்ட உயர் சாதியினர் அடுத்தடுத்த நாட்களில் தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் பல லிட்டர் மண்ணெண்ணெய் கொட்டியுள்ளனர். இதையறிந்த கலெக்டர் டி வி சிங் மற்றும் எஸ்பி ஆர்.எஸ்.மீனா ஆகியோர் கிணற்றை ஆய்வு செய்து, ஆதிக்க சாதி ஆட்களிடம் பேசி சமாதானப்படுத்தியது மட்டுமின்றி இரண்டு போர்வெல் போட உத்தரவிட்டிருக்கிறார்.http://www.seithy.com/breifNews.php?newsID=181460&category=IndianNews&language=tamil

Categories: merge-rss, yarl-world-news

ராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Mon, 01/05/2017 - 10:15
ராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
 
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை எப்போது முடிக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

supreme court

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது. இதையடுத்து அவர்கள் செய்த மேல் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிபிஐ தரப்பில் கேட்கப்பட்டது. சுமார் 17 வருடங்களாக தொடர்ந்து வரும் இவ்விசாரணையின் நிலை குறித்து அறிந்துக்கொள்ள பேரறிவாளன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,' இத்தனை வருடங்களாக நடைபெற்ற வரும் இவ்வழக்கு விசாரணை எப்போது முடிக்கப்படும்' என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 4 வாரங்களில் முறையான அறிக்கையை சமர்பிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. 'வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இவ்வழக்கில் தொடர்பு உள்ளதால்தான் விசாரணை தாமதமாவதாக' சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/88078-supreme-court-orders-cbi-to-submit-case-details-over-rajiv-murder.html

Categories: merge-rss, yarl-world-news