உலக நடப்பு

அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்!

3 months ago

New-Project-27.jpg?resize=750%2C375&ssl=

அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்!

கடந்த ஜூன் மாதத்தில் பல இரவுகளில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் ஸ்பானிஷ் ஃபோர்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன.

இதனால், ஆலயத்தின் கட்டிடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சந்தேகத்திற்குரிய வெறுப்பு குற்றமாக நம்பப்படுகிறது.

இரவு நேரங்களில் பக்தர்களும் மற்றவர்களும் உள்ளே இருந்ததால், கட்டிடம் மற்றும் அருகிலுள்ள சொத்துக்களை குறிவைத்து கிட்டத்தட்ட 20 முதல் 30 தோட்டாக்கள் வளாகத்தில் சுடப்பட்டன.

இது ஆயிரக்கணக்கான டொலர்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்துள்ளது மற்றும் விரைவான நடவடிக்கையை கோரியுள்ளது.

GuwRmiMWoAADi4Z?format=jpg&name=medium

GuwRmicXYAAvUuA?format=jpg&name=medium

https://athavannews.com/2025/1437836

60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!

3 months ago

New-Project-23.jpg?resize=750%2C375&ssl=

60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!

தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.

மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும்.

இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,

எனது பிரதிநிதிகள் இன்று (செவ்வாயன்று) காசா போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலியர்களுடன் நீண்ட மற்றும் பயனுள்ள சந்திப்பை நடத்தினர்.

இதன்போது 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

அந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம்.

சமாதானத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்த கட்டார் மற்றும் எகிப்தியர்கள் இந்த இறுதி திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒப்பந்தம் இல்லையென்றால் நிலமை மோசமடையும் என்றார்.

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு, ஜனவரி 19 அன்று தொடங்கிய முந்தைய போர் நிறுத்தம் மார்ச் வரை நீடித்தது.

ஹமாஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி, இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியபோது விரோதப் போக்கு மீண்டும் தொடங்கியது.

அப்போதிருந்து, பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் உயர் மட்ட விவாதங்களுக்காக வொஷிங்டனில் உள்ளார்.

அவரது நிகழ்ச்சி நிரலில் காஸா போர் நிறுத்தம், ஈரான் மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகள் அடங்கும்.

டெர்மர், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

இதற்கிடையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்ரேலிய அறிக்கைகளின்படி, 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான போராளிகள் எல்லை தாண்டிய ஒரு கொடிய தாக்குதலை நடத்தியபோது போர் வெடித்தது.

அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அப்போதிருந்து, இஸ்ரேலின் இராணுவ பதில் காசாவிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437824

பேடோங்டார்ன் ஷினாவத்ரா தாய்லாந்து பிரதமராக பதவி வகிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை

3 months ago

01 JUL, 2025 | 12:34 PM

image

தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ரா பதவி வகிப்பதற்கு அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம்  இடைக்காலதடைவிதித்துள்ளது.

கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த விடயங்கள் அம்பலமாகியதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது.

பிரதமர் நெறிமுறையை மீறினார் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் அவரை பதவியிலிருந்து இடைநீக்குவதற்கு  ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/218921

முகமது நபியை சித்தரிக்கும் கருத்தோவியத்திற்கு துருக்கியில் கடும் எதிர்ப்பு - நான்கு கருத்தோவியர்கள் கைது

3 months ago

01 JUL, 2025 | 12:53 PM

image

முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கருத்தோவியங்களிற்கு  எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய  கலைஞர்களை கைதுசெய்துள்ளனர்.

அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான  இந்த கருத்தோவியத்தில்   குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது.

turkey_cartoon_pro_11.jpg

வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷமெழுப்பினர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் சஞ்சிகையின் நடவடிக்கை குறித்து துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கருத்தோவியம் ஒரு தூண்டும் நடவடிக்கை என தெரிவித்துள்ள துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் அலி யெர்லிகயா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்னால் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

கேலிச்சித்திரம்  கருத்து சுதந்திரத்தினால் அல்லது பேச்சு சுதந்திரத்தினால் பாதுகாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218918

யு.எஸ்.எயிட். நிறுவனத்தின் இறுதி நாள் நேற்று : டிரம்பின் நடவடிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதிகள் கடும் விமர்சனம்

3 months ago

01 JUL, 2025 | 12:56 PM

image

யு.எஸ்.எயிட். நிறுவனம் நேற்றுடன் தனது நீண்டவரலாற்றை முடித்துக்கொண்டுள்ள அதேவேளை அந்த நிறுவனத்தை  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூடியதை முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஆறு தசாப்த காலமாக மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பாக செயற்பட்ட யுஎஸ்எயிட்டின் இறுதி நாள் நேற்றாகும்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்கென்னடி வெளிநாடுகளில் செழிப்பையும் நல்லெண்ணத்தையும் அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அமைதியான வழிமுறையாக இந்த அமைப்பை உருவாக்கியிருந்தார்.

யுஎஸ்எயிட்டினை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்கியுள்ளதாக இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த அமைப்பின் இறுதிநாளான நேற்று அதன் பணியாளர்கள் உணர்ச்சிகரமான பிரியாவிடை வீடியோவொன்றை வெளியிட்டனர்.

அதன் பின்னர் வீடியோ கொன்பரன்ஸ் முறை மூலம் இரு முன்னாள் ஜனாதிபதிகளும் யுஎஸ்எயிட் சமூகத்தினருடன் உரையாடினர்.

உங்கள் பணி மிகவும் முக்கியமானது  எதிர்கால தலைமுறைக்கும் அது மிகவும் முக்கியமானதாக விளங்கும் என பராக் ஒபாமா யுஎஸ்எயிட் பணியாளர்களிற்கு தெரிவித்தார்.

யுஎஸ்எயிட்டினை செயல் இழக்கச்செய்வது ஒரு கேலிக்கூத்து அது ஒரு சோகம் ஏனென்றால் இது உலகில் இடம்பெறும் மிகவும் முக்கியமான பணிகளில் ஒன்றாகும் என பராக் ஒபாமா தெரிவித்தார்.

யுஎஸ்எயிட் உயிர்களை பாதுகாப்பதுடன் மாத்திரமல்லாமல் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு முக்கிய காரணியாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

யுஎஸ்எயிட்டின் திட்டங்கள் உதவி பெறும் நாடுகள் சிலவற்றை அமெரிக்காவின் பங்காளிகளாக  சந்தையாக மாற்றியுள்ளது என பராக் ஒபாமா தெரிவித்தார்.

உங்களின் தேவையை விரைவில் இரு தரப்பும் உணரும் என யுஎஸ்எயிட் பணியாளர்களிற்கு ஒபாமா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜோர்ஜ் டபில்யூ புஷ் யுஎஸ்எயிட் மூலம் தனது நிர்வாகம் முன்னெடுத்த எயிட்ஸிற்கு எதிரான திட்டங்களை நினைவுபடுத்தியதுடன் 25 மில்லியன் பேர் சர்வதேச அளவில் காப்பாற்றப்பட்டனர் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/218908

அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாலியல் துஸ்பிரயோகம் - 1200 சிறுவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்

3 months ago

01 JUL, 2025 | 04:31 PM

image

அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலைய பணியாளர் ஒருவர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக  குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து சுமார் 1200 சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறுவர்களை தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜோசுவா டேல் பிரவுன் என்ற 26 வயது நபர் 2022 முதல் 23 வரை மெல்பேர்னில் உள்ள  சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஐந்து முதல் 12 வயதுடைய 8 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சேர்ந்த சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ள போதிலும்,குறிப்பிட்ட நபர் 2017 முதல் வேறு 17 சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றியுள்ளதால் அங்கும் துஸ்பிரயோகம் இடம்பெறலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அந்த நபரின் பராமரிப்பி;ன் கீழ் இருந்தனரா என்பதை உறுதி செய்ய உதவுவதற்காகவே சந்தேகநபரின் பெயரை வெளியிட்டதாக விக்டோரியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு தங்கள் பிள்ளையை அனுப்பிய ஒவ்வொரு பெற்றோருக்கும் குறிப்பிட்ட நபர் அங்கு பணியாற்றினாரா என்பது தெரியவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/218948

ஐரோப்பிய நாடுகளுக்கு தனி ராணுவம் சாத்தியமா? - நேட்டோவின் நிலை என்னவாகும்?

3 months ago

பெட்ரோ சான்செஸ்

பட மூலாதாரம்,PIER MARCO TACCA/GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்

5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த ஆண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஐரோப்பாவில் நீடித்த அமைதி ஏற்பட ஒரு வழி இருப்பதாகக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இது ஒரு புதிய யோசனை அல்ல, ஏனென்றால் நேட்டோவின் ராணுவம் ஏற்கனவே உள்ளது, இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளல்லாத நாடுகளும் அடங்கும்.

ஆனால் ஐரோப்பாவைச் சுற்றி ஆபத்து சூழ்ந்து வரும் நிலையில், ஐரோப்பா ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனையைக் குறித்து மீண்டும் விவாதங்கள் நடைபெற தொடங்கியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய நட்பு கூட்டணியும் நம்பகமானதாக இல்லை.

இந்நிலையில், சில ஐரோப்பிய தலைவர்களும், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது அவசியம் என கருதத் தொடங்கியுள்ளனர்.

ராணுவக் கட்டுப்பாடு

அமெரிக்க வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேனில் நேட்டோ பயிற்சிகளில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்கும் யோசனை 1950 களில் இருந்து தோன்றியது என்று கூறுகிறார் நெதர்லாந்தில் உள்ள கிளிங்கெண்டேல் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் தலைவரான டிக் சாண்டி.

"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியைப் பற்றியும் கவலை இருந்தது, ஆனால் ஜெர்மனியில் ஜனநாயக அரசு நிறுவப்பட்ட பிறகு இந்தக் கவலை மறைந்துவிட்டது.

இருப்பினும், 1950 ஆம் ஆண்டு கொரியப் போர் தொடங்கிய பிறகு, சோவியத் யூனியனிடமிருந்து மிகப்பெரிய அச்சுறுத்தல் வருகிறது என்பது தெளிவாகியது. அதைச் சமாளிக்க, ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் படையை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது" என்று டிக் சாண்டி கூறுகிறார்.

இந்தக் கூட்டுப் படைக்கு 'ஐரோப்பிய பாதுகாப்புச் சமூகம்' என்று பெயரிடப்பட்டது.

லக்சம்பர்க், மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அதனை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால் பிரெஞ்சு நாடாளுமன்றம் இந்த திட்டத்தை நிராகரித்தது. பின்னர் இந்த லட்சியத் திட்டம் தோல்வியடைந்தது.

1949 இல் நேட்டோ நிறுவப்பட்டதும், இந்த திட்டத்தை பாதித்தது.

அந்தக் கூட்டணி தொடங்கப்பட்டபோது, அமெரிக்காவும் கனடாவும் அதன் முக்கிய உறுப்பு நாடுகளாக இருந்தன.

1980களில் சோவியத் யூனியனின் அச்சுறுத்தல் குறைந்திருந்தது, ஆனால் பின்னர் சூழல் மீண்டும் மாறத் தொடங்கியது .

2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்ட பிறகு, குறிப்பாக 2022 ஆம் ஆண்டு யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது என்று டிக் சாண்டி கருதுகிறார்.

1990 களில் ரஷ்யாவுடனான நட்பு தொடரும் என்று தோன்றியது.

ஆனால் தொடர்ந்து அப்படியான சூழல் நிலவவில்லை. யுக்ரேன் போர் முழு ஐரோப்பாவையும் பாதிக்கிறது.

அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதி மற்றும் ஆசியாவில் அதிக கவனம் செலுத்துகிறது என்று டிக் சாண்டி கூறுகிறார்.

அதே நேரத்தில், சீனா ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது.

எனவே, டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஐரோப்பா அதன் பாதுகாப்பை முன்பை விடவும் மிகத் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

2018 ஆம் ஆண்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் ஐரோப்பிய ராணுவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆனால் பல நாடுகளும் அதற்கு எதிராக உள்ளன.

"கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் இதற்கு எதிராக உள்ளன, ஏனெனில் இது அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து தூர விலக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். நெதர்லாந்து மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக இல்லை" என்கிறார் டிக் சாண்டி.

"இருப்பினும், அவர்கள் நிச்சயமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பை ஆதரிப்பார்கள்.

ஆனால் ஆஸ்திரியா மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதை ஆதரிக்கின்றனவா என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை.

அவர்கள் ஐரோப்பாவில் ஒரு ராணுவ அமைப்பை உருவாக்குவதை கடுமையாக எதிர்க்கலாம்."

மேலும் ஐரோப்பிய ராணுவம் எந்த வடிவத்தை எடுக்க வேண்டும் என்பது ஒருபோதும் தெளிவாகத் தெரியவில்லை என்பதையும் டிக் சாண்டி குறிப்பிடுகிறார்.

மிகப்பெரிய படை

நேட்டோ உச்சி மாநாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த வாரம், நேட்டோ உச்சி மாநாடு நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெற்றது.

அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு ராணுவ கூட்டமைப்பை உருவாக்கினால், அது அமெரிக்க ராணுவத்திற்கு சமமாகவும், ரஷ்ய ராணுவத்தை விட பெரியதாகவும் இருக்கும் என்று பாரிஸைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர் உல்ரிக் ஃபிராங்க் கருதுகிறார்.

ஆனால், "துரதிர்ஷ்டவசமாக, இது அவ்வளவு எளிதானது அல்ல. அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை சேகரித்து, தேவைக்கேற்ப அவற்றை நிலைநிறுத்துவது பல சவால்களை முன்னிறுத்துகிறது " என்று அவர் கூறுகிறார்.

ஐரோப்பாவில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தாலும், ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் மற்றும் கனரக ராணுவ உபகரணங்கள் போன்ற வளங்கள் உள்ளன.

"ஐரோப்பாவில் மூன்று அல்லது நான்கு நாடுகளில் மட்டுமே பெரிய ராணுவப் படைகள் மற்றும் கனரக ராணுவ உபகரணங்கள் உள்ளன.

இவற்றில் முக்கியமாக பிரிட்டனும் அடங்கும், ஆனால் இப்போது அது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகியவை முக்கிய ராணுவ வளங்களைக் கொண்டுள்ளன" என்று முனைவர் பிரான்கி குறிப்பிடுகிறார்.

பிரிட்டன் மற்றும் பிரான்சிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன.

ஐரோப்பா போருக்கு எந்தளவுக்கு தயாராக உள்ளது என்று முனைவர் பிராங்கியிடம் கேட்டபோது, தெளிவான பதில் இல்லை என்றும், ஆனால் ஐரோப்பாவிடம் நிச்சயமாக போதுமான ராணுவ வளங்கள் இருப்பதாகவும் கூறினார்.

"எந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடு தாக்கப்பட்டாலும், அந்த தாக்குதலின் தன்மையைப் பொறுத்து மற்ற நாடுகள் பதிலளிக்கும். பல நாடுகள் யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளன. அதே நேரத்தில், தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தேவையான அளவு ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்" என்று அவர் விளக்குகிறார்.

முனைவர் உல்ரிக் ஃபிராங்கேவின் கூற்றுப்படி, நேட்டோவிற்கு தனக்கென ஒரு நிரந்தர ராணுவம் இல்லை. அதன் ராணுவத் திறன் அதன் உறுப்பு நாடுகளின் படைகளைச் சார்ந்துள்ளது. நேட்டோ ஒப்பந்தத்தின் கீழ், ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அது முழு கூட்டணியின் மீதான தாக்குதலாகவே கருதப்படுகிறது.

"ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் பிரிவு 42.7 இன் கீழ், ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், மற்ற அனைத்து உறுப்பினர்களும் அதற்கு உதவ கடமைப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர, பல ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருதரப்பு ராணுவ ஒப்பந்தங்களும் உள்ளன" என்கிறார் முனைவர் பிரான்கி.

இருப்பினும், போர் போன்ற சூழ்நிலையில், உறுப்பு நாடுகளுக்கு இடையே உத்தி சார்ந்த ஒருங்கிணைப்பு, வீரர்களை அனுப்புதல் மற்றும் ஆகியவை பெரும்பாலும் நேட்டோவின் மூலம் நடைபெறுகின்றன.

அதனால் தான், நேட்டோ இல்லாமல் போரின் சவால்களை சமாளிப்பது கடினம் எனக் கருதப்படுகிறது.

ஐரோப்பிய ராணுவம் எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அனைத்து நாடுகளின் ராணுவங்களையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது.

மற்றொரு பரிந்துரை என்னவென்றால், ஒவ்வொரு நாடும் தங்களது சொந்த ராணுவத்தை வைத்திருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பிய ராணுவத்திற்காக ஒரு தனி படையையும் உருவாக்கலாம் என்பதாக உள்ளது.

ஆனால் இந்த யோசனையுடன் தொடர்புடைய பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

உதாரணமாக, ஐரோப்பிய ராணுவத்தை யார் வழிநடத்துவார்கள்? எந்த நாடு எவ்வளவு வளங்களை வழங்கும், எவ்வளவு செலவை ஏற்கும் என்பதை தீர்மானிப்பதும் சிக்கலானது. இது ஒரு பெரிய பிரச்னை, இதைத் தீர்ப்பது எளிதல்ல என்று முனைவர் உல்ரிக் ஃபிராங்கே கூறுகிறார்.

ராணுவ அதிகாரத்தில் சமநிலை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ.

குறைந்தபட்சம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த ஆராய்ச்சியாளரும் முன்னாள் நேட்டோ செய்தித் தொடர்பாளருமான ஓனா லுங்கெஸ்கு கருதுகிறார்.

மேலும், அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகள் விரைவில் முறிந்து விடுவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை என்று லுங்கெஸ்கு கூறுகிறார்.

"எதிர்காலத்தில் நேட்டோவில், ஐரோப்பாவின் பங்கு அமெரிக்காவை விட முக்கியமானதாக இருக்கும் வகையில் சமநிலைப்படுத்தப்படும் என்று நான் நினைக்கிறேன்.இதில், ஐரோப்பிய ராணுவமும் அதன் திறன்களும் மேம்படுத்தப்படும். மேலும், ஐரோப்பா-நேட்டோ ஒருங்கிணைப்பும் வலுப்படுத்தப்படும். இது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயனளிக்கும்" என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார்.

இருப்பினும், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் முரண்பாடு இருக்கலாம்.

கடந்த காலத்தில், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்கும் யோசனையை ரஷ்யாவின் பிரச்சார இயந்திரம் ஆதரித்தது, ஏனெனில் இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே பிளவு ஏற்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம் என்று ஓனா லுங்கெஸ்கு விளக்குகிறார்.

அவரைப் பொறுத்தவரை, உண்மை என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான ராணுவத் திறன் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. ஆனால் இதைப் பற்றி அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வியாக உள்ளது.

ஐசனோவர், நிக்சன், கென்னடி மற்றும் ஒபாமா போன்ற அமெரிக்க அதிபர்களின் காலத்தில் பல ஆண்டுகளாக, ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்புக்கு அதிகளவில் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருந்தது என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார்.

"இப்போது அதிபர் டிரம்பும் அதையே மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அமெரிக்கா ஏன் அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவரது கேள்வி நியாயமானது தான்" என்றும் லுங்கெஸ்கு கூறுகிறார்.

தொடர்ந்து பேசியபோது, ஐரோப்பிய ஒன்றியம் தனக்கென ஒரு தனி ராணுவத்தை உருவாக்கினால், அது அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளில் சில பதற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் லுங்கெஸ்கு குறிப்பிடுகிறார்.

ஆனால், போர் ஏற்பட்டால் ஐரோப்பிய ராணுவத்தால் ஐரோப்பாவைப் பாதுகாக்க முடியாவிட்டால், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது நடந்தது போல் அமெரிக்கா நிச்சயமாக அதன் உதவிக்கு வரும்.

நேட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐரோப்பா நேட்டோவிற்கு தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி வருகிறது (குறியீட்டு படம்)

இந்த ஆண்டு ஸ்பெயின் பிரதமர், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஆனால் சமீபத்தில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, தற்போது யாரும் ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது குறித்து பேசவில்லை என்பதை தெளிவுபடுத்தியதாக ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ராணுவத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், நேட்டோவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அனைத்துத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர்.

மேலும், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா உலகின் பிற பகுதிகளில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், ஐரோப்பாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஆனால் ஜூன் 2025 இல், ஐரோப்பாவில் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகளை வழிநடத்த ஒரு மூத்த அமெரிக்க ஜெனரலை நியமித்துள்ளார் அதிபர் டிரம்ப்.

1951 முதல், நேட்டோவில் ஐரோப்பிய கட்டளைக்கான பொறுப்பு ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரியிடம் இருப்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது.

இந்தப் பதவிக்கு ஒரு அமெரிக்க ஜெனரலை நியமித்திருப்பது, அமெரிக்கா நேட்டோவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதையும், ஐரோப்பாவின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்று ஓனா லுங்கெஸ்கு கருதுகிறார்.

அமெரிக்க நிர்வாகமும் நேட்டோவை வலுவாக ஆதரிக்கும் அதே நிலைப்பாட்டையே முன்னெடுக்கிறது.

ஆனால், ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் தங்கள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் நேட்டோவின் வலுவான கூட்டாளிகளாக மாற வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது.

இந்த மாதம் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டிலும் அதிபர் டிரம்ப் பங்கேற்பார். இந்த உச்சிமாநாட்டின் முக்கிய கவனம் பாதுகாப்பு முதலீடுகளில் இருக்கும்.

அடுத்த சில தசாப்தங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது ஐந்து சதவீதத்தை பாதுகாப்பு பட்ஜெட்டுக்காக செலவிட வேண்டும் என்பதை இது வலியுறுத்தும் என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார்.

"ஐரோப்பாவில் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம், ஏனெனில் தற்போது ஐரோப்பா தேவையான அளவு ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கிறது. ஆனால் இதற்கான நிதியை திரட்டுவது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

விநியோக சவால்

நேட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நேட்டோ 1949 இல் வாஷிங்டன் டிசியில் நிறுவப்பட்டது.

தற்போது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் தங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் பாதுகாப்புத் துறையில் முதலீட்டை அதிகரித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஸ்வென் பிஷப்.

பனிப்போர் முடிந்த பிறகு, மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புத் துறை தொடர்பான தங்களது செலவுகளைக் குறைத்ததாகவும், பல நாடுகளில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு சதவீதமாக மட்டுமே குறைந்துள்ளதாகவும் அவர் விளக்குகிறார்.

"ஆனால் பாதுகாப்புத் துறையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது போதாது. ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை நவீனமயமாக்குவதை இது கடினமாக்குகிறது."

ஐரோப்பாவில் போலந்து தான் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஏழு மடங்கை, பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ஒதுக்கியுள்ளது.

அதே போல், லிதுவேனியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை ஐந்து முதல் ஆறு சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடுகள் இவை என்றும், மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை உணர்கின்றன என்றும், அதனால் தான் இந்த நாடுகள் தங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை விரைவாக அதிகரித்துள்ளன என்றும் முனைவர் பிஷப் கூறுகிறார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த ராணுவப் படைகள் மற்றும் ஆயுதக் குவியல்கள் மிகப் பெரியவை, ஆனால் அமெரிக்காவை விலக்கிவிட்டால், ஐரோப்பாவிற்கு குறைவான வளங்களே மிஞ்சும்.

"உதாரணமாக, ராணுவ செயற்கைக்கோள்கள், நவீன ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் போன்ற வளங்கள் தேவை. ஆனால் தனியாக இந்த முழு செலவையும் ஏற்பது என்பது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு கடினமான விஷயம். இந்த குறைபாடுகளை எவ்வாறு ஈடுசெய்வது என்பதே மிகப்பெரிய சவால்" என்கிறார் முனைவர் பிஷப்.

கூடுதல் நிதி எவ்வாறு திரட்டப்படும்?

நேட்டோ வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நேட்டோ வீரர்கள் (மாதிரி புகைப்படம்)

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க, அரசாங்கங்கள் மற்ற துறைகளில் இருந்து பணத்தை எடுத்து, பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்று முனைவர் ஸ்வென் பிஷப் கூறுகிறார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லை என்றாலும், நேட்டோவில் உறுப்பினராகவே உள்ளது.

பாதுகாப்புக்கான செலவுகளை அதிகரிக்க அதன் வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் குறைப்பது குறித்தும் பிரிட்டன் பரிசீலித்து வருகிறது.

11 ஆண்டுகளுக்கு முன்பு, நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தன. நேட்டோவின் கூற்றுப்படி, அதன் 32 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் இந்த இலக்கை அடைந்துள்ளன.

இப்போது நேட்டோ இந்த இலக்கை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக முனைவர் பிஷப் கூறுகிறார்.

"பாதுகாப்பு செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 5% ஆக இருக்க வேண்டும். இது ஐரோப்பாவை பாதுகாப்பில் தன்னிறைவு பெற உதவும். இந்த இலக்கை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்கள் அறிவார்கள். அமெரிக்காவின் கவனம் உலகின் பிற பகுதிகளுக்கு திரும்பினால், போர் ஏற்பட்டால் ஐரோப்பா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்" என்று அவர் கூறுகிறார்.

விரைவில் ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க முடியுமா என்ற முக்கிய கேள்வியைக் குறித்து இப்போது ஆராய்ந்தால், அதற்கான பதில் இல்லையென்பதாகவே உள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை அதிகரித்திருந்தாலும், அவை அமெரிக்காவைக் கைவிடத் தயாராக இல்லை.

ஐரோப்பிய ராணுவத்திற்காக பரப்புரை செய்யும் நாடுகள், தேவையான பணத்தை திரட்ட மற்ற பகுதிகளில் செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும். அது ஐரோப்பிய ஒன்றிய சார்பு குழுக்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்.

இது வெறும் பொருளாதாரச் சுமையைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல.

ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்தும் கடுமையான அரசியல் கேள்விகள் எழும்.

ராணுவத்தின் இத்தகைய முடிவுகள் நாடுகளின் இறையாண்மையைப் பாதிக்கலாம்.

ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளிடையேயும் முழுமையான ஒற்றுமை தேவைப்படுகிறது.

தற்போது, நடைமுறைக்கு மாறான யோசனையாக உள்ள இதனைக் குறித்து, ஐரோப்பிய நாடுகளிடையே ஆழமான வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz7ll33zx99o

ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு!

3 months ago

New-Project-1-9.jpg?resize=600%2C300&ssl

ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு!

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அவர் தலையிடுவதாக இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவில் காஸா அகதி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 5பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் காஸாவின் வடபகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் இராணுவம் அறிவித்ததையடுத்து பலஸ்தீனர்கள் வெளியேறிவருகின்றனர்.

 https://athavannews.com/2025/1437647

வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூர வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?

3 months ago

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார்.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 29 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

"போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்."

'உறுமி' எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது.

அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல வேண்டும் என்பதே நாயகன் கேழுவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். அதற்காகவே அவர் பல சிரமங்களைச் சந்திப்பார், ஒரு புரட்சிப் படையைத் திரட்டுவார், போர்த்துகீசிய படைகளுக்கு எதிரான சண்டையில் தன் உயிர் நண்பனைப் பறிகொடுப்பார். இருப்பினும், தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இறுதியில் உயிரிழப்பார்.

வாஸ்கோடகாமா என்ற போர்த்துகீசியரை கொல்லத் துடித்த 'சிரக்கல் கேழு' ஒரு புனைவுக் கதாபாத்திரம்தான். ஆனால் பிரித்விராஜ் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரமும், 'உறுமி' திரைப்படமும் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் சில மலையாள திரைப்படங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் என கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார்.

வாஸ்கோடகாமா, 1497ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்து அந்நாட்டு மன்னரின் ஆதரவுடன் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். பல மாதங்கள் நீடித்த கடல் பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர் எனும் பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, ஐரோப்பிய வரலாற்றில் ஒரு 'ஹீரோவாக' கொண்டாடப்படுகிறார்.

நமது பாடப் புத்தகங்களில்கூட, வாஸ்கோடகாமாவின் வணிக நோக்கிலான இந்திய பயணங்கள் குறித்தும், அவரது வர்த்தக/மாலுமி முகம் குறித்துமே அதிகம் உள்ளது.

இந்தியாவை அடைய வேண்டுமென்ற ஐரோப்பாவின் கனவு

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கோழிக்கோடு சமோரின் (ராஜா) சந்திப்பை சித்தரிக்கும் ஓவியம்

"இந்தியாவோடு நேரடி ஐரோப்பிய தொடர்பைத் தொடங்கும் அதிர்ஷ்டம் பெற்ற இந்த வாஸ்கோடகாமா, வலிமையான உடலமைப்பும், முரட்டுத்தனமான மனப்பான்மையும் கொண்டவர். கல்வியறிவு இல்லாதவர், கொடூரமானவர், வன்முறையாளர் என்றாலும், அவர் விசுவாசமானவர், அச்சமற்றவர். இந்திய பயணத்திற்கு தலைமை தாங்க, அவருக்கு உத்தரவிடப்பட்டது. இத்தகைய பணியை ஒரு மென்மையான தலைவரால் நிறைவேற்ற முடியாது."

இவ்வாறு வாஸ்கோடகாமா குறித்து தனது 'தி கிரேட் டிஸ்கவரீஸ்' எனும் நூலில் குறிப்பிடுகிறார் அமெரிக்க வரலாற்று ஆசிரியரான சார்லஸ் இ. நோவெல்.

ஜனவரி 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். இந்தியாவை முதலில் அடைவது யார் என்ற போட்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் பல நூற்றாண்டுகளாகவே நடைபெற்று வந்தது. சிறிய நாடான போர்ச்சுகலும் தன்னால் முடிந்த அனைத்தையும் முயன்று வந்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே இந்தியாவை அடைந்த அரேபியர்களும், பாரசீகர்களும் இங்கு தங்களது வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குறிப்பாக தென்னிந்திய பகுதியான மலபாரில் (கேரளா) இஸ்லாமிய வணிகர்களிடம் இருந்தே ஐரோப்பாவுக்கு மசாலா பொருட்கள் கிடைத்தன.

"போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பு, குஜராத், மலபார் மற்றும் செங்கடலில் உள்ள துறைமுகங்கள் உள்பட இந்திய பெருங்கடல் வர்த்தகத்தில் இஸ்லாமிய கடல் வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்" என்று 'தி முகல் எம்பயர்' நூலில் ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார்.

"1492இல் கொலம்பஸ் அமெரிக்காவில் கால்பதித்தார். தான் மரணிக்கும் நாள் வரை, தான் கண்டுபிடித்தது ஆசியாவின் ஒரு பகுதியைத்தான் என்றும், அதற்கு அருகில்தான் இந்தியா உள்ளது என்றும் உறுதியாக நம்பினார். அதனால் அவர் கால் பதித்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'இந்தியர்கள்' என்று அழைத்தார்" என ஜார்ஜ் எம். டோலி தனது 'தி வாயேஜஸ் அண்ட் அட்வெஞ்சர்ஸ் ஆஃப் வாஸ்கோடகாமா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அளவுக்கு, 'இந்தியாவை' அடைவதில் ஐரோப்பியர்கள் முனைப்பாக இருந்தனர். அதற்குக் காரணம், இந்தியா குறித்து ஐரோப்பாவில் பரவியிருந்த பிம்பம். தங்கம், வைரம், ரத்தினங்கள், மிளகு போன்ற விலை உயர்ந்த மசாலா பொருட்கள் மற்றும் பலதரப்பட்ட பொக்கிஷங்கள் நிறைந்த ஓர் இடமாக ஆசியாவும், குறிப்பாக இந்தியாவும் கருதப்பட்டது.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார்.

வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் மேனுவல்' நூலில், "1497இல் புறப்பட்ட வாஸ்கோடகாமாவின் கடற்படையில் சாவ் ரஃபேல், சாவ் கேப்ரியல், சாவ் மிகுவல் எனப்படும் மூன்று கப்பல்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது அவர் மிகச் சிறிய படையுடனே வந்தார். எத்தனை பேர் என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் காணப்பட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாகிறது- அவரது கப்பலில் குற்றவாளிகளும் இருந்தார்கள்.

'எம் நோம் டி டியூஸ்: தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா 1497–1499' என்ற நூல், வாஸ்கோவின் கடற்படையில் நாடு கடத்தப்பட்ட பத்து குற்றவாளிகளும் இருந்தனர் எனக் கூறுகிறது.

அவர்களது பாவங்கள் போர்ச்சுகல் மன்னரால் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பயணத்திற்கு உதவியாக இருக்கட்டும் என அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இதற்கு மற்றொரு காரணத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அதாவது, "ஆபத்தான கடற்பயணம் எனும்போது, போர்ச்சுகல் சிறைகளில் தண்டனை பெற்று வீணாக மடிவதைவிட, வாஸ்கோவுக்கு உதவியாக இருந்து கடற்பயணத்தில் உயிரிழப்பது சிறந்தது என மன்னர் கருதியிருக்கலாம்."

இந்தக் குற்றவாளிகளில் முக்கியமானவர், ஜோ அவோ நுனெஸ் எனும் ஒரு 'புதிய கிறிஸ்தவர்', அதாவது சமீபத்தில் மதம் மாறிய யூதர். அவர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை ஓரளவு அறிந்திருந்தார்.

'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' நூலின்படி, "ஜோ அவோ நுனெஸ்- புத்திக்கூர்மை உடைய மனிதர், அவரால் மூர்கள் (இஸ்லாமியர்களை குறிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்) பேசிய மொழியைப் புரிந்து கொள்ள முடியும்."

இந்தியாவில் முதலில் கால் வைத்த ஐரோப்பியர் ஒரு குற்றவாளியா?

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் பயணங்களை விளக்கும் வரைபடம். புள்ளியிடப்பட்ட கோடு 1497இல் இந்தியாவுக்கான முதல் பயணத்தைக் குறிக்கிறது.

வாஸ்கோவின் படை மே 20, 1498, கேரளாவை அடைந்தபோது, கரையில் இருந்து சிறிது தூரத்தில், கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன.

வாஸ்கோடகாமாவின் குழு, இந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காப்பாடு எனும் கிராமத்தைத்தான் அடைந்தது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், உண்மையில் அவர் முதலில் சென்றது கொல்லம் மாவட்டத்திற்கு அருகே இருந்த பந்தலாயணி பகுதிக்குத்தான் என சமீபத்தில் மறைந்த இந்திய வரலாற்று ஆசிரியரும், கல்வியாளருமான எம்.ஜி.எஸ். நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

மலபார் கரையில் இருந்து நான்கு சிறு படகுகள், வாஸ்கோவின் கப்பல்களை அடைந்து, அதில் இருந்தவர்கள் குறித்து விசாரித்தனர். குறிப்பாக, "வாஸ்கோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

உண்மையில் முதலில் இந்தியாவில் கால் வைத்த ஒரு ஐரோப்பியர் வாஸ்கோ அல்ல, அது ஒரு 'குற்றவாளியாக' இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், "கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்திய பிறகு, அரபு மற்றும் ஹீப்ரு மொழி பேசக்கூடிய ஒருவரை, மலபார் படகுகளுடன் கரைக்கு வாஸ்கோ அனுப்பி வைத்தார்" என 'வாஸ்கோடகாமா அண்ட் தி ஸீ ரூட் டூ இந்தியா' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப் பார்த்தால், மலபார் கரையை அடைந்த முதல் ஐரோப்பியர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை அறிந்த, 'புதிய கிறிஸ்தவரான' ஜோ அவோ நுனெஸாக இருக்கலாம். ஆனால், இதை உறுதி செய்யப் போதுமான ஆவணங்கள் இல்லை.

ஏமாற்றத்தில் முடிந்த முதல் இந்திய பயணம்

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் சாவ் கேப்ரியல் கப்பல் (சித்தரிப்பு ஓவியம்)

அவ்வாறு கேரளாவில் கால் பதித்த அந்த மொழிபெயர்ப்பாளர், உள்ளூரில் வசித்த இரு அரேபியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் வாஸ்கோவின் மொழிபெயர்ப்பாளரை எதிரியாகவே பார்த்தார்கள்.

"சாத்தான் உன்னைக் கொண்டு போகட்டும்" எனக் கத்தினார்கள். பிறகு, "ஏன் இங்கு வந்தீர்கள்?" எனக் கேட்ட போது, அதற்கு வாஸ்கோவின் ஆள், "நாங்கள் கிறிஸ்தவர்களையும் மசாலா பொருட்களையும் தேடி வந்தோம்" என்ற பதில் கூறியுள்ளார்.

இப்படித்தான், இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியருக்கும், ஏற்கெனவே இங்கு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அரேபியர்களுக்கும் இடையிலான உரையாடல் இருந்தது எனப் பல வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு வாஸ்கோடகாமா, சில நபர்களை மட்டும் அழைத்துக் கொண்டு, பிறரை கப்பல்களிலேயே எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்திவிட்டு, மலபார் கரையில் கால் பதித்தார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால், வாஸ்கோவின் முதல் இந்திய பயணம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் சமோரினுக்காக (கோழிக்கோட்டின் இந்து மன்னரைக் குறிக்க போர்த்துகீசியர்கள் பயன்படுத்திய சொல்) கொண்டு சென்ற பரிசுகள் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டன.

மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரபு முஸ்லிம்கள், போர்த்துகீசியர்களின் வருகையை எதிர்த்தனர்.

"மிளகு வர்த்தகத்தில் போர்த்துகீசியர்கள் ஏகபோக உரிமையை நாடியபோது, அது இஸ்லாமியர்களால் கையாளப்பட்டதால் சமோரின் அதை மறுத்தார். பின்னர் போர்த்துகீசியர்கள் கொச்சி ராஜ்ஜியத்தை அணுகி, வணிகம் செய்ய அங்கு கடை அமைத்தனர். பின்னர், விஜயநகர பேரரசுக்கு அருகில் இருந்ததால் அவர்கள் கோவாவுக்கு மாறினர்" என்று வரலாற்று ஆசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

கடந்த 1499ஆம் ஆண்டில், சிறு அளவிலான மசாலா பொருட்களுடன் ஐரோப்பா திரும்பிய வாஸ்கோடகாமாவுக்கு, போர்ச்சுகல் நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

"முதல் இந்திய பயணத்திற்குப் பிறகு வாஸ்கோடகாமாவின் கடற்படையால் கொண்டு வரப்பட்ட மசாலா பொருட்கள் மிகப்பெரிய லாபத்திற்கு விற்கப்பட்டன, இது பயணத்தின் செலவைவிடப் பல மடங்கு அதிக லாபம்" எனத் தனது 'ஆசியா அண்ட் வெஸ்டர்ன் டாமினன்ஸ்' எனும் நூலில் கே.எம். பணிக்கர் எழுதியுள்ளார்.

இந்தியாவின் வளத்தை போர்த்துகீசியர்கள் புரிந்துகொண்ட தருணம் அது.

வாஸ்கோவின் இரண்டாவது பயணம்

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் கப்பலில் கோழிக்கோடு வணிகர்கள் சிறை பிடிக்கப்படுவதைச் சித்தரிக்கும் ஓவியம்

இந்தியாவுக்கான வாஸ்கோடகாமாவின் முதல் பயணம் (1497–1499) ஐரோப்பா, இந்தியா இடையிலான கடல் வழிப்பாதையை அறிமுகப்படுத்தியது. ஆனால் கேரளாவின் கோழிக்கோடு அரசுடன் ஒரு வலுவான வணிக ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறிவிட்டது.

இந்திய பெருங்கடலில் மசாலா வர்த்தகத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திய அரபு இஸ்லாமிய வணிகர்களால் போர்த்துகீசியர்கள் அவமதிக்கப்பட்டனர் மற்றும் புறக்கணிக்கப்பட்டனர்.

"வாஸ்கோவின் பார்வையில், கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் வணிகர்கள் வெறும் பொருளாதாரப் போட்டியாளர்கள் மட்டுமல்ல, மத மற்றும் கலாசார எதிரிகளும்கூட. சமோரின் அரசவையில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு, போர்த்துகீசிய லட்சியங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டது" என 'தி கரியர் அண்ட் லெஜெண்ட் ஆஃப் வாஸ்கோடகாமா' எனும் நூலில் வரலாற்று ஆசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, போர்த்துகீசிய அரசு இரண்டாவது இந்திய பயணத்தை ஏற்பாடு செய்தது. இந்த முறை நோக்கம் தெளிவாக இருந்தது. அது. "இந்தியாவில் போர்த்துகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, முந்தைய பின்னடைவுகளுக்குப் பழிவாங்குவது மற்றும் மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெறுவது."

இருபது போர்க் கப்பல்கள் மற்றும் சுமார் 1,500 பேர் கொண்ட ஒரு கடற்படையுடன் பிப்ரவரி 1502இல் வாஸ்கோடகாமா லிஸ்பனை விட்டுப் புறப்பட்டார். அந்தக் கடற்படை, பீரங்கிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருந்தது, போருக்குத் தயாராகவும் இருந்தது.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'மெக்கா கப்பல்களை' வாஸ்கோவின் கடற்படையினர் தாக்குவதைச் சித்தரிக்கும் ஓவியம்.

அதே ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, கேரளாவின் கண்ணூர் கடற்பகுதியை வாஸ்கோவின் படை அடைந்தது. அதன் பிறகு நடந்தவற்றை வாஸ்கோவின் கடற்படையில் இருந்த ஒருவர், 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' எனும் நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார்.

"அங்கே நாங்கள் மெக்காவின் கப்பல்களைப் பார்த்தோம். அவை நம் நாட்டிற்கு (போர்ச்சுகல்) வரும் மசாலா பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள். இனி போர்ச்சுகல் மன்னர் மட்டுமே நேரடியாக இந்தியாவில் இருந்து மசாலா பொருட்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அந்தக் கப்பல்களைக் கொள்ளையடித்தோம்."

"அதன் பிறகு, 380 ஆண்கள், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த ஒரு மெக்கா கப்பலை நாங்கள் சிறைபிடித்தோம். அதிலிருந்து குறைந்தது 12,000 டுகட்கள் (டுகட்- தங்க நாணயம்) மற்றும் விலை உயர்ந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்தோம். அக்டோபர் முதல் நாளில் கப்பலையும் அதில் இருந்த அனைவரையும் எரித்தோம்."

இங்கு குறிப்பிடப்படும் 'மெக்கா கப்பல்' என்பது 'மெரி' (Meri) என்ற ஒரு பெரிய கப்பல். இது கோழிக்கோடு பகுதியில் வசித்த கோஜா காசிம் எனும் செல்வந்தரின் சகோதரருக்கு சொந்தமான கப்பல் என வரலாற்று ஆசிரியர் கே.எம். பணிக்கர் குறிப்பிடுகிறார்.

வாஸ்கோவின் படையிடம் சிக்கியபோது, 'ஹஜ் புனித யாத்திரைக்காக' பயணித்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான யாத்ரீகர்கள் மெரி கப்பலில் நிரம்பியிருந்தனர். அத்துடன் வர்த்தகத்திற்கான மதிப்புமிக்க பொருட்களும் கப்பலில் இருந்தன.

"வாஸ்கோ கப்பலை எரிக்க உத்தரவிட்டார். பெண்கள் தங்கள் குழந்தைகளை புகையின் நடுவே தூக்கிப் பிடித்து, கருணைக்காக மன்றாடினர். போர்த்துகீசியர்கள் தங்கள் கப்பல்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் வலியால் அழுதுகொண்டே இறந்தனர்."

"ஒருவர்கூட தப்பிக்கவில்லை. இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் அழுகை கடல் முழுவதும் எதிரொலித்தது. அப்போது வாஸ்கோ அசையாமல் நின்றிருந்தார்" என லெண்டாஸ் டி இந்தியா (Lendas da Índia) எனும் நூலில் காஸ்பர் கோஹியா குறிப்பிடுகிறார்.

வாஸ்கோடகாமா தலைமையிலான படை செய்த இந்தச் சம்பவம் சில போர்த்துகீசிய சம காலத்தவர்களைக்கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாஸ்கோடகாமா கேரள வரலாற்றில் ஒரு வில்லனாக நினைவுகூறப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் இந்தச் சம்பவம் மாறியது.

'பிரித்தாளும் சூழ்ச்சி'

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கண்ணூர் ராஜா சந்திப்பைச் சித்தரிக்கும் ஓவியம்

அப்போது கேரளா பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்ததும், போர்த்துகீசியர்களின் ஆதிக்கம் ஓங்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது. உதாரணத்திற்கு, மெரி கப்பல் சம்பவத்திற்குப் பிறகு, வாஸ்கோவின் படையினர் கண்ணூர் ராஜாவால் வரவேற்கப்பட்டனர் என 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' குறிப்பிடுகிறது.

"அக்டோபர் 20ஆம் தேதி நாங்கள் கண்ணூர் நாட்டிற்குச் சென்றோம். அங்கு அனைத்து வகையான மசாலா பொருட்களையும் வாங்கினோம். ராஜா மிகவும் ஆடம்பரமாக வந்தார், அவருடன் இரண்டு யானைகளையும், பல விசித்திரமான விலங்குகளையும் கொண்டு வந்தார்."

அதைத் தொடர்ந்து, கோழிக்கோடு சென்ற வாஸ்கோவின் படையினர், அதன் ராஜா சமோரினிடம், நகரத்தில் இருந்து அனைத்து முஸ்லிம் வணிகர்களையும் வெளியேற்றி, போர்த்துகீசிய வர்த்தக ஏகபோகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரினர்.

ஆனால் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த சமோரின் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனால் கோழிக்கோடு நகரத்தை வாஸ்கோ தாக்கினார்.

"நாங்கள் எங்கள் படைகளை நகரத்திற்கு முன்பாகத் திரட்டி, அவர்களுடன் மூன்று நாட்கள் சண்டையிட்டோம். ஏராளமான மக்களைப் பிடித்து, அவர்களைக் கப்பல்களின் முற்றங்களில் தொங்கவிட்டோம். அவர்களை வீழ்த்தி, அவர்களின் கைகள், கால்கள் மற்றும் தலைகளை வெட்டினோம்." (தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா)

இப்படிச் சிறிது சிறிதாக வன்முறை நடவடிக்கைகள் மூலமும், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் பிற கேரள ராஜாக்களுடன் இணைந்தும் தங்களது ஆதிக்கத்தை போர்த்துகீசியர்கள் கேரளாவில் வலுவாக்கினர்.

"இது பிராந்திய போட்டிகளைப் பயன்படுத்தி போர்ச்சுகலின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி" என 'தி போர்ச்சுகீஸ் ஸீபார்ன் எம்பயர்' நூலில் குறிப்பிடுகிறார் சார்லஸ் ஆர். பாக்ஸர்.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1524ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா, இந்தியாவின் போர்த்துகீசிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

கேரளாவில் 1998ஆம் ஆண்டு, அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, வாஸ்கோடகாமா மலபார் பகுதிக்கு வந்து, 500 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அது 'சர்வதேச சுற்றுலா நிகழ்வாக' கொண்டாடப்படும் என அறிவித்தது. இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

'வாஸ்கோவின் பயணமும் செயல்களும் இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் தொடக்கத்திற்கு வழிவகுத்தன. எனவே அதைக் கொண்டாடுவது சரியான செயல் அல்ல' என்று விமர்சிக்கப்பட்டது.

ஐரோப்பாவின் காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு வாஸ்கோடகாமா ஒரு கருவியாகச் செயல்பட்டார் எனக் கூறலாம். போர்த்துகீசிய முடியாட்சியின் ஆசியோடு இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, 1524ஆம் ஆண்டு மூன்றாவது முறை கேரளாவுக்கு வந்தபோது 'போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் வைஸ்ராய்' என்ற பதவியுடன் வந்தார்.

கொச்சியை வந்தடைந்த அவர், பின்னர் நோய்வாய்ப்பட்டு 1524 டிசம்பர் 24 அன்று இறந்தார். பிறகு 1539ஆம் ஆண்டில், அவரது உடல் எச்சங்கள் போர்ச்சுகலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx24083d4wlo

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு!

3 months ago

thumbs_b_c_64983d41a775d38dc862d7efcf528

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு!

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (28) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

காஸா நகரை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை செலுத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 81பேர் உயிரிழந்துள்ளதுடன் 422 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும், அவசரகால குழுக்களால் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1437497

அணுசக்தி மையங்களில் ஆய்வுக்கு அனுமதி மறுக்கும் இரான் - அமெரிக்காவின் கோபத்தால் நிகழப்போவது என்ன?

3 months 1 week ago

அமெரிக்கா, இரான், இஸ்ரேல், முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (இடது), இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (வலது)

8 மணி நேரங்களுக்கு முன்னர்

இரான் மற்றும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு முகமையான ஐஏஇஏ இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி இரானுக்கு வருவதற்கான சாத்தியக்கூற்றை நம்பிக்கையின்மை, பதற்றத்தை காரணம் காட்டி இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதற்காக இரான் அரசு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அரக்சி தெளிவுபடுத்தினார்.

மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் இருக்கும் கோபத்தை பார்த்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அதை கண்டித்ததுடன், ஐஏஇஏவின் பணிகளை வெளிப்படையாக ஆதரித்துள்ளார்.

ஐஏஇஏவுக்கு எதிரான இரானின் கடுமையான நிலைப்பாடு, அதன் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்வினையாக பார்க்கப்படுகிறது. இது அணுசக்தி திட்டங்களை கண்காணிப்பதை மேலும் சிக்கலானதாக மாற்றக்கூடும்.

அமெரிக்கா, இரான், இஸ்ரேல், முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES/REUTERS

படக்குறிப்பு, அமெரிக்கா தாக்குதல் நடத்திய ஃபோர்டோ மலை

க்ரோஸி வருகைக்கு மறுப்பு தெரிவித்த இரான்

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஜூன் 24ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், அப்பாஸ் அரக்சியை சந்தித்து ஐஏஇஏ-இரான் இடையேயான பேச்சுவார்த்தையை நடத்த ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி முன்வந்தார்.

ஆனால்,"இன்றைய சூழலில் ரஃபேல் க்ரோஸியை அழைக்கும் எண்ணம் துளியும் இல்லை," என இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அரசு தொலைக்காட்சி சேனல் ஐஆர்ஐஎன்என்னுக்கு ஜூன் 26ஆம் தேதி அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

"அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய அவர் விரும்புகிறார்," என அவர் தெரிவித்தார்.

ஐஏஇஏ தலைவரின் அண்மைக் கால நடவடிக்கைகள், குறிப்பாக இரானுக்கு எதிராக ஐஏஇஏ ஆளுநர்கள் குழு தீர்மானம் நிறைவேற்ற காரணமான அறிக்கை போன்றவையே தற்போதைய முட்டுக்கட்டைக்கு முக்கியமான காரணம் என அரக்சி குற்றம்சாட்டினார்.

"க்ரோஸி தனது அறிக்கையில் நேர்மையாக செயல்படவில்லை. எங்களது அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டபோது, முகமையால் அந்த தாக்குதலை கண்டிக்கக்கூட முடியவில்லை," என்று அரக்சி கூறினார்.

ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்துவதற்கு இரான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருப்பதாகவும் அரக்சி தெரிவித்தார். "இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது, பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்து, தற்போது நாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாகியிருக்கிறது," என அரக்சி கூறுகிறார்.

இந்தச் சட்டம் ஒத்துழைப்புக்கான கதவை முழுமையாக மூடவில்லை என்றும் எதிர்காலத்தில் இது இரானின் உச்ச பாதுகாப்பு அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முடிவின் அடிப்படையில் அமையும் என அவர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்கா, இரான், இஸ்ரேல், முக்கிய செய்திகள்,  அணுசக்தி திட்டங்கள்,

பட மூலாதாரம்,ASKIN KIYAGAN/ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி

அமெரிக்காவின் வலுவான பதிலடி

மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் எழுப்பப்படும் குரல்களுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

"ஐஏஇஏ இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸியை கைது செய்து மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என இரானில் எழுந்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல, கண்டிக்கத்தக்கது. இரானில் ஐஏஇஏவின் முக்கியமான விசாரணைகளையும், கண்காணிப்பு பணிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இயக்குநர் ஜெனரல் மற்றும் ஐஏஇஏவின் கடுமையான உழைப்பையும் தொழில்முறை அணுகுமுறையையும் பாராட்டுகிறோம். ஐஏஇஏ ஊழியர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யவேண்டும் என இரானை வலியுறுத்துகிறோம்," என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, எக்ஸ் தள பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

இரானின் 2015ஆம் ஆண்டு ஜேசிபிஒஏ அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒரு அங்கமாக இருந்த பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளையும் அரக்சி கடுமையாக எச்சரித்தார். இந்த ஒப்பந்தம் தற்போது கிட்டத்தட்ட செயல்பாட்டில் இல்லை.

'ஸ்நாப்பேக் மெக்கானிசம்' என சொல்லப்படும் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டாம் என அவர்களுக்கு கூறினார். "அந்த தூண்டும் நடைமுறையை பயன்படுத்துவது அவர்களின் மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக இருக்கும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம் இரானின் அணுசக்தி விவகாரத்தில் அவர்களின் பங்கை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என அவர்களிடம் தெளிவாக கூறினேன்," என அராக்சி தெரிவித்தார்.

ஸ்நாப்ஃபேக் மெக்கானிசம் என்பது ஒரு விதிமுறையாகும். இதன்படி அணு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை இரான் மீறியதாக கருதப்பட்டால், 2015-க்கு முன்பு இருந்த ஐக்கிய நாடுகளின் கடுமையான தடைகள் தானாகவே மீண்டும் அமலுக்கு வரும்.

ஐஏஇஏவின் வரலாறு மற்றும் இரானில் அதன் பங்கு

சர்வதேச அணுசக்தி முகமை(International Atomic Energy Agency - IAEA) என்பது ஐக்கிய நாடுகளின் ஒரு அமைப்பாகும். இது உலகளவில் "அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அணுக்கள்" (Atoms for Peace and Development) என்றும் அறியப்படுகிறது.

இது அணுசக்தி துறையில் பன்னாட்டு ஒத்துழைப்பின் மையமாக விளங்குகிறது, இதன் உறுப்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கூட்டாளிகளுடன் இணைந்து அணு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக, நம்பகமாக, மற்றும் அமைதியான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

ஐஏஇஏ 1957 ஜூலை 29 அன்று நிறுவப்பட்டது. இந்தியாவும் அப்போதிலிருந்து இதன் உறுப்பினராக உள்ளது. அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் 1953 டிசம்பர் 8 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய "அமைதிக்கான அணுக்கள்" (Atoms for Peace) உரையில் இந்த அமைப்புக்கான கரு உருவானது.

வடகொரியா 1974 இல் இதன் உறுப்பினராக இணைந்தது, ஆனால் 1994-இல் விலகியது. தற்போது ஐஏஇஏ-வில் 180 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இரானின் அணுசக்தி திட்டத்தை ஐஏஇஏ கடந்த இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வருகிறது.

2015 இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், பொருளாதார தடைகளிலிருந்து விலக்கு பெறுவதற்காக யுரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்தவும், பன்னாட்டு ஆய்வுகளை அதிகரிக்கவும் இரான் ஒப்புக்கொண்டது,

ஆனால் 2018-ல் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி புதிய தடைகளை விதித்த பின்னர், இரான் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதை குறைத்துக்கொண்டது. அது யுரேனியம் செறிவூட்டல் அளவை அதிகரித்ததுடன், ஐஏஇஏ ஆய்வுகளை பல இடங்களில் குறைத்ததுடன், சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் அணைத்துவிட்டது.

இரான் தனது முக்கிய அணுசக்தி மையங்களுக்கு அனுமதி மறுத்ததன் மூலம் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (Non-Proliferation Treaty) மீறியதாக குற்றம்சாட்டி ஜூன் 12 அன்று, ஐஏஇஏ ஆளுநர்கள் குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

முன் அறிவிக்கப்படாத இடங்களில் யுரேனியம் கண்டெடுக்கப்பட்டது குறித்து முகமைக்கு போதுமான பதில்கள் அளிக்கப்படவில்லை.

இந்த தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என இரான் தெரிவித்தது. இதற்கு ஒருநாள் கழித்து இஸ்ரேல் இரானின் பல அணுசக்தி நிலைகளின் மீது தாக்குதலை தொடங்கியது, இதனால் ஏற்கனவே இருந்த பதற்றம் மேலும் அதிகரித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgn94k11y7o

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

3 months 1 week ago

4 கி.மீ, கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

28 ஜூன் 2025

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய சுற்றுலா மண்டலத்திற்கான விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அவரது மனைவி, மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டுவந்த ஒரு மைல்கல் திட்டம் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடற்கரை ரிசார்ட் ஆறு ஆண்டுகள் தாமதமாக வரும் ஜூலை 1 ஆம் தேதி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

4 கி.மீ கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய இந்த ரிசார்ட்டில் 20,000 பார்வையாளர்கள் வரை தங்க முடியும் என அரசு ஊடகம் KCNA கூறுகிறது. இதில் ஹோட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் ஒரு வாட்டர் பார்க் உள்ளது. இதை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

தனது அணு ஆயுத திட்டங்களால் கடுமையான பொருளாதார தடைகளைச் சந்தித்துள்ள வட கொரியா உலகின் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது வடகொரியா வருவாய் ஈட்டுவதற்கான சுலபமான வழி என சிலர் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd6g2ylz2ywo

பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து

3 months 1 week ago

பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து

29 JUN, 2025 | 10:48 AM

image

பிரிட்டனின் கிளாஸ்டன்பரியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ராப் பாடகர் பொப் வைலான் மற்றும் அயர்லாந்தின் ராப் குழுவான நீகப் ஆகியோர்  இஸ்ரேலிய படையினருக்கு மரணம் என மேடையில் கருத்து தெரிவித்தமை குறித்து ஆராய்ந்துவருவதாக சமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிபிசியில் நேரடியாக ஒலிபரப்பான இசைநிகழ்ச்சியில் பொப்வைலான் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என தெரிவித்தமை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ராப் இசைகலைஞர் பொப்வைலான் சுதந்திரம் சுதந்திர பாலஸ்தீனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோசமிட்டுள்ளார்.

சில கருத்துக்கள் "ஆழ்ந்த புண்படுத்தும் வகையில்" இருப்பதாக பிபிசி செய்தித் தொடர்பாளர் மேலும் "மிகவும் வலுவான மற்றும் பாரபட்சமான மொழி" குறித்து திரையில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தொகுப்பு பிபிசி ஐபிளேயரில் மீண்டும் பார்க்க கிடைக்காதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய தூதரகம் "ஆழ்ந்த எரிச்சலூட்டும் மற்றும் வெறுப்பூட்டும் சொல்லாட்சிகளால் மிகவும் வருத்தமடைந்ததாக" பதிவிட்டுள்ளது.: "கிளாஸ்டன்பரி விழா அதன் கலைஞர்களிடமிருந்து வெறுப்பூட்டும் பேச்சு அல்லது வன்முறையைத் தூண்டுவதை மன்னிக்காது."என குறிப்பிட்டுள்ளது.

பாப் வைலனின் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கலாச்சாரச் செயலாளர் லிசா நந்தி பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் அவசர விளக்கம் கோருவதாகக் கூறினார்.

பிபிசி ஐபிளேயரில் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யாத முடிவை வரவேற்பதாக அரசாங்கம் மேலும் கூறியது பாப் வைலன் மற்றும் நீகேப்பின் தொகுப்புகளைத் தொடர்ந்து வெஸ்ட் ஹோல்ட்ஸ் மேடையில் செயல்களால் கூறப்பட்ட கருத்துகளின் காட்சிகளை மதிப்பாய்வு செய்வதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

"குற்றவியல் விசாரணை தேவைப்படும் ஏதேனும் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாமா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகளால் காட்சிகள் மதிப்பிடப்படும்" என்று  காவல்துறை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/218740

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் - சான்செஷின் ஆடம்பர திருமணம் 12 படங்களில்!

3 months 1 week ago

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,INSTAGRAM/REUTERS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரென் சான்செஷின் ஆடம்பரத் திருமணம் வெள்ளிக்கிழமையன்று வெனிஸில் நடந்தது.

இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள திரைப் பிரபலங்கள், நடிகர்கள், அரசு விருந்துனர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வெனிஸிற்குப் பயணப்பட்டுள்ளனர்.

ஓப்ரா வின்ஃப்ரே, ஒர்லாண்டோ ப்ளூம், கைலி ஜென்னர் மற்றும் இவான்கோ டிரம்ப் ஆகியோர் வியாழன் மற்றும் வெள்ளியன்று வெனிஸின் தெருக்களிலும் படகுகளிலும் காணப்பட்ட பிரபலங்களில் ஒரு சிலர் ஆவர்.

இந்த நிகழ்வுக்கு எதிராக சுற்றுலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள் தொடங்கி காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்கள் வரை பல தரப்பிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு, 55 வயதான் சான்செஷ் ஆடம்பரமான நகைகள் மற்றும் ஆடைகளை அணிந்து 61 வயதான பெசோஸுக்கு அருகில் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

சான் கியோர்கியா என்கிற சிறு தீவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அங்கு இத்தாலிய பாடகர் ஆண்டியா போசெலியின் மகன் மேட்டியோ போசெலி நிகழ்ச்சி நடத்தினார். இந்த திருமணத்தின் துல்லியமான செலவு எவ்வளவு எனத் தெரியவில்லை என்றாலும் சில மதிப்பீடுகள் 20 மில்லியன் டாலரிலிருந்து 50 மில்லியன் டாலர் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஓப்ரா வின்ஃப்ரே

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிம் கர்தேஷியன்

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேண்டால் ஜென்னர், கைலி ஜென்னர்

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறிய மோட்டார் படகில் கையசைக்கும் ஜெஃப் பெசோஸ்

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நடிகர் ஓர்லாண்டோ ப்ளூம்

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜெஃப் பெசோஸ் வருவதைக் கண்டு ஆர்ப்பரித்த சுற்றுலாப் பயணிகள்

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப்

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வெனிஸில் நடைபெற்ற போராட்டம்

அமேசான், ஜெஃப் பெசோஸ் திருமணம், வெனிஸ்

https://www.bbc.com/tamil/articles/cwyr6y7626ko

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளங்கள் வேறு எந்த நாடுகளில் உள்ளன?

3 months 1 week ago

ஈரான் கத்தாரில் அமெரிக்காவின் அல் உதெய்த் விமானத்தளத்தை இலக்குவைத்தது - அந்த தளம் ஏன் முக்கியமானது - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளங்கள் வேறு எந்த நாடுகளில் உள்ளன?

Published By: RAJEEBAN

24 JUN, 2025 | 12:12 PM

image

cbs news

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது. ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கத்தார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

al_udeid.jpg

இந்த தாக்குதலை "மிகவும் பலவீனமான பதில்" என்று ஜனாதிபதி டிரம்ப் வர்ணித்தார். அதை அமெரிக்கா எதிர்பார்த்தது மற்றும் "மிகவும் திறம்பட எதிர்கொண்டது" என்று அவர் ஒரு சமூக ஊடக இடுகைகளில் கூறினார். மேலும் "எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காகவும், இதனால் யாரும்  கொல்லப்படாமலும் யாரும் காயமடையாமலும் இருந்ததற்காக" ஈரானுக்கு நன்றி தெரிவித்தார்.

வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவியது. 

அல் உதெய்த் தளம் மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு அது வகிக்கும் பங்கு பற்றி இங்கே மேலும் ஆராயலாம்.

மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளம்

al_udeid_main.jpg

அல் உதெய்த் விமானத் தளம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் சமீபத்திய தளமாகும். இது தோஹாவின் தென்மேற்கே பாலைவனத்தில் அமைந்துள்ளது. இது 1996 இல் நிறுவப்பட்டது மற்றும் CENTCOM என்றும் அழைக்கப்படும் அமெரிக்க மத்திய கட்டளையின் முன்னோக்கி தலைமையகமாக செயல்படுகிறது. இது மேற்கில் எகிப்திலிருந்து கிழக்கில் கஜகஸ்தான் வரை நீண்டுள்ள ஒரு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை வழிநடத்துகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா சுமார் 40000 இராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. கத்தாரில் உள்ள இந்த தளத்தில் தற்போது ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் உள்ளனர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் உச்சத்தில் இருந்தபோது அங்கு சுமார் 10000 பேர் இருந்தனர்.

மே மாதம் ஜனாதிபதி டிரம்ப் அல் உதெய்திற்கு விஜயம் செய்தார்.

trump_al_ude222.jpg

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் போது அமெரிக்க இராணுவ சொத்துக்களுக்கு அல் உதெய்த் ஒரு முக்கிய தளமாக இருந்தது. மே மாதத்தில் திரு. டிரம்பின் வருகையை அது வரவேற்றது. அவர் துருப்புக்களிடம் "மோதல்களைத் தொடங்குவது அல்ல அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதே எனது முன்னுரிமை" என்று கூறினார்.

"ஆனால் அமெரிக்காவையோ அல்லது எங்கள் கூட்டாளிகளையோ பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க சக்தியைப் பயன்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்". . "நாங்கள் அச்சுறுத்தப்படும்போது அமெரிக்காவின் இராணுவம் அதைப் பற்றி யோசிக்காமலேயே நமது எதிரிகளுக்கு பதிலளிக்கும். எங்களிடம் அபரிமிதமான பலமும் பேரழிவு தரும் சக்தியும் உள்ளது."

மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க இராணுவ தளங்கள்

us_mill_mid.jpg

கத்தாரைத் தவிர அமெரிக்க இராணுவம் பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளில் தளங்கள் மற்றும் பிற நிறுவல்களைக் கொண்டுள்ளது

பஹ்ரைன்

baharain.jpg

பாரசீக வளைகுடா செங்கடல் அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை உள்ளடக்கிய அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படையின் தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது. 

1948 ஆம் ஆண்டு முதல் இந்த தளத்தை அமெரிக்க கடற்படை பயன்படுத்தி வருகிறது. அப்போது இந்த  தளம்பிரிட்டனின்  கடற்படையால் இயக்கப்பட்டது. பஹ்ரைனில் சுமார் 9000 அமெரிக்க இராணுவ வீரர்கள் உள்ளனர்.

குவைத்

kuwait_ali_al.jpg

குவைத்தில் பல அமெரிக்க இராணுவ நிறுவல்கள் உள்ளன: காம்ப் அரிஃப்ஜன் தளம் அலி அல் சேலம் விமான தளம் மற்றும் காம்ப் புஹ்ரிங். காம்ப் அரிஃப்ஜன் என்பது அமெரிக்க இராணுவ மையத்தின் முன்னோக்கிய தலைமையகம் ஆகும். தனிமைப்படுத்தப்பட்ட கரடுமுரடான சூழலுக்காக "தி ராக்" என்று அழைக்கப்படும் அலி அல் சேலம் ஈராக் எல்லையிலிருந்து சுமார் 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது. 

ஈராக் போருக்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டு  புஹ்ரிங் நிறுவப்பட்டது மேலும் அமெரிக்க இராணுவ வலைத்தளத்தின்படி ஈராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்படும் அமெரிக்க இராணுவப் பிரிவுகளின் ஒரு நிலைப் புள்ளியாகும். குவைத்தில் சுமார் 13000 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன

அபுதாபி

ஐக்கிய அரபு இராச்சியத்தின்  தலைநகர் அபுதாபியின் தெற்கே அமைந்துள்ள அல் தஃப்ரா விமானத் தளத்தைக் கொண்டுள்ளது. இது பிராந்தியத்தில் முக்கிய முக்கிய நடவடிக்கைகளிற்கு ஆதரவை ஆதரித்து வரும் ஒரு முக்கியமான அமெரிக்க விமானப்படை மையமாகும். இது ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில்சுமார் 3000 அமெரிக்க படையினர் உள்ளனர்.

ஈராக்

iraq_base_1.jpg

ஈராக்கில் உள்ள ஐன் அல் அசாத் விமானப்படை தளத்தில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  ஈராக்கிய இராணுவத்தினருக்கும் நேட்டாவின் நடவடிக்கைக்கும் இவர்கள் தங்கள் ஆதரவை வழங்குகின்றனர்.வடக்கு ஈராக்கின் அரை தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் அமைந்துள்ள எர்பில் விமானப்படைத் தளம் பயிற்சிப் பயிற்சிகள் மற்றும் போர் பயிற்சிகளை நடத்தும் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகளுக்கான மையமாக செயல்படுகிறது. ஈராக்கில் சுமார் 2500 அமெரிக்க துருப்புக்கள் .உள்ளனர்.

சவூதி அரேபியாவில் சுமார் 2700 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள னர்.அவர்களில் பெரும்பாலோர் ரியாத்தின் தெற்கே அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தில் உள்ளனர்.

ஜோர்தான்

ஜோர்தானின் முவாஃபாக் அல் சால்டி விமானப்படைத் தளத்தில்  அமெரிக்க விமானப்படை மையத்தின் 323வது விமானப் பயணப் பிரிவை நிலைகொண்டுள்ளது.அம்மானுக்கு வடகிழக்கே சுமார் 60 மைல் (100 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அஸ்ராக்கில் அமைந்துள்ள இந்த தளத்தில் சுமார் 3800 துருப்புக்கள் உள்ளன. சிரிய எல்லைக்கு அருகிலுள்ள டவர் 22 தளம் உட்பட பல சிறிய அமெரிக்க தளங்களும்இங்கு உள்ளன அங்கு கடந்த ஆண்டு  ட்ரோன் தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர் இதற்கு ஈரான் ஆதரவு குழுக்களே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிரான சர்வதேச முயற்சிகளின் ஒரு பகுதியாக   சிரியாவும் அமெரிக்க துருப்புக்களைக் கொண்டுள்ளது. சிரியாவில் சுமார் இ000 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வேறு எந்த தளங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் திங்களன்று  சிபிஎஸ் செய்திக்குத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/218304

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்

3 months 1 week ago

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்

June 28, 2025 1:01 pm

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதென நம்புவதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதை தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,

“இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.

தொடர்புடைய சிலரிடம் நான் கலந்துரையாடியுள்ளேன்.அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.

எவ்வாறாயினும் போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் குறித்து ட்ரம்ப் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் பணயக்கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

https://oruvan.com/ceasefire-between-israel-and-hamas-within-a-week-trump/

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்!

3 months 1 week ago

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்!

trump-2-780x470.jpeg

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த நாட்டிற்கான புதிய கட்டண விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கு வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூறி அந்நாட்டை ட்ரம்ப் சீண்டியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க தொழிநுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது.

இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=330637

இஸ்ரேலுடனான மோதலை தொடர்ந்து ஈரானில் தொடர்ச்சியான கைதுகள் மரணதண்டனைகள் - மொசாட்டிற்கு உதவியவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர்.

3 months 1 week ago

27 JUN, 2025 | 01:32 PM

image

bbc

இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர்.

முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன.

மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என  ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும்  இலக்குவைத்து கொல்லப்பட்டனர். ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் முகவர்களின் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என  ஈரான் கருதுகின்றது.

இந்த கொலைகளின் துல்லியத்தன்மை மற்றும் அளவு காரணமாக அதிர்ச்சியடைந்துள்ள ஈரான் அதிகாரிகள் வெளிநாட்டு புலனாய்வாளர்களுடன் தொடர்புடையவர்கள்  என சந்தேகிக்கப்படுபவர்களை இலக்குவைக்கின்றனர். நாட்டின் பாதூகாப்பிற்காக இந்த நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் மக்கள் தொகை  கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும் ஒரு வழியாகும் என்று பலர் அஞ்சுகின்றனர்.

12 நாள் மோதலின் போது இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்தனர். போர் நிறுத்தத்திற்கு ஒரு நாள் கழித்து புதன்கிழமை இதே போன்ற குற்றச்சாட்டில் மேலும் மூன்று நபர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

இதையடுத்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் உளவு பார்த்ததாக பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இஸ்ரேலிய உளவுத்துறையுடன் ஒத்துழைத்ததாக கூறப்படும் பல கைதிகளிடமிருந்து வரும் வாக்குமூலங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

மனித உரிமைகள் குழுக்களும் ஆர்வலர்களும் சமீபத்திய  சம்பவங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஈரானின் நீண்டகால நடைமுறையான கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுதல் மற்றும் நியாயமற்ற விசாரணைகளை நடத்துதல் ஆகியவற்றை மேற்கோள் காட்டி. அதைத் தொடர்ந்து மேலும் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என்ற கவலைகள் காணப்படுகின்றன.

ஈரானின் புலனாய்வு அமைச்சகம் மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை வலையமைப்புகள் - CIA மொசாட் மற்றும் MI6 எதிராக "இடைவிடாத போராட்டத்தில்" ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜூன் 13 அன்று ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி "இஸ்ரேலிய உளவு வலையமைப்பு நாட்டிற்குள் மிகவும் தீவிரமாகிவிட்டது". 12 நாட்களில் ஈரானிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் "இந்த வலையமைப்புடன் தொடர்புடைய 700 க்கும் மேற்பட்ட நபர்களை" கைது செய்ததாக ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்பான சமூக ஊடகப் பக்கங்களில் தங்கள் தொலைபேசி எண்கள் தோன்றியதாக ஈரானியர்கள் பிபிசி பாரசீகத்திடம் தெரிவித்தனர். இந்தப் பக்கங்களை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிபிசி பாரசீகம் லண்டனை தளமாகக் கொண்ட ஈரான் இன்டர்நேஷனல் மற்றும் மனோட்டோ டிவி உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பாரசீக மொழி ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மீது ஈரானிய அரசாங்கம் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/218621

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு!

3 months 1 week ago

WSMVYXIJLZNDPCTCHTJLKCLL7I-scaled.jpg?re

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று  தீப்பிடித்து எரிந்ததில்   29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்தப் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான இறுதித் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடினர்.

இதனை தொடர்ந்து பாடசாலை கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

https://athavannews.com/2025/1437379

எரிமலையில் விழுந்த பெண் – உயிருடன் இருப்பது தெரிந்தும் காப்பாற்ற முடியாதது ஏன்?

3 months 1 week ago

இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ்.

பட மூலாதாரம்,FAMILY HANDOUT

படக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ்.

கட்டுரை தகவல்

  • ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன்

  • பிபிசி செய்திகள்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய அவர், சனிக்கிழமையன்று உதவிக்காக அலறிய சத்தம் கேட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அடுத்த நாட்களில், கடுமையான நிலப்பரப்பாலும் மூடுபனி வானிலையின் காரணமாகவும், 26 வயதான அவரைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சிக்கலான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையன்று மீட்புக் குழு அவரது உடலை கண்டடைந்ததாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

"மிகுந்த சோகத்துடன், அவர் உயிர் பிழைக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று மரின்ஸின் குடும்பத்தினர் கூறினர்.

"நீங்கள் எங்களுக்காக செய்த அனைத்து பிரார்த்தனைகளுக்கும், அன்பும் ஆதரவும் மிக்க செய்திகளுக்காகவும் நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்"என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தோனீசியாவின் லோம்போக் தீவுக்கு வருவதற்கு முன்பு தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்குப் பயணம் செய்திருந்தார் மரின்ஸ்.

சனிக்கிழமை (உள்ளூர் நேரப்படி 06:30 மணி) ஐந்து நண்பர்கள் மற்றும் ஒரு வழிகாட்டியுடன் இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, "எரிமலையின் பள்ளத்திற்கு அருகிலுள்ள பாதையைச் சுற்றியுள்ள பாறையிலிருந்து" மரின்ஸ் தவறி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலப்பரப்பு வழுக்கும் தன்மையுடனும், ஏறுவதற்கு "மிகவும் கடினமாகவும்", சுற்றியுள்ள பகுதியைப் பார்ப்பதற்கு சிரமமாகவும் இருந்தது என்று அந்தக் குழுவில் பயணித்த ஒருவர் பிரேசிலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மலையேறுபவர்களால் படம்பிடிக்கப்பட்ட டிரோன் காட்சிகள் மற்றும் பிற வீடியோக்கள் இணையதளத்தில் பரவி, பிரேசிலிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றில், சனிக்கிழமையன்று மரின்ஸ் கவலையுடன் காணப்பட்டாலும் உயிருடன் இருந்ததும், சாம்பல் நிற மண்ணில் உட்கார்ந்து நகர்ந்து கொண்டிருந்ததும் காணப்படுகிறது. அவர் இருந்த இடம் மலையேற்றப் பாதைக்குக் கீழே அமைந்திருந்தது.

ஆனால் மீட்புப் பணியாளர்கள் 300 மீ (984 அடி) கீழே இறங்கிய போது, மரின்ஸ் இருப்பதாக நம்பிய இடத்திற்கு அருகே அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரை அழைத்தபோதும் மரின்ஸ் பதிலளிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் அந்த இடத்தில் இல்லை என்பதை டிரோன் காட்சிகள் சுட்டிக்காட்டின.

எனவே மீட்பு பணிகள் கடுமையான மூடுபனியால் பாதிக்கப்பட்டதாகவும், வெப்பமான இடங்களில் பயன்படுத்தப்படும் டிரோனின் பயன்பாட்டைக் குறைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமையன்று, மீட்புப் பணியாளர்களால் மரின்ஸைக் மீண்டும் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவர் முன்பு இருந்த இடத்தில் இருந்து இன்னும் கீழே விழுந்து விட்டதாகத் தோன்றியது.

ஆனால், 'பருவ நிலை'யின் காரணமாக மீட்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலை (கோப்புப்படம்)

அவரைத் தேடுவதற்கான மீட்புப் பணிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியபின், மீட்புப் பணியாளர்கள் ஒரு பள்ளத்தாக்கில் 600 மீட்டர் கீழே இறங்கி, இறுதியாக அவரது உடலை அடைந்ததாக இந்தோனீசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவரது உடலை மீட்க முடியவில்லை.

3,726 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இருப்பினும், கடந்த மாதம் ஒரு மலேசிய சுற்றுலாப் பயணி உட்பட, சமீபத்திய ஆண்டுகளில் அதில் ஏற முயன்ற பலர் இறந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மரின்ஸ் விழுந்த பிறகு அந்தப் பாதை இன்னும் மூடப்படாதது குறித்து குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c994pn53xzeo

Checked
Mon, 10/06/2025 - 23:05
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe