உலக நடப்பு

புனித நீரூற்றை பாதுகாக்க அதானி குழுமத்திற்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய பழங்குடிகள்

2 months 2 weeks ago

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது.

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்து

கட்டுரை தகவல்

  • மோனிகா கார்ன்சி & பிபிசி ஐ புலனாய்வுப் பிரிவு‎

  • 17 ஜூலை 2025

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தின் தளத்தை இந்தச் சுடர் குறிக்கிறது. உள்ளூர்ப் பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதிக்கும், நாட்டின் சர்ச்சைக்குரிய சுரங்கத் திட்டங்களில் ஒன்றான கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மோதலின் மையமாக இந்தப் போராட்டம் அமைந்துள்ளது.

உள்ளூரில் பிராவஸ் என்ற பெயரில் இயங்கும் இந்தியாவின் அதானி குழுமத்திற்குச் சொந்தமான இந்தச் சுரங்கம் சாலையின் மறுபுறம் தான் அமைந்துள்ளது. இது வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் பாரம்பரிய நிலத்தில் அமைந்துள்ளது.

ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது மகன் கோடி மெக்காவோய், பிராவஸ் சுரங்க நிறுவனத்திற்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அவர்கள் இதை ஓர் ஆன்மீக நிலைப்பாடாகவும், கலாசாரத்தைப் பாதுகாக்கும் போராட்டமாகவும் கருதுகின்றனர்.

"என் நிலத்தில் ஒரு சுரங்கம் என் நாட்டை அழிக்க முயல்கிறது. அந்த நாடுதான் என் வரலாற்றையும், நான் யார் என்பதையும், என் மூதாதையர்கள் பற்றிய அறிவையும் தெரிந்துகொள்ளும் பாதை" என்று கூறுகிறார் ஏட்ரியன்.

இவர்களுடைய போராட்டத்தின் மையத்தில் தூங்கமபுல்லா நீரூற்றுகள் உள்ளன. இது வானவில் பாம்பு முண்டகுட்டாவால் உருவாக்கப்பட்ட புனித இடம் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள் நம்புகின்றனர். பழங்குடிக் கதைகளில் நீர், நிலம் மற்றும் படைப்புடன் தொடர்புடைய சக்தி வாய்ந்த மூதாதையர் என முண்டகுட்டா கருதப்படுகிறார்.

ஹைட்ரோகார்பன் தடயங்கள்

தூங்கமபுல்லா நீரூற்றுகள், வறண்ட நிலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு பெரிய நிலத்தடி நீர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை கலிலி படுகையின் மேல் அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருப்புகளில் ஒன்றுதான் கலிலி படுகை. இது 247,000 சதுர கி.மீ. பரப்பளவில், 30 பில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரியைக் கொண்டுள்ளது.

மெல்போர்னில் உள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி நீர்ப் புவியியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் மேத்யூ குர்ரெல் உள்பட சில விஞ்ஞானிகள், இந்த இடம் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பாதிக்கப்படக் கூடியது என்று கூறுகின்றனர்.

"நாங்கள் சில விஷயங்களை கவனித்தோம். அவ்வப்போது அந்த ஊற்று நீரில் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டன" என்று பல ஆண்டுகளாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து வரும் கல்வியாளர் குர்ரெல் கூறுகிறார்.

"சுரங்கம் தொடங்கிய பிறகுதான் ஹைட்ரோகார்பன்கள் அதிகமாகிவிட்டன என்றால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இது சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்தால், ஊற்று நீரின் தரம் உடனடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதற்கான எச்சரிக்கை இது."

மேலும், "சுரங்கத்தால் ஏற்படும் தாக்கம், அனுமதி அளிக்கப்பட்டபோது கணிக்கப்பட்டதைவிட அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகளை நாங்கள் காண்கிறோம். இதனால், அந்த அனுமதியை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும்," என்று அவர் வலியுறுத்துகிறார்.

சுரங்க நடவடிக்கைகள், நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன

படக்குறிப்பு, நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

பேராசிரியர் மேத்யூ குர்ரெல் மற்றும் டாக்டர் ஆங்கஸ் கேம்ப்பெல் இணைந்து எழுதி, 2024இல் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு, அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் மாதிரியாக்கம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

பிராவஸ் இந்தக் கண்டுபிடிப்புகளை நிராகரித்து, ஆய்வின் ஆசிரியர்களில் சிலர் நிலக்கரிக்கு எதிராகப் பிரசாரம் செய்பவர்கள் என்று குற்றம் சாட்டியது. ஆனால், அந்த ஆய்வின் ஆசிரியர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

கார்மைக்கேல் சுரங்கம் நிலத்தடி நீரில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அதானியின் பகுப்பாய்வை, ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை (CSIRO) 2023இல் மதிப்பாய்வு செய்தது. இந்த மதிப்பாய்வு, நடந்து கொண்டிருக்கும் ஒரு நீதிமன்ற வழக்கில் ஆராயப்படும் ஆதாரங்களின் ஒரு பகுதியாக உள்ளது. அதானி குழுமத்தின் மாதிரிகள், நீரூற்றுகளில் சுரங்கத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு "ஏற்றவை அல்ல" என்று அந்த மதிப்பாய்வு முடிவுகள் கூறுகின்றன.

கடந்த 2023இல், அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் கண்காணிப்புத் தரவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, தூங்கமபுல்லா நீரூற்றுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, அரசு அவர்களின் நிலத்தடி சுரங்கத் திட்டத்தைத் தடை செய்தது.

இந்தத் தடையை எதிர்த்து அதானி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. சுற்றுச்சூழல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தரநிலைகளை முழுமையாகப் பின்பற்றியதாகவும் அந்நிறுவனம் வலியுறுத்துகிறது.

"நாங்கள் நிலத்தடி நீர் விதிமுறைகளை மீறவில்லை. தற்போது செய்யும் அல்லது எதிர்காலத்தில் செய்ய அனுமதிக்கப்பட்ட சுரங்க நடவடிக்கைகளால் தூங்கமபுல்லா நீரூற்றுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று பிராவஸ் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"நீரூற்றுகளின் கலாசார, சுற்றுச்சூழல் மதிப்புகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் ஆண்ட்ரூ பவல் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிளவுபட்ட சமூகம்

அட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது மகன் கோடி மெக்காவோய்

படக்குறிப்பு, ஏட்ரியன் பர்ரகுப்பா, அவரது மகன் கோடி மெக்காவோய் ஆகியோர் சுரங்கம் தங்கள் புனித நீராதாரத்தை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர்.

கார்மைக்கேல் சுரங்கத்திற்கு ஒப்புதல் அளித்த அரசாங்கத்தின் முடிவு, ஆஸ்திரேலியாவை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இரு துருவங்களாகப் பிரித்துள்ளது.

ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தச் சுரங்கம் தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித நீர் ஆதாரங்களை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். பழங்குடி ஆஸ்திரேலியர்கள் தங்கள் மூதாதையர் தாயகத்தை "நாடு" என்று அழைக்கின்றனர். ஆனால், இந்தச் சுரங்கம், தங்கள் உரிமைகளையும், கலாசாரத்தையும், நிலத்துடனான தொடர்பையும் புறக்கணிப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

கடந்த 2007இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்த ஐ.நா. பிரகடனம், "சுரங்கம் போன்ற நில உரிமைகளைப் பாதிக்கும் திட்டங்களுக்கு முன், சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலைப் பெற வேண்டும்" என்று கூறுகிறது. இது சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படவில்லை என்றாலும், மாநிலங்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான உறவில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான ஒரு கட்டமைப்பாக உள்ளது.

கார்மைக்கேல் சுரங்கம், காலநிலை விவாதத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடக்கின்றன. அதே நேரம், உள்ளூர் சுரங்க சமூகங்கள் இதற்கு வலுவான ஆதரவு அளிக்கின்றன. குயின்ஸ்லாந்து அரசு, இந்தத் திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் போன்ற காரணங்களால் அனுமதி வழங்கியது.

ஆஸ்திரேலியா, உலகின் முன்னணி நிலக்கரி உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. கார்மைக்கேல் சுரங்கம், ஆசிய-பசிபிக் பகுதிக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது. இந்தப் பகுதியில் நிலக்கரிக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல பொருளாதாரங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்கின்றன.

சுரங்கத் தொழிலாளர்கள் பலர் வசிக்கும் நகரத்தில் 486 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக பிராவஸ் கூறுகிறது. ஆனால் மோசமான பணிச்சூழல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பத்திரிகையாளர் கிம் நுயென், கார்மைக்கேல் சுரங்கம் தொடர்பான செய்திகளைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். "பாதுகாப்பற்ற தூசி அளவுகளுக்கு மத்தியில் நீண்டகாலமாக இருக்கிறோம், தரமற்ற உள்கட்டமைப்பில் வேலை செய்ய வற்புறுத்தப்படுகிறோம், எங்களுக்கு உள்ள கவலைகளைக் கூறும்போது, அச்சத்துடனேயே பணியிடச் சூழலை எதிர்கொள்கிறோம்" என்று அவரிடம் பேசிய சுரங்கத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

கலிலி படுகைக்கு மேலே தூங்மாபுல்லா நீரூற்றுகள் அமைந்துள்ளன.

படக்குறிப்பு, உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருப்புகளில் ஒன்றான கலிலி படுகைக்கு மேலே தூங்மாபுல்லா நீரூற்றுகள் அமைந்துள்ளன.

குயின்ஸ்லாந்தின் சுரங்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், 2019 முதல் 2024 வரை 875 பக்கங்கள் மதிப்புள்ள கடுமையான விபத்து அறிக்கைகளை உறுதிப்படுத்தியது. ஆனால், சுரங்கத்தில் நிகழும் சம்பவங்களின் விகிதம் "தொழில்துறை சராசரிகளுடன் ஒத்துப் போவதாகக்" கூறியது.

"எங்களிடம் பூஜ்ஜிய இறப்பு சாதனை உள்ளது. நாங்கள் உயர்வான தரநிலைகளைப் பராமரிக்கிறோம், அனைத்து சட்டங்களையும் கடைபிடிக்கிறோம். மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைக் குறிப்பிடாமலோ அல்லது நேரிலோ குறைகளை எழுப்ப ஊக்குவிக்கிறோம். அவை உடனடியாகத் தீர்க்கப்படுகின்றன" என்று பிராவஸ் பதிலளித்தது.

மாநில அரசு, பழங்குடி மக்களின் ஒப்புதல் இல்லாமல் சுரங்கத்தை அங்கீகரிப்பதாக அறிவித்த பிறகு, 12 வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குடும்பங்களில் ஏழு குழுக்கள், சமூக நிதிக்கு ஈடாக அதானியுடன் நில ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

"இது குடும்பங்களைப் பிளவு செய்துவிட்டது. நிலம் அழிக்கப்படுவது பற்றி மிகவும் வேதனையாக உணர்கிறேன். ஆனால், நாங்கள் சுரங்கத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் எப்படியும் செயல்படுத்தியிருப்பார்கள். அதிலிருந்து எங்களால் என்ன பெற்றுக்கொள்ள முடிந்ததோ அதை பெற்றுக்கொண்டோம்" என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குழுவைச் சேர்ந்த ஜாக்கி ப்ரோடெரிக் எனும் பெண் கூறுகிறார்.

சிலர் இந்த நில ஒப்பந்தம் மிக உயர்ந்த விலை கொடுத்து வந்ததாக நம்புகின்றனர். "இந்த நாட்டில் சுரங்கம்தான் கடவுள். ஒரே ஒரு சுரங்கம் ஒரு முழு நாட்டையும் பிரித்துவிட்டது" என்கிறார் கோடி மெக்காவோய்.

"புதைபடிவ எரிபொருள் எதிர்ப்பு இயக்கத்தில் ஏட்ரியன் பர்ரகுப்பாவும் அவரது கூட்டாளிகளும் பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தை இழிவுபடுத்தவும், குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் எங்கள் கார்மைக்கேல் சுரங்கத்தை நிறுத்தவும் முயன்றனர்" என்று ஓர் அறிக்கையில் பிராவஸ் கூறியது.

நில உரிமை கோரிக்கை

வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் "தண்ணீரில் இருந்து வருவதாகவும்" அதை அடிப்படை ஆதாரமாகக் கருதுவதாகவும் கூறுகிறார்கள்.

கடந்த 1915இல், குயின்ஸ்லாந்தின் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம், பழங்குடி மக்களை அவர்களின் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதித்தது. வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்கள், 1,000 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு அனுப்பப்பட்டனர். குடும்பங்கள் பிரிக்கப்பட்டு, பழங்குடி கலாசாரத்தைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டது.

நிலத்துடனான நீடித்த தொடர்பை நிரூபித்தால், பழங்குடி மக்களுக்கு வரையறுக்கப்பட்ட நில உரிமைகளை 1993இல், பூர்வீக உரிமைச் சட்டம் வழங்கியது. இதில் சுரங்கத் திட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையும் அடங்கும்.

கடந்த 2004இல், வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் பூர்வீக உரிமைக்கான கோரிக்கையைப் பதிவு செய்தனர். இதன் மூலம், அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை பெற்றனர். அதானி குழுமம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சலுகைகளை வழங்கியது. ஆனால், 2012 மற்றும் 2014இல் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, அதானி குழுமம் பழங்குடி ஒப்புதல் இல்லாமல், பூர்வீக உரிமை தீர்ப்பாயத்தின் மூலம் ஒப்புதல் கோரியது.

கடந்த 2021ஆம் ஆண்டு, 17 வருட நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு, வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) சமூகத்தின் பூர்வீக உரிமை கோரிக்கையை ஒரு நீதிபதி நிராகரித்தார். அந்தத் தீர்ப்பால், அவர்கள் எதிர்கால சுரங்க வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளில் கலந்துகொள்வதற்கும், சுரங்கத் திட்டங்கள் தங்கள் நிலத்தைப் பாதிக்கும்போது இழப்பீடு பெறுவதற்குமான உரிமையை இழந்தனர். அதற்குக் காரணம், அவர்கள் நிலத்துடன் போதுமான தொடர்பு இருப்பதை சட்டரீதியாக நிரூபிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது.

"ஒரு நீதிபதி இறுதியில், அந்தப் பகுதியில் பூர்வீக உரிமை இல்லை என்று தீர்மானித்தார். இப்போது, அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் 'சிறப்பு அனுமதி' கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்று குயின்ஸ்லாந்து தெற்கு பூர்வீக உரிமை சேவையின் தலைவர் டிம் விஷார்ட் கூறினார்.

"இந்தக் கட்டமைப்பு நியாயமானது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் தற்போது எங்களிடம் இருப்பது இதுதான்" என்றும் அவர் கூறுகிறார்.

தொடரும் சட்டப் போராட்டம்

அட்ரியனும் அவரது குடும்பத்தினரும் தளர்ந்துவிடவில்லை.

படக்குறிப்பு,திவாலானபோதும், நீதிமன்ற இழப்புகள் மற்றும் சொந்த சமூகத்திலேயே பிளவுகள் ஏற்பட்டபோதும், ஏட்ரியனும் அவரது குடும்பத்தினரும் தளர்ந்துவிடவில்லை.

ஏட்ரியன் பர்ரகுப்பா, குயின்ஸ்லாந்து உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை மறு ஆய்வு வழக்கைத் தொடர்கிறார். கார்மைக்கேல் சுரங்கம், தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித தலத்தை அச்சுறுத்துவதன் மூலம் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் மனித உரிமைகளை மீறுவதாக அவர் வாதிடுகிறார்.

இந்த வழக்கு, குயின்ஸ்லாந்து மனித உரிமைச் சட்டத்தின் பிரிவு 28ஐ அடிப்படையாகக் கொண்டது. இது பழங்குடி மக்களின் கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கும், நிலம் மற்றும் நீருடனான தொடர்பைப் பேணுவதற்குமான உரிமையைப் பாதுகாக்கிறது.

இதுவொரு முன்னுதாரண வழக்காக இருக்கும் என்று ஏட்ரியன் மற்றும் கோடியின் வழக்கறிஞர் அலிசன் ரோஸ் கூறுகிறார். "கலாசாரத்தையும் நாட்டையும் பாதுகாக்க விரும்பும் பிற பூர்வீக மக்களால் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான வழக்காக இது அமையும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இது அரசுக்கு எதிராக ஏட்ரியன் தொடுக்கும் நான்காவது வழக்கு. இதில் (இலவச) வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி இவர் போராடுகிறார். முன்னதாக, ஒரு நீதிமன்ற வழக்கை எதிர்த்துப் போராடியதில், 680,000 டாலர் செலவானதன் காரணமாக பயங்கர நஷ்டத்தைச் சந்தித்தார்.

ஆனால் திவாலான போதும், நீதிமன்ற இழப்புகளைச் சந்தித்தபோதும், சமூகப் பிளவுகள் இருந்தபோதும், ஏட்ரியனும், அவரது மகன் கோடியும், அவர்களது குடும்பமும் மனம் தளரவில்லை.

"நாங்கள் தண்ணீரில் இருந்து வருகிறோம். தண்ணீர் இல்லாமல், நாம் அனைவரும் இறந்துவிடுவோம். நிலம் இல்லாமல், எங்களுக்கு எதுவுமே இல்லை" என்கிறார் ஏட்ரியன்.

இந்த மனித உரிமை வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தைக் கோரியுள்ளது அரசு. அதன் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnvm97q6d5go

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி

2 months 2 weeks ago

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி

Published By: RAJEEBAN

18 JUL, 2025 | 08:02 AM

image

முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தேவாலயத்தின் பணியாளர் ஒருவரும் தேவாலயத்தின் வளாகத்தில் உள்ள கரித்தாஸ் கூடாரத்தில் உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரும் அவருடன் இருந்த மற்றுமொரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனல்ஸ் தெரிவித்துள்ளது.

250717-gaza-church-attack-mb-1123-5bc231

உயிர்தப்புவதை நோக்கமாக கொண்டு தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனலின் செயலாளர் நாயகம் அலிஸ்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

இவர்களின் மரணம் முற்றுகையின் கீழ் பொதுமக்கள் மருத்துவஉதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் ஏற்பட்ட இழப்புகள் குறித்து நாங்கள் துயரடைகின்றோம் சம்பந்தப்பட்ட தரப்பினரை வாழ்க்கையின் புனிதத்தினையும் அதனை பாதுகாப்பதற்கான தளத்தையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பத்துபேர் காயமடைந்துள்ளனர் சிலருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன எறிகணை சிதறல்களால் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அல் அஹ்லில் அராபிய மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்ப்ராஹிம்சகல்லா  கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.

250717-gaza-church-mb-1235-abdc2d.webp

தேவாலயம் தாக்கப்பட்டதாக மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டதாக சகல்லா கூறினார். "நான் ஆம்புலன்ஸில் ஏறி நேராக தேவாலயத்திற்குச் சென்றேன்" என்று அவர் மேலும் கூறினார். "இந்த இஸ்ரேலியஇராணுவம் திமிர்பிடித்தது - அது கிறிஸ்தவரா அல்லது முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை அது ஒரு தேவாலயமா மசூதியா வீடா அல்லது ஒரு பள்ளியா என்பது கூட கவலையில்லை. நாங்கள் ஒரு கொடூரமான போரின் நடுவே வாழ்கிறோம்.

21 மாத காலப் போரின் போது குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த தேவாலய வளாகத்தையும் ஷெல் தாக்குதல் சேதப்படுத்தியது. 

தேவாலயத்திற்கு அடுத்துள்ள ஒரு பள்ளியில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த 75 வயது கிறிஸ்தவரான அட்டாலா டெர்சி கூறினார்: “நான் சில நிமிடங்கள் வெளியே இருந்த பிறகு வகுப்பறைக்குத் திரும்பியபோது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. போர் தொடங்கியதிலிருந்து வெடிப்பின் சத்தம் இவ்வளவு தீவிரமாக இருந்தது இதுவே முதல் முறை

ஏப்ரல் மாதம் இறப்பதற்கு முன்பு முன்னாள்பரிசுத்த பாப்பரசர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த கேப்ரியல் ரோமனெல்லியை ஒவ்வொரு மாலையும் அழைப்பார். ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் காசாவில் பேரழிவுப் போரை தூண்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகுஇ அக்டோபர் 9 2023 அன்று அவர் வழக்கத்தைத் தொடங்கினார்.

https://www.virakesari.lk/article/220272

ட்ரம்பின் உடல் நிலை குறித்த வெள்ளை மாளிகையின் அறிவிப்பு!

2 months 2 weeks ago

New-Project-225.jpg?resize=750%2C375&ssl

ட்ரம்பின் உடல் நிலை குறித்த வெள்ளை மாளிகையின் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ‍டெனால்ட் ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை நோய்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் கைகளில் ஏற்பட்ட காயம் குறித்த ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அண்மையில் அவரது கால்களில் வீக்கம் ஏற்பட்ட பின்னர் ட்ரம்ப், விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

எனினும், பரிசோதனை எப்போது நடந்தது என்பது தெளிவாகக் கூறப்படவில்லை.

இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

New-Project-226.jpg?resize=600%2C338&ssl

79 வயதான அமெரிக்க ஜனாதிபதி, தனது உடல் நல ஆரோக்கியம் தொடர்பில் அடிக்கடி புகழ்ந்து வருகிறார்.

அதில் ஒன்றாக அவர், தன்னை “இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் ஆரோக்கியமான ஜனாதிபதி” என்றும் விவரித்துள்ளார்.

நாள்பட்ட சிரை நோய் என்பது கால்களில் உள்ள நரம்புகளில் ஏற்படும் ஒரு நிலை, இதில் நரம்புகள் வீங்கி, முறுக்கியும், விரிவாக்கப்பட்டும் காணப்படும்.

இது சிரை அடைப்பான் பலவீனமாக இருப்பதன் காரணமாக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதால் ஏற்படுகிறது.

இதன் விளைவாக கால்களில் வலி, வீக்கம், மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இந் நிலைமை உலகளவில் 20 இல் ஒருவரை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

https://athavannews.com/2025/1439616

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் இணக்கம்

2 months 2 weeks ago

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம்

Published By: RAJEEBAN

17 JUL, 2025 | 11:34 AM

image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யப்போவதாக கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுக்கப்போவதாகவும இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

gaza_2025_1158.jpg

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஆறு நடவடிக்கைகள் குறித்த இணக்கப்பாட்டுடன் கொலம்பிய மாநாடு முடிவடைந்துள்ளது.

  1. கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் ஹேக் குழு என  அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் பொலிவியா கொலம்பியா இந்தோனேசியா கியுபா ஈராக் மலேசியா உட்பட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.

  2. ஆயுதங்கள் வெடிமருந்துகள் இராணுவ எரிபொருள் தொடர்புடைய இராணுவ உபகரணங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்குவதையோ அல்லது மாற்றுவதையோ தடுப்பது;

  3. இஸ்ரேலுக்கு மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ள எந்தவொரு துறைமுகத்திலும் கப்பல்களின் போக்குவரத்துஇ நறுக்குதல் மற்றும் சேவையைத் தடுப்பது;

  4. பங்கேற்கும் நாடுகளில் கொடியிடப்பட்ட கப்பல்களில் அத்தகைய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்தல்;

  5. இஸ்ரேலின் பாலஸ்தீன சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலிருந்தும் அதன் சட்டவிரோத இருப்பை நிலைநிறுத்துவதிலிருந்தும் பொது நிறுவனங்கள் மற்றும் நிதிகளைத் தடுக்க அனைத்து பொது ஒப்பந்தங்களையும் அவசரமாக மறுஆய்வு செய்யத் தொடங்குதல்.

Gv_mmUwWkAEBca7.jpg

  1. சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான இஸ்ரேலிய குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான கடமைகளுக்கு இணங்குதல்; மற்றும் பாலஸ்தீனத்தில் செய்யப்படும் சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான தேசிய சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீதித்துறைகளில் உலகளாவிய அதிகார வரம்பு கட்டளைகளை ஆதரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/220201

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதி ஊடாக நடந்தார் இளவரசர் ஹரி

2 months 2 weeks ago

17 JUL, 2025 | 10:58 AM

image

அங்கோலாவில் மிகப்பெருமளவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதியில் நடந்து சென்றுள்ள பிரிட்டிஸ் இளவரசர் ஹரி சிறுவர்கள் வெளியில் விளையாடுவதற்கு அச்சப்படும் சூழல் நிலவக்கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்கநாட்டிற்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான விஜயத்தினை ஹரி மேற்கொண்டுள்ளார்.

தனது தாயாரின் பாராம்பரியத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அவர் இளவரசி டயனாவின் அடிச்சுவடுகளை பின்பற்றியுள்ளார்.

harry_ango.jpg

தனது தாயார் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டு 28 வருடங்களின் பின்னர் அந்த நாட்டிற்கு சென்றுள்ள ஹரி நிலக்கண்ணி வெடி ஆபத்து இன்னமும் நிலவும் குயிடோ குவானாவேல் பகுதிக்கு சென்று அங்கு பொதுமக்களை சந்தித்துள்ளார்.

வெளியில் விளையாடுவதற்கோ பாடசாலைக்கு செல்வதற்கோ சிறுவர்கள் ஒருபோதும் அச்சப்படும் நிலை நிலவக்கூடாது என தெரிவித்துள்ள அவர் மூன்று தசாப்தத்தின் பின்னரும் அங்கோலாவில் போரின் எச்சங்கள் அச்சுறுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டும் இளவரசர் ஹரி டயான விஜயம் மேற்கொண்ட இந்த பகுதிக்கு சென்றிருந்தார். 

1997 இல் இளவரசி டயனா ஹலோ டிரஸ்டுடன் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் - கார் விபத்தில் அவர் உயிரிழப்பதற்கு ஏழு மாதங்களிற்கு முன்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார்.

harry_ango1.jpg

இரண்டுதசாப்தகால யுத்தத்தின் பின்னர் அமைதி ஏற்பட்டிருந்தவேளை அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதிகள் ஊடாக பாதுகாப்பு சாதனங்களுடன் டயான நடந்து செல்லும் படம் அவ்வேளை வெளியாகியிருந்தது.

டயனாவின் பரப்புரை நிலக்கண்ணிவெடிகளை ஒழிக்கும் சர்வதேச உடன்படிக்கை சாத்தியமாவதற்கு காரணமாகயிருந்தது -டயனா உயிரிழந்து இரண்டு மாதங்களின் பின்னர் இது கைகச்சாத்திடப்பட்டது.

https://www.virakesari.lk/article/220194

பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை

2 months 2 weeks ago

1730135045-WhatsApp-Image-2024-10-28-at-

பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்தும் முயற்சியில், அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என்றால், ரஷ்யாவுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நாடுகளுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கும் அமெரிக்காவின் secondary sanctions அமுல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக மார்க் ருட்டே, அமெரிக்க செனட் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்  கூறியதாவது:

‘பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. போர்நிறுத்தம் ஏற்படாவிட்டால், இந்த நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, ரஷ்ய ஜனாதிபதி புதினை அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ரஷ்யா சந்திக்கும் பாதிப்பை இந்நாடுகளும் சந்திக்க நேரிடும்‘ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1439560

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள் கசிந்த பின்னர் தலிபானால் கொல்லப்பட்டவர்களின் முகங்கள் - டெலிகிராவ்

2 months 2 weeks ago

Published By: RAJEEBAN

17 JUL, 2025 | 10:40 AM

image

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம் கசிந்ததை தொடர்ந்து தலிபானால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் வெளியாகியுள்ளன என டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது

அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினருடன் இணைந்து செயற்பட்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிரிட்டனின் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது.

wEaaVVIp.jpg

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டும் சுயாதீன வழக்குரைஞர்களால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின்  பெயர்கள் தொகுக்கப்பட்டன.

ஆனால் ஒரு மூத்த நீதிபதி விதித்த நீதிமன்ற உத்தரவு இறந்தவர்கள் முதலில் பாதுகாப்பு அமைச்சக பட்டியலில் இடம்பெற்றார்களா என்பதை தி டெலிகிராஃப் செய்தியாக வெளியிடுவதைத் தடுக்கிறது. அந்த பட்டியல் பிப்ரவரி 2022 இல் தற்செயலாக வெளியிடப்பட்டது.

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம்  2022 இல் தங்கள் வசம் வந்ததாகவும், அன்றிலிருந்து அதில் அடையாளம் காணப்பட்டவர்களை வேட்டையாடி வருவதாகவும் தலிபான் கூறுகிறது.

தலிபானின் சிறப்புப் படைகளின் ஒரு பிரிவு - யார்மோக் 60 என அழைக்கப்படுகிறது - அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை டெலிகிராவினால் செய்தியாக வெளியிட முடியும்.

2021 ஆம் ஆண்டு காபூலின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் துருப்புக்களுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் நோக்கில் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் புகலிடத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணம் கசிந்துள்ளமையே தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பட்டியலில் உள்ளவர்களில் எத்தனை பேர் தலிபான்களால் அடையாளம் காணப்பட்டனர், கண்காணிக்கப்பட்டு அதன் விளைவாகக் கொல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தரவு மீறலின் விளைவாக யாராவது கொல்லப்பட்டார்களா என்பதை "உறுதியாகக் கூற முடியவில்லை" என்று  பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன்ஹீலி புதன்கிழமை ஒப்புக்கொண்டார்.

பட்டியல் கசிந்த பின்னர் கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் இளவயதினரும் - நடுத்தர வயதினரும் உள்ளனர்.

இவர்கள் ஆப்கானின் பலபகுதிகளில் - சிலர் குடும்பத்தவர்களுடன் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஜூன் 24ம் திகதி பொலிஸ் கொமாண்டோ பிரிவை சேர்ந்த கேர்ணல் டுர்ஜான் ஹெல்மண்டில் மசூதியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை  குடும்பத்தவர்கள் பலருடன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

turjan.jpg

இதற்கு ஒரு மாதத்தின் பின்னர் மற்றுமொரு முன்னாள் இராணுவவீரர் கோஸ்ட் மாகாணத்தில் தலிபான்களால் கொல்லப்பட்டார்.

ஜூலை 23ம் திகதி ( 2024)அலிசார் மாகாணத்தில் ஹமிதுல்லா கோஸ்டி தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் திருமணமொன்றிற்காக அந்த பகுதிக்கு சென்றிருந்தார்.

kosti.jpg

https://www.virakesari.lk/article/220191

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!

2 months 2 weeks ago

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!

war-1-780x470.webp

சிரியாவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு நிலையம், இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் என்பவற்றை குறிவைத்து புதன்கிழமை (16) அதிகாலை இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை தொடங்கியது.

இந்த தாக்குதல், அண்மைய ஆண்டுகளில் சிரிய தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதல்களில் ஒன்றாகும்.

இந்த தாக்குதல்களின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் படைகள் மற்றும் சிரிய ஊடகங்கள் இரண்டும் வெளியிட்ட வீடியோ காட்சிகள், மத்திய டமாஸ்கஸில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட தருணத்தைக் காட்டுகின்றன.

3 killed, 34 injured as Israel launches new airstrikes on Syrian capital

ட்ரூஸ் போராளிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்களுக்கு இடையே பல நாட்களாக கொடிய மோதல்களால் பாதிக்கப்பட்ட தெற்கு சிரிய பிராந்தியமான சுவைடாவிற்கு அரசாங்கப் படைகளை அனுப்புவதற்கான கட்டளை மையமாக டமாஸ்கஸ் தலைமையகம் செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளது.

சிரியாவின் தெற்கில் உள்ள சுவைடா பகுதியில், நாட்டின் சிறுபான்மையினரான ட்ரூஸ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வார இறுதியில் ட்ரூஸ் போராளிகளுக்கும் உள்ளூர் பெடோயின் குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

இதனால் மோதலை அடக்க சிரிய அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்போதிருந்து அரசாங்க ஆதரவுப் படைகளும் மோதலில் இணைந்துள்ளன.

இது பெரும்பாலும் சுவைடாவில் வசிக்கும் ட்ரூஸ் சமூகத்திற்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறையில் கிட்டத்தட்ட 250 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (SOHR) தெரிவித்துள்ளது.

புதன்கிழமை சுவைடா தேசிய மருத்துவமனை தாக்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குள் உள்ள பெரிய ட்ரூஸ் மக்கள்தொகை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த நிலைப்பாட்டைக் கொண்ட ட்ரூஸ் சமூகங்களின் சுய-அறிவிக்கப்பட்ட பாதுகாவலராக இஸ்ரேல் நீண்ட காலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

மே மாதத்தில், சுவைதாவில் நடந்த வன்முறைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் டமாஸ்கஸ் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியது.

சிரிய ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதியை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல் மூலமாக சிரியாவின் இறையாண்மை அப்பட்டமாக மீறப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியும் இருந்தது.

ட்ரூஸ் இனத்தவர்கள் இஸ்லாத்தின் ஒரு கிளைப் பிரிவைப் பின்பற்றும் ஒரு அரபு சிறுபான்மைக் குழுவாகும்.

பெரும்பாலான ட்ரூஸ் இனத்தவர்கள் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலில் வாழ்கின்றனர்.

சிரியாவில் 700,000 ட்ரூஸ் இனத்தவர்களும், லெபனானில் 300,000 பேரும், இஸ்ரேலில் 140,000 பேரும் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

https://akkinikkunchu.com/?p=333131

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

2 months 2 weeks ago

New-Project-211.jpg?resize=750%2C375&ssl

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அலாஸ்கா நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

எனினும், பிற்பகல் பிற்பகல் 2:45 மணிக்கு சுனாமி எச்சரிக்கை முற்றிலும் நீக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

https://athavannews.com/2025/1439478

கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை

2 months 3 weeks ago

alleged-aircraft-hijacking-at-vancouver-

கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை.

சிறிய ரக விமானமொன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த  தகவலையடுத்து  கனடாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

வென்கூவர் தீவிலுள்ள விக்டோரியா பகுதியில் செயல்படும் விமான நிலையத்தில்  இருந்து புறப்பட்ட சிறிய செஸ்னா வகை விமானமொன்று, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கனடாவின் ராயல் மவுண்டட் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் தகவல் வழங்கப்பட்டது.

விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் சந்தேக நபர் ஒருவர் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் குறித்த விமானம் வென்கூவரில் தரையிறங்கியதும், அதிலிருந்த ஒரே பயணியாகக் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

அரசாங்க ஊடகமான CBC வெளியிட்ட புகைப்படங்களில், தரையிறங்கிய செஸ்னா விமானத்தை பாதுகாப்பு வாகனங்கள் முற்றுகையிட்டதைக் காணலாம். குறித்த விமானம் விக்டோரியாவில் உள்ள ஒரு விமான மன்றத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசம்பவத்தால், வென்கூவர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், 9 உள்நாட்டு விமானங்கள் மாற்றுத் திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் கடத்தல் சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2025/1439372

அவுஸ்திரேலியாவில் மாணவர்கள் மின் சிகரட்டுக்களை புகைப்பது குறைவடைந்துள்ளது - ஆய்வில் தகவல்

2 months 3 weeks ago

அவுஸ்திரேலியாவில் தடைக்குப் பின்னர் பாடசாலை மாணவர்கள் மின் சிகரட்டுக்களை புகைப்பது குறைவடைந்துள்ளது - ஆய்வில் தகவல்

Published By: DIGITAL DESK 3

16 JUL, 2025 | 11:49 AM

image

அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்களிடையே மின் சிகரட்டுக்கள் புகைப்பது குறைவடைந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு  காரணம்  ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெருப்பின்றி புகை பிடிக்கும்  மின் சிகரட்டுக்கள் (vaping) அரசாங்கம் தடை விதித்து சுமார் வருடங்கள் ஆகின்றது.

கடந்த 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களிடையே 17.5% ஆக இருந்த மின் சிகரட்டு பாவனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.6% ஆகக் குறைவடைந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் அமைப்பு நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மின் சிகரட்டுகளை பயன்படுத்தும் விகிதம் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைவடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இளம் அவுஸ்திரேலியர்களிடையே மின் சிகரட்டுகள் பாவனை விகிதம் அண்மையகாலமாக தலைகீழாக மாறிவிட்டன. கடந்த ஆண்டில் அதிகாரிகள் 10 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத மின் சிகரட்டுகள் கைப்பற்றியுள்ளது என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.

"எங்கள் கல்வி மற்றும் தடுப்பு பிரச்சாரங்கள்  மின் சிகரட்டுகள் மற்றும் புகைபிடிப்பதைத் தடுப்பதற்கு மற்றும் நிறுத்துவதற்கு மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220113

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி

2 months 3 weeks ago

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி

July 16, 2025 10:32 am

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார்.

இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது 100 சதவீத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார்.

” தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது.” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் ஜனாதிபதி புடினை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது. யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை . வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். ஜனாதிபதி புடின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார் ” என்று அவர் குறிப்பிட்டார்.

https://oruvan.com/we-gave-in-to-threats-russia-responds-to-trump/

உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனான உறவுகளை இடைநிறுத்தவேண்டும்- ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் வேண்டுகோள்

2 months 3 weeks ago

உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனான உறவுகளை இடைநிறுத்தவேண்டும்- ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் வேண்டுகோள்

Published By: RAJEEBAN

16 JUL, 2025 | 11:02 AM

image

இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை ஆராய்வதற்காக இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் காசாமீதான இஸ்ரேலின் தாக்குதலை பாலஸ்தீனியர்களிற்கு எதிரான இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ளன.

gaza_doctors_chil.jpg

ஒவ்வொரு நாடும் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனா உறவுகளை இடைநிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ள பிரான்செஸ்கா அல்பெனிஸ் தனியார் துறையினரும் இஸ்ரேலுடனான உறவுகளைதுண்டிப்பதை உலகநாடுகள் உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய பொருளாதாரம் தற்போது இனப்படுகொலையாக மாறியுள்ள ஆக்கிரமிப்பை தக்கவைப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அரசாங்கங்களும் தனிநபர்களும் என்ன செய்தார்கள் என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும்  நாங்கள் அச்சத்தினால் பயத்தினால் பின்வாங்கினோமா அல்லது மனித கண்ணியத்தை பாதுகாக்க எழுந்தோமா என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும்.

நீண்ட காலமாக சர்வதேச சட்டம் விருப்பத்தேர்வாகக் கருதப்படுகிறது - பலவீனமானவர்களாகக் கருதப்படுபவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது சக்திவாய்ந்தவர்களாகச் செயல்படுபவர்களால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த இரட்டைத் தரம் சட்ட ஒழுங்கின் அடித்தளத்தையே அரித்துவிட்டது. அந்த சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும்.

இங்கு பொகோட்டாவில் பல நாடுகள் மௌனத்தை கலைத்துஇ போதுபோதும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் போதும்இவெற்றுவார்த்தைகள் போதும்இவிதிவிலக்குவாதம் போதும்இஉடந்தையாகயிருத்தல் போதும்இஎன தெரிவிப்பதன் மூலம் சட்டப்பாதைக்கு திரும்புவதற்கான வழி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

. நீதி மற்றும் அமைதியைப் பின்தொடர்வதில் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது - அனைவருக்கும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது சிலருக்கு வெறும் சலுகைகளை அல்ல மற்றவர்களை அழிப்பதன் இழப்பில்.என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சாசனம் மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் கருவிகள் அனைவரின் திசைகாட்டியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

https://www.virakesari.lk/article/220109

காசா உணவில் போதைப்பொருளை அனுப்பும் அமெரிக்கா, இஸ்ரேல்

2 months 3 weeks ago

காசா உணவில் போதைப்பொருளை அனுப்பும் அமெரிக்கா, இஸ்ரேல்

ஆக்கிரமிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனத்தில் உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் காசா பகுதி மக்களுக்கு ஐ.நா. முயற்சியால் உலக உணவுத் திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், இஸ்ரேல், அமெரிக்கா வழியாக வழங்கப்படும் உணவுப்பைகளில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

காசா அரசு ஊடகமும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

காசா முனைப் பகுதியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நான்கு உணவுப் பைகளில் மாவுக்குள் இந்த போதை மாத்திரைகளை மறைத்துவைத்து அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அரசு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் இராணுவ அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது என்று காசா அரசு நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/318802

அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து; 09 பேர் உயிரிழப்பு

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3

15 JUL, 2025 | 03:54 PM

image

அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மூன்று மாடி முதியோர் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய முதியவர்கள் ஜன்னல்கள் அருகே ஒடிவந்து உதவி செய்யுமாறு கெஞ்சியுள்ளார்கள்.

"நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்," "நான் என்னை படைத்தவரை சந்திக்கப் போகிறேன் என்று நினைத்தேன்." . "என் வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. என்னால் மூச்சு விட முடியாமல் போனது " என குளியலறை ஜன்னலிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட லோரெய்ன் ஃபெரார தெரிவித்துள்ளார்.

50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் மீட்பு பணிகள் கடினமானதாக இருந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில்  ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

70  வயது வயோதிப பெண்ணும், 77 வயது ஆணும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 

ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் உட்பட சுமார் 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஐந்து தீயணைப்பு வீரர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகி உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தொடர்பில்  விசாரணை நடந்து வருகிறது.

https://www.virakesari.lk/article/220054

பதவியில் நீடிப்பதற்காக காசா யுத்தத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு நீடித்தார்; யுத்த நிறுத்த திட்டங்களை நிராகரித்தார் - நியுயோர்க் டைம்ஸ்

2 months 3 weeks ago

Published By: RAJEEBAN

15 JUL, 2025 | 12:16 PM

image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்காகவே ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் தனது நீண்ட புலனாய்வு செய்தியறிக்கையிடலில் தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடித்திருப்பதற்காக பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடிக்கின்றார் என தெரிவித்துள்ளது.

newyork_times.jpg

பெஞ்சமின் நெட்டன்யாகு உள்நாட்டில் தனது பிம்பத்தை மீட்டெடுப்பதற்காகவும் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவும் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காககவும் வேண்டுமென்றே காசா யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலேல் ஸ்மோட்ரிச் அரசாங்கத்தை கவிழ்ப்பேன் என எச்சரித்ததால் பெஞ்சமின் நெட்டன்யாகு 30 பணயக்கைதிகளை காப்பாற்றியிருக்ககூடிய காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைவிட்டார், என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் தீவிரவலதுசாரி பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை காரணமாக இஸ்ரேல் சவுதி அரேபியாவிற்கு இடையிலான உறவுகளை  மேம்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் கைவிட்டார் என குறிப்பிட்டுள்ளது.

காசா யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரும் நிபந்தனையுடன் சவுதிஅரேபியா இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்த தயாராகயிருந்தது.

பெருமளவு அரச ஆவணங்கள் இராணுவ ஆவணங்கள் இஸ்ரேல் அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த 110 அதிகாரிகளுடனான உரையாடல்களை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெஞ்சமின் நெட்டன்யாகு குறித்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரை தொடர்பில் பேட்டிக்காகவும் ஏனைய விடயங்களிற்காகவும் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகத்தை தொடர்புகொண்ட போதிலும் உரிய அனுமதி கிடைக்கவில்லை என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் பெஞ்சமின் நெட்டன்யாகு குழப்பிய காசா யுத்த நிறுத்த திட்டம் யுத்தத்தை நிரந்தரமாக முடிவிற்கு கொண்டுவரக்கூடியதாகவும் மீதமுள்ள பணயக்கைதிகளை முடிவிற்கு கொண்டுவரக்கூடிய வாய்ப்பினை உருவாக்ககூடியதாகவும் காணப்பட்டது நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

benjamin1.jpg

இந்த யுத்த நிறுத்த திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தால் சவுதி அரேபியாவுடன் இஸ்ரேல் உறவுகளை சுமூகமாக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கலாம் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

காசா யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டால் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையை துரிதப்படுத்த தயார் என்ற சமிக்ஞைகளை சவுதி அரேபியா வெளியிட்டுவந்தது என  நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நெட்டன்யாகுவிற்கும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளிற்கும் இடையிலான உறவில் கசப்புணர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் போரின் போது பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அவநம்பிக்கை அதிகரித்தது. இராணுவ அதிகாரிகளை தான் சந்திக்கும் போது அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் நெட்டன்யாகு ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம்

Gvr5sjfXQAAcJsK.png

நியுயோர்க் டைம்ஸ் செய்திகள்  இஸ்ரேல், அதன் துணிச்சலான மக்கள் மற்றும் வீரர்கள் மற்றும் அதன் பிரதமரை இழிவுபடுத்துகிறது" என்றுஎன தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/220039

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!

2 months 3 weeks ago

New-Project-171.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!

உக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது அமெரிக்கா “மிகக் கடுமையான” வரிகளை விதிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (14) தெரிவித்தார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்பில் தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார்.

“ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பில் நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். 50 நாட்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், நாங்கள் 100% வரிகளை விதிப்போம்” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாக சர்வதேச ஊடச் சேவையான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை “இரண்டாம் நிலை வரிகள்” என்றும் ட்ரம்ப் விவரித்தார்.

அதாவது உலகப் பொருளாதாரத்தில் மொஸ்கோவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ரஷ்யாவுடன் தொடர்புகளை பேணும் வர்த்தக பங்காளிகளையும் குறிவைப்பது ஆகும்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து வொஷிங்டனுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான நேரடி வர்த்தகம் சரிந்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான இந்த இரண்டாம் நிலை வரிகள் செயல்படுத்தப்பட்டால், அது மேற்கத்திய தடைகள் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போர் முழுவதும், மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவுடனான தங்கள் சொந்த நிதி உறவுகளில் பெரும்பாலானவற்றைத் துண்டித்துவிட்டன.

ஆனால் ரஷ்யா தனது எண்ணெயை வேறு இடங்களில் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இது சீனா மற்றும் இந்தியா போன்ற வாங்குபவர்களுக்கு எண்ணெய் அனுப்புவதன் மூலம் மொஸ்கோ நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை தொடர்ந்து சம்பாதிக்க அனுமதித்துள்ளது.

அமெரிக்காவும் நேட்டோவும் என்ன செய்யும்?

நேட்டோ உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்குவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உட்பட இந்த ஆயுதங்கள் பின்னர் உக்ரேனுக்கு அனுப்பப்படும்.

இந்த நடவடிக்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு, அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார்.

நேட்டோவின் விரைவான நடவடிக்கை முக்கியமானது என்று கூறி மார்க் ரூட் இந்த திட்டத்தை ஆதரித்தார்.

ஜெர்மனி, பின்லாந்து, கனடா, நோர்வே, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வாங்குவதில் பங்கேற்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

1110412183_0%3A163%3A3065%3A1887_1920x0_

உக்ரேன் என்ன சொல்கிறது?

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கான ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கீத் கெல்லாக், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கியேவில் சந்தித்தார்.

உக்ரேனின் வான் பாதுகாப்பு, கூட்டு ஆயுத உற்பத்தி மற்றும் மேலும் அமெரிக்க ஆதரவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் “பயனுள்ள உரையாடலை” நடத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

ukraine-crisis-kellogg.JPG?resize=1063%2

அடுத்து என்ன நடக்கும்?

பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை உக்ரேனுக்கு வழங்குவது குறித்து விவாதிக்க ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சில நாட்களுக்குள் நடக்கலாம் என்று ட்ரம்பும் ரூட்டும் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர் அறிவித்த 30% வரிகள் உட்பட ட்ரம்பின் பரந்த கட்டணத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஐரோப்பாவின் வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பதாகவும் AP செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று கூறினார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் எப்போதும் விரும்புகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று அவர் பிரஸ்ஸல்ஸில் கூறினார்.

https://athavannews.com/2025/1439192

தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்!

2 months 3 weeks ago

images-1.jpg?resize=259%2C194&ssl=1

தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்!

தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப்பட்டாலும், தேனீக்களை உளவாளிகளாகவும் பயன்படுத்த முடியும்.

உயிரினங்களைக் கருவிகள் வாயிலாகக் கட்டுப்படுத்தும், ‘சைபோர்க்’ (Cyborg technology) என்ற தொழில்நுட்பம் தொடர்பாகப் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

இந்த வகையில், தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, 74 மில்லி கிராம் எடையுள்ள சிறிய கருவி ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

அவற்றில் உள்ள சிறிய ஊசிகள், தேனீயின் மூளையைக் கட்டுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எந்த இடத்திலிருந்தும், குறித்த தேனீக்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும்.

இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில், விஞ்ஞானிகளின் உத்தரவுகளில், 90 சதவீதத்தைத் தேனீக்கள் நிறைவேற்றி உள்ளன.

இதற்கமைய பேரிடர் காலங்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களின் போது, மனிதர்கள் உடனடியாக செல்ல முடியாத இடங்களுக்கு, இது போன்ற தேனீக்களை அனுப்பி, அங்குள்ள நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என, விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://athavannews.com/2025/1439086

ஹமாஸ் மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - சிஎன்என்

2 months 3 weeks ago

மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - ஹமாஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் வலுவுடன் கெரில்லா போர் தந்திரோபாயங்களை பயன்படுத்த ஆரம்பிக்கின்றது - சிஎன்என்

Published By: RAJEEBAN

14 JUL, 2025 | 02:56 PM

image

காசாவில் நடந்த இந்த திடீர் தாக்குதல் அந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியை போலவே அதிர்ச்சியளிப்பதாகயிருந்தது.

.hamas_2222222.jpg

திங்கட்கிழமை இரவு இஸ்ரேலிய இராணுவவீரர்கள்  குழு ஒன்று எல்லை வேலியில் இருந்து ஒரு மைல் தொலைவில் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் பயன்படுத்தும் பாதையைக் கடந்து சென்றபோது ஒரு குண்டு வெடித்தது.

தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இது தீவிர ஆர்த்தடாக்ஸ் வீரர்களைக் கொண்ட ஒரு பிரிவான நெட்சா யெஹுதா பட்டாலியனின் துருப்புக்களை துடைத்தெறிந்தது. 

இரண்டாவது குண்டு வெடித்தபோது மேலும் பல இஸ்ரேலியப் படைகள் அவர்களுக்கு உதவ விரைந்தனர். அதுவும் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மூன்றாவது குண்டு வெடித்தபோது அருகில் மறைந்திருந்த ஹமாஸ் படையணி சிறிய ரக துப்பாக்கிச் சூடு மழை பொழிந்தது.

சில நிமிடங்களுக்குள் ஐந்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் சிலர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட்டிலிருந்து எளிதாகத் தெரியும் காசாவின் வடகிழக்கு மூலையில் உள்ள பெய்ட் ஹனூன் நகரில் இந்தத் தாக்குதல் நடந்தது.

24 மணிநேரத்திற்கு முன்னர் குண்டுகளை புதைத்தது என்பதும் இஸ்ரேலிய படையினருக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ள அவர்கள் தயாராகயிருந்ததும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அவர்கள் இஸ்ரேலிய எல்லைக்கு மிக அருகில்  ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடத்தில் செயல்படுவதாக இஸ்ரேலிய படையினர் கருதுகின்றனர்.

hamas_atta_2025.jpg

இந்த போர்க்காலம் முழுவதும் இஸ்ரேலிய படையினர் பலமுறை காசாவிற்கு மீண்டும் மீண்டும் செல்லவேண்டியிருந்தது - ஏனென்றால் இஸ்ரேல் தான் ஹமாசினை அகற்றியதாக தெரிவித்த பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டதே இதற்கான காரணம்.

ஹமாசின் சமீபத்தைய தொடர் தாக்குதல்கள் அந்த அமைப்பை அழிக்கும் இஸ்ரேலின் இலக்கு மிகவும் கடினமானதாக இலகுவில் சாத்தியப்படாததாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

hamas_3.jpg

புதன்கிழமை ஹமாஸ் போராளிகள் கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ பொறியியல் வாகனத்தை குறிவைத்து ரொக்கட் மூலம் ஏவப்படும் குண்டுகளை வீசி ஓட்டுநர் தப்பி ஓட முயன்றபோது வாகனத்தை தாக்கினர்.

இது ஹமாஸ் வெளியிட்ட தாக்குதலின் வீடியோவில் காணப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி அவர்கள் இஸ்ரேலிய இராணுவீரரை கடத்த முயன்றனர். இந்தச் செயல்பாட்டில் அவர் கொல்லப்பட்டார். அந்த முயற்சி அப்பகுதியில் செயல்படும் இஸ்ரேலியப் படைகளால் முறியடிக்கப்பட்டது. 

காசாவின் கொடூரமான கடுமையான போர் ஈரானில் இஸ்ரேலின் விரைவான மற்றும் துல்லியமான நடவடிக்கையுடன் கடுமையாக வேறுபடுகிறது. 12 நாள் இஸ்ரேல்-ஈரான் மோதல் முடிவடைந்ததிலிருந்து காசாவில் குறைந்தது 19 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவிக்கின்றன இதில் பெய்ட் ஹனூன் தாக்குதலும் அடங்கும்.

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த நாளில் தெற்கு காசாவில் ஒரு ஹமாஸ் போராளி வெடிக்கும் பொருளை இஸ்ரேலின் இராணுவ வாகனத்தின் மீது வீசி எறிந்தார். இருந்த ஏழு வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் காசாவில் ஐ.டி.எஃப்-க்கு பல மாதங்களில் நடந்த மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாகும்.

hamaz_att_122.jpg

போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் 20000 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக ஜனவரி மாதம் முன்னாள் ஐ.டி.எஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறினார். 

இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களில் பெரும்பாலோரையும் படுகொலை செய்துள்ளது. ஆனால் ஹமாஸ் புதிய போராளிகளையும் சேர்த்துக் கொண்டதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறினார் அவர்களின் அணிகளை மீண்டும் நிரப்பினார். மார்ச் மாதத்தில் இஸ்ரேலின் பொது ஒளிபரப்பான கான் நியூஸ்இ ஹமாஸ் "நூற்றுக்கணக்கான" புதிய போராளிகளை சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது.

ஐ.டி.எஃப்-இன் செயல்பாட்டு இயக்குநரகத்தின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இஸ்ரேல் ஜிவ் கூறுகையில் காசாவின் நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பில் எஞ்சியிருப்பதைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தக்கூடிய  தளர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட போராளிக் குழுக்களின் குழு மட்டுமே எஞ்சியுள்ளது.

ஐ.டி.எஃப் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஹமாஸுக்கு நேரம் கிடைத்துள்ளது. மேலும் அவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்று ஜிவ் சி.என்.என்-க்கு தெரிவித்தார்.

hamaz_111111111111.jpg

“அவர்களின் போர் நமது பலவீனங்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரதேசத்தைப் பாதுகாப்பதில்லை - அவர்கள் இலக்குகளைத் தேடுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் படையினரின் பலவீனங்களை ஹமாஸ் பயன்படுத்த அனுமதித்துள்ளது என என்று ஜிவ் கூறினார்.

"ஹமாஸ் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது - அது சிறிய குழுக்களாக செயல்படும் ஒரு கெரில்லா அமைப்பாக மாறியுள்ளது. அது ஏராளமான வெடிபொருட்களைக் கொண்டுள்ளது அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேல் அங்கு வீசிய வெடிமருந்துகளிலிருந்து வந்தவை என்று ஷிவ் கூறினார்.

https://www.virakesari.lk/article/219974

Checked
Mon, 10/06/2025 - 23:05
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe